தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒஷோவின் சிந்தனைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஜோர்பா Sat Nov 03, 2012 6:27 am

கடவுள்உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காணமுடியாத படி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்.
**********
முட்டாள்தனமானவர்கள் மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்கள்.எதையும் எதிர்க்க மாட்டார்கள்.ஜடமாகத் திரிவார்கள்.வாழ்வின் சிறப்பை வாழ்ந்து பார்க்க முயற்சிக்க மாட்டார்கள்.அவர்களிடம் தீவிரம் இருப்பதில்லை.இந்த சமூகம் நீ முட்டாளாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது.
**********
எதையும் உனக்குத் தேவை என்று ஆசைப் படுமுன் மும்முறை நினைத்துப்பார்.உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.99% தேவையற்றதாகவே இருக்கும்.அவை உன்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன.உனக்குள்ளே நீ இருக்க அவை நேரமோ இடமோ தருவதில்லை.
**********
வாழ்க்கை ஒரு புதிர்.ஏன் என்பதில்லை.குறிக்கோள் என்பது இல்லை காரணம் ஏதும் இல்லை.அது அப்படியே இருக்கிறது.எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு.அது அங்கே இருக்கத்தான் செய்யும்.ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது ?எதற்கு தத்துவ விசாரத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டும்?நடனமாடலாமே?பாடலாமே?அன்பு காட்டலாமே?தியானம் செய்யலாமே?வாழ்க்கை என்கிற அதற்குள் இன்னும் ஆழ ஆழமாகப் போய்க் கொண்டிருக்கலாமே?
**********
இன்னொரு நரகத்தைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?இந்த பூமியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தை விடவா அந்த நரகம் மோசமாக இருக்கப் போகிறது?

நன்றி தென்றல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by மகா பிரபு Sat Nov 03, 2012 6:56 am

ஓஷோ வின் சிந்தனைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஜோர்பா Sat Nov 03, 2012 8:05 am

மகா பிரபு wrote:ஓஷோ வின் சிந்தனைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!
நன்றி மகாபிரபு எனக்கும் மிகவும் பிடித்தமான மனிதர்,,,ஓஷோ

ஓஷோவுக்கு மிகப்பிடித்தமான மனிதர் ஜோர்பா,

"புதிய மனிதன் "ஜோர்பா தி புத்தா'
எப்படிப்பட்ட மனிதன் எனில், அவன் உலகியல் வாழ்க்கையின் முழு
இன்பத்தையும் நுகர அறிந்திருக்கிறான். கௌதம புத்தரைப்போல மௌனத்தைப்
பின்பற்றி தியானத்தில் இறக்கும் திறன் பெற்றிருக் கிறான். உலகியலிலும்
ஆன்மிகத்திலும் நிறைவு. "ஜோர்பா தி புத்தா' ஒரு பிளவுபடாத முழுமை யான
மனிதன்."


இப்போது புரிந்திருக்குமே என் புனைபெயரின் ரகசியம் லொள்ளு
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by மகா பிரபு Sat Nov 03, 2012 8:17 am

ஜோர்பா எனும் பெயர் வித்தியாசமாக இருந்ததால் நான் இது எப்படி என்று நேற்று யோசித்தேன். தற்போது விடை கிடைத்து இருக்கிறது. ஜோர்பா பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளது.

நேற்று மாலை ஓஷோவின் " மறைந்திருக்கும் உண்மைகள்" எனும் புத்தகம் வாசிக்க நேர்ந்தது. மிகவும் நல்ல புத்தகம் . அறிவியல் மூலம் ஆன்மிகத்தை விளக்கும் புத்தகம்.

இன்று நீங்கள் ஓஷோவை பற்றி பதிந்ததால் எனது மகிழ்ச்சி இரட்டிப்பானது..

புன்முறுவல் புன்முறுவல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஜோர்பா Sat Nov 03, 2012 8:26 am

நிச்சயம்,,,,செய்கிறேன் மகாபிரபு லொள்ளு அமர்களப்படுத்திவிடலாம்

மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ

1.
ஒரு பெண் முடிந்த அளவு அதிக பெண்மை கொண்டவளாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் அவள் மலர முடியும். ஓர் ஆண் முடிந்த அளவு அதிக ஆண்மை கொண்டவனாக இருக்க வேண்டும், அப்போதுதான் அவன் மலர முடியும். இவர்கள் இப்படி எதிர்நிலை துருவங்களாக மாறும் பொழுது, ஒரு பெரும் கவர்ச்சி, ஒரு பெரும் ஈர்ப்பு அவர்களுக்குள் எழும்புகிறது.

2.
தியானம் என்பது இடத்திலோ காலத்திலோ செய்யும் பயணமன்று, மாறாகச் சட்டென விழித்துக்கொள்வது. இங்கு இப்போது நீங்கள் மௌனமாக இருக்க முடிந்தால், இதுவே மறுகரை. உங்களால் மனம் நின்று விடுவதை, செயலற்று விடுவதை அனுமதிக்க முடிந்தால், இதுவே மறுகரை.

3.
நீங்கள் மனத்திலிருந்து இதயத்தை நோக்கிச் சாயுங்கள். அதுவே முதல் மாற்றம். குறைவாக எண்ணுங்கள், அதிகம் உணருங்கள். அறிவுபூர்வமாக இருப்பதைக் குறையுங்கள், உள்ளுணர்வை அதிகப்படுத்துங்கள். எண்ணிக் கொள்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை, அது நீங்கள் மாபெரும் காரியங்களைச் செய்வதாக உணரச் செய்யும். ஆனால் உண்மையில் நீங்கள் ஆகாயக் கோட்டைகள்தான் கட்டுவீர்கள். எண்ணங்கள் வெறும் ஆகாயக் கோட்டைகள் அல்லாமல் வேறொன்றும் இல்லை.
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by மகா பிரபு Sat Nov 03, 2012 8:34 am

இந்த அவசர உலகில் இது போன்ற சிந்தனைகளை படிக்கும் போது மனம் ஏதோ அமைதி கொள்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 9:49 am

மகா பிரபு wrote:இந்த அவசர உலகில் இது போன்ற சிந்தனைகளை படிக்கும் போது மனம் ஏதோ அமைதி கொள்கிறது.

என்ன அண்ணா செய்றது வீட்டுலயும் ஒரே அடி அத நினைச்சி தானே வருந்துறீங்க புரியுது அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by மகா பிரபு Sat Nov 03, 2012 9:51 am

இது சிந்தனைகள் நிறைந்த பகுதி. இங்கே நாம் சண்டையை வைத்து கொள்ள வேண்டாம். வேறு திரியில் சண்டை போடலாம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 9:52 am

மகா பிரபு wrote:இது சிந்தனைகள் நிறைந்த பகுதி. இங்கே நாம் சண்டையை வைத்து கொள்ள வேண்டாம். வேறு திரியில் சண்டை போடலாம்..



ஒஷோவின் சிந்தனைகள் 2334928294 ஒஷோவின் சிந்தனைகள் 2459753045 ஒஷோவின் சிந்தனைகள் 2459753045 ஒஷோவின் சிந்தனைகள் 2459753045 ஒஷோவின் சிந்தனைகள் 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by முரளிராஜா Sat Nov 03, 2012 9:57 am

மிகவும் அருமையான பயனுள்ள ஓஷோவின் சிந்தனைகள் பகிர்ந்தமைக்கு நன்றி ஜோர்பா
விரும்பினேன் உங்கள் பதிவை ஒஷோவின் சிந்தனைகள் 534526
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஸ்ரீராம் Sat Nov 03, 2012 11:28 am

ரொம்ப பயனுள்ள பகிர்வுகள். உங்கள் புனை பெயர் காரணமும் விளங்கியது.

ஜோர்பா ஆட்டத்தை ஆரம்பித்து விட்டீர்கள் போல இனி சென்சூரி மேல் சென்சூரிதான். பகிர்வுகள் அனைத்தும் ரொம்ப பயனுள்ளவை மிக்க நன்றி ஜோர்பா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by பித்தன் Sat Nov 03, 2012 12:00 pm

ஓஷோவை வெற்று படகு எனும் நூலின் மூலம் தான் பித்தனுக்கு அறிமுகம்.
பித்தனின் பார்வையில் ஓஷோ வை படிக்க ஒரு குறிப்பிட்ட பக்குவ நிலை அவசியம். இல்லையேல் ஓஷோ வின் உன்னத விஷயங்கள்
வெறும் வார்த்தைகளாகவும், சில நகைச்சுவை உணர்வும் மட்டுமே பெற இயலும். புத்தரின் தம்ம பதத்தை ஓஷோவின் வழி அணுகும் போது மட்டுமே
உண்மைநிலை புத்தம் புரியும் .
புத்தனை ஒஷவை தவிர யாரும் மிக அழகாக சொல்வார்களா என்பது சந்தேகம் தான்.
ஓஷோ ஒரு அதீதத்தின் குரல்.


'நல்லன எல்லாம் தரும் "

பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஸ்ரீராம் Sat Nov 03, 2012 12:04 pm

வாங்க வாங்க பித்தன். நலம்தானே?

ரொம்ப சரியாய் சொன்னிங்க பித்தன் முற்றிலும் உண்மை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by பூ.சசிகுமார் Sat Nov 03, 2012 12:06 pm

ஸ்ரீராம் wrote:வாங்க வாங்க பித்தன். நலம்தானே?

ரொம்ப சரியாய் சொன்னிங்க பித்தன் முற்றிலும் உண்மை


அண்ணா அவர் எப்போதும் இனி நலமாக தான் இருப்பார்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by பித்தன் Sat Nov 03, 2012 11:43 pm

ஸ்ரீராம் wrote:வாங்க வாங்க பித்தன். நலம்தானே?

ரொம்ப சரியாய் சொன்னிங்க பித்தன் முற்றிலும் உண்மை
நலம்,நலமின்மை என்பது உடலுக்கு தான். பித்தனுக்கு என்ன சித்தம் தெளிவு பெற வேண்டி பயணிக்கிறான் ஏதோ.........
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஸ்ரீராம் Sun Nov 04, 2012 12:00 am

அதுவும் சரிதான்...! மகிழ்ச்சி பித்தன் எற்றுக்கொள்கிறேன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஜோர்பா Sun Nov 04, 2012 7:16 am

அன்பை அனுப்புங்கள்

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம். அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

ஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள்.கண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம்.சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத் துவங்கிவிடும்!.
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by மகா பிரபு Sun Nov 04, 2012 7:19 am

ஓஷோவின் சிந்தனைகள் சூப்பர்

நன்றி ஜோர்பா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 9:14 am

அருமை...... பித்தன் அண்ணாவின் விளக்கம் அருமை அண்ணா ....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஜோர்பா Mon Nov 05, 2012 7:39 pm

அன்பு



நிஜமான அன்பு என்பது உள் வெளியை நிறைக்கும் ஏதோ ஒன்று அல்ல. அதற்கு பதிலாக உள்வெளியை பகிர்ந்து கொள்வதோடு சம்பந்தப்பட்டது. நீ பகிர்ந்துகொண்டால் அது அன்பு. பகிர்தல்தான் மனிதனை தெய்வீகத்தோடு இணைப்பது. அன்புதான் உன்னை தெய்வீகத்தோடு இணைக்கும் பாலம்.



அன்பு அபாயகரமான பாதை. துணிவுள்ளவர்கள் மட்டுமே அதில் பயணம் செய்யமுடியும்.



அன்பு செய்வது என்பது உனது ஆணவத்தை விடுவது, உன்னை இழப்பது. அன்பு என்றால் இல்லாமல் போவது.



நீ மிகவும் தலைகனம் பிடித்தவனாய் இருந்தால் உன்னால் காதலில் விழ முடியாது.



உடலுக்கு எப்படி உணவு தேவையோ அது போல ஆன்மாவுக்கு தேவையானது அன்பு.



அன்புக்கு தர்க்கம் கிடையாது, அன்புக்கு காரணம் கிடையாது, அன்புதான் வாழ்க்கை.



அன்பு நிபந்தனைகளற்ற பரிசு, அது பேரம் பேசுவதல்ல.
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஜோர்பா Mon Nov 05, 2012 7:40 pm

சிரிப்பு



ஆழமான சிரிப்பில் மனம் கரைந்துவிடுகிறது.



சிரிப்பு மனதின் பாகமோ, இதயத்தின் பாகமோ அல்ல.



உண்மையான சிரிப்பு உனது அடிவயிற்றின் ஆழத்திலிருந்து வரும்போது அது உனது மையத்திலிருந்து வருகிறது. அலைகள் மையத்திலிருந்து கிளம்பி வெளிவட்டத்துக்கு வருவது போல உண்மையான சிரிப்பு உனது மையத்திலிருந்து கிளம்பி அலையலையாய் வெளிப்புறத்துக்கு வரும்.



சிரிப்பு உன்னுள் ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும்.



நீ உன்னைப் பார்த்து சிரிப்பதுதான் உண்மையான சிரிப்பு.



எப்போதும் உனது அடி வயிற்றிலிருந்து வருவதுதான் உண்மையான சிரிப்பு.



நீ சிரிக்கும்போது எதிர்காலத்திலோ, இறந்த காலத்திலோ இருக்க முடியாது.



சிரிப்பு முடிவானதின் வாயிலை திறக்கக் கூடும்.

ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஜோர்பா Mon Nov 05, 2012 7:42 pm

மையம்.



மையமின்றி வாழ்வு இல்லை. உனக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். அது வேறு விஷயம். அதை நீ உருவாக்க முடியாது, நீ அதை திரும்பவும் கண்டுபிடிக்க வேண்டும். நினைவில் வைத்துக் கொள், நான் நீ அதை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, நீ திரும்பவும் கண்டு பிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.



மையமின்றி யாரும் உயிர்த்திருக்க முடியாது. மையமில்லாமல் வாழ்வு சாத்தியமேயில்லை.



புயலின் நடுவே அசையாதிருக்கும் அந்த மையத்தை கண்டறி.



கவனமாயிருப்பது, விழிப்புணர்வோடிருப்பது ஒன்று மட்டுமே உன் மையமாகட்டும்.



வெளிப்புறமின்றி மையமில்லை. அவை உண்மையில் ஒன்றே.



எல்லா சிறப்பானவைகளும் மையத்திலிருந்து தோன்றியவையே.
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஜோர்பா Tue Nov 06, 2012 6:21 am

தெளிவு



உனது அமைதியில் வார்த்தைகளின்றி இருக்கும்போது மொழியின்றி இருக்கும்போது யாரும் அங்கு இல்லாத போது நீ பிரபஞ்சத்துடன் லயப்பட்டு விடுகிறாய். இந்த தெளிவு இந்த ஒருமை உனக்கு அளவற்ற பரிசுகளை கொண்டு வரும். அது உனது முழு திறனுடன் நீ மலர உதவும். முதல் முறையாக நீ தனிப்பட்டவனாக உணர்வாய், உனக்கு சுதந்திரத்தின் சுவை தெரியும்.



இரவுக்கு அதற்கென ஒரு அழகு உண்டு, அதில் ஆழமும், அமைதியும், தெளிவும் இருக்கும்.



உறுதியான தெளிவுடனும் அமைதியுடனும் இருக்கும்போது நீ முழுமையான சுமை குறைந்தவனாக உணர்வாய்.



ஞானமடையும்போது முழுமையான மோனத்தில், தெளிவு பிறக்கும்.



அமைதியாக அமர்ந்திருக்கும்போது தெளிவால் நீ நிறைவாய்.



தியானம் செய் – தெளிவு, உணர்வு, அமைதி ஆகியவை உன்னுள் வளரும்.



சலிப்பை மிகவும் சரியான விதத்தில் உபயோகித்தால் அது தெளிவை உருவாக்கும்.

ஓஷோ தமிழ்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by ஜோர்பா Tue Nov 06, 2012 6:23 am

உன்னைப் பார்



நீ அடுத்தவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அது பண்பாடால்ல. அது நல்லதுமல்ல. அது நாகரீகமற்றது, மனிததன்மை அற்றது. நீ அடுத்தவர்களைப்பற்றி அக்கறை கொள்ளக் கூடாது. நீ எதற்கு கவலைப்பட வேண்டும் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க நீ யார்



அடுத்தவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நீ முடிவெடுக்க நினைக்கும் இந்த நினைப்பே அதிகாரம் பெற்றவனாக இருக்கும் அரசியல் ஆசையை அடக்கி வைத்ததன் விளைவே, அதன் வெளிப்பாடே.



ஆகவே காலத்தை வீணடிக்காதே. உன்னைப் பார்.
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by மகா பிரபு Tue Nov 06, 2012 2:11 pm

நன்றி ஜோர்பா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஒஷோவின் சிந்தனைகள் Empty Re: ஒஷோவின் சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum