Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மெனோபாஸும் தூக்கமின்மையும்
Page 1 of 1 • Share
மெனோபாஸும் தூக்கமின்மையும்
அதுநாள் வரை மாதவிலக்கு என்பதை ஒரு சுமையாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள், அது நின்று போனதும், ஏதோ தன் பெண்மையே தன்னிடமிருந்து பறி போன மாதிரி உணர்வார்கள். இனி தான் எதற்கும் யாருக்கும் லாயக்கற்றவள் என்கிற தாழ்வு மனப்பான்மையில் தவிப்பார்கள். கணவர் தன்னை விட்டு ஒதுங்கி விடுவாரோ என்பது போன்ற தேவையற்ற பயங்கள் தலைதூக்கும். மனது ஒரு பக்கம் பாடாகப்படுத்த, உடலும் தன் பங்குக்கு ஏகப்பட்ட மாற்றங்களைக் காட்டும். அளவுக்கு அதிக ரத்தப்போக்கு அல்லது அவ்வப்போது தென்படுகிற குறைந்த அளவு ரத்தப்போக்கு, மாதத்தில் எப்போது வேண்டு மானாலும் வருகிற ரத்தப்போக்கு, வேலையே செய்யாத போதும் அசதி, கை, கால் வலி, குடைச்சல், எலும்புத்
தேய்மானம், மயக்கம், அதிக வியர்வை, உடல் சூடாவது என நிறைய மாற்றங்களை உணர்வார்கள்.
அதுநாள் வரை அனுபவித்திராத புதிய உபாதைகள் ஒரு பக்கமும், பாதுகாப்பற்ற மனநிலை இன்னொரு பக்கமுமாக மெனோபாஸ் என்பது கிட்டத்தட்ட நரக அனுபவத்தையே தரும். இந்த அத்தனை அறிகுறிகளின் உச்சக்கட்டமாக தூக்கம் ஒரேயடியாக பறிபோகும். தூக்கமே இல்லாதது, தூக்கத்தில் திடுக்கிட்டு விழிப்பது, மறுபடி தூக்கத்துக்குள் போக முடியாதது என ஆழ்ந்த, அமைதியான தூக்கம் என்பது இவர்களிடமிருந்து விடைபெறும். தூக்கமில்லாவிட்டால் எந்த மனிதரின் மனநிலையும் மிருகத் தன்மை கொள்ளும். ஏற்கனவே ஹார்மோன் மாற்றங்களினால் உடல் மற்றும் மன அவதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு, தூக்கமின்மையும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்?
மெனோபாஸ் நெருங்குவதற்கு முன்பிருந்தே சில விஷயங்களை முறையாகப் பின்பற்றினால், வரப் போகிற பிரச்னைகளில் இருந்து ஓரளவு தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம். தூக்க முறையும் ஒழுங்குபடும். தூக்கமின்மை சிகிச்சையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிற அரோமாதெரபியில், மெனோபாஸ் பருவத்துத் தூக்கமின்மைக்கும் தீர்வுகள் இருப்பதைச் சொல்கிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக்.
இரவில் தினமும் குளித்துவிட்டு, தளர்வான உடை அணிந்து படுக்கவும். ஒரு மஸ்லின் துணியில் 4 சொட்டுகள் ஃபிரான்கின்சென்ஸ் ஆயில், 4 சொட்டுகள் லேவண்டர் ஆயில், 4 சொட்டுகள் லெமன் கிராஸ் ஆயில் மூன்றையும் தெளித்து, உங்கள் தலையணை உறைக்குள் வைத்துக் கொள்ளவும். பத்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு, இரண்டு கால் கட்டை விரல்களையும் 50 முறைகள் அழுத்திப் பிடித்து விட்டுப் படுத்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். இதில் லேவண்டர் ஆயிலுக்கு பயத்தையும் பதற்றத்தையும் போக்கும் தன்மை உண்டு. ஃபிரான்கின்சென்ஸ் ஆயிலானது மனதை அமைதிப்படுத்தும். லெமன் கிராஸ் ஆயில் மூளையைப் புத்துணர்வுடன் வைக்கும்.
மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்களில் 90 சதவிகிதம் பேருக்கு இடுப்பு வலியும் முதுகு வலியும் தவிர்க்க முடியாதது. ரத்தப் பரிசோதனை செய்து, கால்சியம் மற்றும் துத்தநாகக் குறைபாடு இருக்கிறதா என அறிந்து, அதற்கேற்ற உணவுகளையும் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கடைகளில் பாரஃபின் வாக்ஸ் அல்லது பீஸ் வாக்ஸ் எனக் கிடைக்கும். 10 கிராம் வாக்ஸை எடுத்து டபுள் பாயில் முறையில் உருக்கவும். உருகியதும் அதில் பிளாக் பெப்பர் ஆயில், கேம்ஃபர் ஆயில், யூகலிப்டஸ் ஆயில் மூன்றிலும் தலா 10 சொட்டுகள் சேர்க்கவும். குப்புறப் படுத்துக் கொள்ளவும்.
உருகிய மெழுகில் தட்டையான பிரஷ்ஷை தொட்டு, இடுப்பில் வலி இருக்கும் பகுதிகளில் பொறுக்கும் சூட்டில் யாரையாவது தடவிவிடச் சொல்லவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து விடலாம். உடனடியாக வலி குறையும். மெழுகில் கலந்த அரோமா ஆயில்களின் கலவையும் மெழுகின் சூடும் சேர்ந்து இதமான உணர்வைத் தரும். தூக்கம் தழுவும்.
மார்பகங்கள் கனத்துப் போவதும் வலிப்பதும் கூட இந்தப் பருவத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. காஸ் துணி (பேண்டேஜ் துணி) எனக் கடையில் கேட்டு வாங்கவும். இது கிடைக்காதவர்கள் மஸ்லின் துணியையும் உபயோகிக்கலாம். கால் லிட்டர் தண்ணீரை நன்கு சூடாக்கி எடுத்துக் கொள்ளவும். அதில் ஜாஸ்மின் ஆயில், சைப்ரஸ் ஆயில் மற்றும் லேவண்டர் ஆயில் மூன்றையும் தலா 25 சொட்டுகள் விட்டு, துணியை அதில் முக்கிப் பிழியவும். சூடு இருக்கும் போதே, அந்தத் துணியை மார்பகங்களின் மேல் வைத்திருந்து எடுக்கவும். 10 முறை இப்படிச் செய்தால், கனத்த மார்பகங்கள் லேசான மாதிரி உணர்வீர்கள். வலி குறைந்து தூக்கம் வரும்.
சாதாரண தலைவலியும் ஒற்றைத் தலைவலியும் இந்த நாட்களில் மிகவும் சகஜம். ஆரம்பத்தில் தலைவலிக்காக தைலம் தடவிப் பழகியவர்கள், ஒரு கட்டத்தில் வலி இருக்கிறதோ, இல்லையோ தைலம் தடவினால்தான் தூக்கம் வரும் என்கிற நிலைக்கு வருவார்கள். காரணம், அத்தைலங்களில் உள்ள மென்தால், டீ ட்ரீ மற்றும் கேம்ஃபர் கலவையும் அவற்றின் மணமும். அரோமா தெரபியில் இந்த மூன்றையும் பேஸ் நோட்ஸ் ஆயில் என்கிறோம். அதாவது, இவற்றின் மணத்தை நுகரும் போது, குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அவை நம் உடலுக்குள் வேலை செய்யும்.
நொச்சி இலையை எடுத்து சுத்தம் செய்து துவையல் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். அதில் பைன் ஆயில், காம்ஃபர் ஆயில் இரண்டை யும் தலா 25 சொட்டுகள் விட்டுக் கலந்து, நெற்றியில் பற்று போட்டு, அதன் மேல் ஒரு மெல்லிய துணியைக் கட்டிக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது மண்டையில் நீர்கோர்ப்பு இருந்தால் சரி செய்து, உடனடியாக தலைவலியை விரட்டி விடும். நொச்சி இலையை மொத்தமாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு அவ்வப்போது அரோமா ஆயில் கலந்தும் உபயோகிக்கலாம்.
இரவுச் சாப்பாடு எளிதில் செரிக்கக் கூடியதாகவும் சற்றே சூடானதாகவும் இருக்கட்டும். 7:30 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இரவு உணவுக்கும் தூக்கத்துக்கும் இடையில் குறைந்தது 2 மணி நேரமாவது இடைவெளி இருக்கட்டும். தினம் ஒரு ஆப்பிள், கூடவே ஒரே ஒரு கிராம்பு போட்டுக் காய்ச்சிய பாலும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஃப்ரெஷ்ஷான அத்திப்பழம் 3ம் வெது வெதுப்பான பாலும் எடுத்துக் கொள்ளலாம்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மெனோபாஸும் தூக்கமின்மையும்
மகளிர்க்கான பயனுள்ள பகிர்வு.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மெனோபாஸும் தூக்கமின்மையும்
பெண்களுக்கு உதவும் பகிர்வு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|