தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செயற்கை நாப்கின்களில் மறைந்திருக்கும் பயங்கரம்!

View previous topic View next topic Go down

செயற்கை நாப்கின்களில் மறைந்திருக்கும் பயங்கரம்! Empty செயற்கை நாப்கின்களில் மறைந்திருக்கும் பயங்கரம்!

Post by நாஞ்சில் குமார் Fri Oct 31, 2014 3:24 pm

[You must be registered and logged in to see this image.]

வெளிநாட்டுப் பெண்கள் நாகரிக விரும்பிகள்... அடுத்தவர் நலனில் அக்கறையற்றவர்கள்... சுயநலவாதிகள்... இப்படிப் பலருக்கும் பல பார்வைகள்  உள்ளன. அத்தனையையும் நொறுக்கி, விதிவிலக்காக நின்று வியக்க வைக்கிறார் கேதி வாக்லிங். சிட்னியை சேர்ந்த கேதி இப்போது புதுச்சேரி  ஆரோவில்லில் வசிக்கிறார். பெண்களின் மாதவிலக்கு காலத்து ஆரோக்கியத்துக்காக இவர் செய்கிற விஷயங்கள் பழையன புகுதல் ரகம்.  பிளாஸ்டிக்கும் பயங்கர ரசாயனங்களும் சேர்த்துத் தயாராகிற சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாக, உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தைக் கொடுக்காத  துணி நாப்கின் தயாரிப்பில் தீவிரமாக இயங்கிக்
கொண்டிருக்கிறார்!

‘‘பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆஸ்திரேலியாவுலேருந்து இந்தியா வந்தப்ப நான் சந்திச்ச முதல் பிரச்னை, சானிட்டரி நாப்கினை எப்படி  டிஸ்போஸ் பண்றதுங்கிறதைத்தான். இருட்டான, ஒதுக்குப்புறமான ஒரு இடத்தைத் தேடி, அங்க மண்ணைத் தோண்டி, குழி வெட்டி, உபயோகிச்ச  நாப்கின்களை உள்ளே போட்டு எரிக்கிறதுதான் தீர்வா இருந்தது. அடுத்தவங்களைப் பத்தி அக்கறை இல்லாம குப்பைத் தொட்டியில தூக்கிப்  போட்டுட்டுப் போறவங்களுக்கு, அதை சுத்தப்படுத்தறவங்களோட நிலைமை தெரிய வாய்ப்பில்லை. இங்க உள்ள பெண்கள் எல்லாம் இந்தப்  பிரச்னையை எப்படித்தான் சமாளிக்கிறாங்கன்ற பெரிய கேள்வி என் முன்னால வந்தது.

ஆஸ்திரேலியாவுல இருக்கிறப்ப வாஷ் பண்ணி மறுபடி உபயோகிக்கிற மாதிரியான ரீயூசபிள் நாப்கின்களை ஒரு கடையில பார்த்தேன். கிட்டத்தட்ட  டிஸ்போசபிள் நாப்கின்களை போலவே இருந்தது. கலர்ஃபுல்லான காட்டன் துணியில செய்யப்பட்ட அதை, வழக்கமான நாப்கின் போலவே  உபயோகிக்கலாம். அன்னிக்கே எனக்கான முதல் ரீயூசபிள் நாப்கினை வாங்கி உபயோகிச்சேன். முதல் நாளே அவ்வளவு சவுகரியமா ஃபீல்  பண்ணினேன். இனிமேலும் டிஸ்போசபிள் நாப்கின்களை உபயோகிக்கிறது மூலமா, பூமிக்குக் கெடுதல் பண்ணக்கூடாதுங்கிற தீர்மானத்துக்கும் வந்தேன்.

2000ல ஆரோவில்ல ரீயூசபிள் நாப்கின் தயாரிச்சு, விற்க ஆரம்பிச்சேன். 2007ல ‘ஆரோவில் வில்லேஜ் ஆக்ஷன் குரூப்’னு ஒரு என்ஜிஓ கூட  சேர்ந்து ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். அந்தப் பெண்களோட ஒர்க் பண்ணும் போது, சுற்றுச்சூழல் பிரச்னைகளைப் பத்யும் பெண்கள் சந்திக்கிற தனிப்பட்ட  பிரச்னைகளைப் பத்தியும் நிறைய விஷயங்கள் தெரிய வந்தது. மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தற  வழியைப் பத்தியும் யோசிச்சுதான் ‘இகோ ஃபெம்’ தொடங்கினோம். இந்த அமைப்பு அளவுல சின்னது தான். ஆனா, அது சமூகத்துல  ஏற்படுத்திட்டிருக்கிற மாற்றம் ரொம்பப் பெரிசு...’’ - கேதியின் அக்கறையான அறிமுகப் பேச்சு ஆர்வம் கூட்டுகிறது.

‘‘கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதவிலக்கு அனுபவங்கள் எப்படியிருக்குங்கிற ஆய்வை நடத்தினோம். பலருக்கும் மாதாந்திர சுழற்சியைப்  பத்தின விழிப்புணர்வு இல்லாதது ஆச்சரியம் தந்தது. அந்த நாட்கள்ல அவங்க பட்ட கஷ்டங்களும் சமுதாயப் புறக்கணிப்புகளும் அசுத்த மானவங்கன்ற  நினைப்பும் மேலோங்கி இருந்தது. அந்த நேரத்துல வெளியேறும் ரத்தம் அசுத்தமானதுங்கிற நம்பிக்கை அவங்க மனசுல ஆழமா பதிஞ்சிருந்தது.  அசுத்தம்னு நம்பப்படற அந்த ரத்தம்தான் ஒரு பெண்ணோட கருவுல உருவாகிற குழந்தைக்குப் பாதுகாப்புனு புரிய வச்சோம்.

மாதவிலக்கு நாட்கள்ல துணிகள் உபயோகிச்ச பழக்கத்துலேருந்து மாறி, டிஸ்போசபிள் நாப்கின்களை உபயோகிக்கிறது அவங்களுக்கு வசதியா  இருக்கிறதைப் பத்தி தெரிய வந்தது. பெண்களோட மாதவிலக்கு நாள் சுகாதாரத்தை மேம்படுத்த இலவச நாப்கின் கொடுக்கற அரசாங்கத் திட்டம்  பத்தியும் கேள்விப்பட்டோம். அத்தனையும் பிளாஸ்டிக் சேர்த்துப் பண்ணினது. அதுக்கான தயாரிப்புச் செலவும் பெரிசு. அதுக்கான மாற்றா ரீயூசபிள்  காட்டன் நாப்கின்களை கொடுக்க முடிவு பண்ணினோம். ஆரோக்கியமான, செலவில்லாத, சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுத்தாத நாப்கின்கள் அவை.

இந்த ரீயூசபிள் நாப்கின்களை பத்தியும் அது பெண்களோட ஆரோக்கியத்தோட எந்தளவு சம்பந்தப்பட்டிருக்குங்கிறதைப் பத்தியும் விழிப்புணர்வை  ஏற்படுத்த நிறைய பேசறோம். இதை எப்படி உபயோகிக்கிறது, எப்படி அலசி, அடுத்த முறை உபயோகத்துக்குத் தயார்படுத்தறதுனு சொல்லிக்  கொடுக்கறோம். சுற்றுச்சூழலைப் பத்தின அக்கறை உள்ள சில பெண்களாலதான் இதை ஏத்துக்க முடியுது. உபயோகிச்ச நாப்கின்களை அலசி மறுபடி  உபயோகிக்கிறதுல நிறைய பெண்களுக்குத் தயக்கம் இருக்கு. இதுல தயங்கறதுக்கு ஒண்ணுமே இல்லை. உள்ளாடைகளை அலசி உபயோகிக்கிற  மாதிரிதான் இதுவும். குளிர்ந்த தண்ணீர்ல 30 நிமிஷம் ஊற வச்சா, ரத்தமெல்லாம் வெளியேறிடும்.

அதுக்குப் பிறகு அதை அலசித் துவைச்சு, வெயில்ல காய வைக்கணும். உங்களோட ரத்தத்தை சுத்தப்படுத்தறதுல தயக்கம் எதுக்கு? ஒருமுறை துணி  நாப்கின்களை உபயோகிச்சுப் பழகிட்டாங்கன்னா, அதுல உண்டாகிற ஃபீலிங் மறுபடி அவங்களை டிஸ்போசபிள் நாப்கினை பத்தி யோசிக்கவே  வைக்காது...’’ என்கிற கேதி, செயற்கை நாப்கின்களில் மறைந்திருக்கிற பயங்கரங்களையும் பகிரங்கப்படுத்துகிறார்.‘‘டிஸ்போசபிள் நாப்கின்கள்ல  பலவகையான பிளாஸ்டிக் கலவை இருக்கு. ஒரு டிஸ்போசபிள் சானிட்டரி நாப்கின் மண்ணோட மண்ணா மக்கிப் போக 800 வருஷங்கள் ஆகுமாம்.  ஒவ்வொரு பெண்ணும் சராசரியா தன்னோட வாழ்நாள்ல 125 முதல் 150 கிலோ வரையிலான நாப்கின்களை தூக்கிப் போடறாங்க.

நாப்கின்கள் கண்ணைக் கவரும் வகையில வெள்ளையா இருக்கிறதுக்காக தயாரிப்பாளர்கள் சேர்க்கிற கெமிக்கல்கள் ஒவ்வொண்ணுமே பூமியைப் பதம்  பார்க்கிறவை. டிஸ்போசபிள் நாப்கின்களை உபயோகிக்கிற பெண்களுக்கு அலர்ஜியும் இன்ஃபெக்ஷனும் வருது. காரணம் அதுல யூஸ் பண்ற பிளாஸ்டிக்  கிளப்பற அதிகபட்ச சூடு. அது மட்டுமில்லாம இந்த நாப்கின்கள்ல சேர்க்கற பிளீச், கேன்சருக்கு காரணமான தன்மை களையும் அதிகப்படுத்தும். யூஸ்  அண்ட் த்ரோ நாப்கின்களை டாய்லெட்ல ஃபிளஷ் பண்றதால, டாய்லெட் அடைச்சுக்கும். பாதாள சாக்கடைக்குள்ள இறங்கி சுத்தப்படுத்தறவங்களும்  நம்மளைப் போல மனுஷங்கதானே... எந்தவித பாதுகாப்பும் இல்லாம உள்ளே இறங்கி சுத்தப்படுத்தற அந்த நபர்களுக்கு பல பயங்கரமான  இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு, உயிர்க்கொல்லி நோய்களும் தாக்குதுங்கிறது உங்கள்ல எத்தனை பேருக்குத் தெரியும்?

துணிகளால செய்யப்படற நாப்கின்களை வீட்லயே தையல் மெஷின் வச்சுத் தச்சிடலாம். 75 முறை வரைக்கும் வாஷ் பண்ணி மறுபடி மறுபடி  உபயோகிக்கலாம். துணி நாப்கினா, டிஸ்போசபிள் நாப்கின் அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சுமா, வெளியில போற பெண்களுக்கு சரிப்படுமானெல்லாம்  நிறைய கேள்விகளை எதிர்கொள்றோம். டிஸ்போசபிள் நாப்கின்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாதவை இவை. அதிகமா உறிஞ்சும். வெளியில  கசியாது. எரிச்சல், அரிப்புனு அலர்ஜியை தராது. பகல்ல உபயோகிக்க, இரவுத் தேவைக்குனு இதுலயும் அவங்கவங்க தேவைக்கேத்தபடி நிறைய  அளவுகள் இருக்கு.‘பேட் டு பேட்’னு ஒரு ஸ்கீமை அறிமுகப்படுத்தியிருக்கோம்.

எங்களோட இன்டர்நேஷனல் கஸ்டமர்ஸ் டொனேட் பண்ற துணி நாப்கின்களை அரசுப் பள்ளிகள்ல படிக்கிற மாணவிகளுக்கு இலவசமா தர்றதுதான்  ‘பேட் டு பேட்’ ஸ்கீம். அதோடு, துணி நாப்கின்களுக்கு செலவழிக்க வசதியில்லாத பெண்களுக்கு என்.ஜி.ஓ. சுய உதவிக் குழுக்கள் மூலமா குறைஞ்ச  விலையில சப்ளை பண்றோம். இதுவரை நாங்க 34 ஆயிரம் துணி நாப்கின்களை வித்திருக்கோம். இது கிட்டத்தட்ட 40 லட்சம் டிஸ்போசபிள்  நாப்கின்களை ஓரங்கட்டியிருக்கு. ‘பேட் டு பேட்’ ஸ்கீம் மூலமா பலனடை யற பள்ளி மாணவிகள், இந்த நாப்கின்களை உபயோகிக்கிறது மூலமா  வழக்கமான பீரியட் டென்ஷனோ, தர்மசங்கடங்களோ இல்லாம ஆரோக்கியமான உடல், மனநிலைக்கு மாறியிருக்கிற தகவல் எங்களோட  வெற்றிக்கான ஒரு அறிகுறி.

‘பீரியட்ஸ் டைம்ல துணி உபயோகிக்கிறது பழைய ஃபேஷன், சுத்தமில்லாதது’ங்கிற எண்ணத்தை மாத்தற எங்களோட பயணம் முழு வெற்றியை  அடைய கொஞ்சம் டைம் எடுக்கும். இந்தியால மட்டுமில்லை... உலகம் முழுக்கவே மாதவிடாய்ங்கிறது சமூகம், கலாசாரம், பொருளாதாரம்,  சுற்றுச்சூழல், ஆரோக்கியம், மதம், பாலினப் பிரச்னைகள்னு பல விஷயங்களோட சம்பந்தப்பட்டதா இருக்கு. அதுல சட்டுனு மாற்றத்தை ஏற்படுத்திட  முடியாது. ஆனா, முடியும். நாங்க எங்களோட தயாரிப்பைத்தான் வாங்கணும்னு சொல்லலை. ‘பிளாஸ்டிக்கும் கெமிக்கலும் கலந்த டிஸ்போசபிள்  நாப்கின்களுக்கு உங்களோட ஆரோக்கியத்தை பலி கொடுக்காதீங்க’னுதான் சொல்றோம். உங்க உடம்புலயும் உங்க ஆரோக்கியத்துலயும்  உங்களைவிடவா வேற ஒருத்தருக்கு அக்கறை இருந்துட முடியும்? யோசியுங்க...’’ யோசிக்க வைக்கின்றன கேதியின் வார்த்தைகள்!

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum