Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சின்ன வயதில் பெரிய மனுஷிகள்
Page 1 of 1 • Share
சின்ன வயதில் பெரிய மனுஷிகள்
‘‘நான் எப்ப பெரிய மனுஷி ஆவேன்..?” - தனது 8 வயது மகள் ஸ்வேதா இப்படிக் கேட்ட போது அவளது அம்மாவுக்கு அதிர்ச்சி. ‘அதிகப்பிரசங்கித்தனமா பேசாதே... 8 வயசுல இதெல்லாம் என்ன பேச்சு...’ என மகளை அடக்கினார். ஆனாலும், ஸ்வேதா சமாதானமாகவில்லை.‘‘என் கூடப் படிக்கிற மானசா போன வாரம் பெரிய மனுஷியாயிட்டாளாம். ஒரு வாரமா ஸ்கூலுக்கு வரலை... நானும் பெரிய மனுஷியானா ஸ்கூலுக்கு லீவு போடுவேனே...” என்ற மகளுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை அம்மாவுக்கு.
5ம் வகுப்பு படிக்கிற காவ்யா, கிட்டத்தட்ட ஒரு மாதமாக வயிற்று வலி, இடுப்பு வலி என அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுக்கிறாள். மருத்துவர்களிடம் காட்டி, மாத்திரைகள் கொடுத்த பிறகும் அவள் வலி என்று சொல்வது மட்டும் நின்றபாடாக இல்லை. ‘உனக்கொண்ணும் இல்லை. நீ நல்லா சாப்பிட்டாலே சரியாயிடும்’ என அவளது அம்மா சொன்ன அட்வைஸ் காவ்யாவுக்கு எரிச்சலையே தந்தது. ‘என் கிளாஸ்மேட் பூஜாவுக்கு இப்படித்தான் ஸ்டமக் பெயின் இருந்தது. அவ ஏஜுக்கு வந்துட்டா தெரியுமா? ஏஜுக்குவர்றதுக்கு முன்னாடி இப்படித்தான் ஸ்டமக் பெயின், ஹிப் பெயின் இருக்குமாம். எல்லாரும் சொல்றாங்க...’ என்ற போது அதிர்ந்துதான் போனார் காவ்யாவின் அம்மா.
பெண் குழந்தைகளைப் பெற்ற பெரும்பாலான அம்மாக்கள் சந்திக்கிற பிரச்னைதான் இது. 5வது, 6வது படிக்கிற போதே பூப்பெய்துகின்றனர் இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள். அது வயதுக்கு முந்தைய நிகழ்வு என்பதைப் புரிந்து கொள்ளாமல், வயதுக்கு வராத மற்ற பெண் குழந்தைகளையும், ‘நீ இன்னும் பெரிய மனுஷி ஆகலையா?’ என்கிற கேள்விகள் துரத்துகின்றன. மழலையை அனுபவிக்க வேண்டிய வயதில், மாதவிலக்கைப் பற்றி சிந்திக்க வேண்டியகட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள் குழந்தைகள். ‘நான் மட்டும் இன்னும் ஏன் பெரிய மனுஷி ஆகலை’ என்கிற கேள்வி அவர்களுக்குள் ஒருவித மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. அம்மாக்களுக்கும்தான்...
‘‘நம்ம பாட்டி, அம்மாக்கள் காலத்துல 17, 18 வயசா இருந்த பூப்பெய்தும் பருவம், இன்னிக்கு 11, 12 வயசா குறைஞ்சிருக்கு. இது நம்ம நாட்டுல மட்டுமில்லாம, உலகம் முழுக்கவே பெண் குழந்தைகள்கிட்ட உண்டாகியிருக்கிற மாற்றம். இப்ப சமீபகாலமா இந்த வயசும் குறைஞ்சு, 8, 9 வயசுலயே பூப்பெய்தறதும் நடக்குது. இந்தப் பிரச்னைக்கான முதலும், முக்கியமுமான காரணம் பருமன். சராசரியைவிட எடை அதிகரிக்கிறபோது, அதை உடம்பு ஒரு சிக்னலா எடுத்துக்கும். பூப்பெய்தவும், அதைத் தொடர்ந்து பெண் உடலியக்கத்துக்கும் தேவையான ஹார்மோன்களோட செயல்பாட்டைத் தொடங்கவும் அதுதான் நேரம்னு தவறா புரிஞ்சுக்கும். அதோட விளைவாத்தான் இப்படி 8, 9 வயசுலயே பூப்பெய்தறது நடக்குது...’’ - சின்ன வயதில் பெரிய மனுஷியாவதன் பின்னணியுடன் பேசத் தொடங்குகிறார் மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி. அவர் பகிர்கிற தகவல்கள் மாதவிலக்கு பற்றிய அறிவியல் பூர்வ விஷயங்களை விளக்குவதோடு, அம்மாக்களுக்கும் மகள்களுக்குமான விழிப்புணர்வையும் தருகிறது.
‘‘மாதவிலக்கு வர்றதுக்கு 2 அல்லது 3 வருஷங்களுக்கு முன்னாலிருந்தே உடம்புல மாற்றங்கள் ஆரம்பமாகும். மார்பக வளர்ச்சி, அக்குள் உள்ளிட்ட அந்தரங்கப் பகுதிகள்ல ரோம வளர்ச்சி, உடம்பு அழகான ஒரு வடிவத்துக்கு மாறுவது, இடை சிறுத்தல்னு எல்லாம் இருக்கும். குறிப்பா மாதவிலக்குக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடி பெண் குழந்தைகளோட உயரம் திடீர்னு அதிகமாகிறதைப் பார்க்கலாம். இப்படி எல்லா மாற்றங்களோட முடிவுதான் மாதவிடாய். பூப்பெய்தற வயசுங்கிறது பரம்பரைத் தன்மையைப் பொறுத்தது. அந்தப் பெண்ணோட பாட்டி, அம்மா எந்த வயசுலபூப்பெய்தினாங்கன்றதைப் பொறுத்ததுன்னாலும், இந்தக் காலத்துப் பெண் குழந்தைகளுக்கு அதை மட்டுமே காரணமா சொல்றதுக்கில்லை. இன்னிக்கு சின்னக் குழந்தைகள்லேருந்து, பெரியவங்க வரைக்கும் எல்லார்கிட்டயும் பருமன் பிரச்னையைப் பார்க்கறோம்.
கொழுப்போட அளவு 20 சதவிகிதத்துக்கு மேல போகும் போது, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, உடம்பு பூப்பெய்தத் தயாராயிட்டதா நினைச்சுக்கும். கொழுகொழுனு குண்டா இருந்தாதான் அழகுங்கிற நினைப்புல இன்னிக்குப் பல அம்மாக்களும், தன் குழந்தைங்களுக்கு கொழுப்பு நிறைஞ்ச உணவைக் கொடுத்து வளர்க்கிறாங்க. பள்ளிக் கூடத்துலயும் சரி, வீட்லயும் சரி... உடற்பயிற்சிங்கிற பேச்சுக்கே இடமில்லாமப் போயிட்டிருக்கு. அது தவிர இன்னிக்கு நாம சாப்பிடற பால்லேருந்து, அசைவ உணவுகள் வரைக்கும் எல்லாம் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டு, செயற்கையா ஊட்டமளிக்கப்பட்ட மிருகங்கள்கிட்டருந்து பெறப்படறதா இருக்கு. நிரூபிக்கப்படலைன்னாலும், அதெல்லாமும் இளவயசு பூப்பெய்தலுக்கு ஒரு காரணம்னு சொல்லப்படுது.
குழந்தைத்தனமே மாறாத வயசுல மாதவிலக்கை சந்திக்கிறதுங்கிறது சம்பந்தப்பட்ட பெண் குழந்தைகளுக்கு ரொம்பவே தர்மசங்கடமான விஷயம். குறிப்பா கோ எஜுகேஷன் பள்ளியில படிக்கிற போது, அவங்களுக்கு இந்த தர்மசங்கடம் இன்னும் அதிகமாகும். அதுலேருந்து தப்பிக்க பள்ளிக்கூடத்துக்கு லீவு போடுவாங்க. சரியான ஆலோசனைகளும் வழிநடத்தலும் இல்லைன்னா, இந்தப் பெண் குழந்தைகளோட கவனம் சிதறவும் வாய்ப்புகள் அதிகம். 8, 9 வயசுலயே அம்மாக்கள் தம் மகள்கள்கிட்ட மாதவிலக்கைப் பத்தி மேலோட்டமா பேசலாம். பெண்களுக்கு மாதவிலக்குங்கிறது இயல்பானது. ‘அந்தரங்க உறுப்புலேருந்து ரத்தக் கசிவு இருக்கும்.
உடனே அடிபட்டிருக்குமோ, கட்டியா இருக்குமோனு பயப்படாதே... வலி இருக்காது. ரெண்டு, மூணு நாள்ல சரியாயிடும்’னு சொல்லி, நாப்கின் உபயோகிக்கவும், உபயோகிச்ச நாப்கினை பாதுகாப்பா அப்புறப்படுத்தவும் சொல்லித் தரலாம். அந்த வயசுல இந்தளவு தகவல்கள் போதும். 10 வயசுக்கு மேல, நல்ல ஸ்பரிசம், கெட்ட ஸ்பரிசம் பத்தியும், தவறானவங்கக்கிட்டருந்து விலகி இருக்க வேண்டியதோட அவசியத்தையும் சொல்லித் தரலாம். அதையும் தாண்டி, சீக்கிரமே பூப்பெய்தற தன்னோட தோழிகளைப் பார்த்து, தனக்கு அது எப்போ வரும்னு கேள்வி கேட்கற பெண் குழந்தைகளைப் பக்குவமா கையாள வேண்டிய பொறுப்பும் அம்மாக்களுக்கு வேணும்.
‘ஒவ்வொருத்தரோட உடம்பும் ஒவ்வொரு மாதிரியானது. மாதவிலக்கோட சராசரி வயசு 12. அதனால எல்லாருக்கும் அந்த வயசுலதான் வரணுங்கிறதும் இல்லை. அவங்களோட குடும்பப் பின்னணி, பருமனெல்லாம் பொறுத்து அது ரொம்பவும் சீக்கிரம் வரலாம். அதே மாதிரி சிலர் சராசரி வயசைத் தாண்டியும் பூப்பெய்தாம இருக்கலாம். இது ஈகோ பிரச்னையா அணுகப்பட வேண்டிய அளவுக்கு சீரியஸானதில்லை’னு அம்மாக்கள்தான் மகள்களுக்கு எடுத்துச்சொல்லிப் புரிய வைக்கணும். இந்த விஷயத்துல சராசரி வயசைக் கடந்தும் பூப்பெய்தாத பெண்களுக்குத்தான் தீவிரமான கவுன்சலிங் தேவைப்படும். 14 வயசுக்கு மேலயும் பூப்பெய்தலைனா, டாக்டரை பார்க்கணும். கர்ப்பப்பை சரியா வளர்ச்சியடையாதது, தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைனு இதுக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
சிலருக்கு பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சியிருக்காது அல்லது கர்ப்பப்பையே இருக்காது. ஒரு சிலருக்கு இம்பெர்ஃபரேட்டட் ஹைமன்னு சொல்ற பிரச்னை இருக்கும். பூப்பெய்தற வயசுல உதிரப்போக்கு ஆரம்பிச்சிருக்கும். அது உள்ளுக்குள்ளேயே நடந்திட்டிருக்கும். ஆனா, வெளியேற முடியாதபடி, அந்தப் பாதை மூடியிருக்கும். அதை அறுவை சிகிச்சை மூலமாதான் சரி செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பப்பையே வளர்ச்சியடையாத பிரச்னைக்கு ‘டர்னர்ஸ் சிண்ட்ரோம்’னு பேர். இவங்களுக்கு ரொம்பவே தீவிரமான கவுன்சலிங் தேவை. வெளிநாடுகள்ல இவங்களுக்காக சங்கமே இருக்கு. இந்தப் பிரச்னையால பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றுகூடி, ஒருத்தருக்கொருத்தர் அனுபவங்களையும் ஆறுதல்களையும் பகிர்ந்துப்பாங்க. இவங்களைப் பொறுத்தவரை கல்யாணம் மிகப் பெரிய சவால். கல்யாணத்துக்கு முன்னாடியே, வரப்போற கணவர்கிட்ட தான் பூப்பெய்தாததை சொல்லிடறது நல்லது.
குழந்தைப்பேறுங்கிற விஷயமும் இவங்களுக்கு சிக்கல்தான். செயற்கையான சிகிச்சைகள் மூலம்தான் கருத்தரிக்கச் செய்ய வேண்டியிருக்கும்...’’ என்கிற மனுலட்சுமி, அம்மாக்களுக்குப் பொதுவான ஆலோசனைகள் சிலவற்றைச் சொல்கிறார்.‘‘8 முதல் 14 வயசுப் பெண் குழந்தைகளுக்கு சைக்கிளிங், ஸ்கிப்பிங், ஓட்டம் மாதிரியான ஏதோ ஒரு உடற்பயிற்சி அவசியம். இது அவங்களை பருமன்லேருந்து காப்பாத்தறதோட மட்டுமில்லாம, அவங்களோட உயரத்துக்கும் உதவும். 16 வயசுக்கு மேல எலும்புகள் வளர்ச்சி நின்னுடும்.
உயரம் அதிகரிக்க வாய்ப்பில்லை. ரொம்ப சீக்கிரமே பூப்பெய்தற பெண்களுக்கு சீக்கிரமே மாதவிலக்கு நின்னுடுமாங்கிற கேள்வியும் நிறைய பேருக்கு இருக்கு.அப்படியெல்லாம் கிடையாது. மாதவிலக்கு நிற்கறதும் தாய் அல்லது பாட்டி வழி வயதைப் பொறுத்தது. பூப்பெய்தின முதல் சில வருஷங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையில்லாமதான் இருக்கும். ரத்தப்போக்கு கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். அதெல்லாம் முறையாக4 முதல் 5 வருஷங்கள் ஆகும்”.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடித்த நம்மாளு
» தெரிந்த பெயர் பென் டிரைவ் தெரியாத சின்ன சின்ன தகவல்கள்
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எளிய பாட்டி வைத்தியம்
» சின்ன சின்ன பிரச்னைகள்==சித்த மருத்துவக் குறிப்புகள்
» தெரிந்த பெயர் பென் டிரைவ் தெரியாத சின்ன சின்ன தகவல்கள்
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எளிய பாட்டி வைத்தியம்
» சின்ன சின்ன பிரச்னைகள்==சித்த மருத்துவக் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum