Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆட்டிஸ குழந்தையை ஆளாக்கிய தாய!
Page 1 of 1 • Share
ஆட்டிஸ குழந்தையை ஆளாக்கிய தாய!
''என் மகன், இப்ப வேலைக்குப் போறான்!'' - ஆட்டிஸ குழந்தையை ஆளாக்கிய சித்ரா!
[size=undefined]-உ.சிவராமன்[/size] [size=undefined]படங்கள்: [/size][size=undefined]ர.சதானந்த் [/size] ''பரத், ஆட்டிஸ குழந்தைனு தெரிய வந்தப்போ, 'ஆட்டிஸம்'னா என்னனுகூட எனக்குத் தெரியாது. ஆனா, அதுக்கு அப்புறம் அதைப்பத்தி எனக்குத் தெரியாதது எதுவும் இல்லைங்கிற அளவுக்கு, எல்லாத்தையும் தேடித்தேடி தெரிஞ்சுக்கிட்டேன். இன்னிக்கு பரத், டிகிரி முடிச்சி, வேலைக்குப் போயிட்டிருக்கான். கூடவே, கீ-போர்ட் வாசிக்கிறது, டூ வீலர் ஓட்டுறதுனு கலக்கறான். நார்மலான குழந்தைகளுக்கு இணையா அவனையும் ஆளாக்கிட்டேன். ஒரு தாயா, ரொம்ப திருப்தியா உணர்றேன்!'' - கோவையைச் சேர்ந்த சித்ரா சுப்ரமணியனின் ஒவ்வொரு வார்த்தையிலும் போராட்ட அன்பு! ஆட்டிஸத்தைப் பற்றிய விழிப்பு உணர்வு இப்போதுதான் ஓரளவுக்கு பரவி வருகிறது. இந்நிலையில், 20 வருடங்களுக்கு முன் ஆட்டிஸம் பாதிப்பில் சிக்கிய தன் பிள்ளையை, தளராத நம்பிக்கையோடு வளர்த்தெடுத்திருக்கும் சித்ராவின் தாய்மை, இதோ அவருடைய வார்த்தைகளிலேயே... ''கணவர், ஆடிட்டரா இருக்கார். நான் பொறியியல் பட்டதாரி. பரத், குழந்தையா இருக்கறப்போ யாரையும் தூக்கவிட மாட்டான். ரொம்ப அழுவான். ஆறு மாச குழந்தையா இருந்தவனை, உறவினர் கல்யாணத்துக்கு தூக்கிட்டுப் போனப்போ, கூட்டத்தைப் பார்த்ததும் சமாதானம் பண்ண முடியாத அளவுக்கு அழுதுட்டான். வீட்டை விட்டு எங்க தூக்கிட்டுப் போனாலும் அழுதுடுவான். ஒரு வருஷமாகியும் உட்காரவே இல்ல. ஆனா, இதெல்லாம் ஒரு குறைபாடா அப்ப எனக்குத் தெரியல. ப்ளே ஸ்கூலில் சேர்த்துவிட்டப்போ, மத்த பசங்களோட சேராம தனிச்சு இருந்தான். ஏதாவது ஒண்ணை மட்டும் தொடர்ச்சியா பார்த்துட்டே இருந்தான். யாரையும் கண்ணைப் பார்த்துப் பேச மாட்டான். அந்த ஸ்கூல்லதான், 'உங்க பையனுக்கு ஏதோ பாதிப்பு இருக்கும்போல தெரியுது. எதுக்கும் ஆட்டிஸம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க’னு சொன்னாங்க. இதைக் கேட்டதுமே அதிர்ந்திட்டேன். அந்த வார்த்தையை முதல்முதலா அப்பதான் கேட்டேன். அதைப் பத்தி எதுவுமே தெரியாதிருந்த நான், நிறைய புத்தகங்கள் படிச்சு, அதைப் பற்றி விளக்கமா தெரிஞ்சுக்கிட்டேன். அவனுக்கு அந்த பாதிப்பு இருக்கறதையும் உறுதிபடுத்திக்கிட்டேன். எங்களோட குடும்ப நண்பர், 'சிறப்புக் குழந்தைகளுக்கான எங்களோட பள்ளியில் சேர்த்து விடுங்க. அப்போதான் அவனோட வளர்ச்சியை கொஞ்சமாவது சரிபண்ணிக்க முடியும்'னு சொன்னார்...'' - சித்ரா எடுத்த முடிவென்ன? ''என் குழந்தையை நார்மலாக்கிடலாம்ங்கிற நம்பிக்கையும், ஆசையும் எனக்கு நிறைய இருந்துச்சி. அதனால நார்மல் ஸ்கூல்லயே சேர்த்தேன். அஞ்சாவது வரை வித்யா நிகேதன் ஸ்கூல்ல படிச்சான். பள்ளியில அதிக அக்கறை எடுத்துக்கிட்டாங்க. நானும் புதுப்புது முயற்சிகள் மூலமா, படிப்பைக் கத்துக்கொடுத்தேன். நிறைய சக்கரம் இருக்கற வாகனங்கள் மேல அவனுக்கு இஷ்டம். குறிப்பா, ரயில். அதனால ரயில் பொம்மைகளை வெச்சே... 'கோச் 1’, 'கோச் 2’னு எண்களை சொல்லிக்கொடுத்தேன். ஆட்டிஸ குழந்தைகள் புத்தகத்தில் உள்ளதைப் படிச்சாலும், பொதுவாழ்க்கையில ஒப்பிட்டுப் பார்க்கும் திறன் இருக்காது. அதனால உயிரியல் பூங்காவுக்குக் கூட்டிட்டுப் போய், விலங்குகளை எல்லாம் நேரடியா காட்டி சொல்லிக்கொடுத்தேன். வெளியில கூட்டிட்டுப் போய்... அங்கங்க பேசுற மொழி, சுவரில் எழுதியிருக்கும் வார்த்தைகள், பேருந்தில் உள்ள எண்கள்னு படிக்க வெச்சேன். அஞ்சு வயசா இருக்கறப்போ, அவனுக்கு தம்பி (வசிஷ்ட்) பிறந்தான். அப்பதான் அவனோட தனிமை கொஞ்சம் கொஞ்சமா கரைய ஆரம்பிச்சிது. சகஜமா பழக ஆரம்பிச்சான். பள்ளிக்கூடத்துலயும் மத்தவங்ககூட பழகறதுல முன்னேற்றம். தம்பி பேச ஆரம்பிச்சப்போ, அவனோட சேர்ந்து பரத்தும் பேச ஆரம்பிச்சான். அப்ப அவனுக்கு வயசு ஏழு. அஞ்சாவது முடிச்சதும், 'விவேக் ஆலயா’ ஸ்கூல்ல சேர்த்தோம். ரீடிங் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தி படிக்க வெச்சோம். ரொம்ப மெதுவாதான் எழுதுவான். பரீட்சையில் பதில் தெரிந்திருந்தாலும், எழுத நேரம் பத்தாது. அதனால எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுத முடியாது. பத்தாவது படிச்சப்போ, அவனோட பிராக்டிகல் எக்ஸாம்ஸுக்கு தேவையான கருவிகளை எல்லாம் வீட்டில் வாங்கி வெச்சி, அவனுக்கு பயிற்சி கொடுத்தேன். யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு 71 பர்சன்ட் மார்க் வாங்கி, எங்கள ஆனந்தக் கண்ணீரில் நனைச்சிட்டான். ப்ளஸ் ஒன் படிக்க ஏ.எல்.ஜி ஸ்கூல்ல பிசினஸ் மேத்ஸ் குரூப்பில் சேர்த்தேன். அவனும் நானும் வழக்கம் போல் கடுமையா, தொடர்ந்து உழைக்க... ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டான்!'' - அந்தத் தாய், தன் சேயின் கைபிடித்து அழைத்து வந்த கல்விப் பயணம், அன்பின் ஆழம். ''சங்கரா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்ல பி.காம் சேர்ந்தான். வெளியுலகப் பழக்கமெல்லாம் அங்க கத்துக்கிட்டான். காலேஜுக்குத் தினமும் பஸ்ல கூட்டிட்டுப் போய், அவனையே டிக்கெட் எடுக்கச் சொல்லிப் பழக்கி, ஸ்டாப்பில் இறங்கச் சொல்லிக் கொடுத்து, காலேஜுல விட்டுட்டு வீட்டுக்கு வந்துடுவேன். திரும்ப, காலேஜ் விடுற நேரத்துக்கு போய் கூட்டிட்டு வருவேன். ஆரம்பத்துல ரெண்டு வேளையும் போவேன், அப்புறம் ஒரு வேளை மட்டும் போயிட்டு வந்தேன். சின்ன வயசுல வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற கடைக்கு சைக்கிள்ல அனுப்பிப் பழக்கினேன். ஒரு கட்டத்துல, டூ வீலர் ஓட்டணும்னு கேட்டான். அதன்படியே வாங்கிக் கொடுத்து, காலேஜுக்குப் போகும்போது பின்னாடி உட்கார்ந்து போவேன். டிரைவிங் லைசென்ஸ் வாங்கிட்ட பரத், சாலை விதிகளை பெர்ஃபெக்ட்டா ஃபாலோ பண்ணி, நல்லா வண்டி ஓட்டுறான். நல்லா கீ-போர்டு வாசிப்பான். வீட்டில் யாருக்காவது பிறந்தநாள்னா, அவனோட இசை வாழ்த்தில்லாம இருக்காது. இப்போவெல்லாம் அவனுக்கு ஏதாவது தேவைப்பட்டா, 'நீ ரெஸ்ட் எடும்மா!’னு அவனே நெட்டில் தேடிக்கிறான்! என் பையனை ஆளாக்கின இந்த முயற்சியில், என் கணவரின் அன்பும் அக்கறையும் அதிகம். சாஃப்ட்வேர், புத்தகங்கள்னு அவனுக்காக தேடித்தேடி வாங்கிட்டு வருவார். இவனுக்கே பெரும்பான்மையான நேரத்தை நான் செலவிட வேண்டி இருக்கறதால, சின்னவனை அவர் பொறுப்பெடுத்துக்கிட்டார்'' என்ற சித்ரா, ''கம்ப்யூட்டரில் ஆர்வமா இருக்கிற பரத், இப்ப கணவரோட நண்பர் கம்பெனியில டேட்டா என்ட்ரி ஆபரேட்டரா வேலை பார்க்கிறான். 'பரத், ஆட்டிஸ குழந்தையாமே..?’னு அப்போ கேட்டவங்களுக்கும், வெளிப்படையா கேட்கலைனாலும் எங்களை வேடிக்கையா பார்த்தவங்களுக்கும் இப்போ பதில் சொல்லத் தோணுது. என் பிள்ளை யையும் மத்த பிள்ளைகள் மாதிரியே படிக்க வெச்சு, வேலைக்கு அனுப்பிட்டேன். தன் சம்பளத்துல எனக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அழவெச்சுட்டான் என் பையன்'' என்றபோது, தன் அம்மாவை அன்புடன், நன்றியுடன் கட்டியணைத்து, அதுவரை பேசாத அத்தனை வார்த்தைகளையும் அந்த ஒரு நொடியில் புரியவைத்தார் பரத். ''ஆட்டிஸ குழந்தைகள் பிறக்கிறது, யாரோட தப்பும், சாபமும் இல்ல. அவங்களை அன்போட, அக்கறையோட, அர்ப்பணிப்போட வளர்த்தா... நிச்சயம் மத்த குழந்தைகள் மாதிரி நல்ல நிலைக்கு வருவாங்க!'' - நம்பிக்கை கொடுக்கிறார் இந்த அன்பு அம்மா! ஆட்டிஸம்... மரபுரீதியாகவோ அல்லது கர்ப்பகாலத்தில் அம்மாவுக்கு ஏற்படும் மனஉளைச்சல்கள் காரணமாகவோ... பிறக்கும் குழந்தைகளில் சிலர், ஆட்டிஸ பாதிப்புகளோடு பிறக்கிறார்கள். தேவைக்கு மட்டும் ஈடுபாடு காட்டும் குழந்தைகளாகவும், அதிக துறுதுறுப்பு, கவன சிதறல்களோடு இவர்கள் காணப்படுவார்கள். -அவள் விகடனிலிருந்து... |
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மாசு காற்றை சுவாசிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு ஆட்டிஸ நோய் தாக்கும் அபாயம்!
» குழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்க்க வேண்டுமா?
» தொலைந்த குழந்தையை தேடுங்கள்
» குழந்தையை பிழைக்க வைத்த தாய்.
» பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
» குழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்க்க வேண்டுமா?
» தொலைந்த குழந்தையை தேடுங்கள்
» குழந்தையை பிழைக்க வைத்த தாய்.
» பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum