தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!

View previous topic View next topic Go down

spm4 - எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்! Empty எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!

Post by mohaideen Sun Apr 12, 2015 10:42 am

spm4 - எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்! Ld3296


பருமன் அதிகமுள்ள பெண்களில் 40 சதவிகிதம் பேருக்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் இருக்கிறது’ என்று எச்சரித்திருக்கிறது ‘கேன்சர் ரிசர்ச் யு.கே.’ அமைப்பின் சமீபத்திய ஆய்வு. பெண்களின் அதிக எடை காரணமாகவே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறது இந்த ஆய்வு.

‘புற்றுநோய் வருவதற்கு கூடுதலான எடையும் காரணம்’ என்று குறிப்பிட்டிருக்கிறது அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி. ‘இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்குள் குறுக்கிட்டு, ஈஸ்ட்ரோஜென் இன்சுலின் போன்ற ஹார்மோன்களின் அளவுகளை பாதிக்கும். கேன்சர் வளர்வதற்கு வழி வகுக்கும்’ என்கிறார்கள். எடையுடன் தொடர்புடைய 7 வித புற்றுநோய்களில் ஏதேனும் ஒன்று, ஒரு தனிமனிதரின் வாழ்நாளில் பாதிக்க வாய்ப்பிருப்பதாக பட்டியலிட்டிருக்கிறார்கள். பருமனான பெண்களுக்கு மார்பகம், குடல், கணையம், உணவுக்குழாய், கருப்பை, சிறுநீரகம் மற்றும் பித்தப்பை ஆகியவற்றில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பருமனுள்ள பெண்களில் 41 சதவிகிதம் பேருக்கு குறிப்பிட்ட 7 புற்றுநோய்களில் ஒன்று வர வாய்ப்பிருக்கிறது என்று கணித்திருக்கிறது இந்த ஆய்வு. ஆயிரம் பெண்களில் 274 பேர்கள் எடையோடு தொடர்புடைய புற்றுநோயை எதிர்கொள்கிறார்களாம். ஆரோக்கியமான எடையுள்ள பெண்களில் ஆயிரத்தில் 194 பேரையும் புற்றுநோய் தாக்க வாய்ப்பு இருக்கிறது.

பருமனுள்ள பெண்களுக்கு எந்தெந்த புற்றுநோய் வரலாம் என்பதையும் அவற்றுக்கான அபாய சதவிகிதங்களையும் இந்த ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது. அவை... மாதவிடாய்க்குப் பிறகு வரும் மார்பகப் புற்றுநோய் - 25%, கணையப் புற்றுநோய் - 31%, குடல் புற்றுநோய் - 32%, சிறுநீரகப் புற்றுநோய் - 78%, பித்தப்பை புற்றுநோய் - 100%. கருப்பை புற்றுநோய் - 131%, உணவுக்குழாய் புற்றுநோய் - 133%. இந்த ஆய்வு, புற்றுநோய் வளர்ச்சியில் எடையின் முக்கியத்துவத்தை கட்டம் கட்டிக் காட்டியிருக்கிறது.

கேன்சர் ரிசர்ச் யு.கே. ஆய்வுக்குழு தலைவர் டாக்டர் ஜூலி ஷார்ப் இப்படிக் குறிப்பிடுகிறார்... ‘‘கேன்சர் வருவதற்கான அபாயம் என்பது நம் மரபணுக்களின் கலவை, சுற்றுச்சூழல், வாழ்க்கையின் மற்ற அம்சங்களைச் சார்ந்தது என்பதை நாம் அறிவோம். அவற்றில் பெரும்பாலானவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் புற்றுநோய் வளர்வதற்கான அபாயத்தைக் குறைக்கலாம் என்பதை மக்களுக்குப் புரிய வைப்பது முக்கியமானது. சரியான எடையைப் பராமரிப்பது, முறையான டயட்டில் இருப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். இந்த மாற்றங்களைச் செய்வதால் நமக்கு புற்றுநோய் வராது என்பதல்ல... அதிலிருந்து நம்மை வெகு தூரம் தள்ளி வைக்கலாம்!’’

பருமன் என்பது உலகெங்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அமெரிக்காவில் 7 கோடியே 86 லட்சம் பேருக்கு பருமன் பிரச்னை இருக்கிறது. அதிலும் 40-59 வயதுக்கு உட்பட்ட அமெரிக்கர்களுக்கு இது  சர்வ சாதாரணமான விஷயம். பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமானோரும், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவரும் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பருமனால் புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதைப் போலவே இதய நோய்கள், பக்க வாதம், நீரிழிவு பிரச்னைகள் வருவதற்கான அபாயங்களும் அதிகம். இங்கிலாந்து பெண்களின் புற்றுநோய் கேஸ்களில் 7 சதவிகிதம் பருமனோடு தொடர்புடையது. உஷார் தோழிகளே!


http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3298
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

spm4 - எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்! Empty Re: எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!

Post by செந்தில் Sun Apr 12, 2015 10:51 am

பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

spm4 - எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்! Empty Re: எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!

Post by ஸ்ரீராம் Sun Apr 12, 2015 6:33 pm

சிறப்பான மருத்துவ பகிர்வுக்கு நன்றி மொஹைதீன்.

spm4 - எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்! 5v3z2b

spm4 - எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்! GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm4
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

spm4 - எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்! Empty Re: எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!

Post by முரளிராஜா Mon Apr 13, 2015 1:52 pm

நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

spm4 - எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்! Empty Re: எடை குறைக்க இதோ இன்னொரு காரணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum