தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சமையல் குறிப்புகள்

View previous topic View next topic Go down

சமையல் குறிப்புகள் Empty சமையல் குறிப்புகள்

Post by mohaideen Sun Jan 25, 2015 1:47 pm

சமையல் குறிப்புகள் Ld3093
எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சித் துண்டுகள் சேர்த்துக் கிளறினால் மணம் தூக்கலாக இருக்கும். 
 
முருங்கைப் பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். வாசனை ஊரையே கூட்டும்! 
 
புதினா சட்னி மீந்து போய் விட்டதா? மோரில் போட்டுக் கரைத்துவிடவும். காரமாக, பிரமாதமான சுவையுடன், வாசனையாகவும் இருக்கும். 
 
பிளம் கேக் வாசனைக்கும் அதிலுள்ள உலர் பழங்கள், பருப்பு வகைகளின் சுவைக்கும் காரணம் அவற்றை ‘ரம்’மில் ஊற வைப்பதே! பிளம் கேக் செய்யும் போது, ரம் விரும்பாதவர்கள், அதற்கு பதிலாக ரம் எசென்ஸ் சேர்க்கலாம். 
 
வெண்ணெயை உருக்கும் போது சிறிது மிளகுத் தூளைச் சேர்த்தால் நெய் நல்ல வாசனையாக இருக்கும்.
 
கேசரி செய்யும் போது, தண்ணீர் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக அதே அளவுக்குப் பசும்பால் கலந்து செய்யலாம். பால் வாசனையோடு, புதுவித ருசியும் சுவையும் கிடைக்கும். 

காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும் போது, அரை டீஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்தால் மணமான ருசி! பொடியாக நறுக்கிய புதினாவைச் சேர்த்துப் பிசைந்து தட்டை தட்டினால் தனி மணம்... அசத்தல் ருசி!
 
ஒரு கரண்டி கோதுமை மாவை நெய்யில் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பிறகு தேவையான அளவு காய்ச்சிய பால், சர்க்கரை, வறுத்த முந்திரி சேர்த்தால் மணம் மிக்க கோதுமை பாயசம் தயார்.  

சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காய்த் தூளுடன் சிறிது ஜாதிக்காய் பொடியை நெய்யில் பொரித்துக் கலக்கவும். சுவையும் மணமும் அள்ளும்! அதிக அளவில் பொங்கல் செய்யும் போது, மொத்த மாக நெய் விடக்கூடாது. முதலில் திட்டமாக நெய் சேர்த்து விட்டு, பரிமாறும் போது சூடாக்கி மேலே ஊற்ற வேண்டும். அப்போதுதான் நெய் பொங்கல் மணக்கும்!
 
அப்பளத்தின் மீது பெருங்காயத் தூளைத் தூவி, மைக்ரோவேவ் அவனில் வைத்து சுட்டு எடுத்தால் வாசனை தூக்கும்... எளிதாக ஜீரணமாகும். 
 
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3095
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by mohaideen Sun Jan 25, 2015 1:50 pm

காய்கள் இல்லாத வத்தக்குழம்பு செய்யப் போகிறீர்களா? குழம்பை இறக்குவதற்கு முன் விருப்பமான வற்றலை எண்ணெயில் பொரித்துப் போடவும்.  வாசனையாக இருக்கும். வற்றலைப் போட்ட பின் குழம்பைக் கொதிக்க வைக்கக் கூடாது.  எந்தக் காய்கறியில் பால் கூட்டு செய்வதாக இருந்தாலும்  கூட்டு கொதித்து இறக்கும் போது, சிறிது தேங்காய்ப்பால் சேர்க்கலாம். சேர்த்து, லேசாக கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும். தேங்காய்ப்பால்  சேர்த்த பிறகு, அதிக நேரம் கொதிக்கவிட்டால் பால் திரிந்து போய் சுவை மாறிவிடும். 
 
ரசத்தை இறக்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலைப்பொடி தூவி இறக்கினால் மணமாக இருக்கும். 

கீரை மசியலுக்கு புளி சேர்ப்பதற்கு  பதிலாக பொடியாக அரிந்த மாங்காயைச் சேர்த்து, வேக வைத்து மசிக்கலாம்... அலாதி சுவை!

வெண்டைக்காய் குழம்புக்கு காயை வதக்கும் போது,  சிறிது புளித்த மோரை சேர்த்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும் போது, அரைக் கரண்டி புளிப்பில்லாத  கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் அற்புத சுவை! 

சாம்பாருக்கு பழைய புளியைப் பயன்படுத்தினால் குழம்பு கருப்பாகிவிடும். அரிசி களைந்த தண்ணீரில் பழைய புளியைக் கரைத்துப் பயன்படுத்தினால்  கருப்பு நிறம் காணாமல் போய், புதுப் புளிக்கரைசல் போலவே ஆகிவிடும். 

அரிசி கழுவிய தண்ணீரில் கிழங்குகளைப் போட்டு வேக வைத்தால்  சீக்கிரமே வெந்துவிடும். 

சில நேரங்களில் சிறிதளவு பொரியலுக்கு ஒரு முழுத் தேங்காயை உடைக்க வேண்டியிருக்கும். அந்த நேரங்களில்  தேங்காய்க்கு பதிலாக சிறிது புழுங்கல் அரிசியை வறுத்து, பொடி செய்து பொரியலில் தூவலாம். தேங்காய் சேர்த்த சுவை கிடைக்கும். 

பிடி கருணையை வேக வைக்கும் போது, சில கொய்யா இலைகளையும் சேர்த்து வேக வைக்கவும். கொஞ்சமும் காரல் இருக்காது.

கூட்டு செய்யும் போது உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் சிறிது ரஸ்க்கை தூளாக்கிக் கலந்தால் சரியாகிவிடும். 

வெண்டைக்காய் சமைக்கும் போது  ஒன்றோடு ஒன்று ஒட்டாம லிருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிது எலுமிச்சைச்சாறு தெளித்தால் போதும்.

வெந்தயக் குழம்பு கொதிக்கும் போது, இரண்டு உளுந்து அப்பளங்களை பொரித்து, நொறுக்கி சேர்க்கவும். குழம்பு வாசனையில் கமகமக்கும். 

பாகற்காய், வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு போன்ற காய்களை வறுக்கும் போது, சிறிது கார்ன்ஃப்ளோர் சேர்த்து வறுத்தால் மொறுமொறுப்பாகவும்  சுவையாகவும் இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும் போது தேங்காய்த் துண்டு ஒன்றை நறுக்கி போடவும். பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். 

சாம்பார், குழம்பு, ரசம் இவற்றுக்கான மசாலா கலவையில் ஒரே ஒரு சின்ன வெங்காயத்தையும் சேர்த்து அரைத்துப் பாருங்கள்... மணமும் சுவையும்  ஊரையேகூட்டும்!

வாழைப்பூவை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். அத்துடன் தேவையான அளவு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம்  ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். மணமான வாழைப்பூ துவையல் தயார். 

சேனை, சேப்பங்கிழங்கு  போன்ற வற்றை எண்ணெய்விட்டு வதக்கி பொரியல் செய்யும் போது, சிறிது கடலை மாவை தூவவும். பொரியல் மொறுமொறுப்பாக இருக்கும். 

http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2959&Cat=501
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by mohaideen Sun Jan 25, 2015 1:53 pm

பனீர் சமைத்த பிறகு, கட் பண்ணிய பனீர் மீந்து விட்டதா? அதை வெந்நீரில் நனைத்து, ஃப்ரிட்ஜில் வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
 
4கேரட்டை நன்கு வேக வைத்து, வெண்ணெய் போல மசித்து, அதில் தேன் சேர்த்துக் கலக்கி பிரெட்டில் தடவி சாப்பிடலாம். புது ஜாம் ரெடி! 
 
 தோசைக்கு மாவு அரைக்கும் போது சிறிது சோயா பீன்ஸ் அல்லது சோயா பனீரையும் ஊற வைத்து அரைக்கவும். தோசை ருசியாக, மென்மையாக வரும். உடலுக்கும் நல்லது. 

கோவைக்காய் பழுத்துப் போய்விட்டால் அதை வில்லைகளாக அரிந்து கொள்ளவும். அதை உப்பு கலந்த தயிரில் ஊற வைத்து, உலர வைத்து எடுத்து வைக்கவும். இதை வற்றல் குழம்பில் சேர்த்தால், குழம்பு ருசியாக இருக்கும்.
 
இரண்டு டம்ளர் கரும்புச் சாறில் வாழைப்பழத்தை மசித்துக் கலக்கவும். அதில் சிறிது உப்பு, 100 கிராம் வெல்லம் சேர்த்து, கெட்டியாகக் கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது நெய்யில் கடுகு, மிளகாய் வற்றல் தாளித்துக் கொட்டினால் கரும்புப் பச்சடி ரெடி. 

காராமணி போன்ற பயறு வகைகளை வேக வைக்கும் போது, தண்ணீருடன் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால், சீக்கிரம் வெந்துவிடும்.
 
காய் சேர்க்காத தக்காளி அல்லது புளிக்குழம்பு செய்யும் போது சிறிது இஞ்சி, கசகசா, மராட்டி மொக்கு சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை குழம்பில் போட்டுக் கொதிக்க வைத்தால் வாசனையாக இருக்கும். 

ஃபில்டர் காபியோ, காபி மேக்கரில் போடும் காபியோ... தூளைப் போடும் போது ஒரு சிட்டிகை சுக்குத் தூள் சேர்த்துப் போடவும். சுவையும் மணமும் சூப்பரோ சூப்பர்.
 
பிடி சாதத்தை எடுத்து நன்றாக மசித்து, மாவில் கலந்து வடை சுட்டால் மிருதுவாக,எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
 
தோசைக்கல்லில் ஒரு சிறிய துண்டு பெருங்காயத்தை நறுக்கிப் போட்டு, சிறிது எண்ணெய் விட்டு வதக்கியெடுக்கவும். பிறகு தோசை வார்த்தால், தோசை சுலபமாக வார்க்க வரும்... மணமாகவும் இருக்கும். 

கூட்டுக்கோ, குழம்பு வகைகளுக்கோ தேங்காய் அரைக்கும்போது, 1/2 டீஸ்பூன் கசகசாவையும் 8 முந்திரிப் பருப்புகளையும் சேர்த்து அரைக்கவும். சுவை அள்ளும். 
 
உருளைக்கிழங்கை அரை வேக்காடாக வேக வைத்து, நன்கு வடித்தெடுக்கவும். பிறகு ரோஸ்ட் செய்தால் பாதியளவு எண்ணெய் கூட செலவாகாது. கட்லெட் செய்யும் போது உருளைக்கிழங்குக்கு பதிலாக சேனைக்கிழங்கு அல்லது பிடிகருணையை வேக வைத்து, பிசைந்து செய்யலாம். புது ருசி! 

பச்சைக் காய்கறிகள் போட்டு சாலட் செய்யும் போது, அதில் இரண்டு டீஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றிக் கலக்கவும். கூடுதல் சுவை! 
 
வெல்லம் சேர்த்து செய்யும் வேப்பம்பூ பச்சடியை இறக்கிய பின், 2 டீஸ்பூன் தேன் சேர்த்தால் அதீத ருசி.
 
வெள்ளரிக்காயைத் துருவி, கோதுமை மாவுடன் உப்புச் சேர்த்து, தண்ணீர் விடாமல் சிறிது நல்லெண்ணெய் மட்டும் விட்டு, கொஞ்சம் சீரகமும் கலந்து பிசைந்து சப்பாத்தி செய்யலாம். அருமையாக இருக்கும். 
 
http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=3034&Cat=501
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by முரளிராஜா Mon Jan 26, 2015 10:06 am

சமையல் குறிப்புகளை  பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by ஜேக் Tue Jan 27, 2015 11:29 am

முரளிராஜா wrote:சமையல் குறிப்புகளை  பகிர்ந்தமைக்கு நன்றி

தங்களின் அனுதின சேவைக்கு மிக உகந்ததாக இருக்கும் என்பதால்தானே... இந்த நன்றி ரொம்ப ஜாலி நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by செந்தில் Tue Jan 27, 2015 12:28 pm

ஜேக் wrote:
முரளிராஜா wrote:சமையல் குறிப்புகளை  பகிர்ந்தமைக்கு நன்றி

தங்களின் அனுதின சேவைக்கு மிக உகந்ததாக இருக்கும் என்பதால்தானே... இந்த நன்றி ரொம்ப ஜாலி நக்கல்
கண்டுபுடிச்சுடீங்களே ஜேக்!
நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by mohaideen Wed Feb 25, 2015 3:37 pm

போளிக்கு பூரணம் செய்யும் போது, அது நீர்த்துவிட்டால் அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றிக் கிளறவும். கெட்டியாகி விடும். ரசத்துக்கான பொருட்களை பொடி பண்ணும் போதே, சிறிது கடுகு சேர்த்துக் கொண்டால் தெளிந்த ரசம் கிடைக்கும்.  மிக்ஸியில் வெந்தயம், ஏலக்காய் போன்றவற்றை அரைத்தால், அவற்றின் வாசனை எளிதில் போகாது. அதன் பிறகு, மிக்ஸியில் ஒரு கைப்பிடி வேர்க்கடலை போட்டு அரைத்து எடுத்தால், வாசனை முற்றிலும் நீங்கிவிடும்.

எள் உருண்டை செய்வதற்கு எள்ளை தண்ணீரில் அலசினால், கையில் ஒட்டிக் கொண்டு விடும். பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளைப் போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால் எளிதாக அலசிவிடலாம். உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது, கிழங்கின் மீது சிறிது பயத்தம் பருப்பு மாவைத் தூவி, பின் பொரித்தெடுக்கவும். வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும். 

சர்க்கரையை அப்படியே காபி, டீ, ஜூஸ் போன்றவற்றில் இடும் போது கரைவதற்கு அதிக நேரம் பிடிக்கும். சில நேரங்களில் கரையாமல் இருந்து வீணாவதும் உண்டு. இதற்குப் பதிலாக சர்க்கரையை பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் நேரமும் மிச்சம்... சர்க்கரையும் வீணாகாது. 

அவல் பொரியை அப்படியே பாகில் போடுவதற்கு பதில் பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடிக்கலாம். பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும். மிளகாய் பஜ்ஜி செய்யும் போது, மிளகாயை நீளவாக்கில் கீறவும். அதனுள் சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சைச்சாறு விடவும். பிறகு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்யவும். டேஸ்ட்டாக இருக்கும்... காரமும் இருக்காது. 

பருப்பு வடைக்கு அரைக்கும் போது ஊற வைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள்ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கவும். மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டவும். வடை கரகரப்பாக நல்ல சுவையுடன் இருக்கும். சமோசாவைப் பொரிப்பதற்கு முன்பு ஒரு சிட்டிகை சோடா உப்பை எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரிய விடவும். பிறகு சமோசாவை பொரித்தெடுக்கவும். மொறுமொறுப்பு மாறாமல் இருக்கும். 
 
காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்க்ரீம் கலவையை ஊற்றி வைத்தால் ஐஸ்க்ரீம் சீக்கிரம் கெட்டியாகி விடும். தயிர் வடை அல்லது சாம்பார் வடை செய்ய உளுந்து ஊறப் போடப் போகிறீர்களா? உளுந்தின் கால் பங்கு அளவுக்கு மசூர்தால் சேர்த்துப் போடுங்கள். வடை மிகவும் மெதுவாக இருக்கும். 

பாகற்காய் பொரியல் செய்யும் போது சிறிது கேரட், வெங்காயம் துருவிப் போட்டு, நிறைய கறிவேப்பிலை சேர்த்தால் கசப்பே தெரியாது. கேரட்டில் சூப் செய்யும் போது, அதில் சிறிது சேமியாவை வறுத்துப் போடவும். சூப் திக்காக இருக்கும்... பார்க்கவும் அழகாக இருக்கும். 
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3184
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by kanmani singh Thu Feb 26, 2015 12:57 pm

அத்தனையும் பிரமாதமான குறிப்புகள்.. நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by mohaideen Wed Mar 11, 2015 5:22 pm

பயனுள்ள ஆரோக்கிய குறிப்புகள்
* வேப்பிலைக் கொழுந்தை அரைத்துத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் பருத்தொல்லை நீங்கும்.
* காலையில் சத்துள்ள உணவும் இரவில் அரை வயிறு உணவும் சாப்பிட்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.
* வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமை, தலை நரைத்தல், தள்ளாமை ஆகியவை காலம் தாழ்த்தி வரும்.
* வெங்காயத்தை தினமும் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
* எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் சிறிதளவு வினிகர் கலந்து குளித்தால் தலைமுடி மிருதுவாகும்.
* காய்ச்சல் குணமாக மிளகைப் பொடி செய்து கஷாயமாகக் குடித்துவரலாம்.
* புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் பல் துலக்கும்போது அந்தப் பொடியுடன் உப்பு சேர்த்துத் துலக்கினால் பல் நோய்கள் வராது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by முரளிராஜா Wed Mar 11, 2015 6:55 pm

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by mohaideen Thu Apr 23, 2015 11:55 am

சாறு பிழிவதற்கு முன் 15 நிமிடங்கள் எலுமிச்சைப்பழத்தை வெதுவெதுப்பான நீரில் போட்டு வைக்கவும். பிறகு எடுத்து பிழிந்தால் அதிக ஜூஸ் கிடைக்கும்.  வத்தக் குழம்பு வைக்கப் போகிறீர்களா? ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை மைய அரைத்து, தாளிப்பில் கொட்டவும். கொஞ்சம் வதக்கவும். பின் தேவையான அளவு புளித்தண்ணீர், மிளகாய் தூள் சேர்த்துக் குழம்பு வைக்கவும். சூப்பர் டேஸ்ட்! 

முட்டையை வேக வைக்கும் போது மேல் ஓடு விரியாமல் இருக்க வேண்டுமா? தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு கலந்தால் விரியாது. அரிசிக் கொழுக்கட்டைக்கு மாவை ஆவியில் வேக வைத்து எடுத்த பிறகு, வெல்லத்தை சூடான தண்ணீரில் கரைத்து, வடிகட்டவும். அதே தண்ணீரில் மாவைப் போட்டு பிசைந்து தட்டி, உள்ளே பூரணம் வைத்து மூடி கொழுக்கட்டை செய்யவும். கலராக இருக்கும். புதுச் சுவையாக இருக்கும். 

வடாத்துக்கு பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கார விழுது அரைப்போம். இதை சிறிது கூடுதலாக அரைத்து வைத்துக் கொண்டால், மாங்காய் ஊறுகாய்க்கும் பயன்படுத்தலாம். மாங்காயை பொடிப் பொடியாக நறுக்கி, இந்த விழுதில் சிறிதை சேர்த்து நன்றாக பிசறவும். அதில் கடுகு தாளித்துச் சேர்த்தால் சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி! 

பெருங்காயம் தாளிக்கும் போது சில நேரங்களில் சரியாகப் பொரியாது. உள்ளுக்குள் பச்சையாக இருக்கும். ருசி குறையும். இதைத் தவிர்க்க, பெருங்காயக் கட்டியை மைக்ரோவேவ் அவனில் ஒரு கண்ணாடி தட்டில் இரண்டு நிமிடங்கள் வைத்திருக்கவும். மறுபடியும் திருப்பிவிட்டு ஒரு நிமிடம் வைக்கவும். முழுக்கட்டியும் சீராகப் பொரிந்திருக்கும். இதை மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொண்டு, தேவைப்படும் போதெல்லாம் சமையலுக்கு உபயோகிக்கலாம். 

மீனில் சிறிதளவு கடுகை அரைத்துக் கலந்தால் மீன் உதிர்ந்து போகாது. கருவாட்டில் அதிக அளவு உப்பு இருந்தால் அதை கஞ்சி தண்ணீரில் அரை மணி நேரம் போட்டு வைக்கவும். உப்பு பெருமளவு குறைந்துவிடும். கிழங்குகளை வேக வைக்கும் போது, ஒரே அளவாக வெட்டி வேக வைக்கவும். அப்போதுதான் அனைத்தும் சீராக வேகும். இல்லையென்றால் ஒன்று வெந்தும் மற்றது வேகாமலும் இருக்கும். சீக்கிரம் வேக வேண்டும் என்பதற்காக அடுப்பின் தீயை அதிகரிப்பதும் சரியல்ல. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்த பிறகு கிழங்குகளை வேகப் போட்டால் சீக்கிரம் வெந்துவிடும். 

வாழைக்காயை வெளியில் வைத்தால் பழுத்துவிடும். ஃப்ரிட்ஜிலும் வைக்க முடியாது. என்ன செய்யலாம்? காயை தோல் சீவி, நறுக்கி உப்பு, காரம், மஞ்சள் தூள் சேர்த்து பிசறி ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். முருங்கைக்காய் அதிகமாக இருக்கிறதா? விரல் நீளத்துக்கு வெட்டி, ஒரு கவரில் போட்டு ஃப்ரீஸரில் வைத்துவிடவும். சமைக்கும் போது அப்படியே எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும். 

ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து முட்டைக்கோஸை சமைத்தால் மணமாக இருக்கும். கோஸின் தன்மை மாறாமலும் இருக்கும். வடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், ஒரு டீஸ்பூன் நெய் விடவும். மாவு இறுகி விடும்... தனிச்சுவையோடு இருக்கும். கேழ்வரகை ஊற வைத்து, அரைத்து, பால் எடுத்து கோதுமை அல்வா போலவே செய்யலாம். ருசியாக இருக்கும். மசால் வடை செய்யப் போகிறீர்களா? குக்கரில் சிறிது கருணைக்கிழங்கை வேக வைத்து, அதை மசால் வடை மாவுடன் சேர்த்து அரைக்கவும். வடை வித்தியாச சுவையில் இருக்கும். 
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by mohaideen Sun Jun 28, 2015 1:26 pm

எந்த ஊறுகாயாக இருந்தாலும் அதில் எண்ணெயைக் காய்ச்சி, ஆற வைத்து, பிறகு சேர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் நீண்ட நாட்களுக்கு ஊறுகாயில் பூசணம் பிடிக்காமல் இருக்கும். ஒரு பாட்டில் ஊறுகாய்க்கு 2 டீஸ்பூன் அளவு வினிகரை ஊற்றி வைத்தால், நீண்ட நாட்களுக்கு ஊறுகாய் கெடாமல் இருக்கும்... பூசணம் படிவதும் தடுக்கப்படும். 

மாங்காயை சீவும் போது தோலை எறிந்துவிட வேண்டாம். உளுந்து வடை மாவில் மாங்காய் தோலையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்யலாம். மாங்காய் மணம் கமழ, உளுந்து வடை வித்தியாச ருசியோடு இருக்கும். ஒரு பாட்டிலில் எண்ணெய் தடவி, அதில் சிறிது எலுமிச்சைச்சாறு, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் குலுக்கிக் கொள்ளவும். அதனுடன் தயாராக நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளைச் சேர்த்து சாலட் செய்யலாம். ருசி அருமையாக இருக்கும். 

தொக்கு வகைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.  சப்பாத்தி மாவில் அதன் அளவுக்கு ஏற்றாற்போல, அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் பால் விட்டு பிசைந்தால் எண்ணெய்விட்டு சப்பாத்தி சுட வேண்டிய அவசியமே இருக்காது. சப்பாத்தியும் சாஃப்டாக இருக்கும். 

குலாப் ஜாமூனை வழக்கம் போல் உருட்டி, நெய் அல்லது எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும். ஜாமூன்களை சூடாக சர்க்கரைப் பொடியில் பிரட்டி எடுக்கவும். பிரமாதமான ‘ட்ரை குலாப் ஜாமூன்’ ரெடி! கேழ்வரகு, கம்பு, பாசிப் பயறு, பட்டாணி, தட்டைப் பயறு, கொள்ளு, வேர்க்கடலை, கோதுமை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். 

அவற்றை முளைவிட வைத்து, நிழலில் உலர்த்தவும். உலர்ந்ததும் அவற்றை பொன்னிறமாக வறுக்கவும். அத்துடன் தேவைக்கேற்ப சுக்கு, ஏலக்காய் கலந்து, பிஸ்தா, முந்திரி, பாதாம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது எடுத்து, இந்த சத்து மாவைக் கஞ்சியாகக் காய்ச்சி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ருசியும் மணமும் அசத்தும். இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்குவதற்கு பதில், சீவல் கட்டரில் சீவி (துருவி) பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் போது சமையலில் மணமும் சுவையும் அலாதியாக இருக்கும். 

சப்பாத்தி மாவைப் பிசைந்து அதிக நேரம் ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சாஃப்டாக இருக்கும். பூரி மாவை பிசைந்தவுடன் இட வேண்டும். அப்போது தான் அதிகம் எண்ணெய் குடிக்காமல் இருக்கும். அனைத்துவிதமான பொங்கலுக்கும் அரிசி, பருப்பை வெறும் கடாயில் வறுத்துச் செய்தால், பொங்கல் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும். 

நல்லெண்ணெய் வாங்கி வந்தவுடன், அதில் ஒரு துண்டு கருப்பட்டியைப் போட்டு வைத்துவிட்டால், நீண்ட நாட்கள் வரை ‘சிக்கு வாடை’ ஏற்படாது. செக்கில் இருந்து ஆட்டி எடுத்தது போல மணமாகவும் இருக்கும்.. கீரை மற்றும் வெஜிடபிள் கட்லெட் செய்யும் போது, சிறிதளவு சாதத்தை நன்கு மசித்துச் சேர்த்து, செய்யலாம்... மிருதுவாக இருக்கும். 

ஃப்ரைடு ரைஸோ, வெஜிடபிள் பிரியாணியோ செய்யும் போது, சிறிது வேக வைத்த சோளத்தையும் சேர்க்கலாம். பார்க்க முத்து முத்தாக அழகாக இருக்கும்... சுவை அமர்க்களப்படு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by mohaideen Thu Jul 16, 2015 2:48 pm

கூட்டுக்கு தாளிக்கும் போது, உளுந்துக்கு பதிலாக வேர்க்கடலையைப் பயன்படுத்தலாம். வேர்க்கடலையை வறுத்து, ஒன்றிரண்டாக உடைத்துப் போட்டால் கூட்டின் சுவை அபாரமாக இருக்கும். 

கத்தரிக்காயை எண்ணெயில் வதக்கும் போது, ஒரு டீஸ்பூன் கெட்டித் தயிரை அதில் சேர்க்கலாம். கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும். 
கருணைக்கிழங்கை நறுக்கும் போது கை அரிக்கும். புளியைக் கரைத்த நீரைக் கையில் தடவிவிட்டு, கழுவினால் அரிப்புநின்றுவிடும். 

கருணைக்கிழங்கை அரிசி களைந்த நீரில் வேக வைத்தால் அதன் அரிக்கும் தன்மை நீங்கும். 

வாழைப்பூ அடை செய்யப் போகிறீர்களா? வாழைப்பூவை அப்படியே நறுக்கிப் போடுவதற்கு பதில், முக்கால் பதத்துக்கு வேக வைக்கவும். வேக வைத்த பூவை பட்டும் படாமலும் (கொரகொரப்பாக) அரைக்கவும். அந்த விழுதை மாவில் கலந்து அடை வார்த்தால் சுவையும் வாசமும் நன்றாக இருக்கும். 

சேமியாவுடன் ஒரு டீஸ்பூன் கோதுமை மாவையும் சேர்த்து, நெய்யில் வறுத்து,  பாயசம் வைக்கவும். பாயசம் சுவையாக இருக்கும்... பாலையும் அதிகம் சேர்க்க வேண்டியிருக்காது. உருளைக்கிழங்கை வேக வைத்த சுடுநீரில் வெள்ளி, எவர்சில்வர் பாத்திரங்களைக் கழுவித் தேய்த்தால் பாத்திரங்கள் பளிச் ஆகிவிடும். 

கொத்தவரங்காய் பொரியலுக்கு, சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கினால் சூப்பர் சுவை. 

ரவா தோசை மாவில், இரண்டு டீஸ்பூன் சோள மாவையும் கலந்து தோசைசுடலாம். நன்கு சிவந்து மொறு மொறுவென்று இருக்கும் தோசை. 

உளுந்தில் செய்வதைப் போலவே, பாசிப் பருப்பை ஊற வைத்து, அரைத்து, அத்துடன் தேவையான அளவு தேங்காய்த் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து வடை செய்யலாம். புதுச்சுவையோடு இருக்கும். 

குக்கரில் பீட்ரூட்டை 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். அதன் தோல் கழன்று விடும். பிறகு, பீட்ரூட்டை துருவி, வாழைக்காய் புட்டு செய்வதைப் போல் இதிலும் காரப்புட்டு செய்யலாம். செம ருசி! 

ஒரு கைப்பிடி அரிசி, வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். எந்த வகை சூப்பாக இருந்தாலும், அதை இறக்குவதற்கு முன் பொடித்ததைச் சேர்க்கவும். சூப், திக்காக ‘கமகம’ வாசனையுடன் இருக்கும். 

அரை டம்ளர் ரவை, ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன் தேவையான அளவு பாலை ஊற் றிப் பிசையவும். அத்துடன் தேவையான அளவு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து, 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வடையாகத் தட்டவும். மொறு

கேக்குக்கு மாவு பிசையும் போது ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். பிறகு கேக் செய்தால், அதில் முட்டை வாசம் வராது. 

முட்டை தவறி விழுந்து உடைந்து விட்டதா? சிதறிக் கிடக்கும் முட்டைக்கருவின் மீது சிறிது உப்புத் தூளைத் தூவி, மூடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு துண்டு பேப்பரால் எடுத்தால், எளிதில் சுத்தமாகி விடும். 
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by செந்தில் Thu Jul 16, 2015 5:50 pm

எளிமையான மற்றும் பயனுள்ள சமையல் குறிப்புகளுக்கு நன்றி நண்பா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சமையல் குறிப்புகள் Empty Re: சமையல் குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum