Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
30 வகை இனிப்பு உருண்டை சமையல்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
30 வகை இனிப்பு உருண்டை சமையல்
ரவா தேங்காய் உருண்டை:
தேவையானவை:
தேங்காய் துருவல் - 1 கப், ரவை - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் ரவையை நன்கு வறுத்துக்கொள்ளுங்கள். மீதி இருக்கும் நெய்யில் தேங்காயை நன்கு வறுத்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்து, ‘பிசுக்கு பதம்’ வந்ததும் இறக்குங்கள்.
சர்க்கரை கரைந்து கொதித்ததும், ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் பாகைத் தொட்டுத் தேய்த்துப் பார்த்தால், கம்பி பிரிந்து வராமல், பிசுபிசுப்பாய் விரல்களில் ஒட்டும். அதுதான் ‘பிசுக்கு’ பதம்
.
வறுத்த ரவை மற்றும் தேங்காய் துருவலை பாகில் கொட்டி, ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவையுங்கள்

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை இனிப்பு உருண்டை சமையல்
கறுப்பு எள்ளுருண்டை :
தேவையானவை:
கறுப்பு எள் - 1 கப், வெல்லம் - அரை கப்.
செய்முறை:
எள்ளைக் கழுவி, கல் அரித்து சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
கடாயைக் காயவைத்து, சுத்தம் செய்த எள்ளை (அது ஈரமாக இருக்கும்போதே) போட்டு, அது பொரியும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.
பொடித்த வெல்லத்தை மிக்ஸியில் போட்டு, அதோடு வறுத்த எள்ளையும் போட்டு, விப்பர் பிளேடை உபயோகித்து சுற்றி எடுங்கள். (ஆட்டுரல் இருப்பவர்கள் அதில் போட்டு, இரும்பு உலக்கையால் இடிக்கலாம்).
எள் நைஸாக அரைபட்டுவிடாமல், ஒன்றிரண்டாக வெல்லத்தோடு சேர்ந்து இடிபட்டதும் எடுத்து சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.

பாசிப்பருப்பு மாவுருண்டை
தேவையான பொருட்கள்:
செய்முறை:
குறிப்பு:
தேவையான பொருட்கள்:
- வறுத்து பொடி செய்த பாசிப்பருப்பு மாவு – 2 கப்
- நெய் – 1/4 கப்
- ஏலக்காய் – 10
- முந்திரி – 10
- சர்க்கரை – 1 கப்
செய்முறை:
- வறுத்து பொடி செய்த பாசிப்பருப்பு மாவு கடைகளில் பாக்கெட்டுகலாக கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி இந்த உருண்டைகளை சுலபமாகத் தயாரிக்கலாம்.
- அல்லது 2 கப் பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ளவும்.ஒரு அகன்ற வாணலியில் 1/2 டீ ஸ்பூன் நெய் விட்டு பாசிப்பருப்பைச் சேர்த்து மிதமான தணலில் வறுக்கவும்.
- லேசான பொன்னிறமாக பருப்பு மாறி நல்ல வாசனையும் வரும். இப்போது அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு அகலமான தட்டில் பருப்பைக் கொட்டி நன்றாக ஆற விடவும். பின் மிக்சியில்/மிஷினில் கொடுத்து மாவாக நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை சூடு இல்லாமல் பேப்பரில் அல்லது பெரிய தட்டில் பரப்பி நன்கு ஆற விட்டு பின் டப்பாக்களில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
- 2 கப் மாவை அளந்து எடுத்துக் கொள்ளவும்.
- பாக்கெட் மாவு உபயோகிப்பதாக இருந்தால், 2 கப் மாவை முதலில் அளந்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு மாவைச் சேர்த்து மிதமான தணலில் வாசனை வரும் வரை வறுக்கவும். பின் மாவை தட்டில் பரப்பி ஆற விடவும்.
- வீட்டில் தயாரித்த மாவானால் மீண்டும் வறுக்க வேண்டாம். சர்க்கரை, ஏலக்காயை மிக்சியில் நன்றாகப் பொடி செய்து கொள்ளவும். முந்திரியை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.சிறிது நெய் விட்டு முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
- இப்போது மாவுடன் சர்க்கரை, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரியைச் சேர்த்துக் கலக்கவும்.
- மீதமுள்ள நெய்யை நன்றாக உருக்கி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். லேசாக கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும்.
- இதேபோல் மாவு முழுவதையும் உருண்டைகளாகப் பிடிக்கவும். சுத்தமான கண்ணாடி பாட்டில்களில்/ டப்பாக்களில் வைத்து பயன்படுத்திக் கொள்ளவும்.
குறிப்பு:
- சர்க்கரையின் அளவை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டியோ அல்லது குறைத்தோ செய்து கொள்ளவும்.
- மாவு உருண்டை பிடிக்க வராமல் உதிர்ந்து கொண்டே போனால் மாவில் ஈரப்பதம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். மேலும் சிறிது உருக்கிய நெய் சேர்த்து பின் உருண்டை பிடிக்கவும்.
- மாவில் நெய்யின் அளவு கூடிவிட்டால் மாவு மிகவும் ஈரமாகத் தெரியும். எனவே தேவையான அளவு நெய் சேர்த்து செய்து கொள்ளவும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை இனிப்பு உருண்டை சமையல்
அவல்பொரி - எள் - பொட்டுக்கடலை உருண்டை:
தேவையானவை:
அவல் - 4 கப், கறுப்பு எள் - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - கால் கப், வெல்லம் - ஒன்றேகால் கப், அரிசி மாவு - சிறிதளவு.
செய்முறை:
எள்ளை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளுங்கள்.
பொட்டுக்கடலை நமுத்திருந்தால் மட்டுமே, வெறும் கடாயில் போட்டு சூடு வர வறுத்து எடுக்கவேண்டும். இல்லையென்றால், அப்படியே உபயோகிக்கலாம்.
வெல்லத்தைப் பொடித்து, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு பாகு பதம் வந்ததும் இறக்குங்கள்.
பாகை சிறிது எடுத்து தண்ணீரில் விடவேண்டும். பின் அதை எடுத்து உருட்டி தரையிலோ வேறு பாத்திரத்திலோ போட்டால் சத்தம் வரவேண்டும். வெல்லப்பாகு சேர்க்கும் எல்லா உருண்டைகளுக்குமே இதுதான் பாகு பதம்.
வறுத்த எள், பொட்டுக்கடலை, அவல் ஆகியவற்றை பாகில் கொட்டி, கிளறி சூடாக இருக்கும்போதே, அரிசிமாவைக் கைகளில் தடவிக்கொண்டு, உருண்டை பிடியுங்கள்.

கடலை உருண்டை
தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை - 2 கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், அரிசி மாவு - சிறிது.
செய்முறை:
வேர்க்கடலையை சுத்தம் செய்து, தோல் நீக்கிக்கொள்ளுங்கள். வெல்லத்தைப் பொடித்து, கால் கப் தண்ணீர் சேர்த்து, முன் சொன்ன முறையில் பாகு வைத்துக்கொள்ளுங்கள்.
கடலையைப் பாகில் கொட்டி, ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி கடலை உருண்டைகளைப் பிடியுங்கள்.
சூடு தாங்க முடியாதவர்கள், அரிசிமாவு தொட்டுக்கொண்டு உருட்டலாம். முதலில், வேகவேகமாக உருண்டையை அது வரும் வடிவத்தில் பிடித்துப் போட்டுவிட்டு, பின்னர், அழுத்தி உருண்டை பிடிக்கலாம். அப்போது இறுகி, வடிவம் நன்கு வரும்.

பொருள்விளங்கா உருண்டை
தேவை:
வேர்க்கடலை_2 கப்
வெல்லம்_ஒன்றரை கப்
பொட்டுக்கடலை_1/2 கப்
எள்_2 டீஸ்பூன்
அரிசி மாவு_1 கப்
செய்முறை:
வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். பொட்டுக்கடலை,எள் இவற்றை மிதமான சூட்டில் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காய் பொடித்துக்கொள்ளவும்.இவை எல்லாவற்றையும் வெறும் வாணலியில்தான் வறுக்க வேண்டும்.வறுத்த பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
பாகு காய்ச்சுதல்: கல்பதம்
கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பிலேற்றவும். வெல்லம் கரைந்து நுரைத்துக் கொண்டு வரும்.சிறிது கவனமாக இருக்கவேண்டும்.இல்லை என்றால் பாகு தீய்ந்துவிட வாய்ப்புண்டு.
ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூனால் பாகிலிருந்து சிறிது எடுத்து தண்ணீரில் விட்டு கைகளால் உருட்டி எடுத்து ஒரு எவர்சில்வர் தட்டில் போட்டால் டங்கென்று சத்தம் வரவேண்டும்.அதுதான் கல்பதம்.
இப்போது பாகை அடுப்பில் இருந்து இறக்கி கடலை கலவையில் ஊற்றி மத்தின் அடிப்பகுதியால் நன்றாகக் கிளற வேண்டும்.
நல்ல சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்க வேண்டும்.அவ்வாறு பிடிக்கும்போது வெல்லம் பிசுபிசுவென கையில் ஒட்டும்.மேலும் கலவை சூடாகவும் இருக்கும்.எனவே அரிசி மாவை தூவிக்கொண்டே உருண்டை பிடிக்க வேண்டும். இப்போது நல்ல சத்தான, சுவையான சுமார் 15 உருண்டைகள் தயார்.
ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு மாலை வேளையில் சாப்பிடக் கொடுக்கலாம்.

பொட்டுக்கடலை உருண்டை
[url][/url]
தேவையானப்பொருட்கள்:
பொட்டுக்கடலை - 3 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10 அல்லது 15
செய்முறை:
பொட்டுக்கடலையையும், சர்க்கரையையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்து, சலித்து எடுக்கவும்.
பொட்டுக்கடலை மாவை அளந்து ஒரு பாத்திரத்தில் போடவும். பொடித்த சர்க்கரையும் அதே அளவு இருக்க வேண்டும். சர்க்கரைப்பொடி கூடவோ, குறையவோ இருந்தால் அதற்கேற்றாவாறு சரி செய்து கொள்ளவும். மாவையும், சர்க்கரைப்பொடியையும் ஒன்றாகக் கலக்கவும். அத்துடன் ஏலக்காய் தூளையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய்யை விட்டு சூடானதும், அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, மாவில் போட்டு மீண்டும் நன்றாகக் கலக்கவும்.
வாணலியில் எல்லா நெய்யையும் விட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, சூடாக்கவும்.
ஒரு தட்டில், நாலைந்துக் கரண்டி பொட்டுக்கடலைமாவு கலவையைப் போட்டு, அதில் சிறிது சூடான நெய்யை விட்டுக் கிளறி, அதே சூட்டுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும். இதே போல் எல்லா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, சூடான நெய் சேர்த்து உருண்டைகளைப் பிடித்தெடுக்கவும்.
மேற்கண்ட அளவிற்கு 20 உருண்டைகள் வரை வரும்.

வெள்ளை எள்ளுருண்டை
வேண்டியவைகள்
சுத்தமான வெள்ளை எள் – அரை கப்
வேர்க்கடலை -அரை கப்
பாதாம் பருப்பு – 10
சுக்கு தட்டியது – கால் டீஸ்பூன்
உரித்த ஏலக்காய் – 2
நல்லவெல்லம்- முக்கால் கப் போட்டுக் கொள்ளலாம்.
அரை டீஸ்பூன் நெய். கட்டாயமில்லை.
செய்முறை
1.வாணலியை நன்றாகக் காயவைத்து எள்ளைப் போட்டு நன்றாகப் பிரட்டிக் கொடுத்து மிதமான தீயில் படபடவென்று பொரித்தெடுக்கவும்.
2. வேர்க் கடலையை 2 சொட்டு அதான் 2 ட்ராப் எண்ணெய் சேர்த்து சிவக்க வறுத்தெடுக்கவும். நன்றாகத் தேய்த்துப் புடைத்துத்தோலை நீக்கவும்
3. பாதாம்,சுக்கு ஏலக்காயை லேசாக சூடு படுத்திக் கொள்ளவும்.
4. வெல்லத்தை சற்று உதிர்த்து வைத்துக் கொள்ளவும். இரண்டு நிமிஷங்களில் தயார் செய்ய ஆரம்பிக்கலாம்.
5. உலர்ந்த ஈரமில்லாத மிக்ஸியின் உபகரணத்தில், எள்ளையும்,மற்ற வேர்க்கடலை,பாதாம்,சுக்கு ஏலக்காய் சேர்த்து,நிதானமாக அரைத்துப் பொடியாக்கவும்.
6. அழகாகக் கசிவோடு, பொடியாகும். கிளறிவிட்டுப் பொடிக்கவும்.
7. வெல்லப்பொடி,அல்லது துண்டுகள் சேர்த்துப் பொடிக்கவும்.
8. சேர்ந்தமாதிரி பொடியாகும். இன்னும் ஒரு சுற்று நன்றாகச் சுற்றவும்.
9. பாத்திரத்தில் எடுக்கவும். இஷ்டமிருந்தால் சொட்டு நெய் விடவும்.
10. சேர்த்துக் கலந்து சுலபமாக உருண்டைகளாக உருட்டவும். சிரமமே இருக்காது.
11. இதைவிட சுலபமானது எதுவுமே இல்லை.
12. வெல்லக் கசிவும், எண்ணெய் விதைகளும் பாகும்,பதமும் கேட்பதில்லை. நன்றாக வறுபடுதல் முக்கியம்.

ரவா உருண்டை
[url][/url]
தேவையானப்பொருட்கள்:
ரவா - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் - 8
முந்திரிப்பருப்பு - 10
செய்முறை:
ரவாவை வெறும் வாணலியில் போட்டு வறுத்தெடுக்கவும். சிவக்க வறுக்கத் தேவையில்லை. தொட்டால் சுடும் அளவிற்கு வறுத்தால் போதுமானது. சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் நன்றாகப் பொடித்து சலித்துக் கொள்ளவும். பொடித்த ரவாவை அளந்து, அதற்கு சமமாக சர்க்கரைத் தூளை சேர்க்க வேண்டும். அத்துடன் ஏலக்காயையும் பொடித்து சேர்க்கவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்து, ரவாவுடன் சேர்த்து, நன்றாகக் கலந்துக் கொள்ளவும். அதே வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு சூடாக்கவும். நெய் சூடானதும், அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் 2 அல்லது 3 கரண்டி மாவைப் போட்டு, அதன் மேல் 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் சூடான நெய்யை விட்டு, ஒரு கரண்டியால் கலந்துக் கொள்ளவும். பின்னர் மாவை ஒரு முறை கையால் கலந்து விட்டு, எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டையாகப் பிடிக்கவும். மீதமுள்ள மாவு , நெய் ஆகியவற்றை இப்படியே கொஞ்சம், கொஞ்சமாகக் கலந்து செய்து முடிக்கவும்.
மேற்கண்ட அளவிற்கு 20 உருண்டைகள்வரை கிடைக்கும்.

நெல் பொரி உருண்டை
தேவையான பொருள்கள்:
நெல் பொரி – 3 கப்
வெல்லம் – 1 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
கொப்பரை அல்லது தேங்காய்
ஏலத்தூள்
நெய்
செய்முறை:
கூம்பு:
http://mykitchenpitch.wordpress.com/2007/11/22/nel-pori-urundai-thirukkaarththigai/
தேவையான பொருள்கள்:
நெல் பொரி – 3 கப்
வெல்லம் – 1 கப்
சுக்குப் பொடி – 1/2 டீஸ்பூன்
கொப்பரை அல்லது தேங்காய்
ஏலத்தூள்
நெய்
செய்முறை:
- நெல் பொரியை நெல், உமி இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ளவும்.
- கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை சிறிது சிறிதாக மிக மெலிதாகக் கீறி ஒரு டீஸ்பூன் நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பெரிய வாணலியில் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து வைத்து, நன்கு முற்றிய கெட்டிப் பாகாக வைத்துக் கொள்ளவும். (தண்ணீரில் போட்டு வெளியே எடுத்து தட்டினால் ‘ணங்’ என்று சத்தம் கேட்க வேண்டும்.)
- பாகு வருவதற்கு முன் ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்க்கவும்.
- பாகு வந்ததும், தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- நெல் பொரியை வேகமாக பாகில் முழுமையாகக் கலக்கவும்.
- கையில் நெய் துடைத்துக் கொண்டு, வேண்டிய அளவில் உருண்டைகளாகப் பிடிக்கவும். அதிகம் அழுத்தி, பொரியை உடைக்காமல், மென்மையாக ஆனால் நன்றாக அழுத்தமாகப் பிடித்தால் சேர்ந்தாற்போல் வரும்.
- 4, 5 உருண்டைகளாக இடையிடையே ஒரு சுளகில் அல்லது முறத்தில் இட்டுச் சுழற்றினால் ஒன்றோடு ஒன்று இடித்து, நன்றாக உள்ளே இறுகிக் கொள்ளும். (பாட்டி காலத்தில் இந்த வேலை எல்லாம் எனக்குத் தான் வரும். சுளகு சுத்தவே இல்லை, உன் உடம்பு தான் சுத்துது என்று கிண்டல் செய்வார்கள்.)
- பாதி செய்துகொண்டிருக்கும்போதே கலவை இறுகி எடுக்கவரவில்லை என்றால், மீண்டும் அடுப்பில் சிம்’மில் (மட்டும்) வைத்தால் பாகு இளகி எடுக்க வரும். தொடர்ந்து மிச்ச உருண்டைகளையும் பிடிக்கலாம்.
- ஆறியதும் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைத்து உபயோகிக்கவும்.
கூம்பு:
- கூம்பில் உள்ளே நன்றாக நெய்யைத் தடவிக் கொள்ளவும்.
- சிறிது கலவையை உள்ளே போட்டு, ஒரு குழிவான(வட்டமான) கரண்டியால் நன்கு அழுத்திவிட்டு, பிறகு இன்னும் கொஞ்சம் கலவையைச் சேர்த்து, மீண்டும் அழுத்த வேண்டும். இதேபோல் சிறிதுசிறிதாக கலவையைச் சேர்த்து அழுத்திக் கொண்டே வரவேண்டும்.
- கூம்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் நமக்கு வேண்டிய உயரம்(அளவிற்கு) அடைத்து விட்டு நிறுத்திக் கொள்ளலாம். அடைத்து முடித்ததும் அப்படியே படுத்தவாக்கில் வைக்கலாம், அல்லது அதில் இருக்கும் வளையத்தை ஒரு ஆணியில் மாட்டலாம். எப்படியும் ஆறும்வரை அதன் வாய்ப்பகுதி திறந்துதான் இருக்க வேண்டும்.
- இரண்டு மூன்று மணி நேரம் கழித்து, நன்கு ஆறியதும் ஒரு செய்தித்தாளில் கவிழ்த்து வைத்து, ‘டங்’ என்று தட்டினால் ஒன்றிரண்டு தட்டலிலேயே கூம்பு பிரிந்து கீழே விழுந்துவிடும்.
http://mykitchenpitch.wordpress.com/2007/11/22/nel-pori-urundai-thirukkaarththigai/
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை இனிப்பு உருண்டை சமையல்
அரிசி பொரி உருண்டை
தேவையானவை:
அரிசி பொரி - 4 கப், வெல்லம் - 1 கப், அரிசி மாவு - சிறிதளவு.
செய்முறை:
வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவிட்டு பாகு வைத்துக்கொள்ளுங்கள்.
பாகு பதம் வந்ததும் பொரியைக் கொட்டிக் கிளறி இறக்குங்கள். அரிசி மாவை தொட்டு உருண்டைகளாக உருட்டுங்கள். ஆறியதும் எடுத்து வையுங்கள்.

அவல் பொரி உருண்டை
தேவையானவை
அவல் பொரி - 3 கப்,
வெல்லத்தூள் - ஒரு கப்,
முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் - 4 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன்,
வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா ஒரு கைப்பிடி.
செய்முறை
முந்திரி, அவல் பொரியை நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
வெல்லத்தூளுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பாகு பதத்தில் காய்ச்சவும்.
வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி, அதனுடன் பொட்டுக் கடலை, அவல் பொரியைக் கலக்கவும். அவல் பொரி கலவையை பாகில் கொட்டிக் கிளறி, உருண்டை பிடிக்கவும்.
http://www.tamilula.com/recipes/68/method/aval-pori-urundai-377

சீரகம் உளுந்து மாவுருண்டை
தேவையானவை:
செய்முறை:
குறிப்பு:
பனங்கற்கண்டுக்கு பதிலாக, வெல்லம் மட்டும் உபயோகித்துக் கொள்ளலாம். உருண்டையாகப் பிடிக்காமல், பொடி மட்டும் செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது, நெய் ஊற்றி, கலந்து, அப்படியே சாப்பிடலாம். தாய்மார்களுக்கு, உடல் நலம் தேறுவதற்கும், தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கும், இந்தப் பொடியை செய்து கொடுக்கலாம்.
http://www.arusuvai.com/tamil/node/19071
தேவையானவை:
- சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
- வெள்ளை உருட்டு உளுத்தம்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
- மண்டை வெல்லம் - 4 டேபிள் ஸ்பூன்
- பனங்கற்கண்டு - 2 டேபிள் ஸ்பூன்
- நெய் - 6 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
- சீரகத்தை வெறும் வாணலியில் பொரிய விட்டு எடுத்து வைக்கவும்
- உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுக்கவும்
- மண்டை வெல்லத்தை பொடித்து வைக்கவும்
- பனங்கற்கண்டை தூள் செய்து வைக்கவும்.
- நெய்யை லேசாக சூடுபடுத்தி, உருக்கி வைக்கவும்.
- பொரித்த சீரகத்தை, மிக்ஸியில் போட்டு, திரிக்கவும்.
- வறுத்த உளுத்தம்பருப்பையும், அத்துடன் போட்டு, மாவாகத் திரிக்கவும்.
- பொடித்த வெல்லத்தையும், பனங்கற்கண்டையும் இதனுடன் போட்டு, பொடிக்கவும்.
- இந்த மாவை, ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
- ஏலக்காய்ப் பொடியை இதில் சேர்க்கவும்.
- சூடு படுத்திய நெய்யை, இதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும்.
- சீரகம், உளுந்து மாவுருண்டை தயார்.
குறிப்பு:
பனங்கற்கண்டுக்கு பதிலாக, வெல்லம் மட்டும் உபயோகித்துக் கொள்ளலாம். உருண்டையாகப் பிடிக்காமல், பொடி மட்டும் செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது, நெய் ஊற்றி, கலந்து, அப்படியே சாப்பிடலாம். தாய்மார்களுக்கு, உடல் நலம் தேறுவதற்கும், தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கும், இந்தப் பொடியை செய்து கொடுக்கலாம்.
http://www.arusuvai.com/tamil/node/19071
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை இனிப்பு உருண்டை சமையல்
நெய்யுருண்டை
தேவையானவை:
கடலை மாவு - 1 கப், சர்க்கரை (பொடித்தது) - 1 கப், நெய் - தேவையான அளவு, ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை:
2 டேபிள்ஸ்பூன் நெய்யைக் காயவைத்து, குறைந்த தீயில் கடலை மாவைச் சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுக்கவேண்டும்.
இறக்கி ஆறவிட்டு, அத்துடன் சர்க்கரை தூள், ஏலக்காய்தூள் சேர்த்துக் கலக்குங்கள். நெய்யை சூடாக்கி, அதில் சிறிது சிறிதாக ஊற்றி, நன்கு கலந்து உருண்டை பிடித்துவையுங்கள்.
சேர்க்கலாம்.
உருட்ட வரவில்லை எனில், சிறிது அதிகம் நெய்

உருட்ட வரவில்லை எனில், சிறிது அதிகம் நெய் சேர்க்கலாம்.

ஓமப்பொடி உருண்டை
தேவையானவை:
சற்று கனமில்லாத, காரம் சேர்க்காத ஓமப்பொடி - 1 கப், பொட்டுக்கடலை - கால் கப், தேங்காய் (பல்லுப் பல்லாகக் கீறியது) - 1 டேபிள்ஸ்பூன், வெல்லம் - அரை கப், நெய் - 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
நெய்யில் தேங்காயை நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். ஓமப்பொடி, தேங்காய், பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.
வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து உருண்டைக்கான பதத்தில் பாகுவைத்து, ஓமப்பொடி கலவையை பாகில் கொட்டி, சர்க்கரையையும் தூவி, கிளறி உருண்டை பிடியுங்கள்.
(செட்டிநாட்டு அயிட்டமான மனோகரத்திலும் இதுபோன்ற உருண்டை செய்யலாம்.

தேன்குழல் உருண்டை
தேவையானவை:
தேன்குழல் (நொறுக்கியது) - 2 கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - தேவையான அளவு.
செய்முறை:
வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு வைத்துக்கொள்ளுங்கள். நொறுக்கிய தேன்குழல், ஏலக்காய்தூள், நெய் ஆகியவற்றை பாகில் சேர்த்து, நன்கு கிளறி அரிசி மாவு தொட்டு உருண்டை பிடியுங்கள்.
குறிப்பு: சற்றுக் கனமான தேன்குழலாக இருந்தால், முக்கால் கப் வெல்லம் சேர்க்கவேண்டும். 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துப் பாகு வையுங்கள்.

காப்பரிசி உருண்டை
தேவையானவை:
காப்பரிசி ( சிவப்புப் புட்டரிசி) - 1 கப், பொட்டுக்கடலை - கால் கப், எள் - 1 டேபிள்ஸ்பூன், தேங்காய் (பல்லுப் பல்லாகக் கீறியது) - கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், வெல்லம் - அரை கப் (குவித்தது).
செய்முறை:
காப்பரிசியை வெறும் கடாயில் வாசனை வரும்வரை, குறைந்த தீயில் வறுத்துக்கொள்ளுங்கள்.
அதை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளுங்கள். எள்ளை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளுங்கள். தேங்காயை நெய் சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள்.
காப்பரிசி, பொட்டுக்கடலை, எள், தேங்காய் ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.
வெல்லத்தைப் பொடித்து, கால் கப் தண்ணீர் வைத்து, பாகு பதம் வந்ததும் அரிசி, தேங்காய், எள் ஆகியவற்றைக் கொட்டி, உருண்டைகளாகப் பிடித்துவையுங்கள்.

புட்டரிசி மாவுருண்டை
தேவையானவை:
புட்டரிசி - 1 கப், சர்க்கரை (பொடித்தது) - 1 கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை:
அரிசியை வாசனை வரும்வரை குறைந்த தீயில் வறுத்துக்கொள்ளுங்கள். மிஷினில் மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையையும் அரைத்துக்கொள்ளுங்கள்.
நெய் நீங்கலாக எல்லாவற்றையும் கலந்துகொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து சிறிது சிறிதாக ஊற்றி, சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டுங்கள்.

தேங்காய் கசகசா உருண்டை
தேவையானவை:
தேங்காய் துருவல் - 1 கப், ரவை - 1 டேபிள்ஸ்பூன், கசகசா - 1 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து, தேங்காயை வறுத்துக்கொள்ளுங்கள். கசகசா, ரவை ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள்.
இரண்டையும் ஒன்றாகப் பொடித்துக்கொள்ளுங்கள்.
பொட்டுக்கடலையையும் ரவை போலப் பொடியுங்கள். சர்க்கரை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.
சர்க்கரையை கால் கப் தண்ணீர் வைத்து, பாகுவைத்து (பிசுக்கு பதம்) இறக்கி, கலந்து வைத்ததைக் கொட்டிக் கிளறுங்கள். பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.

பொட்டுக்கடலை தேங்காய் உருண்டை
தேவையானவை:
தேங்காய் துருவல் - 1 கப், பொட்டுக்கடலை - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
பொட்டுக்கடலையை பொடித்துக்கொள்ளுங்கள் (நமுத்திருந்தால் வறுத்துப் பொடியுங்கள்). தேங்காயை நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரையில் கால் கப் தண்ணீர் சேர்த்து பாகுவைத்து (முன்பு சொன்ன பிசுக்கு பதம்), வறுத்த தேங்காய், பொடித்த கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டுங்கள்.

சத்துமாவு உருண்டை
தேவையான பொருட்கள்
செய்முறை
1. சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, கொள்ளு, பாசிப்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
2. சர்க்கரையைத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு
1. சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
2. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இதேபோல சத்துமாவு உருண்டை தயாரிக்கலாம்.
Posted in பாரம்பரிய சமையல்
தேவையான பொருட்கள்
தேவையானவை | அளவு |
சோளம் | 100 கிராம் |
கம்பு | 25 கிராம் |
தினை | 25 கிராம் |
கேழ்வரகு | 100 கிராம் |
கொள்ளு | 50 கிராம் |
பாசிப்பருப்பு | 25 கிராம் |
நெய் | 100 மிலி |
ஏலக்காய்த்தூள் | சிறிதளவு |
சர்க்கரை | 200 கிராம் |
செய்முறை
1. சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, கொள்ளு, பாசிப்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
2. சர்க்கரையைத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு
1. சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
2. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இதேபோல சத்துமாவு உருண்டை தயாரிக்கலாம்.
Posted in பாரம்பரிய சமையல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை இனிப்பு உருண்டை சமையல்
சப்பாத்தி உருண்டை
தேவையானவை:
சப்பாத்தி - 4, சர்க்கரை - (பொடித்த சப்பாத்திதூள் 1 கப் என்றால்) கால் கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:
சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, அது மொறுமொறுப்பாக ஆகும் வரை, ஒரு சுத்தமான துணியால் அழுத்தி அழுத்திவிட்டு எடுங்கள். எண்ணெய் தேவையில்லை. இதை சிறிய துண்டுகளாக உடைத்து, மிக்ஸியில் போட்டு பொடியுங்கள்.
சர்க்கரையில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு வைத்து, பதம் (பிசுக்கு பதம்) வந்ததும் சப்பாத்திதூள், ஏலக்காய்தூள், நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடியுங்கள்.

சிம்பிலி!
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
கறுப்பு எள் - அரை கப்
வெல்லம் - ஒன்றரை கப்
நெய் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
கேழ்வரகு மாவில் சிறிது தண்ணீர் தெளித்து, பிசிறி, ஈரப்பதம் வந்ததும் ஆவியில் வேக விடுங்கள். எள்ளைக் கழுவி, கல் நீக்கி, தண்ணீர் வடித்து, ஈரத்துடனேயே வறுத்தால், நன்கு பொரிந்து வரும். வாசம் வரும் வரை வறுத்த எள், வேக வைத்த மாவு, வெல்லம் மூன்றையும் ஒன்றாக ஆட்டு உரலில் போட்டு இடியுங்கள். அந்த வசதி இல்லாதவர்கள், மிக்சியில் வைப்பர் பிளேடு போட்டு, எல்லாப் பொருட்களையும் சேர்த்து, இரண்டு சுற்று சுற்றுங்கள்.மூன்றும் சேர்ந்து வரும் போது எடுத்து, நெய்யையும் சேர்த்து, சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள்.
http://wbbmail.dinamalar.in/supplementary_detail.asp?id=7166&ncat=10&Print=1
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை இனிப்பு உருண்டை சமையல்
பொட்டுக்கடலை மாவுருண்டை
தேவையானவை:
பொட்டுக்கடலை - 1 கப், சர்க்கரை - 1 கப், நெய் - தேவையான அளவு, ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை:
பொட்டுக்கடலையையும் சர்க்கரையையும் தனித்தனியே பொடித்துக்கொள்ளுங்கள். (பொட்டுக்கடலை நமுத்திருந்தால் வறுத்துப் பொடிக்கவேண்டும்).
அவற்றுடன் ஏலக்காய்தூள் கலந்து, நெய்யை சுடவைத்து ஊற்றி, உருண்டை பிடியுங்கள். குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் சத்தான உருண்டை.

கோதுமை ரவை உருண்டை
தேவையானவை:
கோதுமை ரவை - 1 கப்,
சர்க்கரை - அரை கப்,
பாதாம் - 8,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை:
நெய்யைக் காயவைத்து பாதாமை பொடியாக நறுக்கிப் போட்டு வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய்யில் கோதுமை ரவையை வாசனை வரும்வரை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரையில் கால் கப் தண்ணீர் சேர்த்து, பாகு வைத்து பிசுக்கு பதம் வந்ததும், ரவை, பாதாம், ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி, உருண்டைகளாகப் பிடித்து வையுங்கள்.

Similar topics
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
» என் சமையல் அறையில் - பத்திய சமையல்
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!

Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum