Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தினம் ஒரு தேவாரம்
Page 28 of 33 • Share
Page 28 of 33 • 1 ... 15 ... 27, 28, 29 ... 33
தினம் ஒரு தேவாரம்
First topic message reminder :
திருச்சிற்றம்பலம்!!!
தேவாரங்கள் எனப்படுபவைசைவசமயத்தின் முழுமுதற்
கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்,திருநாவுக்கரசுநாயனார், சுந்தரமூர்த்திநாயனார்
ஆகியநாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும்.
முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும்.
மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம்ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர்.
திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ளதோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.
“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர்.
திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத்தொகுத்தார்.
நற்றுணையாவது நமச்சிவாயவே!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

திருமுறை | பாடியவர்(கள்) | பாடல் எண்ணிக்கை |
முதலாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,469 |
இரண்டாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,331 |
மூன்றாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,358 |
நான்காம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 1,070 |
ஐந்தாம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 1,015 |
ஆறாம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 981 |
ஏழாம் திருமுறை | சுந்தரமூர்த்தி நாயனார் | 1,026 |
எட்டாம் திருமுறை | மாணிக்கவாசகர் | 1,058 |
ஒன்பதாம் திருமுறை | 9 ஆசிரியர்கள் | 301 |
பத்தாம் திருமுறை | திருமூலர் | 3,000 |
பதினொன்றாம் திருமுறை | 11 ஆசிரியர்கள் | 1,385 |
பன்னிரண்டாம் திருமுறை | சேக்கிழார் | 4,272 |
| மொத்தம் | 18,266 |
Last edited by முழுமுதலோன் on Wed Aug 13, 2014 3:45 pm; edited 2 times in total
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
சிறப்பான தொடர் பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தினம் ஒரு தேவாரம்
318 | வலியின் மதிசெஞ் சடைவைத் தமணாளன் புலியின் னதள்கொண் டரையார்த் தபுனிதன் மலியும் பதிமா மறையோர் நிறைந்தீண்டிப் பொலியும் புனற்பூம் புகலிந் நகர்தானே. |
கலைகளாகிய வலிமை குறைந்த பிறை மதியைச் செஞ்சடைமீது வைத்துள்ள மணாளனும், புலியின் தோலை இடையிற் கட்டிய புனிதனும் ஆகிய சிவபெருமான் விரும்பும் பதி மேம்பட்ட வேதியர் நிறைந்து செறிந்து பொலியும் நீர்வளம் சான்ற அழகிய புகலிநகராகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
319 | கயலார் தடங்கண் ணியொடும் மெருதேறி அயலார் கடையிற் பலிகொண் டவழகன் இயலா லுறையும் மிடமெண் டிசையோர்க்கும் புயலார் கடற்பூம் புகலிந் நகர்தானே. |
கயல்மீன் போன்ற பெரிய கண்களை உடைய உமையம்மையோடும் விடைமீது ஏறி, அயலார் இல்லங்களில் பலி கொண்டருளும் அழகனாகிய சிவபிரான் எண்திசையிலுள்ளாரும் செவிசாய்த்து இடி ஓசையைக் கேட்கும் கார் மேகங்கள் தங்கும் கடலை அடுத்துள்ள அழகிய புகலிநகராகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
320 | காதார் கனபொற் குழைதோ டதிலங்கத் தாதார் மலர்தண் சடையே றமுடித்து நாதா னுறையும் மிடமா வதுநாளும் போதார் பொழிற்பூம் புகலிந் நகர்தானே. |
காதுகளில் அணிந்துள்ள கனவிய பொன்னால் இயன்ற குழை, தோடு ஆகியன இலங்க மகரந்தம் மருவிய மலர்களைத் தண்ணிய சடையின்கண் பொருந்தச்சூடி, எல்லா உயிர்கட்கும் நாதனாக விளங்கும் சிவபிரான் உறையுமிடம் நாள்தோறும் புதிய பூக்கள் நிறைந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலிநகராகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
321 | வலமார் படைமான் மழுவேந் தியமைந்தன் கலமார் கடனஞ் சமுதுண் டகருத்தன் குலமார் பதிகொன் றைகள்பொன் சொரியத்தேன் புலமார் வயற்பூம் புகலிந் நகர்தானே. |
வெற்றி பொருந்திய சூலப்படை, மான் மழு, ஆகியவற்றை ஏந்திய வலிமையுடையோனும், மரக்கலங்கள் உலாவும் கடலிடைத் தோன்றிய நஞ்சினை அமுதாக உண்டவனும் ஆகிய சிவபிரான், அடியார் குழாத்தோடு உறையும் பதி, கொன்றை மலர்கள் பொன் போன்ற இதழ்களையும் மகரந்தங்களையும் சொரிய, தேன் நிலத்தில் பாயும் வயல்களை உடைய புகலி நகராகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
322 | கறுத்தான் கனலான் மதின்மூன் றையும்வேவச் செறுத்தான் றிகழுங் கடனஞ் சமுதாக அறுத்தா னயன்றன் சிரமைந் திலுமொன்றைப் பொறுத்தா னிடம்பூம் புகலிந் நகர்தானே. |
மும்மதில்களும் கனலால் வெந்தழியுமாறு சினந்தவனும், கடலிடை விளங்கித் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு கண்டத்தில் தரித்தவனும், பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றை அறுத்து அதனைக் கையில் தாங்கிய சிவபிரான் எழுந்தருளிய இடம் அழகிய புகலி நகராகும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
323 | தொழிலான் மிகுதொண் டர்கள்தோத் திரஞ்சொல்ல எழிலார் வரையா லன்றரக் கனைச்செற்ற கழலா னுறையும் மிடங்கண் டல்கண்மிண்டிப் பொழிலான் மலிபூம் புகலிந் நகர்தானே. |
தாம் செய்யும் பணிகளால் மேம்பட்ட தொண்டர்கள் தோத்திரம் சொல்லிப் போற்ற, அழகிய கயிலைமலையால் முன்னொரு காலத்தில் இராவணனைச் செற்ற திருவடிகளை உடைய சிவபிரான் உறையும் இடம், தாழைமரங்கள் செறிந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலி நகராகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
324 | மாண்டார் சுடலைப் பொடிபூ சிமயானத் தீண்டா நடமா டியவேந் தல்தன்மேனி நீண்டா னிருவர்க் கெரியா யரவாரம் பூண்டா னகர்பூம் புகலிந் நகர்தானே. |
இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் விளையும் சாம்பலை உடலிற் பூசிக் கொண்டு, அம்மயானத்திலேயே தங்கி நடனமாடும் தலைவரும், திருமால் பிரமர் பொருட்டுத் தம் திருமேனியை அழலுருவாக்கி ஓங்கி நின்றவரும் பாம்பை மாலையாகத் தரித்தவருமான சிவபிரானது நகர் அழகிய புகலிப் பதியாகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
325 | உடையார் துகில்போர்த் துழல்வார் சமண்கையர் அடையா தனசொல் லுவரா தர்களோத்தைக் கிடையா தவன்றன் னகர்நன் மலிபூகம் புடையார் தருபூம் புகலிந் நகர்தானே. |
கீழ் உடையோடு மெல்லிய ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தரும், சமணர்களும் ஆகிய கீழ்மக்கள் பொருந்தாதவற்றைக் கூறுவார்கள். அக்கீழோரின் ஓத்திற்கு அகப்படாதவன் சிவபிரான். அப்பெருமானது நன்னகர், நன்கு செறிந்த பாக்கு மரச்சோலைகள் சூழ்ந்த புகலிநகராகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
326 | இரைக்கும் புனல்செஞ் சடைவைத் தவெம்மான்றன் புரைக்கும் பொழிற்பூம் புகலிந் நகர்தன்மேல் உரைக்குந் தமிழ்ஞான சம்பந் தனொண்மாலை வரைக்குந் தொழில்வல் லவர்நல் லவர்தாமே. |
ஆரவாரிக்கும் கங்கை நீரைத் தமது சிவந்த சடைமீது வைத்த எம் தலைவனாகிய சிவபிரானின், உயர்ந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய புகலிப் பதியைக் குறித்துத் தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த அழகிய இப்பதிகமாலையைத் தமதாக்கி ஓதும் தொழில் வல்லவர் நல்லவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
திருக்குரங்கணின்முட்டம்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாலீசுவரர்.
தேவியார் - இறையார்வளையம்மை.
327 | விழுநீர் மழுவாட் படையண் ணல்விளங்கும் கழுநீர் குவளைம் மலரக் கயல்பாயும் கொழுநீர் வயல்சூழ்ந் தகுரங் கணின்முட்டம் தொழுநீர் மையர்தீ துறுதுன் பமிலரே. |
பெருமைக்குரிய கங்கையை முடிமிசை அணிந்தவரும், மழுவாட்படையைக் கையில் ஏந்தியவரும் ஆகிய சிவபிரான் உறைவது கழுநீர், குவளை ஆகியன மலர்ந்து, கயல்மீன்கள் துள்ளுமாறு விளங்கும் நீர் நிலைகளை உடையதும், செழுமையான வயல்களால் சூழப்பட்டதுமாகிய திருக்குரங்கணில்முட்டம் ஆகும். இத்தலத்தைத் தொழுபவர் தீமையால் வரும் துன்பம் இலராவர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
328 | விடைசேர் கொடியண் ணல்விளங் குயர்மாடக் கடைசேர் கருமென் குளத்தோங் கியகாட்டில் குடையார் புனன்மல் குகுரங் கணின்முட்டம் உடையா னெனையா ளுடையெந் தைபிரானே. |
உயர்ந்து விளங்கும் மாடங்களின் கடை வாயிலைச் சேர்ந்துள்ள கரிய மெல்லிய காட்டிடையே அமைந்த குடைந்து ஆடுதற்குரிய நீர் நிலைகள் நிறைந்த குரங்கணில்முட்டத்தை உடையானும் விடைக்கொடி அண்ணலுமாகிய சிவபிரான் என்னை ஆளாக உடைய தலைவன் ஆவான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
329 | சூலப் படையான் விடையான் சுடுநீற்றான் காலன் றனையா ருயிர்வவ் வியகாலன் கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத் தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே. |
அழகிய சோலைகளால் சூழப்பெற்ற குரங்கணில் முட்டத்தில் எழுந்தருளிய மணம்கமழும் சடைமுடியை உடையோனாகிய எந்தைபிரான் சூலப்படையையும் விடை ஊர்தியையும் உடையவன். திருவெண்ணீறு பூசியவன். காலனின் உயிரை வவ்வியதால் காலகாலன் எனப்படுபவன்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 28 of 33 • 1 ... 15 ... 27, 28, 29 ... 33
Similar topics
» தேவாரம்
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» தினம் தினம் அழுகிறேன்....

Page 28 of 33
Permissions in this forum:
You cannot reply to topics in this forum