Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தரையில் நடக்கும் நிலவு
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
தரையில் நடக்கும் நிலவு
செல்லமே
ஒளி உடை
பனிப் பார்வை
அசைகையில்
சிலிர்க்கும் நட்சத்திரம்...
இமைக்கையில்
உருகும் பகல்...
அடடா...
என் செல்லம் நிலா!
குழந்தை குப்புற விழுந்து, மெல்ல எழுந்து, தத்தித் தத்தி, எட்டு வைத்து நடக்கும் பருவம். அப்போதே குழந்தைக்கான உடைகளில் லயிக்க ஆரம்பித்துவிடுகிறது தாயின் மனது. ஒரு பட்டுப்பாவாடை, காலில் கொலுசு, காதில் ஜிமிக்கி என மனதில் விரியும் ஒரு தங்கக் குடை. பட்டுச் செல்லத்துக்கு அழகழகான உடைகள் தைத்துப் போட்டு அழகு பார்ப்பதில் கிடைக்கும் சுகம் வேறெதிலும் இல்லை. குழந்தைகளுக்கான உடை வடிவமைப்பு... அவற்றின் அவசியம்... அதில் குழந்தையின் பங்கு பற்றியெல்லாம் விரிவாகப் பேசுகிறார் உடை வடிவமைப்பாளர் ஷாம்ளா...
‘‘கடந்த பத்தாண்டுகளில் அனைத்துத் தரப்பினரிடமும் உடைகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. ஆண்டொன்றுக்கு தங்கத்துக்காக செலவழிப்பதை விட உடைக்காகச் செலவழிப்பது அதிகமாகிவிட்டது. ஸ்டைல், வண்ணம், உடுத்தியிருக்கும் பாங்கு ஆகியவற்றை வைத்து ஒருவரின் பர்சனாலிட்டியை மதிப்பிட்டுவிட முடியும். இன்றைக்கு குழந்தைகளுக்கான உடைகளைத் தேர்வு செய்வதில் பெற்றோர் அதிகம் கவனமெடுக்க வேண்டியிருக்கிறது. பிறந்த குழந்தையிலிருந்து 10 வயதுக் குழந்தை வரை ஆயத்த உடைகள் கிடைக்கின்றன.
அவற்றில் எதையாவது வாங்கி அணிவித்துவிடலாம். ஆனால், அது உடலை உறுத்தாமல் மென்மையாகவும், வண்ணம் ஒட்டிக் கொள்ளாத வகையில் தரமானதாகவும் இருக்க வேண்டும். குட்டிச் செல்லங்களுக்கு டிரெண்டியான உடைகளும் கிடைக்கின்றன. காட்டனுடன் ‘புரோ கட்’ மற்றும் டிசைனர் துணிகளைப் பயன்படுத்தி ரிச்சான தோற்றத்தை உருவாக்க முடியும். சுட்டிப் பையன்களுக்கு ‘சோட்டா பீம்’ கார்ட்டூன் டிசைனோடு குட்டி வேட்டி கூட கிடைக்கிறது.
குர்தாவில் இண்டோ-வெஸ்டர்ன் ஸ்டைலைப் புகுத்தினால் குழந்தைகளுக்கு விதம் விதமான உடைகள் கிடைக்கும். குர்தாவுடன் பெல்பாட்டம், புஷ் பேன்ட் ஆகியவற்றையும் சேர்த்தால் ஆண் குழந்தைகளுக்கும் விதம் விதமாக உடுத்தி மகிழலாம். கேஷுவலாக அணிய காட்டன் மற்றும் பனியன் கிளாத் உடைகள் பொருத்தம். விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்ப பட்ஜெட்டுக்குள் டிசைன் செய்து விழாக்கால குட்டீஸ் உடையை உருவாக்கலாம். குழந்தையின் தோற்றத்துக்கு ஏற்ற வண்ணம், உறுத்தாத டிசைன்களில் உருவாக்கலாம். துணியில் தையல் வேலைப்பாடு செய்து அம்மாக்களின் கனவை கொஞ்சம் மெருகூட்டலாம்.
பெண் குழந்தைகளுக்கு எக்கச்சக்க டிசைன்கள் கொட்டிக் கிடக்கின்றன. ரெகுலருக்கு காட்டனில் ஃப்ராக், டாப்ஸுடன் பேன்ட் என தேர்ந்தெடுக்கலாம். அவற்றில் சிறுசிறு வேலைப்பாடுகளில் தனித்துவத்தை வரவழைக்கலாம். பெண்களுக்கு சுடிதாரிலும் பிளவுஸிலும் செய்யப்படுகிற வேலைப்பாடுகளை, குட்டீஸ் உடைகளிலும் செய்து, டிரெண்டி லுக் கொண்டு வரலாம். ரெடிமேட் உடைகள் எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்தும் எனச் சொல்ல முடியாது. விழாவில் தனித்துவத்தோடு நம் பட்டுச் செல்லம் தெரிய பிரத்யேகமாக டிசைனிங் செய்வதே நல்லது!
விருந்து, விழாக்களுக்குச் செல்லும் போது ஃப்ராக், லாங் ஃப்ராக், இண்டோ-வெஸ்டர்ன் ஃப்ராக்குகளில் ஜாலம் காட்ட முடியும். சாட்டின், நெட், காட்டன், ஃப்ளவர் கட் துணிகளைப் பயன்படுத்தி அவற்றில் ரிச் லுக் வர வழைக்கலாம். குடை போல விரியும் அம்பர்லாகட் ஸ்கர்ட்டும் டிசைனர் சோளியும் தனி அழகு தரும். டெனிம் மற்றும் ஜீன்ஸ் க்ளாத் அணிவித்து, பொருத்தமான டாப்ஸ் தைக்கலாம். உடை க்யூட்டாகத் தெரிய வேண்டும் என்றும், ‘இந்த டிரெஸ் எங்கே வாங்கியது?’ என்ற கேள்வி வர வேண்டுமென்றும் குழந்தைகளே எதிர்பார்க்கிறார்கள். அதற்கு ஏற்ப உடைகளை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
ஆனாலும், அதற்காக மெனக்கெட்டு பொருட்களை வாங்கி, கச்சிதமாக உருவாக்கி குழந்தைகளுக்கு அணிவிப்பதுஅலாதி இன்பமே! தன்னுடைய உடைக்காக அம்மா இவ்வளவு மெனக்கெடுகிறாரே என்ற எண்ணம் குழந்தை மனதில் அன்பின் சிம்மாசனத்தைப் பெற்றுத் தரும். டிசைனர் உடைகளை உருவாக்க நிறைய கேட்லாக்குகள் கிடைக்கின்றன. உலகின் ஏதோ ஒரு மூலையில் பயன்படுத்தும் உடையின் வடிவத்தைக்கூட இணையத்தில் காணலாம். டிசைன் இதுதான் என்பதை மனதில் க்ளிக் செய்து கொண்டால் போதுமே!
குழந்தைக்கான உடையைத் தேர்வு செய்யுங்கள். அந்த உடையில் எந்த வண்ணத்துடன், எந்த டிசைனுடன் எதை இணைக்கலாம், இன்னும் எப்படி புதிதாக்கலாம் என்பதை சுட்டியுடன் இணைந்து யோசியுங்கள். அவர்களின் யோசனை புதுமை சேர்க்கும். வண்ணங்கள், டிசைன்கள் குறித்த புரிதல் இதன் மூலம் பலப்படும். உடையில் ஓவியம் வரையும் தன் படைப்பாற்றலை குழந்தை வெளிப்படுத்தவும் வாய்ப்புக் கிடைக்கிறது. டிசைன் செய்த உடைக்கான பொருட்கள், அதற்கான அணிகலன், காலணி வாங்கும் போது செல்லத்தையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்.
பொருட்களின் விலை, தன்மை, நம்மிடம் உள்ள நிதி ஆதாரத்தில் எதை வாங்கலாம் போன்ற பல விஷயங்களை குழந்தை கற்றுக் கொள்ளும். அதோடு, புதிய யோசனையை செயல்படுத்தி அதில் திருப்தியும் அடையும். குழந்தை தானாகவே உடையை தேர்வு செய்கிறது... கற்பனையில் வடிவம் கொடுக்கிறது... டெய்லரிடம் தைத்து, பெற்று அணிந்து கொள்கிறது... இதில் குழந்தைக்குக் கிடைக்கும் குஷியே தனி. 10 பேர் பாராட்டினால், தரையில் கால் பாவாமல் வானத்தில் மிதப்பது போலவே செல்லம் உணரும். இப்படி உருவாக்கப்படும் ஒவ்வொரு உடையும் குழந்தையை குட்டித் தேவதையாக மாற்றி விடுகிறது.
உடை உடலை மறைக்கும் விஷயம் மட்டுமல்ல... மனதின் அழகியலை, அன்பின் அடர்த்தியை வெளிப்படுத்த அமையும் வாய்ப்பு. சுட்டி டிசைனர்களை உருவாக்குங்கள்! தரையில் இறங்கி நடக்கும் நிலவுகளைப் பார்த்து யாரால் மயங்காமல் இருக்க முடியும்?”
(வளர்ப்போம்)
நன்றி குங்குமம் தோழி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» தரையில் துடிக்கும்
» அடடே அறிவியல்: தரையில் ஹெலிகாப்டர் ஓட்டுவோமா?
» தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
» மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க சில சூப்பர் டிப்ஸ்...
» தேன் நிலவு
» அடடே அறிவியல்: தரையில் ஹெலிகாப்டர் ஓட்டுவோமா?
» தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
» மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க சில சூப்பர் டிப்ஸ்...
» தேன் நிலவு
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|