தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒரு தேவாரம்

Page 12 of 33 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 22 ... 33  Next

View previous topic View next topic Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Wed Aug 13, 2014 11:11 am

First topic message reminder :

நற்றுணையாவது நமச்சிவாயவே!
 தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

திருச்சிற்றம்பலம்!!!

தினம் ஒரு தேவாரம்  - Page 12 2Q==
தினம் ஒரு தேவாரம்  - Page 12 Alampதினம் ஒரு தேவாரம்  - Page 12 Zதினம் ஒரு தேவாரம்  - Page 12 Alamp
தினம் ஒரு தேவாரம்  - Page 12 Images?q=tbn:ANd9GcQu7ef1sdDMr37rvqFgXFOg36Di9aMBDWpyM1DideVWW3mdbwTXuA

 தேவாரங்கள் எனப்படுபவைசைவசமயத்தின் முழுமுதற்
கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்,திருநாவுக்கரசுநாயனார், சுந்தரமூர்த்திநாயனார்
ஆகியநாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும்.
 
 
 முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
 
 
7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும்.
 
 
மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம்ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர்.
 
 
திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ளதோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
 
 
தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.
 
 
“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர்.
 
 
திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.
 
 
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத்தொகுத்தார்.

 
திருமுறை

பாடியவர்(கள்)

பாடல் எண்ணிக்கை

முதலாம் திருமுறை
திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்

1,469

இரண்டாம் திருமுறை

திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்

1,331

மூன்றாம் திருமுறை

திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்

1,358

நான்காம் திருமுறை

திருநாவுக்கரசு நாயனார்

1,070

ஐந்தாம் திருமுறை

திருநாவுக்கரசு நாயனார்

1,015

ஆறாம் திருமுறை

திருநாவுக்கரசு நாயனார்

981

ஏழாம் திருமுறை

சுந்தரமூர்த்தி நாயனார்

1,026

எட்டாம் திருமுறை

மாணிக்கவாசகர்

1,058

ஒன்பதாம் திருமுறை

9 ஆசிரியர்கள்

301

பத்தாம் திருமுறை

திருமூலர்

3,000

பதினொன்றாம் திருமுறை

11 ஆசிரியர்கள்

1,385

பன்னிரண்டாம் திருமுறை

சேக்கிழார்

4,272

 

மொத்தம்
18,266


Last edited by முழுமுதலோன் on Wed Aug 13, 2014 3:45 pm; edited 2 times in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Tue Feb 03, 2015 10:52 am

135வசைவிற்கொடு வருவேடுவ
னவனாய்நிலை யறிவான்
திசையுற்றவர் காணச்செரு
மலைவானிலை யவனை
அசையப்பொரு தசையாவண
மவனுக்குயர் படைகள்
விசையற்கருள் செய்தானிடம்
விரிநீர்விய லூரே.

வளைந்த வில்லை ஏந்தி வேட்டுவ வடிவம் கொண்டு வந்து, தன்னை நோக்கித் தவம் இயற்றும் விசயனின் ஆற்றலை அறிதற்பொருட்டு எண்திசையிலுள்ளோரும் காண ஒரு காலில் நின்று தவம் செய்த அவன் வருந்தும்படி, அவனோடு செருமலைந்து அவனது ஆற்றலைப் பாராட்டி அவன் அழியாதவாறு அவனுக்குப் பாசுபதம் முதலிய படைக்கலங்களை அருளியவனாகிய சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Tue Feb 03, 2015 12:39 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Wed Feb 04, 2015 10:17 am

136மானார்அர வுடையானிர
வுடையான்பகல் நட்டம்
ஊனார்தரு முயிரானுயர்
விசையான்விளை பொருள்கள்
தானாகிய தலைவன்னென
நினைவாரவ ரிடமாம்
மேனாடிய விண்ணோர்தொழும்
விரிநீர்விய லூரே.

தலைமையான அரவை அணிந்தவனும், தலையோட்டில் இரத்தல் தொழில் புரிகின்றவனும், பகலில் நட்டம் ஆடுபவனும், ஊனிடை உயிராய் விளங்குபவனும், உயரிய வீரம் உடையவனும், அனைத்து விளை பொருள்களாய் நிற்கும் தலைவன் என நினைத்தற்குரியவனுமாகிய சிவபிரானது இடம், புண்ணியப் பயனால் மேல் உலகை நாடிய விண்ணவர்களால் தொழப் பெறும் நீர்வளம் சான்ற வியலூராகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Wed Feb 04, 2015 12:01 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Fri Feb 06, 2015 11:08 am

137பொருவாரெனக் கெதிராரெனப்
பொருப்பையெடுத் தான்றன்
கருமால்வரை கரந்தோளுரங்
கதிர்நீண்முடி நெரிந்து
சிரமாயின கதறச்செறி
கழல்சேர்திரு வடியின்
விரலாலடர் வித்தானிடம்
விரிநீர்விய லூரே.

எனக்கெதிராகச் சண்டையிடுவார் யார் என்ற செருக்கால் கயிலை மலையை எடுத்த இராவணனின் வலிய பெரிய மலைபோலும் கைகள் தோள்கள் மார்பு ஆகியனவும் ஒளி பொருந்திய நீண்ட மகுடங்களுடன் கூடிய தலைகளும் நெரிதலால் அவன் கதறுமாறு, செறிந்த கழல்களுடன் கூடிய திருவடியின் விரலால் அடர்த்த சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Fri Feb 06, 2015 1:23 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முரளிராஜா Sat Feb 07, 2015 7:34 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sat Feb 07, 2015 10:38 am

138வளம்பட்டலர் மலர்மேலயன்
மாலும்மொரு வகையால்
அளம்பட்டறி வொண்ணாவகை
யழலாகிய வண்ணல்
உளம்பட்டெழு தழற்றூணதன்
நடுவேயொரு வுருவம்
விளம்பட்டருள் செய்தானிடம்
விரிநீர்விய லூரே.

வளமையோடு அலர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தமக்குள் முடி அடி காண்பவர் பெரியவர் என்ற ஒரு வகையான உடன்பாட்டால் அன்னமும் பன்றியுமாய்ருந்தி முயன்றும் அறிய வொண்ணாதவாறு அழலுருவாகி நின்ற அண்ணலும், அவ்விருவர்தம் முனைப்பு அடங்கி வேண்டத் தழல்வடிவான தூணின் நடுவே ஓருருவமாய் வெளிப்பட்டு அருள் செய்தவனுமாகிய சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sun Feb 08, 2015 10:10 am

139தடுக்காலுடன் மறைப்பாரவர்
தவர்சீவர மூடிப்
பிடக்கேயுரை செய்வாரொடு
பேணார்நமர் பெரியோர்
கடல்சேர்தரு விடமுண்டமு
தமரர்க்கருள் செய்த
விடைசேர்தரு கொடியானிடம்
விரிநீர்விய லூரே.

ஓலைப் பாயால் உடலை மறைப்பவராகிய சமண முனிவர்களுடனும், பொன்னிற ஆடையால் உடலை மூடிப்பிடகம் என்னும் நூலைத் தம் மத வேதமாக உரைக்கும் புத்த மதத் தலைவர்கள் உடனும் நம் பெரியோர் நட்புக் கொள்ளார். கடலில் தோன்றிய நஞ்சைத் தான் உண்டு, அமுதை அமரர்க்களித்தருளிய விடைக் கொடியை உடைய சிவபிரானது இடம் நீர்வளமிக்க வியலூராகும். அதனைச் சென்று வழிபடுமின். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Mon Feb 09, 2015 10:20 am

140விளங்கும்பிறை சடைமேலுடை
விகிர்தன்விய லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு
தமிழ்ஞானசம் பந்தன்
துளங்கில்தமிழ் பரவித்தொழு
மடியாரவ ரென்றும்
விளங்கும்புக ழதனோடுயர்
விண்ணும்முடை யாரே.

விளங்கும் பிறையைச் சடைமேலுடைய விகிர்தனாய சிவபிரானது வியலூரை, இடமகன்ற ஊராகிய புகலியில் தோன்றிய தக்க தமிழ் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய துளக்கமில்லாத இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவித் தொழும் அடியவர், எக்காலத்தும் விளங்கும் புகழோடு உயரிய விண்ணுலகையும் தமதாக உடையவராவர். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Mon Feb 09, 2015 1:21 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by ஸ்ரீராம் Tue Feb 10, 2015 10:20 am

நல்லதொரு தொடர் தொடரட்டும் ......
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Tue Feb 10, 2015 11:03 am

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Lingam01
திருக்கொடுங்குன்றம் 



திருச்சிற்றம்பலம் 



இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர். 
தேவியார் - அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி.




141வானிற்பொலி வெய்தும்மழை
மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர்
சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி யைந்தும்அமர்ந்
தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு
மேயான்திரு நகரே.

வளைந்த பிறைமதி வானின்கண் விளங்கும் மழை மேகங்களைக் கிழித்து ஓடிச் சென்று சேரும் குளிர்ந்த சாரலை உடைய கொடுங்குன்றம், பசுவிடம் விளங்கும் பால் நெய் தயிர் கோமயம் கோசலம் ஆகிய ஐந்து பொருள்களையும் மகிழ்ந்தாடி உலகம் போற்றத் தேன்போலும் மொழியினைப் பேசும் உமையம்மையோடு சிவபிரான் மேவிய திருத்தலமாகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by ஸ்ரீராம் Tue Feb 10, 2015 11:09 am

மிக அருமையான பாடல் வரிகள்.

216 சிவாலயங்களில் இதுவும் ஒன்று தானே அண்ணா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Tue Feb 10, 2015 3:42 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 10:49 am

142மயில்புல்குதண் பெடையோடுட
னாடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர்
சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேன்மலி நெடுவெஞ்சுடர்
அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன்
மேயவ்வெழில் நகரே.

ஆண் மயில்கள் தண்ணிய தம் பெடைகளைத் தழுவித் தோகைவிரித்தாடும் விரிந்த சாரலையும், குயில்கள் இன்னிசைபாடும் குளிர்ந்த சோலைகளையும் உடைய கொடுங்குன்றம், கூரிய வேல்போலும் நெடிய வெம்மையான ஒளியோடு கூடிய அனலைக் கையில் ஏந்தி நின்றாடி முப்புரங்களைக் கணை தொடுத்து அழித்த சிவபிரான் எழுந்தருளிய திருத்தலமாகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Wed Feb 11, 2015 11:02 am

ஸ்ரீராம் wrote:மிக அருமையான பாடல் வரிகள்.

216 சிவாலயங்களில் இதுவும் ஒன்று தானே அண்ணா?
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்


பறம்பு மலை சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலைஎனவும் வழங்கப்படுகிறது. "ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.


பறம்பு மலை சிவகங்கை மாவட்டம்திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்துமேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்துதென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளிபொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும்.



இத்தலத்தின் விருட்சம் உறங்காப்புளி மரமாகும். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இம்மரம் பூக்கும், காய்க்கும். ஆனால், பழுக்காது.காய்ந்த நிலையிலேயே புளியங்காய், கீழே உதிர்ந்து விடும்.ஐப்பசி முதல் பங்குனி வரையில் சிவபெருமான் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம்



தினம் ஒரு தேவாரம்  - Page 12 220px-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88 தினம் ஒரு தேவாரம்  - Page 12 220px-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Wed Feb 11, 2015 11:09 am

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Thu Feb 12, 2015 10:33 am

143மிளிரும்மணி பைம்பொன்னொடு
விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர்
சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி
கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும்
வைத்தான்வள நகரே.

அருவிகள், ஒளிவீசும் மணிகள், பசும்பொன், மணமுள்ள மலர்கள் ஆகியவற்றைத் தள்ளிக்கொண்டு வந்து நீரைச் சொரிதலால், குளிர்ந்துள்ள மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம், பொங்கி எழும் கங்கையோடு, வெள்ளிய பிறைமதி பொருந்திய சடை முடிமேல், மணம் வளரும் கொன்றை மலரையும் மதத்தை ஊட்டும் ஊமத்தை மலரையும் அணிந்துள்ள சிவபிரானது வளமையான நகராகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Thu Feb 12, 2015 12:14 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Fri Feb 13, 2015 10:12 am

144பருமாமத கரியோடரி
யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி
யருவிக்கொடுங் குன்றம்
பொருமாவெயில் வரைவில்தரு
கணையிற்பொடி செய்த
பெருமானவ னுமையாளொடு
மேவும்பெரு நகரே.

பெரிய கரிய மத யானைகளும் சிங்கங்களும் இரைதேடவும், நீர் பருகவும் இறங்கிவரும் பெரிய மலைச்சாரலையும், நிறம் பொருந்திய பெரிய மணிகளைப் பொன்னோடு சொரியும் அருவிகளையும் உடைய கொடுங்குன்றம், தன்னோடு பொரவந்த பெரிய முப்புரக் கோட்டைகளை மலை வில்லில் தொடுத்த கணையால் பொடியாக்கிய சிவபிரான் உமையம்மையோடு எழுந்தருளிய பெருநகராகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sat Feb 14, 2015 10:54 am

145மேகத்திடி குரல்வந்தெழ
வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குல மோடித்திரி
சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை
சூடிந்நல மங்கை
பாகத்தவ னிமையோர்தொழ
மேவும்பழ நகரே.

மேகத்திடம் இடிக்குரல் தோன்றக் கேட்டுக் கோட்டான் என்னும் பறவை இனங்கள் அஞ்சி மலையினின்றும் இறங்கி வந்து ஓடித் திரியும் மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம், நாகத்தோடு இளவெண்பிறையை முடியிற் சூடி அழகிய உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டுள்ள சிவபிரான், தேவர்கள் தன்னை வணங்குமாறு எழுந்தருளும் பழமையான நகராகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Sat Feb 14, 2015 10:58 am

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sun Feb 15, 2015 11:38 am

146கைம்மாமத கரியின்னின
மிடியின்குர லதிரக்
கொய்ம்மாமலர்ச் சோலைபுக
மண்டுங்கொடுங் குன்றம்
அம்மானென வுள்கித்தொழு
வார்கட்கருள் செய்யும்
பெம்மானவ னிமையோர்தொழ
மேவும்பெரு நகரே.

துதிக்கையை உடைய கரிய மதயானைகளின் கூட்டம் இடிக்குரல் அதிரக்கேட்டு அஞ்சிக் கொய்யத்தக்க மணமலர்களை உடைய சோலைகளில் புகுந்து ஒளிதற்குச் செறிந்து வரும் கொடுங்குன்றம், இவரே நம் தலைவர் என இடைவிடாது நினைந்து தொழும் அடியவர்கட்கு அருள் செய்யும் சிவபெருமான் விண்ணோர் தன்னைத் தொழ வீற்றிருந்தருளும் பெருநகராகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Mon Feb 16, 2015 9:58 am

147மரவத்தொடு மணமாதவி
மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில்
சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை
விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன்
வைத்தானெடு நகரே.

கடம்பு, குருக்கத்தி, முல்லை ஆகியவற்றின் நாள் அரும்புகள் குரவமலர்களோடு விண்டு மணம் விரவும் பொழில் சூழ்ந்த தண்ணிய கொடுங்குன்றம், அரவு, வெள்ளிய இளம்பிறை, மணம் விரவும் கொன்றை மலர் ஆகியவற்றை நிரம்பத் தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகராகும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 12 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 33 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 22 ... 33  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum