தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகை வியக்க வைத்த சிலைகள்

View previous topic View next topic Go down

உலகை வியக்க வைத்த சிலைகள் Empty உலகை வியக்க வைத்த சிலைகள்

Post by நாஞ்சில் குமார் Fri Jul 11, 2014 9:56 pm

உலகை வியக்க வைத்த சிலைகள் 10odvo4


அகமதாபாத்துக்கு அருகே, கெவடியா எனும் இடத்தில், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 600 அடி உயர சிலை ஒன்று எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இது கட்டி முடிக்கப்பட்ட பிறகு உலகின் மிக உயர்ந்த சிலை என்ற சாதனை இந்தச் சிலைக்கே சொந்தம். இப்போதைக்கு உலகின் உயர்ந்த சிலைகள் இங்கே...

தி மதர்லேண்ட் கால்ஸ்

ரஷ்யாவின் வால்காகிராட் பகுதியில் உள்ள இந்தச் சிலையின் உயரம் 279 அடி. 1967ல் இது கட்டி எழுப்பப்பட்டபோது உலகின் மிக உயரமான சிலையாக விளங்கியது. ஸ்டாலின்கிராட் என்னுமிடத்தில் நடந்த போரில் ரஷ்யா பெற்ற வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்ட இந்தச் சிலை தாய்நாட்டைக் குறிக்கும் விதமாகப் பெயரிடப்பட்டது. வாளை வீசிப் போரிடும் ஒரு பெண் போன்றிருக்கும் இந்தச் சிலையின் அமைப்பு, இன்றுவரை சிலைக் கட்டுமானங்களில் ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகிறது.

ஆப்ரிக்க மறுமலர்ச்சி சின்னம்

ஆப்ரிக்காவில் உள்ள செனகல் நாட்டின் தலைநகரம் டாகரில் இந்தச் சிலை 160 அடி உயரத்தில் நிமிர்ந்து நிற்கிறது. பிரான்ஸின் ஆதிக்கத்திலிருந்து செனகல் விடுதலை பெற்ற 50வது ஆண்டு நினைவாக இந்தச் சிலை 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தச் சிலைதான் ஆப்ரிக்காவின் மிக உயரமான சிலை.

பீட்டர் தி கிரேட்

ரஷ்ய கப்பற்படை உருவாகி 300 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் இந்தச் சிலை மாஸ்கோவில் 1997ம் ஆண்டு திறக்கப்பட்டது. ரஷ்ய கப்பற்படையை உருவாக்கிய சக்கரவர்த்தி பீட்டரின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. 321 அடி உயரத்தில் கப்பல் வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிலை 1000 டன் எடை கொண்டது.

யான் மற்றும் ஹுவாங் சக்கரவர்த்திகள்

சீன வரலாற்றில் இருபெரும் சக்கரவர்த்திகளாக மதிக்கப்படுகிறவர்கள் யான் டி மற்றும் ஹுவாங் டி. அவர்களின் திருமுகத்தை மட்டுமே மிக பிரமாண்டமாக செதுக்கி அமைத்த சிலை இது. உயரம் 106 அடி என்றாலும் அகலம் மற்றும் அளவு அடிப்படையில் மிகப் பிரமாண்டமானது (ஒரே ஒரு கண் மட்டுமே 3 மீட்டர் நீளமாம்). சீனாவின் செங்சோவ் நகரில் அமைந்திருக்கும் இந்தச் சிலை திறக்கப்பட்ட ஆண்டு, 2007.

மீட்பர் கிறிஸ்து

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள இந்த இயேசு கிறிஸ்து சிலை, 1933ம் ஆண்டு எழுப்பப்பட்டது. உலகப் போரின் முடிவில் பிரான்சில் 'ஆர்ட் டெகோ' எனும் ஒருவகை அலங்காரக் கலை உருவானது. அந்தக் கலையைக் கொண்டு ஒவ்வொரு அங்குலமும் அழகுபடுத்தப்பட்ட சிலை இது. 98 அடி உயரம் கொண்ட இந்தச் சிலைதான் உலகிலேயே அதிக உயரமான 'ஆர்ட் டெகோ' சிலை!

ஸ்ப்ரிங் டெம்பிள் புத்தர்

சீனாவின் சௌகன் எனும் நகரத்தில் உள்ள இந்தச் சிலை, 2002ல் கட்டி முடிக்கப்பட்டது. 420 அடி உயரம் கொண்ட இதுதான் இன்று உலகின் மிக உயரமான சிலை. ஸ்பிரிங் என்பது நீர் ஊற்றைக் குறிக்கும். இந்தச் சிலையும் இதை ஒட்டிய கோயிலும் இயற்கை வெந்நீர் ஊற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்தப் பெயர். ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலையை தாலிபன்கள் உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டது.

அமைதி தேவதை

வெனிசுலா நாட்டில் உள்ள கன்னி மேரி சிலையான இதனை 'விர்ஜின் ஆஃப் பீஸ்' என்கிறார்கள். 1983ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த 153 அடி உயரச் சிலையில் சுற்றுலாப் பயணிகள் ஏறி நின்று பார்க்கும் வசதி உண்டு. சிலை அமைந்துள்ள ட்ருஜில்லோ நகரம் முழுவதையும் இதன் மேலிருந்து பார்க்க முடியுமாம்.

சுதந்திர தேவி சிலை

கிட்டத்தட்ட அமெரிக்காவின் அடையாளம் இது. சிலையின் உயரம் 151 அடி என்றாலும் இந்தப் பட்டியலில் உள்ள மற்ற எந்தச் சிலையையும் விட இதன் 'புகழ் உயரம்' அதிகம். அமெரிக்க விடுதலையின் அடையாளச் சின்னமாக 1886 அக்டோபர் 28ம் நாள் இது அமெரிக்க மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இன்றும் ஆண்டுக்கு 40 லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கிறது இந்தச் சிலை.

உலகை வியக்க வைத்த சிலைகள்

ஆந்திராவின் விஜயவாடா அருகே பரிதலா எனுமிடத்தில் உள்ள இந்தச் சிலைக்கு பெயரைப் போலவே உயரமும் நீளம்... 135 அடி. 2003ல் திறக்கப்பட்ட இந்தச் சிலைதான் இப்போதைக்கு இந்தியாவின் மிக உயரமான சிலை. உலகெங்கிலும் உள்ள ஹனுமான் விஸ்வரூப சிலைகளில் அதிக உயரமானதும் இதுவே!

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

உலகை வியக்க வைத்த சிலைகள் Empty Re: உலகை வியக்க வைத்த சிலைகள்

Post by முரளிராஜா Sat Jul 12, 2014 1:37 pm

வியக்கவைக்கும் சிலைகள்தான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகை வியக்க வைத்த சிலைகள் Empty Re: உலகை வியக்க வைத்த சிலைகள்

Post by செந்தில் Sat Jul 12, 2014 1:53 pm

வியக்க வைக்கும் தகவலுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகை வியக்க வைத்த சிலைகள் Empty Re: உலகை வியக்க வைத்த சிலைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum