தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...

View previous topic View next topic Go down

முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா... Empty முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...

Post by முழுமுதலோன் Tue Oct 28, 2014 10:04 am

நீங்க முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...


நாம பலநேரம் ஏதார்த்தம் என்பதை தவறவிட்டுவிடுகிறோம். சகஜமான வாழ்வை தொலைத்துவிட்டு முட்டி மோதி கடைசியில் கைகாசு கூட மிஞ்சாமல் போகிறது. நம் வயிறு பசிக்குது என்று உணவை நம் கை எடுத்து வாயில் ஊட்டிவிடுகிறது. அவ்வுணவை பல் அரைத்து வயிற்றுக்குள் தள்ளுகிறது. அதை உடலும் தேவையானது என்று ஏற்றுகொள்கிறது. ஆனா நாம் வாழும் வாழ்வில் பிடிக்கிறதோ, பிடிக்கலையோ கட்டாயத்தின் பேரில் சிரமப்பட்டுதான் வாழ்ந்தாகவேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட இடரான வழ்க்கை எதற்கு.? வயிறு பசித்து கை எடுத்து கொடுத்து சாப்பிடுவதை போல வாழ்வும் எதார்த்தமாக இருந்தால் நாம் வாழும் வாழ்வில் எந்த வேதனையும் இல்லை அப்படியே இருந்தாலும் அது வேதனையாக இருப்பதில்லை. நீங்கள் அருவியில் கொட்டுகிற தண்ணீரை பார்த்திங்கனா ரொம்ப சலசலப்பா இருக்கும். அதன் பக்கத்தில் போகவே முடியாது. ஆனா அதே அருவி தண்ணீர் கொஞ்சம் தூரம் போன பின்னே அதன் நீரோட்டம் கவனித்தீர்கள் என்றால் அது எந்தவித சலனம் ஏற்படுத்தமால் அமைதியாக போகும் அதில் எப்போதும் ஒரு அழகு இருக்கும். அதுபோலதான் நாம் வாழும் வாழ்வும் நீரோட்டம் போன்றது. அருவி போல் எப்போதும் சலலப்பு இருந்தாலும் அதன் தெளிந்த நீரோடையாக இருப்பது நமக்கு என்றும் நல்லதாக இருக்கும். அது நாம் வாழும் வாழ்வை எந்தவிதத்திலும் சிதைக்காமல் தொந்தரவு செய்யாமல் இருக்கும். நான் சொல்வது வாழ்வின் ஏதார்த்தத்தை இதை புரிந்தவர்களுக்கு வாழ்வது ரொம்ப எளிதுதாக இருக்கும்.

நீங்கள் எரியாத மெழுகுவர்த்தியாய் இருந்துகொண்டு மற்றவரை எரியவைக்க முயற்சிப்பதில் என்ன பயன். முதலில் உங்கள் அனுபவங்களில் உங்களை தேடுங்கள். நம் பசிக்கு உணவு இல்லாதபோது பக்கம் பக்கமாக படித்து என்ன பலன் வேண்டிருக்கு. இது என் அனுபவத்தில் தேடிய வாக்கியம்...

அறிவு சார்ந்த ஒன்றை தெரிந்துகொள்ள நாம் ஒரு அரங்குக்கு செல்வோம். அங்கு ஏற்கனவே பல பேரு இருப்பார்கள் நாம் கடைசியாக போய் அமர்வோம். இப்போது நாம் நினைப்போம் "ஐயோ நாம்தான் கடைசியா" என்று ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து நம் பின்னே பல பேர் வந்து அமர்வார்கள் இப்போது நாம் கடைசி இல்லை. நமக்குதான் பிரச்சனை என்றால் பலபேர் பிரச்சனையுடதான் இருக்கிறார்கள். வாழ்கிறார்கள். "உனக்கு கிழே உள்ளவர் கோடி" என்று கண்ணதாசன் எழுதிய பாடல் போல் இருக்கிறது பிரச்சனைகள். எதுவும் நம் நினைப்பில்தான் உள்ளது.

நம்மில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லா சிந்திகிறாங்க பேசசொன்ன மணிக்கணக்காக பேசுகிறார்கள். எழுத சொன்னால் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். ஆனால் செய்முறை பயிற்சி இருக்கா என்றால் இல்லை ஒழுக்கத்தை பற்றி ஓயாமல் பேசுவோர்களும் உண்டு ஆனால் சொன்ன ஒழுக்கத்தை ஒருநாளேனும் நினைத்தார்களா இல்லை கடைபிடித்தார்களா என்றால் இல்லை. இதில் அவர்களுக்கு செயல்முறை பயிற்சி இல்லை. எதையும் பழக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். எல்லோருக்கும் எல்லா திறமைகளும் உண்டு. அதை வெளிகொண்டுவரத்தான் யாரும் முயற்சிப்பதில்லை ஆசை என்னவோ எல்லோருக்கும்தான் இருக்கிறது ஆனா அதை சிலபேர்தான் அடைகிறார்கள். காரணம் ஆசையுடன் ஆர்வம் மட்டும் போதாது முயற்சி அதனுடன் இணைந்த பயற்சியும் அதை என்றும் நடைமுறைபடுத்தி இயல்பாக்கினால் கடின உழைப்பு என்று சொல்வது கூட எளிமையாகிவிடும். ஆர்வத்துடன் போதிய முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம்தான்.

நாம் வெற்றி, வெற்றி என்று சொல்வது ஒன்றுமில்லை ஆசையின் மறைபொருல்தான் வெற்றி. நாம் நினைக்கும் அடையும் வெற்றி ஒரு எல்லைவரை வரையறுத்தது. அதை பார்பவர்களுக்கு வேண்டுமானால் நாம் வெற்றி அடைந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அது வெற்றி இல்லை. ஒருவரின் எண்ணத்தின் பார்வைமட்டும் நம் வெற்றியை நிர்ணயப்பதில்லை. அதில் நம் எவ்வளவு மன உறுதியாய் பெற்றோம் என்பதில்தான் வெற்றி உள்ளது. ஏழை ஏழையாய் இருப்பதற்கு அவனிடம் இருந்து சுரண்டலுக்கு அடுத்து ஒரு சில காரணங்களும் உண்டு. அதை அவன் எப்போதும் அறியவில்லை அவன் ஏழ்மையின் எண்ணமும் ஒரு காரணம். ஏழ்மையில் இருப்பவன் எழ்மையைதான் நினைப்பான் அதனால் மேலும் அவன் ஏழையாகின்றான். பணக்காரன் மேலும் பணத்தையே நினைக்கின்றான் அதனால் மேலும் பணக்காரனாகின்றான். இதில் ஏழ்மையை இருப்பதற்கும் பணகாரனாய் இருப்பதற்கும் எண்ணமே விதையாக இருக்கிறது. வானத்தில் பரந்த பறவையை பார்த்து தாமும் அதுபோல பறக்கவேண்டும் என்ற கற்பனை என்னத்தை விரித்த மனிதன்தான் அந்த எண்ணத்தை உண்மையாக்குவதற்க்கு பெரிய சவாலே நடத்தி காட்டினான். அந்த சவால் ரைட் சகோதரர்களால் உண்மையாக்கபட்டது. பறவைபோல கற்பனை செய்த மனிதனின் எண்ணம் நிறைவேறியது.

பலதை கைகொள்ள என்றால் சிலது நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். புகை பிடிப்பதால் உடல் நலகேடு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் புகையின் தீமையை படித்து இன்னொன்று புகையை இழுத்து விடுவார்கள். நான் எதையும் செயல்முறையில் கொண்டுவர முயற்சிக்கிறேன். நான் 10 வருடமாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது ஆனால் இப்போது 3 வருடமாக புகையை நிறுத்திவிட்டேன் இதனால் என் உடலும், மனமும் சரியாக இருக்கிறது. தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன் 2 வருடமாக செயல்படுத்துகிறேன். "இதெல்லாம் என்ன ஒரு பெரிய விஷயமா" என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் எனக்கு பல திட்டசெயல் முறைகளை நடைமுறைபடுத்த சிலதை கடைபிடித்துதான் ஆகவேண்டும்.

வாழ்வில் கிடைக்கவேண்டியது கிடைக்கவேண்டும் என்றால் சிலதை நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். அதனால் படிப்பதுடன் இருக்காமல் முடிவதை செயல்முறைபடுத்துங்கள். நீங்கள் காணும் எதிர்பார்ப்பும் நிச்சயம் நிறைவேறும். இது என்னால் நிரூபிக்கப்பட்ட வெற்றிமுறை...

தன்னம்பிக்கை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா... Empty Re: முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...

Post by செந்தில் Thu Oct 30, 2014 7:08 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா... Empty Re: முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...

Post by mohaideen Fri Oct 31, 2014 1:42 pm

நல்ல சிறந்த தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா... Empty Re: முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...

Post by முரளிராஜா Sat Nov 01, 2014 12:52 pm

அருமையான தகவல்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா... Empty Re: முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum