Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?

பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம் டிகிரி காபிக்கான அக்மார்க் முத்திரை எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.
ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் ஆலயத்தின் மொட்டை கோபுர வாசலில் ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ இருந்தது. இங்கே ஃபில்டர் காபி குடிக்க எந்நேரமும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். தனது கடையை நம்பி வந்தவர்களின் நாவுக்கு ருசியான காபியைத் தருவதில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்தவர் கடையின் உரிமையாளர் பஞ்சாமி ஐயர்.
இதனால் அக்கம் பக்கத்து மிராசுகள் எல்லாம் வண்டி கட்டி வந்து கிளப் டிகிரி காபிக்காகத் தவம் கிடந்தார்கள். பசும்பாலை அப்படியே கறந்து துளியும் தண்ணீர் கலக்காமல் அப்போதே காய்ச்சி எடுத்து, ஸ்பெஷலாக வறுத்து அரைக்கப்பட்ட காபி தூளில் நம்பர் ஒன் தரத்தை எடுத்து அதில் ஒரே ஒரு முறை மட்டுமே டிகாஷன் எடுத்து மணக்க மணக்க ஃபில்டர் காபி போட்டுக் கொடுத்தார் பஞ்சாமி ஐயர். இதற்காகத் தனது ‘கிளப்’பின் பின்புறம் பிரத்யேக மாட்டுப் பண்ணையே வைத்திருந்தார். அந்தக் காலத்திலேயே அதில் இருபதுக்கும் குறையாத பசு மாடுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன என்றால் பஞ்சாமி ஐயரின் பொருளாதாரப் பலத்தை ஊகித்துக் கொள்ளுங்கள்.
கும்பகோணம் மற்றும் அதன் அக்கம் பக்கத்தில் மட்டுமே தெரிந்திருந்த பஞ்சாமி ஐயர் காபியை உலகறியச் செய்தது இசை வித்வான்கள்தான். கும்பகோணம் இசைக் கச்சேரிகளுக்கு வந்த வித்வான்கள் பஞ்சாமி ஐயரின் டிகிரி காபியைக் குடித்துப் பழகி, ஒரு கட்டத்தில் அதன் சுவைக்கு அடிமையாகவே மாறிப்போனார்கள். இதனால் போகுமிடமெல்லாம் ‘குடிச்சா கும்பகோணம் பஞ்சாமி ஐயர் கடை டிகிரி காபி மாதிரி குடிக்கணும்’ என்று பேச ஆரம்பித்தார்கள். இதுவே பேச்சு வழக்கில் கும்பகோணம் டிகிரி காபியாகிப் போனது.
கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்குப் போட்டி போட்டுக் கொண்டு கும்பகோணம் டிகிரி காபியும் பிரபலமானது. பஞ்சாமி ஐயரைத் தொடர்ந்து இன்னும் பலர் கும்பகோணம் பகுதியில் டிகிரி காபி கடைகளைத் திறந்தார்கள். என்றாலும் 1960 தொடங்கி 1986 வரை கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர்தான் கொடிகட்டிப் பறந்தார்.
இப்போதும் கும்பகோணத்தில் டிகிரி காபி கடைகள் பல இருக்கின்றன. ஆனால், அவர்கள் யாரும் ‘கும்பகோணம் டிகிரி காபி கடை’ என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை. இது குறித்து நம்மிடம் பேசினார் கும்பகோணத்தில் டிகிரி காபி கடை வைத்திருக்கும் ‘முரளீஸ் கபே’ உரிமையாளர் முரளி
“பித்தளையில் டம்ளர் - டவரா ‘செட்’டையும் ஃபில்டரையும் வெச்சு காபி ஆத்திட்டா மட்டும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிடாது. காபி தூளை வறுத்து அரைத்துத் தரம் பிரிக்கிறதுல ஏ, பி, ரோபோஸ்ட்ன்னு மூணு தரம் இருக்கு. இதுல ‘பி’ தான் நம்பர் ஒன் தரம். பஞ்சாமி ஐயர் இந்தத் தூளில்தான் காபி போட்டார். மத்தவங்க ஒரு தடவ காபித் தூள் போட்டா அதுலருந்து மூணு தடவை டிகாஷன் அடிப்பாங்க. ஆனா, பஞ்சாமி ஐயர் ஒரே ஒரு தடவதான் டிகாஷன் எடுப்பாரு. இப்படியெல்லாம் செஞ்சுதான் தன்னோட காபிக்கு ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைச்சிருந்தாரு.
அதுபோல, டிகிரி காபிக்கும் பித்தளை ‘டம்ளர் - டவரா செட்’ட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கும்பகோணம் பித்தளைப் பாத்திரங்களுக்குப் பேர் போன ஊர். அதனால் அந்தக் காலத்தில் பித்தளை டம்ளர் - டவரா ‘செட்’ல டிகிரி காபியைக் கொடுத்தாங்க. அப்ப எவர்சில்வரும் அவ்வளவா புழக்கத்தில் இல்லை. அதுவுமில்லாம மத்த பாத்திரங்களைவிடக் கூடுதல் நேரத்துக்குப் பித்தளை பாத்திரத்துல சூடு நிலைத்து இருக்கும். கும்பகோணம் டிகிரி காபியைப் பித்தளை பாத்திரங்கள்ல குடுத்ததுக்கு இதுதான் காரணம்” என்று கும்பகோணம் டிகிரி காபி ரகசியத்தைச் சொல்லி முடித்தார் முரளி.
தகவல் நன்றி: பார்த்திபன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
மிகவும் அருமையான தகவல்! அறியத்தந்தமைக்கு நன்றி!!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
நல்ல தகவல். நன்றி

அதோடு... இன்னொன்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்... உண்மையா? என தெரியாது...
டிகிரி காஃபி சுவையாக இருக்க மூக்குபொடியை சிறிதளவு கலந்து கொடுப்பார்களாம். அதனால்தான் அதனுடைய சுவையே அலாதி என சொல்வார்கள். உண்மையா?!...
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
(பஞ்சாமி ஐயர் செய்தாரா? என்பது எனக்கு தெரியாது)


அதோடு... இன்னொன்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்... உண்மையா? என தெரியாது...
டிகிரி காஃபி சுவையாக இருக்க மூக்குபொடியை சிறிதளவு கலந்து கொடுப்பார்களாம். அதனால்தான் அதனுடைய சுவையே அலாதி என சொல்வார்கள். உண்மையா?!...
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
(பஞ்சாமி ஐயர் செய்தாரா? என்பது எனக்கு தெரியாது)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
அப்படி இல்லை. யாரோ செய்த கட்டுகதை இது.
மேலும் சிலர் கொஞ்சம் வைன்(wine) கலப்பதாக சொல்லிக்கேள்வி பட்டு இருக்கிறேன். பஞ்சாமி ஐயர் அப்படி செய்வாரா?
எல்லாம் கட்டுக்கதை.
முதல் தரமான காப்பி கொட்டையை வறுத்து அதில் தூய பால் (தண்ணீர் கலக்காமல்) இட்டு குடித்தால் சொர்க்கம்தான்.
மேலும் சிலர் கொஞ்சம் வைன்(wine) கலப்பதாக சொல்லிக்கேள்வி பட்டு இருக்கிறேன். பஞ்சாமி ஐயர் அப்படி செய்வாரா?
எல்லாம் கட்டுக்கதை.
முதல் தரமான காப்பி கொட்டையை வறுத்து அதில் தூய பால் (தண்ணீர் கலக்காமல்) இட்டு குடித்தால் சொர்க்கம்தான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
நண்பர் ஜேக் தவறான வதந்தியை கேள்விபட்டிருக்கிறார்.நேற்று கூட நானும் என் நண்பரும் கும்பகோணம் டிகிரி காபி குடித்தோம்.இதன் சுவையே தனிதான்.



செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
@செந்தில்செந்தில் wrote:நண்பர் ஜேக் தவறான வதந்தியை கேள்விபட்டிருக்கிறார்.நேற்று கூட நானும் என் நண்பரும் கும்பகோணம் டிகிரி காபி குடித்தோம்.இதன் சுவையே தனிதான்.
![]()
![]()
![]()
நீங்கள் சாப்பிட்ட அந்த காபி கடை எங்கே இருக்கு?
இன்னமும் பஞ்சாமி ஐயர் காபி மாதிரி கிடைக்குமா?
போனால் குடிக்கலாம். அதான் கேட்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520

» சுவை தேடி: கும்பகோணம் டிகிரி காபி
» கும்போகோணம் டிகிரி காபி
» கிரீன் டீயின் ரகசியம் தெரியுமா !!
» சிதம்பரம் ரகசியம் தெரியுமா உங்களுக்கு? - அரிய தகவல்கள்
» மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் - உங்களுக்குத் தெரியுமா?
» கும்போகோணம் டிகிரி காபி
» கிரீன் டீயின் ரகசியம் தெரியுமா !!
» சிதம்பரம் ரகசியம் தெரியுமா உங்களுக்கு? - அரிய தகவல்கள்
» மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் - உங்களுக்குத் தெரியுமா?
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|