தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒரு தேவாரம்

Page 26 of 33 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 29 ... 33  Next

View previous topic View next topic Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Wed Aug 13, 2014 11:11 am

First topic message reminder :

நற்றுணையாவது நமச்சிவாயவே!
 தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

திருச்சிற்றம்பலம்!!!

தினம் ஒரு தேவாரம்  - Page 26 2Q==
தினம் ஒரு தேவாரம்  - Page 26 Alampதினம் ஒரு தேவாரம்  - Page 26 Zதினம் ஒரு தேவாரம்  - Page 26 Alamp
தினம் ஒரு தேவாரம்  - Page 26 Images?q=tbn:ANd9GcQu7ef1sdDMr37rvqFgXFOg36Di9aMBDWpyM1DideVWW3mdbwTXuA

 தேவாரங்கள் எனப்படுபவைசைவசமயத்தின் முழுமுதற்
கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்,திருநாவுக்கரசுநாயனார், சுந்தரமூர்த்திநாயனார்
ஆகியநாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும்.
 
 
 முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
 
 
7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும்.
 
 
மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம்ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர்.
 
 
திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ளதோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
 
 
தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.
 
 
“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர்.
 
 
திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.
 
 
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத்தொகுத்தார்.

 
திருமுறை

பாடியவர்(கள்)

பாடல் எண்ணிக்கை

முதலாம் திருமுறை
திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்

1,469

இரண்டாம் திருமுறை

திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்

1,331

மூன்றாம் திருமுறை

திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார்

1,358

நான்காம் திருமுறை

திருநாவுக்கரசு நாயனார்

1,070

ஐந்தாம் திருமுறை

திருநாவுக்கரசு நாயனார்

1,015

ஆறாம் திருமுறை

திருநாவுக்கரசு நாயனார்

981

ஏழாம் திருமுறை

சுந்தரமூர்த்தி நாயனார்

1,026

எட்டாம் திருமுறை

மாணிக்கவாசகர்

1,058

ஒன்பதாம் திருமுறை

9 ஆசிரியர்கள்

301

பத்தாம் திருமுறை

திருமூலர்

3,000

பதினொன்றாம் திருமுறை

11 ஆசிரியர்கள்

1,385

பன்னிரண்டாம் திருமுறை

சேக்கிழார்

4,272

 

மொத்தம்
18,266


Last edited by முழுமுதலோன் on Wed Aug 13, 2014 3:45 pm; edited 2 times in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by ஸ்ரீராம் Sat Sep 05, 2015 9:44 am

சிறப்பான தொடர் தேவார பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sat Sep 05, 2015 3:25 pm

295பாலு நெய்யுந் தயிரும் பயின்றாடித்
தோலு நூலுந் துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

பாலையும் நெய்யையும் தயிரையும் விரும்பி யாடிப் புலித்தோலும் முப்புரி நூலும் பொருந்திய மலை போன்று விரிந்த மார்பினராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய, மயக்கும் சோலைகளால் சூழப்பெற்ற, இள மயில்கள் ஆரவாரிக்கும் திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Sat Sep 05, 2015 6:14 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sun Sep 06, 2015 10:40 am

296செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தைய லாளொர் பாக மாயவெம்
ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

சிவந்த திருமேனியரும், செம்மை நிறமுடைய சடைமுடியினரும், விடையூர்ந்து வருபவரும், கையில் பற்றிய சூலத்தினரும், வீரக்கழல் அணிந்தவரும், இடுகாட்டில் விளங்குபவரும், உமையம்மையைத் தன்மேனியில் ஒரு கூறாகக் கொண்டவருமான எம் தலைவராய சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Sun Sep 06, 2015 10:58 am

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Mon Sep 07, 2015 11:37 am

297பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

நோய்கட்கு இடமான இவ்வுடலுடன் பிறத்தல் ஒழியுமாறு இப்பிறப்பைப் பயன்படுத்த எண்ணும் அறிவுடையவர்களே, துணித்தலைச் செய்வதும், போர் செய்தற்கு உரியதுமான விளங்கும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவரும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமான, சிவபெருமான் மேவிய நீண்ட பொழில்கள் சூழ்ந்த அழகிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோமாக. 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Mon Sep 07, 2015 1:44 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Tue Sep 08, 2015 10:13 am

298பிறையு மரவும் புனலுஞ் சடைவைத்து
மறையு மோதி மயான மிடமாக
உறையுஞ் செல்வ முடையார் காவிரி
அறையுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

இளம் பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடையில் அணிந்து, நான்மறைகளை ஓதிக் கொண்டு, சுடுகாட்டைத் தமது இடமாகக் கொண்டு உறையும், வீடு பேறாகிய செல்வத்தை உடைய இறைவரின் காவிரி நீர் ஒலி செய்யும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Tue Sep 08, 2015 6:05 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 08, 2015 6:51 pm

தொடரட்டும் உங்கள் பணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Wed Sep 09, 2015 10:41 am

299துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

உடுக்கைகள் பலவற்றோடு முழவங்கள் ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப் பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை அரங்காகக் கொண்டு, பொருத்தமான தாளச் சதிகளோடு பாடல்கள் பாடி ஆடும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Wed Sep 09, 2015 1:17 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Thu Sep 10, 2015 2:49 pm

300சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடி யாடிப் பரவு வாருள்ளத்
தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே. 

காலன் அழியுமாறு அவனைக் காலால் உதைத்துத் தலைமாலைகளை அணிந்து, பொருத்தம் உடையவராய் வருபவரும், பாடி ஆடிப் பரவுவார் உள்ளங்களில் மகிழ்வோடு நடனம் புரிபவருமான சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Thu Sep 10, 2015 5:16 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sat Sep 12, 2015 3:41 pm

301பெண்ணோர் பாக முடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
எண்ணா தரக்க னெடுக்க வூன்றிய
அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

ஒருபாகமாக உமையம்மையை உடையவரும், பிறையணிந்த சென்னியரும், தமது திருமேனியில் ஒரு பாகமாக விளங்கும் நெற்றி விழியை உடையவரும், இராவணன் பின்விளையும் தீமையை எண்ணாது கயிலை மலையைப் பெயர்க்க, அவனது முனைப்பை அடக்கக் கால் விரலை ஊன்றிய தலைமைத் தன்மை உடையவருமாகிய சிவபிரானது திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Sat Sep 12, 2015 7:46 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sun Sep 13, 2015 10:22 am

302தொழுவா ரிருவர் துயர நீங்கவே
அழலா யோங்கி யருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியான் மிக்கவெம்
எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

தம் செருக்கடங்கித் தம்மைத் தொழுத திருமால் பிரமன் ஆகிய இருவர்க்கும், அழலுருவாய் ஓங்கி நின்று அருள்களைச் செய்தவன், விரும்பி உறையும் விழாக்கள் நிகழும் வீதிகளில் வேத விதியோடு வாழும் மக்களை உடைய சோற்றுத்துறையைச் சென்றடைவோம். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 13, 2015 9:02 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Mon Sep 14, 2015 12:21 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Mon Sep 14, 2015 3:09 pm

303கோது சாற்றித் திரிவா ரமண்குண்டர்
ஓது மோத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே. 

நெஞ்சே! குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவராகிய சமண் குண்டர்கள் ஓதுகின்ற வேதத்தை அறிய முயலாது, சிவாகம நெறி நின்று, நினைப்பவர் கருதும் திருவுருவோடு வெளிப்பட்டருளும் முதல்வனாகிய சிவபிரானது சோற்றுத்துறையை நாம் சென்றடைவோம். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Tue Sep 15, 2015 12:22 pm

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முரளிராஜா Wed Sep 16, 2015 8:57 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Fri Sep 18, 2015 3:41 pm

304அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
சிந்தை செய்ம்மி னடியா ராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே. 

அடியவர்களாக உள்ளவர்களே! அழகு தண்மை ஆகியவற்றோடு விளங்கும் திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள். சந்த இசையால் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தைத் தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவற்கு நாம் செய்யும் வழிபாடாகும். 




திருச்சிற்றம்பலம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by செந்தில் Sat Sep 19, 2015 11:33 am

நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by முழுமுதலோன் Sat Sep 19, 2015 2:32 pm

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Lingam01
திருநறையூர்ச்சித்தீச்சரம் 

திருச்சிற்றம்பலம் 


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - சித்தநாதேசர். 
தேவியார் - அழகாம்பிகையம்மை.




305ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
சீரு லாவு மறையோர் நறையூரில்
சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 

நெஞ்சே! ஊர்கள்தோறும் உலாவுவதால் கிடைக்கும் உணவைப் பெற்று, உலகம் பரவக் கங்கை நீரைத் தன் திருமுடியில் ஏற்று, அக்கங்கை நீர் உலாவும் மேல்நோக்கின சிவந்த சடைமுடியினை உடையதலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளிய, சீருடைய மறையவர் வாழும் நகரான நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக. 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒரு தேவாரம்  - Page 26 Empty Re: தினம் ஒரு தேவாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 33 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 29 ... 33  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum