தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி

View previous topic View next topic Go down

ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி Empty ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி

Post by முழுமுதலோன் Wed Jun 25, 2014 12:08 pm


சரஸ்வதி  நமஸ்துப்யம்  வரதே  காம ரூபிணி

                       வித்யாரம்பம்  கரிஷ்யாமி  ஸித்திர் பவது மே ஸதா...

 

ஆய கலைகள்  அறுபத்து நான்கினையும்

ஏய  உணர்விக்கும்  என்  அம்மை -தூய

உருப்பளிங்கு போல்வாள்  என் உள்ளத்தினுள்ளே 

இருப்பளிங்கு  வாராது இடர் .

ஓம்   கலைவாணியே  போற்றி

ஓம்   கல்வியறிவு   தருபவளே  போற்றி

ஓம்   நான்முகனின்  நாயகியே  போற்றி

ஓம்   நான்முகனின்  நாநுனியில்  வசிப்பவளே  போற்றி

 

ஓம்   சகல கலா வல்லித்தாயே   போற்றி

ஓம்   ஏகவல்லி  நாயகியே  போற்றி

ஓம்   பிரம்மதேவரின்  பத்தினியே  போற்றி

ஓம்   பரசுராமரைப்  பெற்றவளே   போற்றி                                             8

 

ஓம்  கல்வியறிவிற்கு   அதிபதியே  போற்றி

ஓம்  மஹா மாயா  சக்தியும்  நீயே   போற்றி

ஓம்   தாமரை  மலரில்  வாசம்  செய்பவளே  போற்றி

ஓம்   கேட்கும்  வரமனைத்தும்  தருபவளே  போற்றி

 

ஓம்   ஞானமுத்திரை  தருபவளே  போற்றி

ஓம்   புத்தகம்   கரத்தில்  கொண்டவளே  போற்றி

ஓம்  மஹா  வித்தை  நீயே  தாயே  போற்றி 

ஓம்  மஹா பாதகங்களை  துவம்சம்  செய்பவளே  போற்றி         16

 

ஓம் அனைத்து  யோகங்களையும்  தருபவளே  போற்றி

ஓம்  மஹாகாளி  மஹாதுர்கா  மஹாலஷ்மி  நீயே  போற்றி

ஓம்  உயரிய  கல்வியை  கேட்டபடி  தருபவளே  போற்றி

ஓம்  கற்றதற்கு  ஏற்ற  உயர்வாழ்வை  வரமாய்த்  

தருபவளே  போற்றி

 

ஓம்  சர்வ மந்த்ரங்களின்  மூலாதாரப்  பொருள் நீயே போற்றி

ஓம்   சர்வ  மங்கள மந்திரங்கள்  சித்தி யளிப்பவளே   போற்றி

ஓம்   சர்வ மங்கள மாங்கல்ய   பலம்  தருபவளே  போற்றி

ஓம்   சர்வ சாஸ்த்திரங்களின்  உற்பத்தி  ஸ்தலம்  நீயே  போற்றி  24

 

ஓம்  கற்றோரை  சென்ற  இடமெல்லாம்   சிறப்பிக்கும்  

தாயே போற்றி

 ஓம்  நல்லவர்  நாவில்   இருந்து  நல்வாக்கு  

சொல்பவளே  போற்றி

 ஓம்  அற்புத மந்திரம்  எழுதும்   வாணியே  போற்றி

 ஓம்   அழகுவீணை   இசைப்பவளே  போற்றி

 

 ஓம்  கலைகள்  மூன்றிற்கும்  மூலாதாரச்  சுடரே  போற்றி

 ஓம்  கல்வியை  உனது  ரூபமாகக்  கொண்டவளே  போற்றி

 ஓம்  யந்திர  தந்திர  மந்த்ரம்   கற்றுத்  தருபவளே   போற்றி

 ஓம்  தொழிற்  கல்வி  அனைத்தும்   தருபவளே  போற்றி                 32

 

ஓம்   அனைத்து  வாகனங்களின்  சூட்சுமம்  நீயே  போற்றி 

ஓம்   கணிதம்  தந்த  கலைவாணித்  தாயே   போற்றி

ஓம்   கணிப்பொறி யியலின்   காரணி  போற்றி

ஓம்    காலம்   நேரம்   வகுத்தவளே   போற்றி

 

ஓம்  விஞ்ஞானத்தின்  மூலாதாரமே  போற்றி

ஓம்   அண்ட சராசரங்களின்  இருப்பிடம்  கணித்த  தாயே  போற்றி

ஓம்   வான  சாஸ்திர  அறிவின்   பிறப்பிடம்  நீயே  போற்றி

ஓம்   வறுமையை  போக்கும்  கல்வித்  தாயே  போற்றி                     40

 

ஓம்  இயல்  இசை  நாடகம்  போதித்த   கலைமகளே  போற்றி

ஓம்   வீணை யொலியில்  மந்த்ரம்  மீட்டும்  தாயே  போற்றி

ஓம்  மூவுலகும்  மயங்கும்  வீணை  மீட்டும்  

வீணா கான வாணி  போற்றி

ஓம்  முத்தமிழும்   தழைக்கச்  செய்த   அன்னையே   போற்றி

 

ஓம்   வாக்கிற்கு  அதிதேவதை  நீயே  தாயே போற்றி

ஓம்  சௌபாக்ய  செல்வம்  தரும்  மந்த்ரம்  நீயே போற்றி

ஓம்   வாழ்வைப்    புனிதமாக்கும்   மந்திரமே   போற்றி

ஓம்   கலைவாணித் தாயே  சரஸ்வதியே   போற்றி                             48

 

ஓம்  ரக்தபீஜ  சம்ஹார மந்த்ரம்  தந்த  வாணீ  போற்றி

ஓம்  அம்பிகை  சாமுண்டி  வராஹி  யாவரும்  நீயே  போற்றி

ஓம்  முக்காலங்களிலும்  முகிழ்ந்து  உறைந்தவளே  போற்றி

ஓம் சுபாஷிணி  சுபத்ரை  விஷாலாட்சி  மூவரும்  நீயே  போற்றி

 

ஓம்  பிரஹ்மி  வைஷ்ணவி  சண்டி  சாமுண்டி  நீயே  போற்றி

ஓம்  பாரதி  கோமதி  நாயகி  நாண்முகி தாயே  போற்றி

ஓம்  மகாலஷ்மி  மஹாசரஸ்வதி  மகாதுர்கா  நீயே  போற்றி 

ஓம் விமலா மாகாளி  மாலினி  யாவரும்  நீயே போற்றி               56 

 

ஓம்  விந்திய  விலாசினி  வித்யா  ரூபினி   போற்றி 

ஓம்  மஹா  சக்தியினுள்ளே உறைபவள்   போற்றி 

ஓம்  சர்வ தேவியருள்ளும்  உறைபவள்  நீயே  போற்றி 

ஓம் பொன்னும் மெய்ப்பொருளும்  கல்வியினால் 

அருள்பவளே  போற்றி 

 

ஓம் திருமால் உந்தியில் உதித்தவனின்  துணைவி  போற்றி 

ஓம் உலகின்  எல்லா எழுத்திற்கும்  மூலமே போற்றி 

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மந்திர எழுத்துகளின்  ரூபமே போற்றி 

ஓம் மந்திர ராஜ்யத்தின் தேவி பீஜாட்ஸரி போற்றி                           64

 

ஓம் சர்வாம்பிகையே சத்தியவாசினி புத்தகவாசினியே  போற்றி

ஓம்  சர்வ  அபாயங்களையும்  துவம்சிப்பவளே  போற்றி 

ஓம்  சாற்றுக் கவி  நாநுனி யுரையும் அன்னையே போற்றி 

ஓம் காற்றில் கலந்த  மந்திர  ஒலியே  போற்றி

ஓம் வித்யா திருஷ்டா யுத்மா போற்றி 

ஓம் வாக்கின்  தலைவியான  வாக்தேவி  போற்றி 

ஓம் விஞ்சு பகவதி  உயர்புகழ்  பிராம்ஹி  போற்றி 

ஓம்  சொல்லும் சொல்லின்  மெய்ஞானப் பொருளே போற்றி  72

 

ஓம்  நீதித்துறை  நடுநின்ற  நாயகி போற்றி 

ஓம்  பண் பரதம் கல்வி  தருபவளே போற்றி 

ஓம் கற்றவர் நாவில் உறைபவளே  போற்றி 

ஓம் யந்திர வாகன  ஆயுதங்களின்  அதிதேவதையே போற்றி 

 

ஓம் தேகத்தின்  புத்திப் பகுதியில்  உறைபவளே  போற்றி 

ஓம்  வேத தர்ம நீதி  சாஸ்திரங்கள்  வகுத்தவளே  போற்றி 

ஓம்  பூஜிப்போர் மனம்  மகிழ்விப்பவளே  போற்றி 

ஓம்  அனைத்து  புண்ய தீர்த்தங்களின்  ரூபத்தவளே  போற்றி     80

 

ஓம்  யமுனை நதி தீரத்தின்  மையங் கொண்டவளே  போற்றி 

ஓம் சர்வ ஜீவ காருண்ய மனம் கொண்ட  மாதரசி போற்றி 

ஓம்  பிரம்மா லோகத்தை  மையம்  கொண்ட பிரம்ம 

நாயகி போற்றி 

ஓம் உச்ச நிலை வறுமையையும்  கற்ற வித்தை கொண்டு 

அழிப்பவளே  போற்றி 

 

ஓம் சரணடைந்தவர்க்கு  சாஸ்வத மானவளே போற்றி 

ஓம் வேதாந்த ஞானிகளின்  ரூபத்தவளே போற்றி 

ஓம் எழு தாமரை யுறை புகழ் முன்றக் கரவுருள்  போற்றி 

ஓம் பின்னமேதுமில்லாமல்  தேவையானதை 

தருபவளே  போற்றி                                                                               88 

 

ஓம்  இடது ஒரு கையில் சுவடி கொண்டவளே  போற்றி 

ஓம் இடது  மறு கையில்  ஞானாமிர்த கலசம்  

கொண்டவளே  போற்றி 

ஓம் வலது ஒரு கையில் சின் முத்ரா  கொண்டவளே  போற்றி 

ஓம் வலது  மறு கையில் சிருஷ்டியின் அட்சரமாலை 

கொண்டவளே போற்றி 

 

ஓம் பத்மாசனம் உறைபவளே  போற்றி 

ஓம்  புத்திப் பிரகாசம்  தருபவளே  போற்றி 

ஓம்  வாக்கு வன்மை  தருபவளே  போற்றி 

ஓம் மனதில்  தூய்மை சாந்தி  அமைதி  தருபவளே  போற்றி       96

 

ஓம் தத்துவ எழுத்து ரூபம் தாங்கிய  தேவி போற்றி 

ஓம்  மஹா நைவேத்யம்  உவந்தவள்  போற்றி 

ஓம்  கற்பூர  நீராஜனம் உவந்தவள்  போற்றி 

ஓம் ஸ்வர்ண புஷ்பம்  உவந்தவளே  போற்றி                                     100

ஓம்  யுக தர்மம்  கணித்தவளே  சகலகலாவல்லியே  போற்றி 

ஓம்  ஸ்ரீசக்கர பூஜையின் மந்திர ரூபிணியே  போற்றி 

ஓம் பதாம் புயத்தவளே  சகலகலாவல்லியே  போற்றி 

ஓம்  கற்றறிஞர்  கவிமழை  தரும் கலாப மயிலே  போற்றி 

  

ஓம்  கண்ணும் கருத்தும்  நிறை  சகலாகலாவல்லியே  போற்றி 

ஓம்  வெள்ளோதிமைப் பேடே  சகலகலாவல்லியே போற்றி 

ஓம்  கண்கண்ட  தெய்வமே  சகலகாவல்லியே போற்றி 

ஓம் கல்விச் செல்வம்  தந்தருள்வாய்  கலைவாணியே  

போற்றி ... போற்றி ... போற்றி ... போற்றியே ....                                 108 

 

 

வாணி  சரஸ்வதி  என் வாக்கில்  நீ குடியிருந்து 

தாயே  சரஸ்வதியே  சங்கரி நீ என் முன் நடந்து 

என் நாவில் குடியிருந்து  நல்லோசை  தந்துவிட்டு 

கமலாசனத்தாலே  எமைக் காத்து 

என் குரலில்  நீயிருந்து  கொஞ்சிடனும்  பெற்றவளே ...

என்  நாவில் நீ தங்கி  குடியிருந்து 

சொற்பிழை  பொருட்பிழை  நீக்கி 

நல்லறிவும்  நல்வாழ்வும்  நீ தந்து 

மங்கல வாழ்விற்கு  வழி வகுத்து 

தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு 

சாஸ்வதமான  சரஸ்வதி  தாயே 

உன்  திருவடி  சரணம்  போற்றி... 

உன்  மலரடி  சரணம்  போற்றி ...போற்றியே .....

aanmigam
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி Empty Re: ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி

Post by முரளிராஜா Sun Oct 12, 2014 10:08 am

போற்றி போற்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி Empty Re: ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி

Post by செந்தில் Sun Oct 12, 2014 10:18 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி Empty Re: ஸ்ரீமஹா சரஸ்வதி 108 போற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum