Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முன்னேற்றத்தை கொடுக்கும் முன்னோர் வழிபாடு.
Page 1 of 1 • Share
முன்னேற்றத்தை கொடுக்கும் முன்னோர் வழிபாடு.
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் என மிக பிரமாண்டமாகப் பரந்து விரிந்திருக்கிற இந்தப் பிரபஞ்சத்தில், நாம் வசிக்கும் இந்த உலகம் ஒரு துளி! நாம் எப்படி இந்த உலகுக்கு வந்தோம்? கடவுளால் படைக்கப்பட்டு! நம்மையும் இந்த உலகையும், உலகத்து மக்களையும், அண்ட சராசரங்களையும் படைத்தது இறைவன்தானே!
அனைத்து இடங்களிலும், எல்லோர் வீடுகளிலும் இருந்துகொண்டு, நம்மை போஷிப்பதற்காகவே தாய்- தந்தையரைப் படைத்து, அவர்களின் மூலமாக இந்த உலகுக்கு நம்மை அருளினார் கடவுள். அதனால்தான், நம்மை இந்த உலகுக்கு வழங்கி, சீராட்டிப் பாலூட்டி வளர்த்த பெற்றோரை, 'தந்தை- தாய் பேண்’ என்றும், 'நன்றி மறவேல்’ என்றும் சொல்லி, பெற்றோரைப் பராமரிப்பதை ஓர் அத்தியாவசியக் கடமையாகப் பணித்து வைத்தது இந்து தர்மம்.
ஒரு மனிதன் இறந்த பிறகு, அவனது கர்ம வினைகளுக்கு ஏற்ப, சில காலங்களுக்குப் பிறகு மறுபிறவி எடுத்து, தன் கர்மவினைகளை நீக்கிக்கொள்ள முனைகிறான்; வினைகள் யாவும் முழுவதுமாக நீங்கிய பிறகு, மோட்சத்தை அடைகிறான் என்கிறது இந்து தர்ம சாஸ்திரம்.
'ஆத்மா வை புத்ர நாம ஆஸீத்’ என்கிறது வேதம். தாய்- தந்தையின் மற்றொரு வடிவமும் உருவமும்தான் நாம். அதேபோல, நாமே நம்முடைய குழந்தையாகவும் பிறக்கிறோம்; இருக்கிறோம். அதாவது, பெற்றவர்களின் பிரதியாக நாமும், நம்முடைய பிரதியாக குழந்தைகளும் என சங்கிலித் தொடர் போலானது மனிதப் பிறப்பு! வேதம் சொல்லும் இந்த வாக்கியம், நமக்கும் நம் முன்னோர்களுக்குமான தொடர்பைத் தெளிவுற விளக்குகிறது. நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செய்கிறோம். அப்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கிறோம்.
வேறொரு நாட்டில் இருக்கும் நண்பர் அல்லது உறவினருக்கு நாம் அனுப்பும் பணமானது, எப்படி அந்த நாட்டில் உள்ள மதிப்பின்படி அவருக்குப் போய்ச் சேருகிறதோ, அதேபோல் நாம் இங்கே செய்யும் பித்ரு கடன் அதாவது கடமை, அவர்கள் எந்த உருவில் இருக்கிறார்களோ அவர்களுக்குரிய முறையில் போய்ச் சேரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
நம் தாய்- தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, பித்ருக்கள் எனப் போற்றப்படுகிறார்கள். நாம் வாழ்வது பூலோகத்தில்; அவர் களின் வாழ்வது பித்ருலோகத்தில்! ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.
ஆனாலும், இந்தக் காலத்தில் பித்ருக்களுக்கான ஆராதனையை உரிய நாளில் செய்பவர்கள் மிகச் சிலர்தான்! பலர் ஆசைப்பட்டும், பல்வேறு காரணங்களால் செய்யாது விடுகின்றனர். அப்படியெனில், செய்யாதவர்களுக்கு என்ன வழி?
நிச்சயமாக உண்டு. புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், பௌர்ணமியை அடுத்த தேய்பிறை நாட்கள் முழுவதுமே மிகப் பெரிய ஆற்றல் நிறைந்தவை. இவற்றை மகாளய பட்ச புண்ய காலம் என்பார்கள். தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி (தாயார் உயிருடன் இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி), தாய் வழித் தாத்தா- பாட்டி என மூன்று தலைமுறையினர், நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம். அப்படிச் செய்யும்போது, நமக்கும் நம் சந்ததிக்குமான நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி!
சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம். சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்திருக்கலாம். சிலர், விபத்து போன்று அகால மரணம் அடைந்திருக்கலாம். அந்த ஆத்மாக்கள் அனைத்தும் திருப்தி அடையச் செய்வதற்கான சிறந்த நாளே மகாளய பட்சம் என்பர் பெரியோர்.
ஆயு: புத்ரான் யச: ஸ்வர்கம்
கீர்த்திம் புஷ்டிம் பலம் ஸ்ரீஇயம்
பசூன் சுகம் தனம் தான்யம்
ப்ராப்னுயாத் பித்ரு பூஜனாத்
கீர்த்திம் புஷ்டிம் பலம் ஸ்ரீஇயம்
பசூன் சுகம் தனம் தான்யம்
ப்ராப்னுயாத் பித்ரு பூஜனாத்
- என்றபடி, நம்மால் இயன்ற அளவு சிறந்த முறையில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், நல்ல குழந்தைகள், புகழ், சொர்க்கம், ஆரோக்கியம், பலம், செல்வம், பசுக்கள், இன்பம், தானியங்கள் போன்ற அனைத்தும் நமக்குக் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை.
இந்த மகாளய பட்சத்தில், அனைத்து நாட்களிலும் தர்ப்பணம் செய்வது விசேஷம். இயலாதவர்கள், மகாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடனும் முன்னோர் கடனை அளிப்பது மிகுந்த பலனைத் தரும். பொதுவாக, இந்தப் பதினைந்து நாட்களும் வீட்டில் வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் செய்யாமல், நம் முன்னோர்கள் குறித்துப் பேசுவதும், அவர்களின் பெயரில் ஏழை, எளியவர் களுக்குத் தான- தர்மங்கள் செய்வதும் அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.
ஸ்ரீராமபிரான், தன் தந்தைக்கான பித்ரு கடன்களை காட்டில் இருந்தபடியே செய்து நமக்கு வழிகாட்டியுள்ளார். ஸ்ரீராமர், ராவண வதம் செய்த பிறகு சிவபெருமானைக் குறித்து பூஜை செய்த ராமேஸ்வரம் எனும் க்ஷேத்திரத்தில், இந்த மகாளய பட்ச அமாவாசை நாளில், தர்ப்பணங்கள் போன்ற முன்னோர் கடன்களைச் செய்வது, நம் குடும்பத்தையும் வாழ்வையும் செழிக்கச் செய்யும் வலிமை மிக்க காரியமாகும்.
சைக்கிளில் பயணித்து ஓரிடத்தை அடைவதற்கும், காரில் அந்த இடத்தை அடைவதற்கும் வேறுபாடு இருக்கிறதுதானே! அதேபோல, புண்ணிய காலங்களில் முன்னோர் ஆராதனை செய்வதென்பது மிக உயர்வானது. தவிர, (சூரியன் புதனின் வீடான கன்னியில் இருப்பதே புரட்டாசி மாதம்) புதனின் அதிபதியான ஸ்ரீமந் நாராயணனின் அவதாரமும், மனிதனாக வாழ்ந்து தர்மத்தை நிலைநாட்டியவருமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வழிபட்ட ராமேஸ்வரத்துக்கு முடிந்தால் சென்று, பித்ரு கடனை நிறைவேற்றுங்கள். சகல நலன்களையும் பெற்று சந்துஷ்டியுடன் வாழ்வீர்கள் என்பது உறுதி.
புண்ணிய க்ஷேத்திரங்களுக்கோ, புண்ணிய நதிக்கரைகளிலோ செய்ய முடியாதவர்கள், அவரவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் தங்களது கடமையை நிறைவேற்றுங்கள்.
இறந்துபோனவர் குழந்தை இல்லாதவர் எனில், அவருடைய மனைவியானவர் வாத்தியாரிடமே தர்ப்பணம் செய்யச் சொல்லலாம்.
இதேபோல், ஆண் குழந்தைகள் இல்லாத நிலையில், அந்த வீட்டின் பெண் குழந்தைகள் தங்களின் தந்தைக்காக, பெற்றோருக்காக வேறு ஒருவரை நியமித்துக் கடமையை நிறைவேற்றலாம்.
தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, 'ஏஷாம் ந மாதா ந பிதா... குசோதகை:’ என்று மந்திரம் சொல்லச் சொல்வார்கள். 'எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ... இதுபோன்று யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நமது சாஸ்திரம். இதுதான் இந்து மதத்தின் மகோன்னதம்!
புண்ணியம் நிறைந்த மஹாளய அமாவாசை நாளில், நம் முன்னோர் கடனை அளித்து, நல்வாழ்வு வாழ்வோம்!
நாம் எவ்வளவு தெய்வ ஆராதனைகள் செய்தாலும், நமக்குக் கண்கண்ட தெய்வம், நம்மைப் பெற்றவர்கள்தான். அவர்கள் வாழும் காலத்தில் அவர்களை நல்லவிதமாகப் பார்த்துக்கொள்வதோடு, இறந்த பிறகு அவர்களுக்கான கடனைச் சரிவரச் செய்தால்தான் தெய்வ அருள் முழுமையாகக் கிடைக்கும். வெறும் பத்து ரூபாய் என்றாலும், அது கடன்தான். தலைமுறையைக் கடந்த முன்னோர்களுக்குக் கடமையைச் செய்வதும் நமக்கான கடன்தான்.
முன்னோரை ஆராதிப்போம். அவர்கள், நம்மை ஆசீர்வதிப்பார்கள்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முன்னேற்றத்தை கொடுக்கும் முன்னோர் வழிபாடு.
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முன்னேற்றத்தை கொடுக்கும் முன்னோர் வழிபாடு.
அருமையான தகவல் அண்ணா.
பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» முன்னோர் ஆசி பெற வழிபாடு!
» முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்
» வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும் – கிருபானந்த வாரியார்
» முன்னோர் வழங்கிய மு்லிகை: இஞ்சி
» முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி
» முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்
» வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும் – கிருபானந்த வாரியார்
» முன்னோர் வழங்கிய மு்லிகை: இஞ்சி
» முன்னோர் வழங்கிய மூலிகை: அம்மான்பச்சரிசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum