தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பன்றிக் காய்ச்சல் பயம்

View previous topic View next topic Go down

பன்றிக் காய்ச்சல் பயம் Empty பன்றிக் காய்ச்சல் பயம்

Post by mohaideen Mon Mar 16, 2015 5:01 pm

டாக்டர் கு.கணேசன்பன்றிக் காய்ச்சல் பயம் Ht3354

ஒருவழியாக எபோலா பயம் நீங்கியது என்று நிம்மதிப் பெருமூச்சுவிட ஆரம்பித்தால் அடுத்த கட்டமாக டெங்குக் காய்ச்சல் அச்சுறுத்தியது. இந்த பீதி குறைவதற்குள் ‘பன்றிக் காய்ச்சல்’ என்ற பெயரில் அடுத்த அச்சம் ஆரம்பித்துவிட்டது. 

தமிழ்நாட்டிலும் ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களிலும் உள்ள பல மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

வைரஸ் நோய்

சாதாரண ஃபுளு காய்ச்சலின் ஒரு வகைதான் பன்றிக் காய்ச்சல். இன்ஃபுளுயன்சா - A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் இந்த நோய் வருகிறது. இதை அலோபதி மருத்துவத்தில் ‘ஸ்வைன் ஃபுளு’ (Swine Flu) என்கிறார்கள். ‘ஸ்வைன் என்றால் ‘பன்றி’என்று பொருள். இது முதன் முதலில் பன்றிகளைத் தாக்கிய காரணத்தால், இந்தப் பெயரைப் பெற்றது. நாளடைவில், இந்த வைரஸ் கிருமிகள் வீரியம் பெற்று, பன்றியிடமிருந்து மனிதரைத் தாக்கத் தொடங்கியது. இப்போது பரவி வருவது பன்றிகளிடமிருந்து அல்ல; நோயுள்ள மனிதரிடமிருந்து மற்றொரு மனிதரைத் தாக்குகிறது. 

முதன் முதலில் 2009ல் மெக்ஸிகோ நாட்டில்தான் இந்த நோய் தோன்றியது. அங்கிருந்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குப் பரவி, இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தக் காய்ச்சல் ஒரு அதி தீவிர தொற்றுநோய். காற்றின் மூலம் மட்டுமே பரவக்கூடியது. சமயங்களில் இது ஓர் இடத்தில் தொடங்குகிறது என்றால் உடனடியாக அது லட்சக்கணக்கான பேரை பாதித்து உயிர்ப்பலி வாங்குகிற ஒரு கொள்ளை நோயாகப் 
பரிணமிக்கும்.

எப்படிப் பரவும்?

நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி அடுத்தவர்களுக்குத் தொற்றி நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் வைரஸ் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவற்றின் மூலம் அடுத்தவர்களுக்கும் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போதுகூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. ஆறு அடி தூரத்துக்கு இந்தக் கிருமிகள் பரவும் தன்மை உடையவை. ஆகவே, காற்றில் பரவும் மற்ற தொற்றுநோய்களைப் போல் மிக நெருக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பரவும் என்று அலட்சியமாக இருக்க முடியாது. இந்தக் காய்ச்சல் மக்களிடம் வேகமாகப் பரவு வதற்கு இதுவும் ஒரு காரணம். 
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் பயம் Empty Re: பன்றிக் காய்ச்சல் பயம்

Post by mohaideen Mon Mar 16, 2015 5:01 pm

அறிகுறிகள்?

உடலுக்குள் வைரஸ் புகுந்த மறுநாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் நோய் தொடங்கிவிடும்.  கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலை வலி, தொடர் தும்மல், இருமல், தொண்டைவலி, மூக்கு ஒழுகுதல், மார்புச் சளி, மூச்சடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, சோர்வு போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள். இந்த அறிகுறிகள் ஒரு வாரத்துக்கும் மேல் நீடிக்கும். 

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

சுகாதாரம் குறைந்த இடங்களிலும் நெருக்க மான இடங்களிலும் வசிப்பவர்கள், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், ஆஸ்துமா, காசநோய், சிறுநீரக நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய பாதிப்பு உள்ளவர்கள், முதியவர்கள், புகைப் பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் ஆகியோரை இந்த நோய் மிகச் சுலபத்தில் பாதித்து விடுகிறது. சந்தை, திருவிழா, ஊர்வலம், திரையரங்குகள், வியாபார மால்கள் போன்ற இடங்களில் மக்கள் மொத்தமாகக் கூடும்போதும், பஸ், ரயில் பயணங்களின்போதும் இந்த நோய்மற்றவர்களுக்குப் பரவுவது எளிதாகிறது.

சிக்கல்கள்?

பன்றிக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளும் முதியவர்களும்தான். இவர்களுக்குக் காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சி நோய், ‘நிமோனியா’ என்று அறியப்படும் நுரையீரல் அழற்சி நோய், மூச்சுச் சிறு குழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக் காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பு வரைக் கொண்டு வந்து விடும். 

என்னென்ன பரிசோதனைகள்?

நோயாளியின் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சளியை எடுத்து ‘ரியல் டைம் பிசிஆர்’  (Real Time PCR) எனும் பரிசோ தனையை செய்து இந்த நோய் உறுதி செய்யப்படுகிறது. ‘வைரஸ் கல்ச்சர்’ (Virus Culture) எனும் பரிசோதனையும் இந்த நோயை 100 சதவிகிதம் உறுதி செய்ய உதவுகிறது. ஆனால், இந்தப் பரிசோதனைகள் பெரிய நகரங்களில் உள்ள நவீன மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகின்றன.

என்னென்ன சிகிச்சைகள்?


நோயாளிக்கு வந்துள்ளது பன்றிக் காய்ச்சல்தான் என்பது உறுதியானால், ஐந்து நாட்களுக்கு ‘டாமிஃபுளு’ (Tamiflu) மாத்திரை களைச் சாப்பிட வேண்டும். ஓசெல்டாமிவிர் (Oseltamivir) எனும் அலோபதி மருந்தின் வியாபாரப் பெயர்தான் டாமிஃபுளு. காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற மற்ற நோய் அறிகுறி களைக் குறைக்கவும் மருந்துகள் தேவைப்படும். குளுக்கோஸ் சலைன் மற்றும் பிராணவாயு போன்றவையும் செலுத்தப்பட வேண்டியது   வரலாம். இந்த நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை தர வேண்டும் அல்லது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாது. 

தடுப்பது எப்படி?


இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க, இந்த நோயுள்ளவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைக்குட்டை இல்லையென்றால், கைகளால் முகத்தை மூடி, முடிந்தவரை சளி வெளியில் தெறிக்காமல் பார்த்துக்   கொள்ள வேண்டும். பிறகு, கைகளை அடிக்கடி சோப்புப்போட்டுத்  தண்ணீரில் கழுவ வேண்டும். வீட்டில் ஓய்வெடுப்பது   நல்லது. சிறார்கள் பள்ளிக்கூடத்துக்கு ஒரு வாரம் போக வேண்டாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் பயம் Empty Re: பன்றிக் காய்ச்சல் பயம்

Post by mohaideen Mon Mar 16, 2015 5:02 pm

மற்றவர்கள் இப்படிச் செய்தால் நோய் வராது.

பொது இடங்களுக்குச் சென்று திரும்பினால், வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கொப்பளித்து, தொண்டையைச் சுத்தம் செய்யுங்கள்.

முகத்தையும் கண்களையும் சோப்புப்போட்டுக் கழுவி சுத்தம் பேணுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருந்தால் இது அவ்வளவாகப் பாதிக்காது. ஆகவே, சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். 

உடற்பயிற்சிகளைச் செய்து சுறுசுறுப்பாக இருங்கள். காற்றோட்டமான இடத்தில் நன்றாகத் தூங்குங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். மால், கடை, சந்தை, தியேட்டர், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் நேரம் செலவழிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். 

குழந்தைகளுக்கு குறைந்தது ஒரு வருடத்துக்குத் தாய்ப்பால் புகட்டுவதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம். இதன் மூலம் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.

புகைப்பிடித்தலையும் மது குடிப்பதையும் மறப்பது போன்ற அடிப்படை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தக் காய்ச்சலுக்குக் கடிவாளம் போடலாம்.,


தடுப்பூசி உண்டா? 

பன்றிக் காய்ச்சலுக்கு எனத் தனிப்பட்ட தடுப்பூசி இல்லை. ஃபுளு காய்ச்சலுக்குப் போடப்படும் வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி (Trivalent inactivated vaccine TIV) தான் பன்றிக் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் பரவும்போது இதைப் போட்டுக்கொள்ளலாம். இது ஓராண்டுக்குத்தான் நோயைத் தடுக்கும். எனவே, வருடா வருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறவர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் எப்போதும் வராது.

குழந்தை பிறந்து 6 மாதத்திலிருந்து 3 வயதுக்குள் இதைப் போடுவதாக இருந்தால்  0.25 மி.லி. அளவிலும், 3 வயதிலிருந்து 8 வயதுக்குள்  போடுவதாக இருந்தால் அரை மில்லி அளவிலும் தொடையில் அல்லது புஜத்தில் தசை ஊசியாகப் போட்டுக்கொள்ள வேண்டும். எட்டு வயதுக்குள் முதல் முறையாக இதைப் போடும்போது முதல் ஊசிக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து இரண்டாம் தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டும். 9 வயதுக்கு மேல் முதல் முறையாகப் போடுவதாக இருந்தால் அரை மில்லி அளவில் ஒருமுறை மட்டும் போட வேண்டும். இத்தடுப்பூசியை முதல் முறையாக எந்த வயதில் போட்டாலும் அதற்குப் பிறகு வருடத்துக்கு ஒருமுறை மீண்டும் போட வேண்டியதும் அவசியம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் பயம் Empty Re: பன்றிக் காய்ச்சல் பயம்

Post by mohaideen Mon Mar 16, 2015 5:02 pm

தடுப்பு மருந்து? 

உயிர் நுண்ணுயிரி இன்ஃபுளுயென்சா தடுப்பு மருந்து (Live attenuated influenza vaccine  LAIV) என்று ஒரு தடுப்பு மருந்து உள்ளது.  இது ‘ஒரு நேசல் ஸ்பிரே’. இதை மூக்கில்விட்டு உறிஞ்சிக்கொள்ள வேண்டும். முதலில் சொல்லப்பட்ட தடுப்பூசியை விட அதிக ஆற்றல் உள்ளது. அதிக பாதுகாப்பு தருவது. என்றாலும், இதை இரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமாக உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய் உள்ளவர்களும் கர்ப்பிணிகளும் 2 வயதுக்கு  உட்பட்ட குழந்தைகளும் இதைப் பயன்படுத்தக்கூடாது. அடுத்து ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கும் இதைப் போடமுடியாது. மூக்கில் சரியாக இதை விட வேண்டும். அரைகுறையாக மூக்கில் விட்டால் நோய்ப் பாதுகாப்பு முழுமையாக கிடைக்காது. அதனால் கவனம் தேவை.

மாறிக்கொண்டே வரும் தடுப்பூசி!

எந்தத் தடுப்பூசிக்கும் இல்லாத ஒரு தனித்தன்மை டிஐவி (TIV) தடுப்பூசிக்கு உண்டு. பொதுவாக ஆண்டுதோறும் இந்தக் கிருமியின் தன்மை மாறிக்கொண்டே இருக்கும். ஒரு ஆண்டில் போட்ட தடுப்பூசியையே அடுத்த ஆண்டில் போட்டால் தடுப்பூசி பலன் தராது. எனவே, உலகச் சுகாதார நிறுவனம் ஆண்டுக்கு இரண்டு முறை தெற்கு ஆசியாவில் பரவுகிற கிருமியின் தன்மையை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பு மருந்து தயாரிக்கச் சொல்கிறது. 

முகமூடிகள் அவசியமா?


எல்லோருமே முகமூடி அணிய வேண்டும் என்கிற அவசியமில்லை. சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு நெருக்கமாகத் தொடர்பு வைத்துக்கொள்கிறவர்கள் மட்டும் முகமூடி அணிந்தால் போதும். அடுத்து, முகமூடிதான் அணிய வேண்டும் என்றில்லை. முகத்தை மூடிக்கொள்வதற்குச் சுத்தமான கைக்குட்டை போதும். முகமூடி அணிவதாக இருந்தால் மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடியை மட்டுமே அணிய வேண்டும். இவைதான் வைரஸ் கிருமிகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும். இன்னொன்று, உபயோகித்த முகமூடியைத் தொட நேர்ந்தாலோ, கழற்றினாலோ, கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். ஒருமுறை உபயோகித்துக் கழற்றிய முகமூடியை மீண்டும் அணியக் கூடாது.  ஏற்கனவே அணிந்த முக மூடியை வெளியில் எறியாதீர்கள். அதன் மூலம் பலருக்கும் நோய் பரவிவிடும். ஆகவே, அதைக் குப்பைத் தொட்டியில் போடுங்கள்.     

சாதாரண ஃபுளு காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம்?

சாதாரண ஃபுளு காய்ச்சலில் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, இருமல், தும்மல் போன்றவை இருக்கும். பன்றிக்காய்ச்சலில் கூடுதலாக வாந்தி, வயிற்றுப்போக்கு இருக்கும்.   சாதாரண ஃபுளு காய்ச்சலில் முதலில்    மூக்கில் நீர் வடிதல், தும்மல், இருமல் இருக்கும். பிறகுதான் காய்ச்சல் வரும். பன்றிக் காய்ச்சலில் தொடக்கத்திலேயே காய்ச்சல் அதிக அளவில் வரும். மூன்றாம் நாளில் மூக்கில் நீர் ஒழுகும். தும்மல், இருமல் தொடரும்.     

H1N1 என்றால் என்ன?

H1 என்றால் ஹீம்அக்ளுட்டினின் புரதம் (Haemagglutinin Protein). 
N1 என்றால் நியூரோமினிடேஸ் புரதம் (Neurominidase Protein).  



http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3364
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் பயம் Empty Re: பன்றிக் காய்ச்சல் பயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum