தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தவிப்பு baby makers

View previous topic View next topic Go down

தவிப்பு baby makers Empty தவிப்பு baby makers

Post by நாஞ்சில் குமார் Sat Nov 15, 2014 11:13 pm

கீதா ஆராவமுதன்

‘எப்படி இருக்கே அலைஸ்..? எல்லாரும் உன்னை நல்லா பார்த்துக்கறாங்களா?’ - மீனா.‘நல்லா இருக்கேன்... என்னைப் பார்த்துக்க என்ன இருக்கு? ஆரம்பத்துல கொஞ்சம் மசக்கை இருந்தது. இப்ப அதுவும் சரியாயிடுச்சு...’’ - அலைஸ். மசக்கையா? அதுவும் ஒரு வாடகைத் தாய்க்கா? அதெப்படி சாத்தியம்? குழம்பிய மீனாவின் பார்வையில், அலைஸ் என்பவள் தனக்காக குழந்தையைச் சுமக்கிற ஒரு கன்டெயினர், அவ்வளவே!

வீட்டுக்கு வந்ததும் தனது சூட்கேஸை திறந்து செயற்கை வயிற்றுக்கான தகவல்களைப் படிக்கிறாள் மீனா. ‘செயற்கை வயிற்றை உபயோகிப்பதா, வேண்டாமா’ என்பது பற்றி அவள் சீக்கிரமே முடிவெடுத்தாக வேண்டும்... ‘புகுந்த வீட்டாரிடம் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிற தகவலைச் சொல்வதா, வேண்டாமா’ என இன்னும் முடிவு செய்யவில்லை. தான் கர்ப்பமாக இருப்பதாக புகுந்த வீட்டாரை நம்பச் செய்ய வேண்டுமென்றால், கர்ப்பிணி மாதிரித் தோற்றமளித்தால் மட்டும் போதாது... கர்ப்பிணி போலவே நடந்து கொள்ளவும் வேண்டும்.

‘‘சில பேர் வீட்டுக்குத் தெரிய வேண்டாம்னு நினைக்கலாம். அவங்களுக்கு வயித்துல குழந்தை இருக்கிற மாதிரியே காட்டற செயற்கையான வயிறு செய்யற சிலரோட தொடர்புகளை உனக்குத் தரேன்...’’ - ராதா. ராதா சொன்ன மாதிரியே யு.கே.வில் செயற்கை வயிறு விற்கிற ஆன்லைன் கடைகள் உண்டு. சிலிக்கான் மெட்டீரியலால் தயாரிக்கப்படுகிற இந்த வயிறுகள், ஒவ்வொருவரின் உடலமைப்புக்கேற்ப டிசைன் செய்யப்படுபவை. 4, 6, 9 மாதங்களுக்கேற்ப வேறு வேறு அளவுகளில் கிடைக்கும் இவற்றை எந்த அசவுகரியமும் இல்லாமல் அணிந்து கொள்ளலாம். டாய்லெட் போகும்போது கழற்றி வைக்கலாம். உடல் எடை மற்றும் உயரத்துக்கேற்பவும் ஸ்கின் டோனுக்கு பொருந்தும்படியும் கிடைக்கும்.

எல்லாம் சரிதான்... ஒருவேளை தன் செயற்கை வயிறு திடீரென தன் புகுந்த வீட்டாருக்குத் தெரிந்து விட்டால் என்னாவது? இந்தக் கவலை மீனாவுக்கு. புகுந்த வீட்டாரிடம் விஷயத்தைச் சொல்வதா, வேண்டாமா என அவள் முடிவு செய்தாக வேண்டும். மறைப்பது என முடிவு செய்துவிட்டால், அதற்கேற்ப உடல்மொழிகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என மீனாவுக்கு டிப்ஸ் சொல்கிற ராதா, மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கர்ப்பிணிகளின் உடல் மொழிகளைக் கவனிக்கச் சொல்கிறாள். ‘‘அவங்க நிற்கும் போது எப்படி உடம்பு வளையுதுனு பாரு. மாசம் ஆக ஆக வயிறு கனக்கும். அவங்க கையால வயித்தைப் பிடிச்சுப்பாங்க. நிற்கும்போது அவங்க கை, முதுகைப் பிடிக்கும்.

வயித்துல உள்ள குழந்தை உதைக்கும் போதும் அசையும் போதும் அவங்க கை அவங்களை அறியாம வயித்தைத் தடவிக் கொடுக்கிறதையும் பாரு... இதெல்லாம் இயல்பான அசைவுகள்... இதுக்காக நீ ஒரு நடிகை மாதிரி உன்னைத் தயார்படுத்திக்கணும்...’’ - ராதா. மீனா நடிகையில்லையே... வாழ்க்கையில் ஒருபோதும் நடித்ததில்லையே... பள்ளி நாடகத்தில் கூட நடித்ததில்லை. கொரியரில் வந்திருந்த செயற்கை வயிற்றுக்கான பார்சலை பிரித்து வெளியே எடுக்கிற மீனா, அதையே சிறிது நேரம் வெறித்துப் பார்க்கிறாள். பிறகு தூக்கி வீசுகிறாள்...

‘பேபி மேக்கர்ஸ் - தி ஸ்டோரி ஆஃப் இந்தியன் சரகஸி’ புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தாய்மையின் தவிப்பையும் யாருக்காகவோ தாய்மையைச் சுமக்கத் துணிகிறவரின் வலியையும் உணர முடிகிறது. வாடகைத்தாய் கருத்தரிப்பு பற்றிய அத்தனை அம்சங்களையும் அலசி ஆராய்கிற இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர் பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கீதா ஆராவமுதன். ‘டிஸ்அப்பியரிங் டாட்டர்ஸ்’ (மறைந்து கொண்டிருக்கிற பெண் குழந்தைகள்) என்கிற தனது முந்தைய புத்தகத்திலும், பெண்களின் வாழ்க்கை குறித்த கவலையைப் பதிவு செய்தவர் இவர். தொடர்ச்சியாக இந்த முறை அவர் தொட்டிருப்பது தாய்மைத் தவிப்பையும் அதைச் சூழ்ந்த வர்த்தக அரசியலையும்...

‘‘இந்தியாவுல வாடகைத்தாய் முறை எப்படியிருக்குங்கிறதைப் பத்தின பலமுனைப் பார்வைகளோட தொகுப்புதான் இந்தப் புத்தகம். வாடகைத்தாயா இருக்க சம்மதிக்கிற பெண்கள், அவங்க மூலமா குழந்தை பெத்துக்க விரும்பற தம்பதி, ஏஜென்ட்டுகள், டாக்டர்ஸ்னு எல்லா தரப்பினரோட கருத்துக்களையும் இதுல பகிர்ந்திருக்கேன். ‘வாடகைத்தாய் முறை சரியா, தவறா’னு தீர்ப்பு சொல்றதல்ல என் புத்தகத்தோட நோக்கம். நான் பார்த்த உண்மைகளோட பதிவு... அவ்வளவுதான். தன்னோட கருப்பையை வாடகைக்குக் கொடுத்து, கருவைச் சுமந்து, பெத்தெடுத்துக் கொடுக்கிற ஒரு பெண்ணோட மனநிலை எப்படி யிருக்கும்? குழந்தைக்காக எத்தனையோ வழிகளை முயற்சி பண்ணிப் பார்த்துட்டு, கடைசியில வாடகைத்தாய் முறையைத் தேர்ந்தெடுக்கிற தம்பதியோட மனநிலை எப்படியிருக்கும்?

அவங்களுக்குப் பிறக்கிற குழந்தைங்க எப்படியிருப்பாங்க..? ஒரு பெண்ணியவாதியா எனக்குள்ள இப்படி ஏகப்பட்ட கேள்விகள்... இது எல்லாத்துக்கும் விடை தேட நினைச்சேன். ஒரு பத்திரிகையாளரா இதுக்காக நான் நிறைய ஆய்வுகள் பண்ணினேன். இந்தியா முழுக்க டிராவல் பண்ணினேன். நிறைய ஹாஸ்பிடல்ஸுக்கு போனேன். வாடகைத்தாய்களையும் அவங்க மூலமா குழந்தை பெத்துக்கக் காத்திருக்கிற பெண்களையும் ஏஜென்ட்டுகளையும் டாக்டர்ஸையும் சந்திச்சுப் பேசினேன். வாடகைத் தாய்களோட வீடுகளுக்குப் போனேன். அவங்களோட குடும்பத்தார்கிட்ட பேசினேன்.

வாடகைத்தாய் முறை குறித்து நம்மகிட்ட சரியான புள்ளிவிவரம் இல்லை. வாடகைத்தாய் மூலமா குழந்தை பெத்துக்கிறதை இன்னும் நம்ம சமுதாயம் முழுமையா அங்கீகரிக்கலை. ஆனா, இது மிகப் பெரிய வர்த்தகமா இருக்கிறதும், அதுல ஏராளமான நபர்கள் ஈடுபட்டிருக்கிறதும் உண்மை. பெரும்பாலானவங்க இதைப் பத்திப் பேசத் தயாரா இல்லை... இப்படி எனக்குக் கிடைச்ச அனுபவங்களும், நான் சந்திச்ச மனிதர்களும்தான், இந்த விஷயத்தை புத்தகமா தொகுக்கிற எண்ணத்தைக் கொடுத்தது. நான் நினைச்சதைவிட, இந்த விஷயம் அதிக சிக்கல் நிறைஞ்சதா இருந்தது. புத்தகத்தோட முடிவுல பதில் கிடைக்காத கேள்விகள் நிறைய இருக்கிறதை உணர்ந்தேன்...’’ - இப்போது இப்படியொரு புத்தகத்துக்கான அவசியம் குறித்த அறிமுகத்துடன் பேசுகிறார் கீதா.

‘‘ஒரு பெண்ணுக்கு அவளோட உடல் குறித்த விஷயத்துல முழு உரிமை இருக்கணும். கருமுட்டைகளை விற்கறதாகட்டும், கர்ப்பப்பையை வாடகைக்குக் கொடுக்கிறதாகட்டும்... அவளோட விருப்பத்துக்குட்பட்டதுனு நம்பறேன் நான். என்னோட ஒரே கவலை... அந்தப் பெண் அவளுக்கெதிரான துஷ்பிரயோகங்கள்லேருந்து பாதுகாப்பா இருக்காளாங்கிறது மட்டும்தான்... குழந்தையைச் சுமக்கிறவளும் சரி, சுமக்கச் சொல்லிக் கேட்கறவங்களும் சரி... ஏமாற்றப்படாத அளவுக்கு சட்டம் சரியா இருக்கணும்னு நினைக்கிறேன். முக்கியமா இந்த முறையில பிறக்கிற குழந்தை (தான் இப்படிப் பிறக்கணும்னு அது கேட்கலையே) பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கையை வாழறதுக்கான உத்தரவாதம் கொடுக்கப்படணும்.

சில வெளிநாடுகள்ல வாடகைத்தாய் முறைக்குத் தடை விதிச்சிருக்காங்க. அதனால அவங்க இந்தியாவுக்கு வந்து வாடகைத்தாய்களைத் தேடிக் குழந்தை பெத்துக்கிட்டுப் போறாங்க. இதுதான் பிறக்கற குழந்தை யாருக்குச் சொந்தம்கிற போராட்டத்துக்குக் காரணமாகுது...’’ என்பவருக்கு Assisted Reproductive Technologies ART (Regulation) Bill 2014 என்ற சட்ட மசோதா பற்றிய கவலையும் மேலோங்கி இருக்கிறது.‘‘இந்தச் சட்டம் ரொம்ப நாளா நிலுவையில இருக்கு. வாடகைத்தாய் முறையைத் தடை பண்றதுல எனக்கு உடன்பாடில்லை. ஆனா, அது முறைப் படுத்தப்படணும்ங்கிறதை உறுதியா நம்பறேன்’’ என்கிறார்.வாடகைத்தாய் முறையைத் தேர்வு செய்கிற தம்பதியருக்கு, கருவைச் சுமக்கும் பெண்ணுக்கான தேடல் எப்படியிருக்கிறது என்பதையும் அனுபவத்தில் கண்டிருக்கிறார் கீதா.

‘‘வாடகைத்தாய் முறைங்கிறது கடைசித் தீர்வு. அதனால கருவைச் சுமக்க ஆரோக்கியமான ஒரு கருப்பை வேணும்ங்கிறதுதான் அவங்களோட அதிகபட்ச எதிர்பார்ப்பா இருக்கு. அவங்களைப் பொறுத்தவரை வாடகைத்தாய் என்பவள் ஒரு இன்குபேட்டர் மாதிரி. அவளோட மரபியல் விஷயங்கள் எதுவும் அந்தக் குழந்தைக்குப் போக வாய்ப்பில்லை. ஆனாலும், குழந்தை வேண்டி நிற்கற தம்பதி, குழந்தையைச் சுமக்கிற பெண் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழறாளா, நல்லா சாப்பிடறாளா, செக்கப்புக்கு சரியா போறாளா, உள்ளே இருக்கிற நம்ம குழந்தை ஆரோக்கியமா இருக்கணுமேனு ஆயிரம் கவலைகள்...’’ - தம்பதியரின் மனநிலை சொல்கிற கீதாவுக்கு, வாடகைத்தாய் கருத்தரிப்பின் எதிர்காலத்தை நினைத்து பெருங்கவலை இருக்கிறது.

‘‘வாடகைத்தாய் மூலம் பிறக்கிற குழந்தை களுக்குத் தன்னோட பின்னணி தெரிய வரும் போது, அவங்க சந்திக்கப் போற மன உளைச்சல்தான் எனக்குக் கவலை தருது. யார்கிட்டருந்தோ தானமா பெறப்பட்ட கருமுட்டை தானம் அல்லது உயிரணு தானம், யாரோ ஒருத்தர் சுமந்த நிலைனு எல்லாம் தெரியும் போது, தன்னோட வேர் என்னனு கண்டுபிடிக்க முடியாமத் தவிப்பாங்க. அது சமுதாயத்துல என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்னு சொல்ல முடியாது...’’ - அக்கறையாகச் சொல்பவருக்கு, தனது அத்தனை புத்தகங்களையும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் கொண்டு வருகிற திட்டம் இருக்கிறது.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum