Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான சில விஷயங்களுக்கும் தொடுதலுக்கும் என்ன தொடர்பு
Page 1 of 1 • Share
குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான சில விஷயங்களுக்கும் தொடுதலுக்கும் என்ன தொடர்பு
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
துன்பம் நெருங்கி வந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
- மகாகவி பாரதியார்
குழந்தைகளுக்கெதிரான வன்முறை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, நாட்டிலோ மட்டும் இல்லை. உலகம் முழுதுமே உண்டு. இதை நீங்கள் படிக்கும் இந்த நொடி கூட, ஏதோ ஓர் இடத்தில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். நாடுகளுக்கான அரசியல் பிரச்னைகள் கூட குழந்தைகளை குறிவைத்தே சில நேரம் நிகழ்கின்றன. சமீபத்திய போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை கண்டு கண்ணீர் உதிர்க்காத மனம் இருக்க முடியாது.
உலக நாடுகளில் குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான சில விஷயங்களுக்கும் தொடுதலுக்கும் என்ன தொடர்பு என உங்கள் மனதில் கேள்வி எழலாம். இவ்விஷயங்களால் பாதிக்கப்படுகிற குழந்தைகளும், அவர் களைத் துன்புறுத்தும் மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் குழந்தைகளைத் தவறாக நடத்துதலில் தொடர்பு கொண்டுள்ளார்கள். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் மட்டுமே பொருளாதார ஏற்ற இறக்கங்களையும் தாண்டி குழந்தைகளைப் பாதுகாக்கும்
10 ஒற்றைப் பெற்றோர்
தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று ஏகப்பட்ட உறவுமுறைகளுடன் அத்தனை குழந்தைகளும் ஒன்றாக வளர்ந்த நம் நாட்டிலேயே, இப்போது ஒற்றைப் பெற்றோர் அதிகமாகி வருகின்றனர். அதிலும் தமிழ்நாட்டில் மிக அதிகம் என்று நீதிமன்றத்தில் காத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை கூறுகிறது. ஆணும் பெண்ணும் பிரிவது என்பதற்கும், ஒரு பெற்றோர் பிரிவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒற்றைப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் மனரீதியான பாதுகாப்பை உணருவதில்லை. அவர்களில் சிலரே படிப்பிலும் மற்றவற்றிலும் சிறந்தவர்களாக உள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர்.
9 போதை / மதுப் பழக்கம்
‘ஒயிட்னர்’ எனப்படும் அழிக்க உபயோகப்படுத்தும் திரவத்தைக்கூட போதைப் பொருளாக 8வது வகுப்பு படிக்கும் குழந்தைகள் நம் ஊரில் பயன்படுத்துவது உங்களுக்குத் தெரியுமா? சின்னஞ்சிறுவர்கள் மதுபாட்டில்களோடு இருப்பதையும் கண் முன்னே காண்கிறோம். தனிப் பெற்றோர், அதிக குழந்தைகள் உள்ள குடும்பம் போன்றவற்றில் இருப்போரே இப்பழக்கத்தில் எளிதாகச் சிக்குகின்றனர்.
8 அதிவிரைவில் வளர்தல்
மிக மனவருத்தத்துடன் பகிர வேண்டிய விஷயங்களில் இது முக்கியமானது. குழந்தைப் பருவம் என்பதே இப்போதுள்ள குழந்தைகளுக்கு இல்லை. சக்கரவண்டி ஓட்டுவது, பனங்காயில் குச்சி செருகி உருட்டுவது, கிட்டிப்புல் விளையாட்டு... இவையெல்லாம் இப்போது இருக்கிறதா? விளம்பர யுகத்தில் கிரிக்கெட்டும், கோச் வைத்து பயிலும் விளையாட்டும் கூட காலத்தின் கட்டாய மானது. அதைவிட கொடுமையானது... சின்னஞ்சிறு குழந்தைகளை இரட்டை அர்த்தப் பாடலுக்கு, உடலுக்குப் பொருந்தா உடையிட்டு ஆட விடுவது. வயதுக்கு மீறிய மனவளர்ச்சி அடைதல் பால்யத்துக்குப் பாதகம் என்பதை அறிவீரோ?
7 பள்ளி வன்முறை
மிகச் சமீபத்தில் வந்த ஒரு செய்தி... நோட்டுப் புத்தகத்தின் பக்கத்தை கிழித்த ஒரு பையனை இன்னொரு பையன் அடித்தே கொன்றான். எங்கிருந்து வருகிறது இந்த கொடூர மனமும் முரட்டுத்தனமும். மாணவன் ஆசிரியையை கத்தியால் குத்திய சம்பவமும் இங்கேதானே நடந்தது? வீட்டில் வளர்க்கப்படும் சூழ்நிலையே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. கண்டிப்பும் அன்பும் கலந்த உறவுகள் இல்லாததால், குற்றங்கள் பெருக நாமே காரணம் ஆகிறோம்.
6 பொருள்சார் வாழ்க்கை
ஷாப்பிங் மாலில், டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில், துணிக்கடைகளில் சின்ன குழந்தைகள் அழுது அடம்பிடிப்பதையும் பெற்றோரை எடுத்தெறிந்து பேசுவதையும் அன்றாடம் பார்க்கிறோம். ஸ்மார்ட் போன், ஐபேட், வீடியோ கேம்ஸ் போன்றவற்றை, பெரியவர்களை விடவும் குழந்தைகளுக்கு நன்றாக உபயோகிக்கத் தெரியும். எது லேட்டஸ்ட் என்பது உள்பட அனைத்துத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். ஆனால், இது அவசியமா? குறிப்பிட்ட வயது வரை, பெரும்பாலும் பெற்றோர் வாங்கிக் கொடுத்து உபயோகிப்பதே நன்று. ‘எனக்குக் கிடைக்காதது என் குழந்தைக்கு’ என்கிற மனப்பாங்கு சில நேரம் ஆபத்தாக முடியும். ஸ்மார்ட் போன் வாங்கித் தராத தந்தையை தண்டிக்க 8வது படிக்கும் சிறுவன் தற்கொலை செய்தது, வருத்த உதாரணம்.
5 பருமன்
உலகெங்குமே நிறைய குழந்தைகள் ஓபிசிட்டி எனப்படும் பருமன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கூடி விளையாடும் விளையாட்டில் உள்ள சுகத்தை விட, சொகுசாக வீட்டில் சாப்பிட்டபடி டி.வி. பார்ப்பதும், வீடியோ கேம்ஸில் வீரத்தைக் காட்டுவதும் இக்கால ஆர்வமாக இருக்கிறது. குழந்தைகளை வெளியே சென்று விளையாட அனுமதியுங்கள். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கட்டும். வெற்றி, தோல்விகள் தெரியட்டும். இப்போது இல்லாவிட்டால் எப்போதுமே முடியாது என்பது பருமனுக்கும் பொருந்தும்.
4 கல்வித் தரம்
ஒரு குடியிருப்பிலுள்ள குழந்தைகளிடம் கண்ட ஒரு நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. அங்கு சிலர் இன்டர்நேஷனல் பள்ளியிலும், சிலர் சிபிஎஸ்சியிலும், சிலர் மெட்ரிகுலேசன் பள்ளியிலும் படிக்கின்றனர். கூடி அமர்ந்துப் பேசும் அக்குழந்தைகள், வகுப்பறையில் ஏசி வசதி உள்ளது பற்றியும், இன்னொரு பள்ளியின் யூனிஃபார்ம் குறித்தும் கூட உயர்த்தியும் தாழ்த்தியும் விவாதித்தது அதிர்ச்சி யளித்தது. கல்வியின் இந்த ஏற்றத்தாழ்வு பல்வேறு வகைகளில் குழந்தைகளைப் பாதிக்கிறது. கிராமத்திலோ, தமிழ் மீடியத்திலோ படித்த குழந்தைகள் கல்லூரிக்குள் நுழைந்ததும் கலங்கிப் போவது தெரிந்ததுதானே?
3 பொருளாதாரக் கட்டாயங்கள்
குழந்தைத் தொழிலாளர்கள் என்பது ஒரு நாட்டின் சாபக்கேடுதான். திருப்பூரிலும் சிவகாசி யிலும் மட்டுமல்ல... நம் அருகிலும் இருக்கக்கூடும். நடக்கக்கூட முடியாத சின்னஞ்சிறு பாதங்களும் பொருளாதார ஓட்டத்தில் பங்கேற்பது வேதனைக்குரியது. முன்னேறும் நாடான நம் இந்தியாவில் இது மிக அதிகமும் கூட. ஊர் விட்டு ஊர் வந்து பொருள் தேடும் நோக்கில், குழந்தைகள் கூடா நட்பில் சேர்வதும், குற்றச் செயலுக்குத் துணை போவதும் கொடுமைதானே?
2 ஏழ்மை
உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறது நம் மும்பை. இந்தியாவின் பணம், வாணிகம் மற்றும் பொழுதுபோக்கின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்தியாவின் இந்தக் கனவு நகரத்தில்தான் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி இருக்கிறது. வேலைவாய்ப்பு, சுகாதாரம், கழிப்பிடம் உள்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாத குடிசைப் பகுதி குழந்தைகள் நிழல் உலக நிகழ்வுகளில் பங்கு வகிப்பது, இங்கு சர்வசாதாரணமான விஷயம்!
1 உரிமை மறுக்கப்படுதல்
படிப்பு, வேலை வாய்ப்பு, திறமைகளை வளர்த்தல் போன்றவற்றில் நிலவும் அரசியல் குழப்பங்களும், நாட்டின் கண்களான குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன.
- தினகரன்

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான சில விஷயங்களுக்கும் தொடுதலுக்கும் என்ன தொடர்பு
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா
Re: குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான சில விஷயங்களுக்கும் தொடுதலுக்கும் என்ன தொடர்பு
மிக பயனுள்ள தகவல்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குழந்தைகளைப் பாதிக்கும் பொதுவான சில விஷயங்களுக்கும் தொடுதலுக்கும் என்ன தொடர்பு
விழிப்புணர்வு தரும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..?
» பன்றிக்கும் உண்டியலுக்கும் என்ன தொடர்பு?
» சைக்கோமெட்ரிக் தேர்வு: மழைக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு?
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum