Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆட்டிஸம் வகை குறைபாடுகள்
Page 1 of 1 • Share
ஆட்டிஸம் வகை குறைபாடுகள்
டாக்டர் மனசே... மனசே... சித்ரா அரவிந்த்
ரவி 2 வயதான ஆரோக்கியமான குழந்தை. ஆனால், இதே வயதில் அவன் அக்கா செய்த எந்த விஷயத்தையும் ரவி செய்யவில்லை என பெற்றோருக்கு ஆதங்கம். ரவி இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை... எனினும் பிறர் பேசும் வார்த்தைகளை அர்த்தமின்றி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். பிறரிடம் பேசுவதற்காக வார்த்தைகளை உபயோகிக்காமல், அதன் சத்தத்தைக் கேட்பதில் மட்டும் ஆர்வம் காட்டினான். யாரேனும் பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் திரும்பிப் பார்ப்பதில்லை. அவன் விளையாடுவதும் வினோதமாக இருந்தது. குழாயிலிருந்து தண்ணீர் சொட்டுவதை பலமணி நேரம் லயித்து பார்த்துக் கொண்டே இருப்பான்.
வீட்டில் எந்த ஒரு பொருள் சிறியதாக இடம் மாற்றி வைக்கப்பட்டிருந்தாலும் அல்லது வழக்கத்துக்கு மாறாக எது செய்தாலும், அதைக் குறித்து எரிச்சலும் கோபமும் அடைந்து ஆர்ப்பாட்டமும் செய்தான். இதனாலேயே, அவனின் விருப்பத்தை மீறி, அவன் பெற்றோர் எதை செய்வதற்கும் பயப்பட்டார்கள். அர்த்தமில்லாத வாசகங்களைச் சொல்லி முன்னும் பின்னும் ஆடிக் கொண்டும் சுழன்று கொண்டும் இருந்தான். குழந்தைத்தனமாக இருக்கின்றான் போகப் போக சரியாகிவிடுமென அவன் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால், 4 வயதாகியும் அவன் செயல்பாட்டில் முன்னேற்றம் எதுவுமில்லாமல் மோசம் தான் அடைந்து இருந்தது.
இப்படி வித்தியாசமாக செயல்படும் ரவிக்கு என்ன பிரச்னை? ஆம், ரவிக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளில் முக்கியமான ஒன்றான ஆட்டிஸம் கோளாறு உள்ளது. இது குழந்தைகளை தாக்கும் நரம்பியல் வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று. இக்கோளாறு பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. இவ்வகைக் கோளாறு, குழந்தையின் மொழி, பேச்சுத் திறன், சமூகத்திறன் மற்றும் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கிறது. ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தில் நான்கு வகை குறைபாடுகள் உள்ளன.
1. ஆட்டிஸம் குறைபாடு (Autism).
2. அஸ்பெர்ஜர் குறைபாடு (Asperger’s Disorder).
3. குழந்தைப் பருவ சிதைக்கும் குறைபாடு (Childhood Disintegrative Disorder).
4. பிற குறிப்பிடப்படாத ஆட்டிஸ வகை குறைபாடுகள்.
இத்தகைய ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடுகள், குழந்தையின் பல்வேறு வளர்ச்சியை பாதிப்பதால் பெர்வேஸிவ் வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள் (Pervasive Developmental Disorders) எனவும் அழைக்கப்படுகிறது. இக்குறைபாட்டின் பாதிப்புகள், ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும். சரியான நேரத்தில் கொடுக்கப்படும் உதவியால், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், நிறைவான வாழ்வை வாழ உதவ முடியும்.
இந்த நான்கு வகைக் குறைபாடுகளில் ஆட்டிஸம் குறைபாடுதான் அதிகம் பரவலாக காணப்படுகிறது. இந்த நான்கு குறைபாடுகளின் அடிப்படை அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால், அவற்றின் தாக்கம் மற்றும் தீவிரம் வெவ்வேறு விதமாக இருக்கும். ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளிடையே கூட அறிகுறிகள் வெவ்வேறு விதமாக காணப்படும். மூன்று வயதுக்கு முன்னரே அறிகுறிகள் காணப்படும். ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆற்றல், அறிவுத்திறன் மற்றும் செயல்பாடுகள் பரவலாக வேறுபட்டிருக்கும். (எ.டு.) சில குழந்தைகள் பேசவே மாட்டார்கள். சில குழந்தைகள் குறைவாகப் பேசுவார்கள்.
மேலும், சில குழந்தைகளின் பேச்சுத்திறன் ஓரளவு வளர்ச்சி அடைந்திருக்கும். மேலும், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைபாடும் (Intellectual Disability) சேர்ந்தே இருக்கலாம். ஆனால், இரண்டும் வெவ்வேறு நரம்பியல் வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள். ஏனெனில், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளின் அறிவுத்திறன் (மினி) சராசரி மற்றும் சராசரிக்கு மேலேகூட இருக்கும். மேலும், இவர்களுக்கு கணித கணக்கீடுகள், வரைகலை, இசைத்திறன் மற்றும் நினைவாற்றல் போன்ற விஷயங்களில் அபார சக்தி இருக்கும் வாய்ப்பு அதிகம். (எ.டு.) ஒரே ஒருமுறைக் கேட்டதுமே கூட, பியானோவை வாசிக்க கற்றுக்கொள்ளும் திறமை, கடினமான கணக்கை மனதிலேயே போட்டு முடித்து விடும் ஆற்றல், நன்றாக வரையும் திறமை... போன்றவை.

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஆட்டிஸம் வகை குறைபாடுகள்
பெற்றோர் தங்கள் குழந்தைகளிடத்தில் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்..
எல்லோரையும் விட பெற்றோருக்குத்தான் தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகள் குறித்து மிக நன்றாகத் தெரிந்திருக்கும். தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டாலோ, ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, அதை உடனடியாக மருத்துவரின் கவனத்துக்கு கொண்டு சென்று தெளிவு பெற வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் வளர்ச்சி மைல்கற்களை அடைவதில் சற்றே வித்தியாசங்கள் இருப்பது சகஜம்தான். ஆனால், பொதுவாக, “தானாக சரியாகிவிடும்”, ‘‘பொறுத்திருந்து பார்க்கலாம்”, போன்ற வாசகங்களைக் கேட்டு தாமதிக்காமல் சந்தேகத்தைத் தெளிவு செய்வது மிகவும் நல்லது.
ஏனெனில், குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடிக்கப்படும் இவ்வித குறைபாடுகளுக்கு தாமதிக்காமல், சரியான நேரத்தில் ஆரம்பக்கட்ட சிகிச்சை மேற்கொண்டால், அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம். ஆட்டிஸத்தை 2 வயதுக்கு முன் கண்டறிவது கடினம். ஆனால், 12-18 மாதங்களிலேயே இதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். ஆட்டிஸம் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை பொதுவாக தனிமையை விரும்பும் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தை மிகவும் சமர்த்து என எண்ணி, அறிகுறிகளைப் புறக்கணிக்க கூடும். ஆகவே, பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி பார்ப்போம்.
1. தாய் பாலூட்டும் போது, குழந்தை தாயின் கண்களைப் பார்க்காது.
2. முகம் பார்த்து சிரிக்காது.
3. பெயரைச் சொல்லி அழைக்கும் போது திரும்பிப் பார்க்காது.
4. கண்ணில் படும் பொருட்களை ஆர்வமாக பின்தொடர்ந்து செல்லாது.
5. டாட்டா காட்டி கையசைக்காது.
6. பிறர் கட்டியணைத்தாலும், எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது.
7. பிறர் செய்யும் முகபாவனைகள் மற்றும் செயல்பாடுகளை திரும்ப செய்து பார்க்காது.
8. பிறரின் கவனத்தை ஈர்க்கும்படி எதுவும் செய்யாது (தூக்கச் சொல்லாது, ஒலி எழுப்பி தன்னைப் பார்க்க வைக்காது)
9. மற்றவர்களுடன் விளையாட எத்தனிக்காது.
10. பிறரிடம் சைகையில் பேச எந்த முயற்சியும் செய்யாது.

ஆரம்பக்கட்ட முக்கிய அறிகுறிகள்
1. ஆறு மாதம்: மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சிரிக்காமல் இருப்பது.
2. ஒன்பது மாதம்: ஒலியை ஏற்படுத்தி பிறருடன் சிரித்து விளையாடாமல் இருப்பது/முகபாவனைகள் செய்யாமல் இருப்பது.
3. 12 மாதம்: 1) பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காதது.
2) மழலைப் பேச்சு பேசாமல் இருத்தல்.
4. 16 மாதம்: கொஞ்சம் கூட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது.
5. 24 மாதம்: அர்த்தமுள்ள இரண்டு வார்த்தை சொற்றொடர்களை தானே உருவாக்கி பயன்படுத்த தெரியாமல் இருத்தல்.
மேலே பார்த்த வளர்ச்சி மைல்கற்களில் தாமதம் ஏற்பட்டால், உடனே குழந்தையை மனநல வல்லுநரிடம் ஆய்வுக்கு அழைத்து செல்வது மிகவும் அவசியம். ஒருசில அறிகுறிகளை வைத்து குழந்தைக்கு ஆட்டிஸம் உண்டு என கணித்து விட முடியாது. பல அறிகுறிகள் ஒருசேர இருந்து குழந்தையின் பேசும் திறன், சமூகத்திறன், கல்வித்திறன், விளையாட்டு, தினசரி செயல்பாடுகள் போன்றவற்றைப் பாதிக்கும் போதுதான் அது ஆட்டிஸமாக இருக்கக்கூடும். தேர்ச்சி பெற்ற வல்லுநர் பரிசோதித்து பார்த்தப் பின்னர் குழந்தைக்கு பல்வேறு விதமான ஆய்வுகள் செய்யப்படும். அதன் பிறகே, குழந்தைக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3474

Similar topics
» கற்றல் குறைபாடுகள் Learning Disorders
» குழந்தைகளின் கல்விக் குறைபாடுகள்
» குழந்தைகளின் இயக்கத்திறன் குறைபாடுகள்
» பேச்சு மொழித் திறன் குறைபாடுகள்
» லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum