தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய்

View previous topic View next topic Go down

ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய் Empty ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய்

Post by mohaideen Mon Mar 30, 2015 3:25 pm

ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய் Ht3392


கிராமங்களில் எல்லார் வீட்டு வேலிகளிலும் கொடியாகப் பரவி, காய்த்து, பழுத்து சீண்டு வாரற்றுக் கிடக்கும் கோவைக்காயின் அருமை அனேகம் பேருக்குத் தெரியாது. நட்சத்திர ஓட்டல்களின் ஸ்பெஷல் மெனுவில் இடம்பெறுகிற அளவுக்கு இன்று கோவைக்காயின் அந்தஸ்து எங்கேயோ போய்விட்டது, காரணம், அதன் மருத்துவக் குணம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை, சுவையான கோவைக்காய் ரெசிபிகளுடன் சொல்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மையத்தின் மருத்துவர் விஜயகுமார்.கோவைக்காய், பச்சையாக இருக்கும்போது இந்திய சமையலில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைக் கொண்டு பல்வேறு வகையான உணவுகளைத் தயாரிக்கலாம். பொதுவாக இது உணவுடன் தொட்டுக்கொள்ளும் ஒரு காய்கறியாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.

நாம் உணவோடு எடுத்துக் கொள் ளும் காய்கறிகளால் நமக்கு சில நன்மைகள் ஏற்படுகின்றன. நமது உடலின் உள்ளுறுப்புகளுக்கு இதனால் பயன்கள் விளைகின்றன. அந்த வகையில் கோவைக்காயை ‘ஷக வர்க்கா’ என்று ஆயுர் வேத மருத்துவத்தில் குறிப்பிடுகின்றனர். காய்களில் உள்ள பல்வேறு வகையான குணங்கள் நமக்கு நன்மை களை அளிப்பதாக அதில் கூறப்படுகிறது.கோவைக்காயால் உடலுக்குக் கிடைக்கும்

நன்மைகள்

கோவைக்காயில் உடல்   சூட்டைத் தணிக்கும் தன்மை உள்ளது. அத்துடன் இது உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கும் குணம் கொண்டது. அதற்கேற்ற பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. கோவைக்காய் உடலில் உள்ள அதிகபட்ச சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. தேவையற்ற உணவுப் பழக்கங்களால் வயிற்றில் ஏற்படும் சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும்!

பழமையான ஆயுர்வேத மருத்துவ நூல்களில் கோவைக்காயில் உள்ள சிறப்பு அம்சங்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவைக்காயில் உள்ள மெட்டபாலிக் தன்மைகள் நமது இதயத்துக்கு மிகவும் நல்லது. இது கல்லீரலுக்கும் நன்மை பயக்கக் கூடியது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற காய் இதுவாகும். மஞ்சள் காமாலை, ஆஸ்துமா நோயாளிகள் இதை சாப்பிட்டால் விரைவில் குணம் ஏற்படும்.

மருத்துவ பயன்பாடு இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக கோவைக்காய் மற்றும் செடியிலிருந்து ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் அதிகபட்ச வெள்ளைப்படுதலைக் குணப்படுத்தவும், சிறுநீர் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தவும், வயிறு சார்ந்த செரிமான பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்துகளுக்கும் கோவைக்காய் பயன்படுத்தப்படுகிறது. விடாரியாடி கஷாயம் எனப்படும் ஆயுர்வேத மருந்து கோவைக்காய் செடியிலிருந்து பெறப்படும் சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த கஷாயம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வுத் தன்மை யை நீக்க அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சோர்வை போக்கவும் தரப்படுகிறது. எடையிழப்பு போன்ற ஊட்டச்சத்து குறை பாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் அளிக்கப்படுகிறது.இது எக்ஸிமா எனப்படும் சருமப் பிரச்னையைக் குணப்படுத்த மருந்தாக அளிக்கப்படுகிறது. வாய்ப்புண்ணை - குறிப்பாக நாக்கில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த இது உதவுகிறது.எடை குறைக்க உதவும்!

எடை குறைக்க விரும்புவோருக்கு உணவுடன் சாப்பிட ஏற்ற மிகச் சிறந்த காய் இதுவே. கோவைக்காயை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள், அதன் செடியிலிருந்து பெறப்பட்ட சாறுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உரிய மருத்துவர் பரிந்துரைப்படி சாப்பிடுவது நல்லது. வேக வைத்த கோவைக்காயுடன், குறைந்த அளவிலான உப்பு, காரம், மசாலா சேர்த்து சாப்பிட்டால், அது செரிமான பிரச்னையைப் போக்கும். சிறுநீர் பிரச்னை களை நீக்கும். நாக்குப் புண், மூச்சு விடுதலில் சிரமம் ஆகியவை கோவைக்காயில் உள்ள ரத்த சுத்திகரிப்பு தன்மை காரணமாக விரைவில் குணமாகும். அத்துடன் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, பூச்சிக் கடியால் ஏற்படும் அரிப்புகளைப் போக்கவும் இது உதவுகிறது.

கோடை காலத்தில் கோவைக்காய் சாப்பிடுவது உடலில் ஏற்படும் அதிகபட்ச வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது. இதனால் அதிக வெப்பத்தால் ஏற்படும் ஸ்ட்ரோக்குகள், சிறுநீர் நோய்கள் உள்ளிட்டவை வராமல் தடுக்க உதவுகிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய் Empty Re: ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய்

Post by mohaideen Mon Mar 30, 2015 3:25 pm

கோவைக்காய் துவையல்

என்னென்ன தேவை?  

கோவைக்காய் - 400 கிராம், தேங்காய் - 100 கிராம், தேங்காய் எண்ணெய் - 10 மி.லி., பச்சை மிளகாய் - 20 கிராம், இஞ்சி - 20 கிராம், கடலைப் பருப்பு - 130 கிராம், கொத்தமல்லி இலை - 10 கிராம், கறிவேப்பிலை - 10 கிராம், உப்பு - 
தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

1. கோவைக்காயை சுத்தப்படுத்தி நன்கு கழுவவும்.
2. கழுவிய கோவைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
4. அதில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கோவைக்காய், உப்பு இவற்றைப் போடவும்.
5. இந்தக் கலவையை நன்கு வேக வைக்கவும். இத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு அரைக்கவும்.
6. பிறகு அரைத்த துவையல் மீது கொத்தமல்லி இலையை தூவவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய் Empty Re: ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய்

Post by mohaideen Mon Mar 30, 2015 3:26 pm

கோவைக்காய் ஊறுகாய்

என்னென்ன தேவை?

கோவைக்காய்  - 1 கிலோ, தக்காளி - 500 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், நல்லெண்ணெய் - 50 மி.லி., சீரகத் தூள் - 50  கிராம், வெந்தயம் - 30 கிராம், மஞ்சள் தூள் - 10 கிராம், எலுமிச்சை - 7, உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

1. கோவைக்காயை சுத்தப்படுத்தி நன்கு கழுவவும்.
2. கழுவிய கோவைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி அதில் வெந்தயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கி அரைத்துப் பொடியாக எடுக்கவும்.
4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து தக்காளியை முழுமையாக வேக வைக்கவும். பிறகு வேகவைத்த தக்காளியின் தோலை உரித்தெடுத்து அரைத்து சாறை வடிகட்டி எடுக்கவும்.
5. கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கோவைக்காய் மற்றும் அரைத்துப் பொடியாக்கிய வெந்தயத்தை போட்டு கோவைக்காய் முழுமையாக வேகும் வரை வதக்கவும்.
6.இந்தக் கலவையுடன் மஞ்சள் தூள், தக்காளி சாறை சேர்த்து சீரகத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
7.நறுக்கிய பச்சை மிளகாய், கோவைக்காய் முழுமையாக வேகும் வரை வதக்கவும்.
8.இந்தக் கலவை ஊறுகாய் பதம் வந்தவுடன், இவற்றுடன் எலுமிச்சைச்சாற்றை ஊற்றி அடுப்பை அணைக்கவும்.
9.பின்னர் இந்த ஊறுகாயை அறை வெப்பநிலை வந்தவுடன் சுத்தமான ஜாடியில் வைக்கவும்.

ஊறுகாய் செய்வதற்கு பழுத்த கோவைக்காயை உபயோகிக்க வேண்டாம். கல் உப்பும் உபயோகிக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய் Empty Re: ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய்

Post by mohaideen Mon Mar 30, 2015 3:26 pm

கோவைக்காய் மெழுகுபிரட்டி

என்னென்ன தேவை?

கோவைக்காய் - 500 கிராம், பச்சை மிளகாய் - 30 கிராம், தேங்காய் எண்ணெய் - 10 மி.லி., மிளகுத் தூள் - 20 கிராம், கறிவேப்பிலை - 20 கிராம், மஞ்சள் தூள் - 10 கிராம், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிது.

எப்படிச் செய்வது?

1.    கோவைக்காயை சுத்தப்படுத்தி நன்கு கழுவவும்.
2.    கழுவிய கோவைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3.    கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
4.    அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கோவைக்காய், மஞ்சள் தூள், உப்பு  இவற்றைப் போடவும்.
5.    சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
6.    லேசாகக் கிளறி அதன் மீது மிளகுத் தூள் தூவி அடுப்பை அணைக்கவும்.
7.    இதன் மேல் கொத்தமல்லி இலையைத் தூவவும்.

தினகரன்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய் Empty Re: ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய்

Post by முரளிராஜா Tue Mar 31, 2015 11:15 am

சூப்பர் சூப்பர் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய் Empty Re: ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய்

Post by ஸ்ரீராம் Tue Mar 31, 2015 1:42 pm

அனைத்தும் பயனுள்ள பகிர்வு. நன்றி முஹைத்தீன்.

ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய் GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm3
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய் Empty Re: ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum