Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஃபீடிங் பாட்டிலை தூக்கி வீசுங்கள்!
Page 1 of 1 • Share
ஃபீடிங் பாட்டிலை தூக்கி வீசுங்கள்!
குழந்தை நலம்: ஃபீடிங் பாட்டில் பயங்கரம்
உள்ளங்கையை குவித்து, குழந்தைகளுக்கு தண்ணீர், பால் பருக வைத்த காலம் மலையேறி விட்டது. அடுத்து, சங்கை பயன்படுத்திய காலகட்டமும் சத்தமில்லாமல் மறைந்து வருகிறது. இன்று விதவிதமான நிறங்களில், பல ரகங்களில் ஃபீடிங் பாட்டில்கள் உபயோகத்துக்கு வந்துவிட்டன. விளைவு..? உதடு, பல் மற்றும் வாய் அமைப் பில் எதிர்பாராத மாற்றங்கள்... ஃபீடிங் பாட்டில் ரப்பரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத அழுக்குகளால் உடலினுள் நோய் உண்டாகும் அபாயம்... இப்படி ஃபீடிங் பாட்டிலில் உள்ள பல பயங்கரங்கள் குறித்து விளக்குகிறார் தாய்ப்பால் ஆலோசகர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்.
‘‘குழந்தை நேரிடையாக அம்மாவிடம் பால் குடிக்கும்போது, வாயை நன்றாக திறந்து நாக்கை வெளியே நீட்டியபடி பாலைக் குடிக்கும். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கும்போது, குழந்தைகளின் வாய் குவியும். நாக்கு மடங்கி கொள்ளும். பாட்டில் ஃபீடிங் எடுத்துக்கொள்ளும் குழந்தைகளால் உறிஞ்சி குடிக்க முடியாது. அதன் காரணமாக, பாலை விழுங்கும். மூச்சு விடாமல் குடித்து முடிக்கும். அதனால், பாலை குடித்து முடித்த பிறகு குழந்தைகளுக்கு மூச்சு இரைக்கும். தாயிடம் பால் குடித்தல், கப்பில் பால் குடித்தல் பழக்கம் இல்லாத குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு போன்ற பல பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
பாட்டிலில் பால் அருந்தும்போது, பாலோடு சேர்த்து நிறைய காற்று வயிற்றின் உள்ளே செல்லும். இதனால், பாட்டில் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு வாயுத்தொல்லை ஏற்பட்டு (Gastric Problem), வயிறு உப்புசத்தால் (Colic) அவதிப்படும். மேலும், பாட்டிலில் பால் குடிக்கும் வழக்கம் உடைய குழந்தைகள் மாலை 6 மணிக்கு மேல், தொடர்ந்து 2-3 மணிநேரம் அழுது கொண்டே இருக்கும். இதற்காக, குழந்தைகளுக்கு மருந்து (Colic Drops) கொடுப்பார்கள் . பாட்டிலில் பால் குடித்து பழகிய குழந்தைகளுக்கு மீண்டும் அம்மாவிடம் பால் குடிக்கின்ற விருப்பம் மெல்ல மெல்ல குறையும். இதனால், நாளடைவில், தாய்மை அடைந்த பெண்களுக்கு பால் சுரப்பது நின்றுவிடும். சங்கில் பால் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ள குழந்தைகளால் மீண்டும் அம்மாவிடம் பால் குடிக்க முடியும். அதோடு, குறுகிய காலத்தில் டம்ளரில் பால் குடிக்கவும் பழகிக் கொள்ளும்.
ஃபீடிங் பாட்டிலில் குடிக்க வைப்பது சுகாதாரமானதும் கிடையாது. கிருமித் தொற்று அதிக அளவில் இருக்கும். அதனால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும். பல், தாடை தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பேச்சு வரத் தாமதம் ஆகும். உச்சரிப்பு சரியாக இருக்காது. பல் வரிசை மாற வாய்ப்பு உள்ளது. மேலும், பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் தலைகாட்டும். இளம் தாய்மார்கள் பலர் பொது இடங்களில் குழந்தைக்கு பால் புகட்டுவது கஷ்டமான காரியம். அதனால்தான் பாட்டிலில் குடிப்பதற்கு பழக்கப் படுத்துகிறோம் என்று கூறுகின்றனர். அதில் உண்மையில்லை. ரயில் நிலையம், பேருந்து நிலையம், கடற்கரை, பூங்காக்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் குழந்தைகளுக்கு பால் புகட்டுவதற்கு ஏற்ற வகையில், பிரத்யேக உடைகள் வந்துவிட்டன.
பாட்டிலில் குடிக்க வைப்பதற்குப் பதிலாக, கப்பில் பால் அருந்த வைப்பது மிகவும் நல்லது. அம்மாவிடம் பால் குடிக்கும் பழக்கம் உடைய குழந்தைகளுக்கு தாயின் வாசனை, அரவணைப்பு கிடைக்கும். இந்த குழந்தைகள் ரசித்து பாலைக் குடிக்கும். ஃபீடிங் பாட்டில் பழக்கம் உடைய குழந்தைகளுக்கோ அம்மாவின் வாசனை, அரவணைப்பு ஆகியவையும் கிடைக்க வாய்ப்பு கிடையாது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் கொடுக்கப்படுகின்ற கோல்டன் ஹவர்ஸ் ஃபீடிங் (Golden Hours Feeding) மிகவும் முக்கியம். குழந்தைகளுக்கு கப்பில் பால் புகட்டும் வழக்கம் நிறைய பேருக்கு தெரிவது கிடையாது. பெரும்பாலான டாக்டர்களுக்கே இது பற்றி தெரிவது இல்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்!’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3312
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஃபீடிங் பாட்டிலை தூக்கி வீசுங்கள்!
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி!
எங்கள் வீட்டிலும் குட்டி இளவரசன் இருக்கிறேன்.
எங்கள் வீட்டிலும் குட்டி இளவரசன் இருக்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஃபீடிங் பாட்டிலை தூக்கி வீசுங்கள்!
தாய்மார்களே !! முதல்ல இதப் படிங்க!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ஃபீடிங் பாட்டிலை தூக்கி வீசுங்கள்!
நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கவலையை கழற்றி வீசுங்கள்
» தூக்கி வீசிவிடாதே ...!!!
» ஏன் மூஞ்சியை தூக்கி வெச்சிக்கிடிருக்கே..!!
» கறிவேப்பிலையை இனி தூக்கி எறியாதீங்க!
» உலகின் அதிவேக மின் தூக்கி
» தூக்கி வீசிவிடாதே ...!!!
» ஏன் மூஞ்சியை தூக்கி வெச்சிக்கிடிருக்கே..!!
» கறிவேப்பிலையை இனி தூக்கி எறியாதீங்க!
» உலகின் அதிவேக மின் தூக்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum