Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒழுக்கம் எனும் விதி!
Page 1 of 1 • Share
ஒழுக்கம் எனும் விதி!
அந்த அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். குழந்தையை யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். வயதில் குறைந்தவர்களைக் கூட ‘வாங்க’ என்று மரியாதையாகக் கூப்பிட வேண்டும்... மூத்தவர்கள் தவறாகப் பேசினால், எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாது... கோபத்தில் அம்மா திட்டுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும்... குனிந்து நடத்தல், வணக்கம் வைப்பதில் பவ்யம், பெரியவர்கள் காலில் விழுந்து கண்களில் ஒற்றிக் கொள்ளுதல்... மொத்தத்தில் ஒரு குழந்தை தன் சுயத்தை வெளிப்படுத்த துளியும் இடம் தராத வளர்ப்பு முறை! அந்த அம்மா மட்டுமல்ல... பல அம்மாக்கள் இவற்றை ஒழுக்கத்தின் அடையாளங்களாக காலம் காலமாக குழந்தைகள் மீது திணித்து வருகிறார்கள்.
‘‘நமது குழந்தைகளின் மகிழ்ச்சியை ஒழுக்கம் என்ற ஒற்றை அதிகாரத்தால் நாமே கெடுக்கலாமா?’’ என்று கேள்வியெழுப்புகிறார் கல்வியாளர் சாலை செல்வம். ‘‘ஒழுக்கம் என்பது ஒரு விதியாக பார்க்கப்படுகிறது. இந்த விதியை வகுத்தது யார், எதற்காக வகுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பித்தான் இதற்கு விடை காண முடியும். விலங்குகள், பறவைகளுக்குக் கூட ஒழுங்கு உண்டு. பசிக்காமல் உணவு எடுத்துக் கொள்வதில்லை... தேவைக்கு அதிகமாக இயற்கையை அழிப்பதில்லை... ஒழுங்கு பற்றி பெரிதாக கவலைப்படுவதும் இல்லை.
மனிதர்களைப் பொறுத்தவரை, ஒருவரின் முறைமையே ஒழுக்கம் என்ற பெயரில் கட்டமைக்கப்படுகிறது. வாழும் சூழல், இடம், சமூகம், சாதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அந்தக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. காலம் பல மாற்றங்களைக் கண்டு விட்டாலும் பழமை வாதங்களை பல தலைமுறைகளுக்கு வாழ வைக்க ஒழுக்கம் என்ற அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது. ஒழுக்கம், குழந்தைகள் மீது வன்மையாக செலுத்தப்படும் அதிகார ஆயுதமே. இன்றையச் சூழலில் குழந்தைகள் அப்பா, அம்மாவையே பெயர் சொல்லி அழைப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. சமீபத்தில் வகுப்பறையில் ஒரு குழந்தை ‘சார்...’ என்று ஆசிரியரை அழைத்திருக்கிறது. அவருக்குக் கேட்கவில்லை... ஆசிரியரின் பெயரையும் சேர்த்து ‘சார்’ என அழைத்திருக்கிறது.
அதை ஒழுக்க மீறலாகக் கருதிய அவர், குழந்தையைப் பிரம்பால் அடிக்க... குழந்தையை மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு பிரச்னை பெரிதானது. பள்ளியில் குழந்தைகளை அடிக்கக் கூடாது என்பது சட்டம். ஒழுக்கம், சட்டத்தையும் தாண்டி குழந்தைகள் மீதான அத்துமீறலாக பல இடங்களில் மாறிவிடுகிறது. அடம்பிடிக்காமல் பள்ளிக்குக் கிளம்புவதையும் ஹோம் ஒர்க் செய்வதையுமே பெரும்பாலான பெற்றோர் குழந்தையின் ஒழுக்கமாக பார்க்கிறார்கள். ஒழுங்கு என்பது குழந்தையின் தனித்தன்மை (பர்சனாலிட்டி), நடத்தை, சிந்தனை, சுற்றியிருக்கும் சூழல் ஆகியவை சார்ந்து தானாக கட்டமைகிறது. கட்டளை, தண்டனைகளின் மூலமாக ஒழுங்கை குழந்தையிடம் உருவாக்க முயற்சிப்பது தவறு. குழந்தை தெரிந்தே நண்பனை ஏமாற்றுகிறது. அப்படி ஏமாற்றும் போது நண்பனின் நிலையில் இருந்து அதன் விளைவை உணர வைக்க வேண்டும்.
அதே போல் மற்றவரை ஏமாற்றுவது சிந்தனை மற்றும் குணத்தின் மீது எப்படிப்பட்ட பாதிப்புகளை உருவாக்குகிறது என்பதை புரிய வைப்பதும் அவசியம். குழந்தை, தான் செய்தது சரிதான் என்று கூட விவாதம் செய்யும். அப்போது நாம் நிதானத்தை கையாள வேண்டும். அவர்கள் பல கோணங்களில் ஒரு விஷயத்தைப் பார்த்து, அதற்கான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதை நாம் உணரலாம். எது சரி என்பதை தெளிவாகச் சொன்ன பிறகு, அதைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் மனதில் விதைக்கும் நல்ல விஷயங்கள் பள்ளியிலும் மற்ற இடங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தெளிவுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.
காலை 6 மணிக்கு எழ வேண்டும் என்பது ஒரு வீட்டின் நடைமுறையாக இருக்கும். ஏதோ ஒருநாள் சோர்வாக இருப்பதால் 7 மணி வரை தூங்கலாம் என்று குழந்தை விரும்பும். ஓய்வை விரும்பும்போது தூங்க அனுமதிப்பதுதான் அந்த இடத்தில் ஒழுக்கம். ஒழுக்கத்தை கடிகாரம் போல மிகத் துல்லியமாகப் பின்பற்ற முடியாது. சூழலும் தேவையும் அவற்றை மாற்றும் வலிமை கொண்டவை. ஒழுக்க விதிக்கான ரோல் மாடல்கள் பெற்றோர், ஆசிரியர் மற்றும் சுற்றிலும் இருப்பவர்களே. நேர மேலாண்மை, பொறுப்புகளை உணர்ந்து செயல்படுதல், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை சில ஒழுங்குகள். அவற்றுக்குத் தயார்படுத்திக் கொள்ள விளையாட்டுப் போல குழந்தைகளுக்கே தெரியாமல் பயிற்சி அளிக்க வேண்டும். அது இயல்பாக அமைவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். ‘இதை நான் ஏன் பின்பற்ற வேண்டும்?’ என்று குழந்தை கேள்வி கேட்பதற்கான சுதந்திரமும் அளிக்கப்பட வேண்டும்.
பொறுப்புகளை பிடித்த வழியில் செய்து முடிக்க அனுமதிப்பதன் மூலம் ஒரு வேலையை ரசனைக்குரியதாக மாற்றிக் கொள்கிறார்கள் குழந்தைகள். தன்னை உணரவும் தனக்கான ஒழுங்குகளை வடிவமைத்து வாழ்க்கையாக்கிக் கொள்ளவும் இப்படித்தான் தயாராகிறார்கள். காலையில் எழுந்த சிறிது நேரத்தில் காலைக்கடனைக் கழிக்க வேண்டும் என்பது உடல் நலம் சார்ந்த ஓர் ஒழுங்கு. தினமும் அதைக் கட்டாயப்படுத்தினால் குழந்தை எரிச்சலடையும்... செய்யவும் செய்யாது. அதற்கு பதிலாக முதல் நாள் எளிதில் செரிக்கும், நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்ணத் தருவது... குறித்த நேரத்தில் தூங்க வைப்பது... காலையில் சிறிது முன் கூட்டியே எழுந்து அவர்களுடன் விளையாடுவது என வழக்கத்தை மாற்றினால் குழந்தை கண்டிக்காமலேயே காலைக்கடன் கழித்துவிடும். இது போன்ற அணுகுமுறைகளைத்தான் பெற்றோர் கையாள வேண்டும்.
இன்றைய வாழ்க்கைச் சூழல், அன்றாட பழக்க வழக்கங்களில் மேம்படுத்தப்பட்டிருக்கும் முறைகள் என அவ்வப்போதைய ட்ரெண்டை பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தையிடம் ‘நீ செய்வது தவறு’ என ஒரு வழிப்பாதையாக விஷயங்களைத் திணிக்கக் கூடாது. ‘இது தவறு’, ‘இது சரி’ என்பதை அடையாளம் காட்ட வேண்டும். ‘சரி’, ‘தவறு’களுக்கான விளைவுகளை, வழிகளை காண்பிக்க வேண்டும். இப்படியான பார்வையும் சிந்திக்கும் போக்கும் மிகச்சரியானவர்களாக தங்களை கட்டமைக்கும் சுதந்திரத்தை குழந்தைகளுக்கு அளிக்கிறது. அதன் மூலம் குழந்தைகளே தங்களுக்கான ஒழுங்கு முறைகளை கட்டமைத்துக் கொள்வார்கள்.’’
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» திருக்குறள் காட்டும் ஒழுக்கம்
» மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்
» மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்
» ஒழுக்கம் கெடுவதற்கு காரணம்
» உயர்வைத் தருவது ஒழுக்கம் ஊரும் உலகும் மதிக்கும்
» மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்
» மகிழ்ச்சியின் உறைவிடம்-ஒழுக்கம்
» ஒழுக்கம் கெடுவதற்கு காரணம்
» உயர்வைத் தருவது ஒழுக்கம் ஊரும் உலகும் மதிக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum