Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
30 வகை திடீர் சமையல்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
30 வகை திடீர் சமையல்
First topic message reminder :
30 வகை திடீர் சமையல்
தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்
வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது... கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய '30 வகை திடீர் சமையல்’ ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
''உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க... நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க'' என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
30 வகை திடீர் சமையல்
தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்
வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது... கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய '30 வகை திடீர் சமையல்’ ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
''உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க... நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க'' என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை திடீர் சமையல்
ஓட்ஸ் காலிஃப்ளவர் உப்புமா
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2, க
டுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும்.
தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை திடீர் சமையல்
சோயா ஆனியன் பெசரெட்
தேவையானவை: சோயா உருண்டைகள் - 10 (வேக வைத்து நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்),
பச்சைப்பயறு - ஒன்றரை கப்,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறு துண்டு (சுத்தம் செய்யவும்),
மிளகு, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப்பயறை 3 மணி நேரம் ஊறவிடவும்.
பிறகு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
மாவை எடுக்கும் சமயம் சோயாவை சேர்த்து மேலும் சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்,
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலையை வதக்கி, மாவில் கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை சூடாக்கி, மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை திடீர் சமையல்
பூண்டு துவையல்
தேவையானவை: உரித்த பூண்டு - 20 பல்,
காய்ந்த மிளகாய் - 2,
புளி - சிறிதளவு,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும்.
அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை திடீர் சமையல்
பிரெட் வெஜ் புலாவ்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 6,
வெங்காயம், கேரட் - தலா ஒன்று,
பீன்ஸ் - 6,
பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு,
குடமிளகாய் - ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்),
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கரம்மசாலாத் தூள் - கால் டீஸ்பூன்,
டொமெட்டோ சாஸ் - 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக 'கட்’ செய்து கொள்ளவும்.
வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு 'கட்’ செய்து கொள்ளவும்.
பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி... மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும்.
அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை திடீர் சமையல்
வெஜ் சாண்ட்விச்
தேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் - 10,
புதினா - கொத்தமல்லி சட்னி - அரை கப்,
துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் - தலா கால் கப்,
சில்லி சாஸ், தக்காளி சாஸ் - தலா 2 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும்.
அதன்மேல் புதினா - கொத்தமல்லி சட்னியை தடவவும்.
இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 30 வகை திடீர் சமையல்
பட்டாணி சீஸ் பன்
தேவையானவை: பன் - 4,
சீஸ் துருவல் - அரை கப்,
வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப்,
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்),
வெண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - சிறிதளவு.
செய்முறை:
சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும்.
அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும்.
எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து... மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும்.
தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும்.
லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திடீர் சமையல்
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum