Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புற்றுநோயைத் தடுக்கும் வெள்ளரி !!
Page 1 of 1 • Share
புற்றுநோயைத் தடுக்கும் வெள்ளரி !!
கத்தரி வெயிலைக் கொடுத்து நம்மைக் காய்ச்சி எடுக்கும் இயற்கைதான், அந்த வெயிலுக்கு இதமாய் அதே சீஸனில் வெள்ளரிக்காயையும் தருகிறது. விரல் போல மெலிந்து, இளம் பச்சை நிறத்தில், சடக்கென ஒடியும் பிஞ்சு வெள்ளரியின் சுவையே தனி. உடலில் நீர்ச்சத்தையும், வெப்ப நிலையையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் வெள்ளரிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
மலிவான விலையில், மருத்துவப் பயன்கள் நிறைந்துகிடக்கும் வெள்ளரிக்காயின் பயன்களைப் பட்டியலிட்டார் காஞ்சிபுரம் சித்த மருத்துவர் சந்திரபாபு.
‘காய்கறிகளில், மிகக் குறைவான கலோரி அளவுகொண்டது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 16 கலோரிதான் உள்ளது. 95 சதவீகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் கொழுப்புச் சத்து இல்லை என்பதால், உடல் எடையைக் குறைக்க மிகவும் ஏற்றது. வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து நா வறட்சியைப் போக்கும். பசியைத் தூண்டும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் இதில் அதிகம். வெள்ளரியில் உள்ள வைட்டமின்கள், மாங்கனீசு, பொட்டாசியம், சிலிக்கான் போன்ற தாது உப்புக்களும் தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் பல வகையான புற்றுநோய்களைத் தடுக்கின்றன. வெள்ளரிச் சாறில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்து ஆகியவை, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல், ஈறுகளைப் பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது.
சீரண மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், குடல் புண் ஆகியவற்றைக் குணமாக்கி சீரணத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள சிலிக்கான் மூட்டுத் தசைகளுக்கு வலு அளிப்பதாலும், வைட்டமின்கள் ஏ, பி6, சி, போலேட், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதாலும், மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கிறது.
இன்சுலினைச் சுரக்கும் கணைய செல்களுக்கு தேவைப்படும் ஹார்மோன் (வளர்ச்சி ஊக்கி) வெள்ளரியில் உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சிலிக்கானும், கந்தகமும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. கண் வீக்கம், கருவளையங்களைப் போக்கவும், சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும் வெள்ளரிக்காய் உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை நீக்கவும் பயன்படுகிறது.
பித்தத்தைக் குறைக்கும். சரும நோய்களைப் போக்கும். இரைப்பையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தும்.
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவதுதான் வழக்கம். வெள்ளரிக்காய்களை அரைத்துச் சாறாக்கியும் அருந்தலாம். இளநீருக்கு ஈடானது வெள்ளரிக்காய்ச் சாறு. வெள்ளரிக்காயை சமைக்காமல் அப்படியே பயன்படுத்துவதுதான் நல்லது’ என்றார்.
எப்படிச் சாப்பிடலாம்?
வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிக்காய் சாறு அருந்தினால், புண் சட்டெனக் குணமாகும்.
காலரா நோயாளிகள் வெள்ளரிக் கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதில் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தலாம்.
சர்க்கரை நோயாளிகள் எடை குறைய, விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாறை அருந்த வேண்டும்.
வெயிலைத் தவிர்க்க தயிரில் வெள்ளரிக்காய், காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி இவற்றைத் துருவிச் சேர்த்து வெஜிடபிள் சாலட் செய்து சாப்பிட்டால், குளிர்ச்சியாக இருக்கும்.
முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், பருக்களை அகற்ற வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும்.
தலைமுடியில் வெள்ளரிச் சாறு, கேரட் சாறு, பசலைக் கீரைச் சாறு, பச்சடிக் கீரைச் சாறு தலா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து தடவி அலசலாம். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
செரிமானக் கோளாறு, கபம், இருமல், நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லதல்ல.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: புற்றுநோயைத் தடுக்கும் வெள்ளரி !!
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வெள்ளரி. (CUCUMBER)
» ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்
» புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை --- மூலிகைகள் கீரைகள் !!!
» பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!
» சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ்
» ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்
» புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை --- மூலிகைகள் கீரைகள் !!!
» பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!
» சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்கும் வெள்ளரி ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum