Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தொண்ணூறு வயதிலும் தொடரும் தொய்வில்லா போராட்டம்
Page 1 of 1 • Share
தொண்ணூறு வயதிலும் தொடரும் தொய்வில்லா போராட்டம்
சொந்தமாய் காணி நிலம் கிடையாது. ஆனால், எழுபது வருடங்களாக விவசாயிகளுக்காக போராடிக் கொண் டிருக்கிறார் நயினார் குலசேகரன்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அருகிலுள்ள நட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நயினார் குலசேகரன். கல்லூரியில் படிக்கும் போதே, உழைக்கும் ஏழைகளின் உரிமைகளுக்காக கொடி தூக்கினார். 90 வயதைக் கடந்தும் அந்தப் போராட் டம் நிற்கவில்லை. இப்போதும் இரவு 12 மணி வரை மக்கள் பிரச்சினைகளுக்காக மனு எழுதிக் கொண்டிருக்கிறார்.
‘சின்னப் பெரியார்’
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்த நயினார் குலசேகரன், காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தபோதே விவசாயி களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி சிறை சென்றவர். இதுவரை பத்து முறைக்கு மேல், மக்கள் பிரச்சினைகளுக்காக சிறை சென்ற இவரை, ‘சின்னப் பெரியார்’ என்று வைகுண்டம் மக்கள் செல்லமாக அழைக்கின்றனர். தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்புப் பேரவைத் தலைவராக இருக்கும் நயினார் குலசேகரனின் போராட்டக் களமும் தாமிரபரணியை மையப் படுத்தியே நகர்கிறது.
அரசு சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தாமிர பரணிக்கரை மக்கள் ஓடி வருவது நயினார் வீட்டுக்குத்தான். அவரும் உடனே ஒரு மனுவை எழுதி எடுத்துக் கொண்டு அதிகாரிகளைப் பார்க்க கிளம்பி விடுவார். முதலில் கோரிக்கை மனு அளிப்பார்.
முப்பது நாட்களுக்குள் உரிய பரிகாரம் சொல்லாவிட்டால் போராட்டம். அதற்கும் நியாயம் கிடைக்காவிட்டால் அடுத்த கட்டமாக வழக்கு. இதுதான் இவரின் போராட்ட உத்தி. தாமிர பரணியில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளக் கூடாது என்ற நீதிமன்றத் தீர்ப்பை வாங்கித் தந்ததின் பின்னணி யில் இருந்தவர் நயினார் குலசேகரன். இந்தப் போராட்ட குணம் எப்படி வந்தது?
1950-க்கு முன்பு நிலச்சுவான்தார் கள், விவசாயிகளை கொத்தடிமைத் தொழிலாளர்களாக வைத்திருந்தனர். பொழுதெல்லாம் மாடாய் உழைத்தபின் கொடுக்கிற கூலியை வாங்கிச் சென்றார்கள் விவசாயிகள். இதை எதிர்த்து நாங்கள் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகுதான் 1950-ல், விவசாய வருமானத்தில் நில உரிமையாளருக்கு 40 சதவீதம், விவசாயிக்கு 60 சதவீதம் என குத்தகை பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது அரசு.
அதுவும் போதாது, 20 ஆண்டுக ளுக்கு மேல் நிலத்தை உழுது பணிசெய்யும் விவசாயிகளுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என போராடி னேன். போராடியதோடு மட்டுமில்லா மல், வழக்குப் போட்டு 300 விவசாயி களுக்கு நிலத்தையும் வாங்கிக் கொடுத்தேன்.
இதனால் எல்லாம் ஆத்திர மடைந்த நிலச்சுவான்தார்கள், என்னை ஆள் வைத்து அடித்து குளத்துக்குள் வீசினார்கள். அப்படியும் நான் ஓயவில்லை. 1977-ல் ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டேன். விவசாயிகளும் பொதுமக்களும் என் பக்கம் நின்றார்கள்.
ஆனால், நிலச்சுவான்தார்களின் சதியால் 2,800 ஓட்டில் தோற்றேன். அதன்பிறகு எனக்கு அரசியல் பிடிக்கவில்லை. எந்தக் கட்சியிலும் நீதிக்கும் நேர்மைக்கும் இடமில்லை. அதனால், இப்போது நான் எந்தக் கட்சியிலும் இல்லை. ஆனால், நினைத்த மாத்திரத்தில் என்னால் 500 பேரைத் திரட்ட முடியும்.
அரசியல்வாதிகளின் ஆசியுடன் ஆற்று மணலும் தண்ணீரும் அநியாயமாய் கொள்ளை போகிறது. விவசாயத்துக்கு பயன்பட வேண்டிய தாமிரபரணி தண்ணீரில் தினமும் 9.70 கோடி லிட்டரை இங்குள்ள தனியார் ஆலைகள் உறிஞ்சி எடுக்கின்றன. போதாததற்கு துக்கு தூத்துக்குடி மாநகராட்சியும் தாமிரபரணியில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீரை எடுக்கும் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது.
46 ஆயிரம் ஏக்கர்
இதனால், தாமிரபரணியை நம்பி இருக்கும் 46 ஆயிரம் ஏக்கர் நஞ்சையில் இருபோக விவசாயம் பாதிக்கப்படும். அதனால், இந்தத் திட்டத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்குப் போட்டிருக்கிறேன்..தள்ளாத வயதிலும் தடுமாறாமல் பேசுகிறார் நயினார் குலசேகரன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணி மனைகள் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுப்பெற்ற நயினார் குலசேகரன், அதிமுக, திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பணி செய்யாமல் ஓ.டி-யில் இருப்பதால் ஒரு பணிமனையில் ஒன்பது லட்சம் நஷ்டமாகிறது. இவர்களை எல்லாம் வேலைக்கு அனுப்பி நஷ்டத்தைக் குறைக்க வேண்டும் என அண்மையில் கலெக்டரிடம் மனு கொடுத்து கெடு வைத்திருக்கிறார்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தொண்ணூறு வயதிலும் தொடரும் தொய்வில்லா போராட்டம்
குலசேகரன் உறுதி வெல்லட்டும்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» தொடரும் ஆண்குழந்தைகள் கடத்தல்!
» காலாவதியான சிலிண்டர்களை பயன்படுத்துவதால் தொடரும் விபத்துகள்
» தள்ளாத வயதிலும் தளராத யோகா
» எத்துனை வயதிலும் இளமையாக இருக்க
» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
» காலாவதியான சிலிண்டர்களை பயன்படுத்துவதால் தொடரும் விபத்துகள்
» தள்ளாத வயதிலும் தளராத யோகா
» எத்துனை வயதிலும் இளமையாக இருக்க
» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum