தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்!

View previous topic View next topic Go down

கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்! Empty கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்!

Post by mohaideen Sun Feb 22, 2015 12:25 pm

கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்! Ld3168
 
 
பெரிய பெரிய பிரச்னைகளை கூட எளிதாகச் சமாளிக் கிற நமக்கு, இந்த கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்கத்தான் வழி தெரிவதில்லை. கொசுவர்த்தி சுருள், மின்சார கொசுவிரட்டி தொடங்கி தடவிக்கொள்ளும் க்ரீம் வரை பல கவசங்களைப் பயன்படுத்தியும் அவற்றிடம் தோற்றுக்கொண்டேதான் இருக்கிறோம்!

மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா என வரிசை கட்டுகின்றன கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள். கொசு விரட்டிகளால் நமக்கு இந்த நோய்களில் இருந்து பாதுகாப்பு தானே? இப்படிக் கேட்பவர்களுக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது. கொசுவிரட்டி மருந்துகளால் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் தாக்கு தலுக்கு ஆளாகிறோம் என அதிர்ச்சி அளிக்கிறார் நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் வினோத்குமார். கொசுவிரட்டி மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து அவர் நம்மிடம் பேசியவை...

‘‘கொசுக்களை விரட்ட பெரும்பாலான மக்கள் கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துகிறார்கள். கொசுவர்த்தி சுருள் அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்ற செயற்கையான வேதிப்பொருட்களால் செய்யப்படுகிறது. இந்த கொசுவர்த்தி சுருளை மணிக்கணக்காக பூட்டிய அறைக்குள் எரியவிடும் போது தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். இது ஒரு எச்சரிக்கை மணி. இந்த நிலையிலே கொசுவர்த்தி கொளுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூக்கிலும் கண்களிலும் நீர் ஒழுகுதல், மூச்சிரைப்பு போன்றவை ஏற்படும். தொண்டையில் வலி, அலர்ஜி, எரிச்சல், நோய்த்தொற்று ஏற்படும். 

வறட்டு இருமல் அதிகமாக வரும். ‘சைனசிடிஸ்’ ஏற்பட்டு மூக்கு அடைத்துக்கொள்ளும். சில நேரம் மூக்கின் உள்ளே தொற்றுக்கிருமிகள் அதிகமாகி சீழ் கூட பிடிக்கலாம். ஆரம்ப அறிகுறிகளின் போதே அலர்ஜி உள்ளவர்கள் கொசுவர்த்தி சுருள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சையைஎடுத்துக் கொள்ள வேண்டும்.  கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகையால் நுரையீரலும் பாதிப்படைகிறது. கொசுவர்த்தி புகை நுரையீரலை அழற்சி அடையச் செய்து ஆஸ்துமா நோயை ஏற்படுத்துகிறது. இதனால் சிலருக்கு ‘ஆஸ்த் மாடிக் அட்டாக்’ கூட ஏற்படும். கொசுவர்த்தி புகையை சுவாசிப்பது என்பது 100 சிகரெட் குடிப்பதற்குச் சமமான விளைவுகளை ஏற்படுத்தும். 

சிலர் ஏசி செய்யப்பட்ட அறையில் கொசுவர்த்தியை கொளுத்துவார்கள். இதனால் புகையானது அறையைவிட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே சுற்றும். தொடர்ந்து இதை சுவாசித்தால் நுரையீர லில் ஏற்படும் பாதிப்புகள் கேன்சராக கூட மாறலாம். சிலர் கொசுக்களை விரட்ட மின்சாரத்தில் இயங்கும் திரவங்களைப் பயன்படுத்துவார்கள். இதுவும் முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. இவற்றை உபயோகித்தால் அறை மற்றும் ஜன்னல் கதவை கொஞ்சமாக திறந்து வைக்க வேண்டும். அறையில் காற்றோட்டம் இல்லையென்றால், கொசு விரட்டித் திரவங்களும் தும்மல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். கொசுவை விரட்டும் க்ரீம்களை தடவிக் கொள்வது கூட சிலருக்கு தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். 

பைப்புகள் மூலம் அடிக்கப்படும் கொசு மருந்துகளால் ஏற்படும் புகைமண்டலமே சிலருக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். சைனஸ் உள்ளவர்களுக்கு இடைவிடாத தும்மல் ஏற்படும். இப்படி புகை போடும் போது துணியால் மூக்கையும் வாயையும் மறைத்து கட்டிக்கொள்ள வேண்டும். கொசுக்களை விரட்ட சிலர் ஸ்பிரே அடிக்கிறார்கள். இது மூச்சுத்திணறல், தலைசுற்றல் ஆகிய பின்விளைவுகளை கொண்டுவரும்.  அதனால் கொசுவை விரட்ட நல்ல தரமான துணிகளில் தயாரிக்கப்பட்ட கொசு வலைகளை பயன்படுத்தலாம். 

விலை மலிவான கொசுவலைகளை பயன்படுத்தினால் போதிய காற்றோட்டம் இல்லாமல் மூச்சுவிடுவதில் பிரச்னை ஏற்பட்டு தூக்கம் பாதிக்கும். மட்டமான நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கும் கொசு வலைகளை பயன்படுத்தி னால் அதில் இருந்து வரும் ஒருவித துர்நாற்றம் தலைசுற்றல், வாந்தி, மயக்கத்தை ஏற்படுத்தும்...’’ என எச்சரிக்கும் வினோத்குமார், கொசு விரட்டிகளை தவிர்த்து, கொசுக்களை விரட்டும் வழிகளைச் சொல்கிறார்...

வீட்டில் உள்ள அறைகளை காற்றோட்ட மாக வைக்க வேண்டும். ஜன்னல்களை இறுக மூடி வைக்கக் கூடாது.
ஜன்னல்களில் சிறிய நுண்துளையுள்ள கொசு வலைகளை அடித்து வைப்பதால் காற்றோட்டமும் இருக்கும். கொசுக்களும் உள்ளே வராது.
கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும். வீட்டின் உள்ளே மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதாது... வீட்டைச் சுற்றி கழிவுகள், குப்பைக் கூளங்கள் சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
கொசுவை நேரடியாக அடித்துக்கொல்லும் பேட்டரியில் இயங்கும் பேட் இப்போது கிடைக்கிறது. டென்னிஸ் பேட் வடிவத்தில் இருக்கும். இதனை பயன்படுத்துவதால் கொசுக்களிடம் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். 
தரமான கொசு வலைகளை படுக்கையறையில் பயன்படுத்துவதன் மூலம் சுகமான நித்திரையைப் பெற முடியும்.
கொசுவிரட்டி க்ரீம்கள், ஸ்பிரே, லிக்யூட்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்த்துவிட வேண்டும்.
நம் முந்தைய தலைமுறை பயன்படுத்திய நொச்சி இலைகளை நெருப்பி லிட்டு புகை மூட்டும் வழிமுறையும் பயன்தரும்.

 
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3170
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்! Empty Re: கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்!

Post by ஸ்ரீராம் Mon Feb 23, 2015 9:46 am

நொச்சி இலை மூட்டம் என்று சொல்வார்கள் எங்கள் ஊரில் இப்ப எல்லாம் யாரு செய்யறாங்க.

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்! Empty Re: கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்!

Post by kanmani singh Mon Feb 23, 2015 1:00 pm

படுக்கை அறையினுள் நொச்சி இலைகளை வைத்துக் கொண்டால் கொசு வராது! நொச்சிக்கு எங்கே போக???
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்! Empty Re: கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்!

Post by செந்தில் Tue Feb 24, 2015 11:30 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்! Empty Re: கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்!

Post by முரளிராஜா Wed Feb 25, 2015 10:26 am

ஸ்ரீராம் wrote:நொச்சி இலை மூட்டம் என்று சொல்வார்கள் எங்கள் ஊரில் இப்ப எல்லாம் யாரு செய்யறாங்க.

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
என்னது முஹைதீன் உங்களுக்கு அண்ணன்னா  அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்! Empty Re: கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்!

Post by ஸ்ரீராம் Wed Feb 25, 2015 10:27 am

ஆமாம். இதில் என்ன சந்தேகம். மண்டையில் அடி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்! Empty Re: கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum