Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்
Page 1 of 1 • Share
வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்
செல்போனில் ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போக்கு அண்மைக்காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வாட்ஸ்-ஆப்-ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், நூல்களைப் படிக்கும் வழக்கம் அவர்களிடையே குறைந்து வருகிறது.
காலை நேரங்களில் படிப்பு, வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில்தான் தங்களது நண்பர்களுடன் தொடர்பு கொள் கின்றனர்.
இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால், வாட்ஸ் ஆப், வைபர், ஹைக் போன்ற குறுஞ்செய்தி ஆப்-களை (செயலி) சுலபமாக பயன்படுத்த முடியும்.
இந்த ஆப்-களை கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் இலவசமாக தகவல்களைப் பரிமாறலாம், பேசவும் செய்யலாம். குறுஞ்செய்திகளைத் தவிர புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பிக் கொள்ளலாம்.
இதனால் செல்போன்களில் எஸ்எம்எஸ் அனுப்பும் வழக்கம் கூட தற்போது பெரிதும் குறைந்துவிட்டது.
பொறியியலில் முதுகலை படிக்கும் கண்ணன் வாட்ஸ் ஆப் குறித்து கூறும்போது, “நாங்கள் வகுப்புகளை முடித்து, நண்பர்களோடு பேசிக்கொள்ள இரவில்தான் நேரம் கிடைக்கிறது.
விடுதியில் பெரும்பாலானோர் வாட்ஸ் ஆப் பயன்படுத்து வதால், அதைப் பயன்படுத்த பெரிதும் எதிர்ப்பு இருப்பதில்லை” என்றார்.
தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ப்ரவீணா, “நான் திருச்சியில் படித்து தற்போது பெங்களூரில் வேலை செய்கிறேன். எனது பள்ளி கல்லூரி நண்பர்களுக்காக வாட்ஸ் ஆப் குரூப் வைத்துள்ளோம். அந்த குரூப் ஆரம்பித்த பிறகுதான் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது.
சில நண்பர்கள் வெளி நாடுகளில் இருக்கிறார்கள். எனவே, அனைவரும் ஒன்றாக சேட்டிங் செய்யக் கூடிய நேரம் இரவுதான். ஆனால், என்னால் வாட்ஸ் ஆப் இல்லாமலும் இருக்க முடியும்” என்றார்.
ஆங்கிலத்தில் இளங்கலை படிக்கும் மரியா கூறுகையில், “வாட்ஸ் ஆப் குரூப்-ல் நடந்த விவாதங்களைப் பற்றி, சுவாரஸ்யமான ஸ்டேடஸ் பற்றி தினமும் வகுப்பில் பேசிக் கொள்வோம். எனது கைபேசியை பார்க்கும்போது அதில் குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றால் சற்று கவலையாக இருக்கும்” என்றார்.
இழப்புகள் அதிகம்: மருத்துவர் கருத்து
இது குறித்து மன நல மருத்துவர் ராமானுஜம் கூறியதாவது:
ஒருவர் தமது முக்கிய பணிகளுக்கும் உறவுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், ஒரு செயல் அல்லது பொருளுக்கு நேரம் ஒதுக்கினால் அவர் அதற்கு அடிமையாகியுள்ளார் என்று பொருள். அதற்கு செலவழிக்கும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வரும். அந்த பழக்கத்தால் தமக்கு, இழப்புகள் ஏற்படுகின்றன என்று தெரிந்தும் அது தொடரும். இந்திய இளைஞர்களுள் 5 முதல் 10 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். தங்கள் பிள்ளைகள் பேஸ்புக்கிலும், இன்டர்நெட்டிலுமே அதிக கவனம் செலுத்துகின்றனர் என பல பெற்றோர் புகார் கூறுகின்றனர். வாட்ஸ் ஆப்-ஐ ஒரு தொடர்பு சாதனமாக மட்டுமே கருத வேண்டும். நண்பர்களோடு நேரில் பேசுவது, நல்ல புத்தகங்களை படிப்பது, உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை இளைஞர்கள் வழக்கமாக கொள்ள வேண்டும் என்றார்.
நன்றி: தி இந்து

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்
டெக்னாலஜி வளர வளர கெடுதலும் அதிகமாகிறது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்
இதை எல்லாம் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்... அவர்களுக்கு இது எல்லாம் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. சாப்பாட்டை கூட ஒத்திவைத்துவிட்டு இணையப் பக்கமே கதியென்று இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
இதுவும் ஒரு போதைதான். அது அவர்களைக் கொல்லும் வரை விடாது.
இதுவும் ஒரு போதைதான். அது அவர்களைக் கொல்லும் வரை விடாது.
Re: வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்
ரானுஜா wrote:டெக்னாலஜி வளர வளர கெடுதலும் அதிகமாகிறது
உண்மைதான்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்
இதன் பயன்பாடு தெரிந்து கொண்டால்
முதியவர்களும் தூக்கம் தொலைப்பர்...!
-
முதியவர்களும் தூக்கம் தொலைப்பர்...!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்
எனது சாப்பிடும் நேரத்திலும் மொபைலை நோண்டிக்கொண்டே இருக்கிறான். எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
» திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
» நகைச்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு
» வாட்ஸ் அப்பால் பிரச்சினை?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum