Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளை ஜங்க் புட் மற்றும் ப்ரைலேர் சிக்கன் - லிருந்து காப்பாற்றுங்கள்
Page 1 of 1 • Share
குழந்தைகளை ஜங்க் புட் மற்றும் ப்ரைலேர் சிக்கன் - லிருந்து காப்பாற்றுங்கள்
துரித உணவுகளை தடை செய்ய பரிந்துரைக்கிறது சி.எஸ்.இ. (CSE)
இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தைகள் மரணமும், நீரிழிவு நோய், புற்று நோய்,இதய நோய்களும் அதிகரித்திருப்பது தெரியுமா?
சமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) வெளியிட்டுள்ள 48பக்க ஆய்வு முடிவுகள் அத்தனையும் மிக, மிக அதிர்ச்சி ரகம். எல்லாவற்றுக்கு காரணமாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவது துரித வகை உணவுகளைத்தான். தொடர்ந்து நாடு முழுவதும் துரித வகை உணவுகளை (Junk Foods) தடை செய்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பரில் துரித உணவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சுனிதா நரேன் மற்றும் சந்திர பூஷன் ஆகியோர் தலைமையிலான குழு இதுதொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வில் இருந்து...
துரித உணவு என்றால் என்ன? (JUNK FOOD)
புரதம், வைட்டமின், கனிமச் சத்துக்கள் மிகக் குறைந்த அளவு அல்லது இல்லவே இல்லாத - மிகுந்த உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று வரையறுத்துள்ளது தேசிய சத்துணவு கழகம் (National Institute of Nutrition).
உதாரணமாக பிஸ்ஸா, பர்கர், சிக்கன் ஃபிறை, பிரெஞ்சு ஃபிறை, கே எப் சி, மக்டோனல்ட்ஸ் (PIZZA, KFC, McDONALDS, BROILER FRIED CHICKEN, BURGER, FRENCH FRY, PEPSI, COCA COLA)
இந்தியாவில் அதிகரிக்கும் இறப்பு சதவீதம்
துரித உணவுகளை உண்பதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் 1990-ம் ஆண்டில் மேற்கண்ட நோய்களால் ஏற்படும் இறப்பு 29 சதவீதமாக இருந்தது. இது2008-ம் ஆண்டு 53 சதவீதமாக உயர்ந்தது. 2020-ம் ஆண்டு இது 57 சதவீதமாக உயரும்.
மேலும் இந்தியாவில் இதய நோய்களால் ஆண்டுக்கு 35 சதவீதம் பேர் (35 - 64 வயதுக்குட்பட்டோர்) இறக்கின்றனர். தவிர, வளர் இளம் குழந்தைகளின் மரணம், சிறு வயதிலேயே பூப்பெய்தல், தலை பெருத்தல், உடல் எடை அபரிதமாக அதிகரித்தல், மூளை வளர்ச்சி கோளாறுகள் ஆகியவை கடந்த 3ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக எச்சரித் துள்ளது உலக சுகாதார அமைப்பு.
உலகளாவிய நீரிழிவு நோய் கழகம் (International Diabetes Federation) விடுத்துள்ள அறிக்கையில் தற்போது 40.9மில்லியனாக இருக்கும் இந்திய நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025-ம் ஆண்டு 69.9 மில்லிய னாக உயரும் என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2013-ல் உலகளாவிய மருத்துவ ஆய்வு இதழான Epidemiology சென்னையில் இருக்கும் 400பள்ளிகளில் குழந்தைகளிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இதில் 21.5 சதவீதம் பேருக்கு, குறிப்பாக பெரும்பாலும் உடல் எடை அதிகம் கொண்ட குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது.
உலகளாவிய அளவில் உணவுக் காக பயன்படுத்தும் உப்பின் அளவில் மூன்று சதவீதத்தை குறைத்தாலே50 சதவீதம் உயர் ரத்த அழுத்தமும், 22 சதவீதம் பக்கவாதமும், 16 சதவீதம் இதய நோய்களும் குறையும் என்கிறது உலக இதயக் கழகம் (World Heart Federation).
ஆனால், துரித உணவுகளில் உப்பும் இனிப்பும் 50 சதவீதம் கூடுதலாக இருக்கின்றன. கூடவே, சாயமும்,ரசாயனமும்.

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குழந்தைகளை ஜங்க் புட் மற்றும் ப்ரைலேர் சிக்கன் - லிருந்து காப்பாற்றுங்கள்
அப்பாவிகளின் தேசமா இந்தியா?
துரித வகை உணவு விற்பனை யில் உலகிலேயே அதிக அளவு கோலோச்சியது அமெரிக்காதான். அங்கு கடந்த 2010-ம் ஆண்டு இயற்றப்பட்ட சுகாதாரம் மற்றும் பசிக்கொடுமையிலிருந்து விடுபட்ட குழந்தைகளுக்கான சட்டம் கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு மிச்சேல் ஒபாமா துரித உணவுகளுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்கிறார். இதனால் அங்கு துரித வகை உணவு வியாபாரம் மொத்தமாக படுத்துவிட்டது. இவை தவிர, சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பல்வேறு வகைகளில் துரித வகை உணவுகளை தடை செய்துள்ளன. அப்புறம் என்ன? இருக்கவே இருக்கிறது இந்தியா. அப்பாவிகளின் தேசம். அணுவில் ஆரம்பித்து அத்தனை கழிவுகளையும் இங்கு வந்து கொட்டலாம். 2015-16-ம் ஆண்டு களில் இந்தியாவில் துரித வகை உணவுத் தொழில் தற்போது இருப்பதைவிட ஒன்றரை மடங்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரைக்கும் விதிமுறைகள்
இந்த நிலையில் கடுமையான விதிமுறைகளை வகுத்து அதனை சட்டமாக்க வேண்டும் என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளது அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம். அதன் பரிந்துரைகள்:
* கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் 500 மீட்டர் தொலைவுக்குள் துரித வகை உணவு விற்பனை செய்யக் கூடாது.
*தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 10 வரையும் துரித உணவு வகை விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.
* மேற்கண்ட விளம்பரங்களில் பிரபலங்கள் நடிக்கவும், துரித உணவு வகை விற்பனையை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் விழாக்களில் கலந்துகொள்ளவும் தடை விதிக்க வேண்டும்.
* துரித வகை உணவின் கெடுதல் குறித்தும், பாரம்பரிய உணவுகளின் நன்மைகள் குறித்து பள்ளிகளில் பாடம் வைக்க வேண்டும்.
* துரித வகை உணவுகளுடன் இலவசமாக பொம்மை, கார்ட்டூன் படங்கள் போன்ற சிறுவர் விளையாட்டு சாதனங்கள் அளிப்பது தடைசெய்யப்பட வேண்டும்.
* மேற்கண்ட அனைத்தையும் நடைமுறைப்படுத்த புதிய சட்டம் இயற்ற வேண்டும்.

தடை செய்த உலக நாடுகள்!
கனடா, காஸ்டாரிக்கா, லாட்வியா, லூதியானா, மெக்ஸிகோ, பெரு, பிலிப்பைன்ஸ், தென் கொரியா,இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் துரித வகை உணவுகளை பள்ளிகளில் மட்டும் விற்பனை செய்ய தடை விதித்துள்ளன.
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், லூதியானா, நியூசிலாந்து, நார்வே, பெரு, போலந்து, ரோமானியா, தென் கொரியா, ஸ்வீடன், தாய்வான், இங்கிலாந்து, அமெரிக்கா, உருகுவே ஆகிய நாடுகளில் துரித வகை உணவு விளம்பரங்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து, பிரான்ஸ், ஹங்கேரி, அயர்லாந்து, மெக்ஸிகோ,பெரு, அமெரிக்கா ஆகிய நாடுகளில் துரித வகை உணவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
நாம் கொஞ்சம் கொஞ்சமாக இவைகளுக்கு நமது குழந்தைகள் அடிமையாகி கொண்டு இருக்கிறது, நம் குழந்தைகள் பொதுவாக சோறு ஊட்டுவதற்கே படாத பாடு பட வேண்டிருக்கும், ஆனால் ஜங்க் ஃபுட்டை அதாவது PIZZA, KFC, McDONALDS, BROILER FRIED CHICKEN, BURGER, FRENCH FRY, PEPSI, COCA COLAஅவர்களாகவே அப்படியே சாப்பிடுவார்கள், நமக்கு வேற ரொம்ப சந்தோஷம், எப்படியோ நம் பிள்ளை நமக்கு தொல்லை தராமல் தானாக சாபிட்டால் சரி, விலை ரொம்ப அதிகமாக இருந்தாலும் சரியே.
இதனால் ஏற்படும் விளைவு உடல் எடையையும் நோயையும் விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம், நமது பணத்தையும் வீண் விரயம் செய்கிறோம். எத்தனையோ ஏழைக்கு உணவளிக்கலாம். வெளிநாட்டுக்காரனை வாழ வைக்கிறோம். இந்தியக்காரனை சாகடிக்கிறோம்.
நமது கலாச்சார உணவுகளான இட்லி தோசை பொங்கல் பூரி வடை சப்பாத்தி கூழை மறக்க வேண்டாம்
இன்று அவசரமான கால கட்டத்தில், சாப்பிடுவதில் கூட அவசரம், அரக்க பறக்க சாப்பிடுகிறோம்.
மென்று தின்றால் நூறு வயது வாழலாம் என்ற பழமொழியை மறந்து விட்டு வாழ்கிறோம்.
குழந்தைகளுக்கு சிறிய வயது முதல் தரையில் உட்கார்ந்து, கை, கால், முகம், வாய் கழுவி சாப்பிட பழகவேண்டும். அறுசுவை உணவு சாப்பிடுமாறு பார்த்து கொள்ள வேண்டும், கீரை வகைகள், பயறு வகைகள், கேப்பங் கூழ், கம்பு கூழ் போன்றவற்றை மறந்து விட வேண்டாம்.
இறைவனை நினைவு கூர்ந்து இறைவன் பெயரை சொல்லி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்
சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது, தொண்டையில் ஏதாவது மாட்டினாலே தவிர
வாயை மூடி, நன்றாக மென்று, நிதானமாக உண்ண வேண்டும் தின்ன வேண்டும்
உணவை அவசரமாக அப்படியே முழுங்கக் கூடாது, வேகமாக சாப்பிடக்கூடாது
ஏப்பம் வந்தபிறகு சாப்பிடக்கூடாது, போதும் என்ற பிறகு சாப்பிடக்கூடாது.
சாப்பிட்ட பிறகு கையை கழுவி வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்
கடைசியாக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்

அவசியமான விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குழந்தைகளை ஜங்க் புட் மற்றும் ப்ரைலேர் சிக்கன் - லிருந்து காப்பாற்றுங்கள்
நல்ல விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» குழந்தைகளை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடித்தால் ஓராண்டு சிறை
» you Tube - லிருந்து டவுன்லோடு செய்வது எப்படி?
» வேண்டாம் பாஸ்ட் புட்
» ஃபாஸ்ட் புட் விபரீதம்
» தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum