Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும்
Page 1 of 1 • Share
மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும்
தனக்கு ஒரு கண் போனால், எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்” என்று நினைப்பவர்கள் நமக்கு மிக அருகில் கூட இருப்பார்கள்.
பழிவாங்குவது என்பது மனிதனை மிருகமாக்கும் குணம். பயம், கோபம், வெறுப்பு ஆகியவையே இந்த பழி வாங்கலின் பின்னால் ஒளிந்து கிடக்கும் தீய உணர்வுகளாகும்.
நமது எண்ணங்களில் ஏற்படும் அபிப்பிராய பேதமே மற்றவர்களை தப்பாக புரிந்து கொள்ள வைக்கிறது. நமக்கு தேவையானவர் என்றால் நாம் அணுகும் விதம் வேறாக இருக்கிறது, நமக்கு தேவையற்றவர் என்றால் நாம் அணுகும் விதம் இன்னும் வேறுபடுகிறது.
பணக்காரரை, படித்தவரை ஒரு கோணத்திலும், படிக்காதவரை, ஏழையை ஒரு கோணத்திலும் நாம் பார்க்கிறோம். பார்க்கும் கோணத்தை நாமே மாற்றி வைத்துக் கொண்டு, தவறான அபிப்பிராயம் கொள்கிறோம். இந்த பேதமே பயமும், வெறுப்பும் உருவெடுக்க அடிப்படைக் காரணமாகும். இது நாளடைவில் கோபத்தை கூட்டி பழிவாங்கலைத் தூண்டி விடும்.
மேலதிகாரி பற்றி தப்பெண்ணம் எழுந்தால் அவர் மீது பயமும், வெறுப்பும் சேர்ந்து வரும். பிறகு கோபமும் தொற்றிக் கொள்ளும். எளியோரிடம் அபிப்பிராய பேதம் ஏற்பட்டால் நேரடியாக கோபமே வந்துவிடும். இந்த மூன்று தீய உணர்வுகளில் எது தொற்றினாலும் ஒன்று மற்றொன்றை துணைக்கு அழைத்து உங்களை பழிவாங்கும் மிருகமாக மாற்றி விடும்.
பழிவாங்கலை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் நன்றாகப் புரியும். நாம் நம்மைவிட பலவீனமானவர்களை மட்டுமே பழிவாங்க முயல்கிறோம். வலிமையானவர்கள் முன்பு நாம் பலவீனமாக இருந்து விடுகிறோம். ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் என்று நம்மைவிட பலம் மிகுந்தவர்களை நாம் எப்போதும் எதிர்ப்பதில்லை. ஏனெனில் அதற்கு பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் அதிகம் எதிர்க்காமலேயே நாம் வலியையும் காயத்தையும் தாங்கிக்ë கொள்கிறோம். ஆனால் எளியவர் நம்மிடம் சிக்கினால் அல்லது நமக்கு வசதியான சமயம் கிடைத்தால் மட்டும் பழி வாங்கக் கிளம்பிவிடுகிறோம்.
வெறுப்பு ஏற்படும்போதும், பழி வாங்கும்போதும் நம் உடலில் தோன்றும் விஷம் நம்மை சிறிது சிறிதாக கொல்வதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆழப் புதைந்த வெறுப்பினால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், படபடப்பு, வயிற்றுப்புண், நரம்புத் தளர்ச்சி, இதய நோய்கள் போன்றவை அடக்க முடியாதகோபம், பழிவாங்கும் வெறி போன்றவற்றால் தூண்டப்படுகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
பழ வாங்கும் உணர்ச்சியால் நாம் நமது வேலை செய்யும் திறனை இழந்து, பழி வாங்குதலிலேயே காலத்தையும், வாழ்வையும் வீணாக்கி விடுகிறோம். பழிவாங்குவதால் உறவுகளும் பாதிக்கும். ஒரு குடும்பச் சண்டை தந்தையிடமிருந்து மகனுக்கும், அவனிடம் இருந்து அவனது மகனுக்கும் பரவுகிறது. கொஞ்சம் மிச்சமிருக்கும் நல்ல எண்ணத்தையும் இந்த பழிவாங்கும் எண்ணம் அழித்து விடுகிறது.
ஆழ்ந்து யோசித்தால் பழி வாங்குவது என்பது நமது தகுதியிலிருந்து கீழிறங்கும் செயல் என்பது புரியும். உயர்ந்த லட்சியங்கள் உடையவர்கள் பழி வாங்குவதில்லை.
கடவுளும், நம்மால் காயம்பட்டவர்களும் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் நாம் மட்டும், யாரையும், எதையும் மன்னிக்கத் தயாராக இல்லை. இப்படி இரட்டைத் தரங்களில் செயல்பட்டால் நமக்கு பழி சேராமல் நல்ல கதியா கிடைக்கும்?
`கண்ணுக்கு கண்’ கொள்கையை கண்களைத் திறந்துகொண்டே பின்பற்றினால் இந்த உலகமே குருடாகிவிடும்’ என்று சொல்வார்கள். `பழிவாங்க வேண்டுமானால் நாம் மன்னிக்க வேண்டும். மன்னிப்பதால் மட்டுமே நீங்கள் எதிரியையும் அடிமையாக்க முடியும்’ என்பது மகான்களின் வாக்கு.
உலகத்தில் எதைச் சேர்த்தாலும் வன்மத்தையும், பழிச்சொல்லையும் சேர்க்காதீர்கள். அது மற்றவரையும் அழித்து, உங்களையும் அழித்து விடும்.
மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம். மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும். மற்றவரிடம் நல்லதையே தேட வேண்டும். மற்றவர் தெரியாமல் செய்த தவறுகளை கருணையோடு காணப் பழக வேண்டும். இதுவே தொடர்ந்தால் உங்களுக்குள்ளும் ஒரு மகான் வந்து விடுவார்.
தினமலர்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும்
பழிவாங்க வேண்டுமானால் நாம் மன்னிக்க வேண்டும்
உண்மைதான் மன்னித்தலே சிறந்த பழிவாங்கல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மன்னிக்கும் குணம் உங்களுக்கு இருக்கிறதா?
» மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம்
» மனித குணம் பிறப்பாலா? வளர்ப்பாலா? உதிரத்தாலா? உலக சூழலாலா?
» உணவு பரிசோதிக்கப்படலாம் உறவை பரிசோதிக்காலாகாது
» பெண்கள் குணம் " - " ஆண்களின் குணம் "

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum