Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வானவில்லை இரவில் காண முடியுமா?
Page 1 of 1 • Share
வானவில்லை இரவில் காண முடியுமா?
இயற்கை அளிக்கும் அற்புதமான காட்சி வானவில். வயல்வெளியாக இருக்கிற இடத்தில் வானவில் தெரியுமானால் அதை முழுதாகப் பார்க்க முடியும். வானவில்லின் பெயரை வைத்து வானில் உண்மையாக பல வண்ணங்களில் வில் போன்று ஏதோ உண்டாவதாக நினைத்தால் அது தவறு. நீங்கள் நிலைக் கண்ணாடி முன்பாக நின்றால் எதிரே உருவம் தெரிகிறது. ஆனால் அது வெறும் தோற்றமே. கிட்டத்தட்ட அது போன்றதுதான் வானவில்லும்.
இன்னொன்று. வானவில்லை நோக்கி நீங்கள் நடந்தால் ஒரு கட்டத்தில் அது உங்கள் தலைக்கு மேலே தெரியும் என்று நினைத்தால் அதுவும் தவறு. காலையில் வெயில் இருக்கும்போது உங்கள் கிராமத்துக்கும் அடுத்த கிராமத்துக்கும் நடுவே மழை பெய்கிறது. அப்போது நீங்கள் வானில் வானவில்லைக் காண்கிறீர்கள். மழை பெய்கிற இடத்துக்கு அப்பால் உள்ள பக்கத்து கிராமவாசிகளுக்கு இந்த வானவில் தெரியாது.
வானவில் என்பது குறிப்பிட்ட சூழ்நிலைகளில்தான் தென்படும். முதலாவதாக சூரியன் கிழக்கே (அல்லது மேற்கே) அடிவானில் அல்லது அடிவானத்துக்கு சற்று உயரே இருக்க வேண்டும். அந்த சமயத்தில் எதிர்த்திசையில் மழை பெய்ய வேண்டும். அப்போதுதான் வானவில் தெரியும். அதாவது நீங்கள் நடுவே இருக்க, ஒரு புறம் வெயிலும் மறுபுறம் மழையும் இருக்க வேண்டும். அப்படியான சமயத்தில் பெய்கின்ற திசையில் வானவில் தோன்றும். நீங்கள் இருக்கின்ற இடத்தில் சூரியனே தெரியாத வகையில் வானை மேகங்கள் சூழ்ந்திருந்தால் வானவில் தோன்றாது. எல்லாவற்றுக்கும் மேலாக சூரியன் நடுவானில் இருந்தால் வானில் வானவில் தோன்றாது.
முப்பட்டகம் (Prism) எனப்படும் முக்கோண வடிவிலான கண்ணாடித் துண்டு வழியே சூரிய ஒளிக்கற்றை பாய்ந்து செல்லும்படி செய்தால் சுவரில் 7 வண்ணங்கள் தெரியும். வெண்மையான சூரிய ஒளிக் கற்றையை முப்பட்டகம் இவ்விதம் 7 வண்ணங்களாகப் பிரிக்கிறது. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகியவை அந்த 7 நிறங்களாகும். இதை நினைவில் வைத்துக்கொள்ள VIBGYOR என்று சொல்வது உண்டு.
மழை பெய்யும்போது ஒவ்வொரு மழைத் துளியும் கிட்டத்தட்ட கோள வடிவில் இருக்கும். எதிர்ப்புறத்தில் இருந்து வருகின்ற சூரிய ஒளிக் கற்றைகள் இந்த மழைத் துளிகள் வழியே பாய்ந்து செல்லும்போது ஒவ்வொரு துளியும் முப்பட்டகம் போல செயல்பட்டு சூரிய ஒளிக் கற்றையை 7 வண்ணங்களாகப் பிரிக்கிறது. இதன் விளைவாகவே வானவில் தெரிகிறது.
சில சமயங்களில் வானில் இரட்டை வானவில் தெரியும். அவ்வித நிலைமைகளில் பிரதான வானவில்லுக்கு மேற்புறத்தில் துணை வானவில் தெரியும். இந்த இரு வானவில்களுக்கும் இடையே சிறிது வேறுபாடு உண்டு. பிரதான வானவில்லின் நிறங்கள் அழுத்தமாகத் தெரியும்.
தவிர, வானவில்லின் வெளிப்புறத்தில் சிவப்பும் அடிப்புறத்தில் ஊதாவும் தென்படும். துணை வானவில்லில் இதற்கு நேர் மாறாக வெளிப்புறத்தில் ஊதாவும் அடிப்புறத்தில் சிவப்பும் தெரியும். பிரதான வானவில் அடி வானத்தில் இருந்து 40 முதல் 42 டிகிரி உயரத்திலும் துணை வானவில் 50 முதல் 52 டிகிரி உயரத்திலும் தெரியும்.
பௌர்ணமியாக இருந்தால் இரவிலும் வானவில் தென்படலாம். ஆனால் மேற்கூறியது போல சந்திரன் அடிவானத்துக்கு சற்று மேலே இருக்கிற சமயத்தில் எதிர்ப்புறத்தில் மழை பெய்தால் வானவில் தெரியும். சந்திரனின் ஒளியானது சூரியனிடமிருந்து பெறப்பட்ட பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்பதால் அந்த வானவில் மங்கலாகத் தெரியும். இரவில் வானவில்லைக் கண்டுள்ளதாக கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் எழுதி வைத்துள்ளார்.
பௌர்ணமி இரவில் அபூர்வமாகத் தெரிகிற வானவில்லை படம் பிடித்துள்ளவர்கள் பலர் உண்டு. சிலர் இதை Rainbow என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக Moonbow என்று குறிப்பிடுகின்றனர். சூரியன் மேற்கே அஸ்தமிக்க, பௌர்ணமி சந்திரன் கிழக்கே உதித்த சமயங்களில் (மேற்கு வானில்) இவ்விதம் இரவு நேர வானவில்லைக் கண்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு வட்டத்தின் ஒரு பகுதியே வில் (Arc) எனப்படுகிறது. அந்த வகையில்தான் வானவில்லுக்கு அப்பெயர். நாம் வானவில்லாகக் காண்பது அரை வட்டமாகும். எனினும் முழுவட்ட வானில் என்பதும் இருக்கத்தான் செய்கிறது. விமான ஓட்டிகள் சிலர் தாங்கள் வானில் இருந்தபடி கீழே முழுவட்ட வானவில்லைக் கண்டுள்ளதாக கூறியுள்ளனர்.
அந்த வகையில் கீழே பூமியில் இருக்கிற யாரும் முழுவட்ட வானவில்லைக் கண்டிருக்க முடியாது.
எனினும் மலைப் பகுதியில் உயரமான இடத்தில் இருந்தபோது கீழே பள்ளத்தாக்குப் பகுதியில் -பகல் நேரத்தில் -முழுவட்ட வானவில்லைக் கண்டுள்ளதாக ஒரு நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இதை வளைய வானவில் என்று வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும்.
தினமலர்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வானவில்லை இரவில் காண முடியுமா?
பயனுள்ள தகவல் பகிர்வு
-
வானவில்லில் நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்கள் இருக்கும்.
ஆங்கிலத்தில் VIBGYOR என்ற வார்த்தையின் மூலம் இந்த வண்ணங்களை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
அதாவது ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒவ்வொரு நிறத்தின் முதல் எழுத்தைக் குறிக்கும். v - violet, i - indigo, b - blue, g - green, y- yellow, o - orange, r- red.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வானவில்லை இரவில் காண முடியுமா?
மிக மிக சிறப்பான தகவல் அண்ணா.
பகிர்வுக்கு மிக்க நன்றி
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சில விலங்குகளின் கண்கள் இரவில் ஒளிர்வது ஏன்..?
» இரவில் பால் குடிக்கலாமா?
» இரவில் நன்றாகத் தூங்க...!
» இரவில் நன்றாகத் தூங்க...!
» இரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum