தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி

View previous topic View next topic Go down

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி Empty காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி

Post by mohaideen Thu Apr 23, 2015 11:47 am

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி Ht3469
காசநோய்க்கான சிகிச்சை முறைகளை கண்டுபிடித்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன பிறகும் கூட உலக அளவில் இந்த நோயின் தாக்கம்  அதிகமாகவே உள்ளது. காரணம், இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இன்னமும் பொதுமக்களுக்கு முழுமையாக ஏற்படவில்லை. இந்த நோயைத் தடுக்க  உதவுகின்ற சுற்றுப்புற சுத்தம் இந்தியா உள்பட இன்னும் பல நாடுகளில் மேம்படவில்லை. 

இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. உலக காச நோயாளிகளில் ஐந்தில் ஒருவர் இந்தியர். இங்கு வருடத்துக்கு 22  லட்சம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஒரு காசநோயாளி ஆண்டுதோறும் 10  முதல் 15 பேருக்கு இந்த நோயைப் பரப்புகிறார். தமிழகத்தில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த நோய் குழந்தை முதல் முதியோர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு மற்றும் எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு இது வருகிற  வாய்ப்பு மிக அதிகம்.

காசநோய் கிருமிகள்


‘மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்’ (Mycobacterium tuberculosis) எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பதால் காசநோய் வருகிறது. வழக்கத்தில்,  காற்றோட்டம் சரியில்லாத வீடுகளிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களிலும், பஞ்சாலை, நூற்பாலை, சிமென்ட்   ஆலை, பீடித்தொழில் இடங்கள்,  சுரங்கங்கள், ரப்பர் தோட்டம்   போன்றவற்றில் இந்தக் கிருமிகள் அதிக அளவில் வசிக்கும். அப்போது அங்கு வாழும் மக்களைத் தாக்கி காசநோயை  ஏற்படுத்தும்.

யாருக்கு வாய்ப்பு அதிகம்?

புகைப்பிடிப்பவர்கள், ஊட்ட சத்துக்குறைவு உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், வறுமையில் வாடும் ஏழைகள், அறியாமையில் உள்ளவர்கள், சர்க்கரை  நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்துபவர்கள், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள், காசநோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகுபவர்கள்  ஆகியோரை இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது.

எய்ட்ஸ் நோயும் காசநோயும்


காசநோய்க்கும் எய்ட்ஸ் நோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது  என்பதால் காசநோய்க் கிருமிகள் இவர்களை எளிதில் தாக்கிவிடும். அதே நேரத்தில் காசநோய்க்கான மருந்துகளும் இவர்களுக்கு வேலை செய்யாது.  இதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மரணம் விரைவில் வந்து சேரும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி Empty Re: காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி

Post by mohaideen Thu Apr 23, 2015 11:48 am

எப்படிப் பரவுகிறது?

காசநோய் கிருமிகள் நோயாளியின் நுரையீரலில் வசிக்கும். நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைத் துப்பினாலோ  கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் இந்தக் கிருமிகள்  ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும்.  நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள்  பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போது கூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. 

பாதிக்கின்ற உடல் உறுப்புகள்


காசநோய் கிருமிகள் நுரையீரல், நுரையீரல் உறை, குடல், குரல்வளை, எலும்பு, முதுகுத்தண்டுவடம், சிறுநீரகம், கண், தோல், மூளை, மூளை உறை,  விந்துக்குழல், கருப்பை இணைப்புக் குழல், நிணநீர்ச் சுரப்பிகள் என்று பல உறுப்புகளைப் பாதிக்கின்றன. 

அறிகுறிகள்

காசநோய்க் கிருமிகள் உடலில் எந்த உறுப்பைப் பாதிக்கிறதோ அதைப் பொறுத்து அறிகுறிகள் அமையும். பொதுவாக, இந்த நோய் நுரையீரல்களையே  அதிக அளவில் பாதிப்பதால் நுரையீரல் காசநோய்க்குரிய (Pulmonary tuberculosis) அறிகுறிகளைப் பார்ப்போம். 3 வாரங்களுக்கு மேல் நீடிக்கின்ற  இருமல், சளி, சளியில் ரத்தம், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைவது, களைப்பு, சுவாசிக்க சிரமம் ஆகியவை இதன் பிரதான  அறிகுறிகள்.

பரிசோதனை வகைகள்


ஒருவருக்குக் காசநோய் உள்ளதா என்பதை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை, மேண்டோ பரிசோதனை, சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, சிடி  ஸ்கேன் போன்றவை உதவும். இவற்றில் சளிப் பரிசோதனை முக்கிய மானது. சளியில் காசநோய்க் கிருமிகள் இருக்குமானால் அது காசநோயை 
100 சதவிகிதம் உறுதி செய்யும். 
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி Empty Re: காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி

Post by mohaideen Thu Apr 23, 2015 11:49 am

சிகிச்சை என்ன?

நவீன மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியால் இன்றைக்கு காசநோயைக் குணப்படுத்த பலதரப்பட்ட மருந்துகள் உள்ளன. ரிஃபாம்பிசின், ஐசோநியசிட்,  எத்தாம்பூட்டால், பைரசினமைடு, ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி மருந்து ஆகியவை முதல்நிலை காசநோயைக் குணப்படுத்துகின்றன. இவற்றை நோயின்  ஆரம்பநிலையிலேயே மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு முறைப்படி ஒருநாள்கூட நிறுத்தாமல் சாப்பிட வேண்டியது முக்கியம். 

இந்தியாவில் 1993ல் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன், ‘திருத்தப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது.  இதன்படி, ‘டாட்ஸ்’ (DOTS  Directly observed treatment short course ) என்று அழைக்கப்படும் ‘கூட்டு மருந்துச் சிகிச்சை’ அரசு  மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையை மொத்தம் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், காசநோய்  முற்றிலும் குணமாகிவிடும். என்றாலும், இறுதியாக ஒருமுறை சளிப் பரிசோதனையைச் செய்து அதில் காசநோய்க் கிருமிகள் இல்லை என்று உறுதி  செய்யப்பட்ட பிறகே சிகிச்சையை நிறுத்த வேண்டும்.

விபரீத விளைவுகள்


காசநோய்க்கு சிகிச்சை பெறத் தவறினால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும். உணவு சாப்பிட முடியாமல், சுவாசிக்க முடியாமல், ரத்த வாந்தி வந்து  மரணம் நெருங்கும். 

மருந்தை நிறுத்தக்கூடாது


காசநோய்க்கு மருந்து சாப்பிடாதது எவ்வளவு ஆபத்தானதோ, அதற்கு நிகரான ஆபத்தை உடையது மருந்தைப் பாதியில் நிறுத்திவிடுவது. இந்தியாவில்  காசநோயை இன்னமும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதற்கு முக்கியக் காரணம் இதுதான். காசநோய் முற்றிலும் குணமாகக் குறைந்தது ஆறு  மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும். ஆனால், மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த 2 மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள்  மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நினைத்துப் பெரும்பாலோர் மருந்து சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். 

மேலும், காசநோய்க்குத் தரப்படுகின்ற மாத்திரைகளுக்கு வாந்தி, கிறுகிறுப்பு, சோர்வு போன்ற பக்கவிளைவுகள் சிகிச்சை ஆரம்பித்த சில  வாரங்களுக்குத் தொல்லை கொடுக்கும். இவற்றுக்குப் பயந்து மருத்துவர்களை ஆலோசிக்கா மலேயே மருந்துகளை நிறுத்திவிடுபவர்கள் அதிகம் பேர். இன்னொன்று, ‘காசநோய் இருப்பது அடுத்தவருக்குத் தெரிந்தால் சமூகத்தில் மரியாதை குறைந்துவிடும்... மற்றவர்கள் நம்மை ஒதுக்கிவிடுவார்கள்’  என்று பயந்தே பலர் சிகிச்சை எடுத்துக்கொள்ள முன்வருவதில்லை. 

காசநோயாளிகளில் 60 % முதல் 70 % பேர் வரை தனியார் மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களில் பலருக்குத் தொடர்ந்து  மாத்திரை வாங்குவதற்கு பண வசதி இல்லாததாலும், அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்வது, வேளைப்பளு, வேலையின்மை போன்ற  காரணங்களாலும் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளத் தவறிவிடுகின்றனர். இவை அனைத்துமே காசநோயை ஒழிப்பதற்குத் தடையாக  நிற்கின்றன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி Empty Re: காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி

Post by mohaideen Thu Apr 23, 2015 11:49 am

நோய் தீவிரமாவது ஏன்? 

இந்த நோய்க்குச் சிகிச்சையை ஆரம்பித்த  சில வாரங்களில் அறிகுறிகள் மறைந்து, நோயின் தீவிரம் குறைந்ததுபோலத் தெரிந்தாலும்,  நோய்க்கிருமிகள் உடலில் செயல் இழப்பதில்லை. மருந்துகளை முறைப்படி எடுத்துக்கொள்ளாமல், விட்டுவிட்டு எடுத்துக் கொள்ளும்போதும், பாதியில்  நிறுத்திக் கொள்ளும்போதும், நோய்க்கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடுவதற்குத் திறனைப் பெற்றுவிடுகின்றன. அதன்பிறகு  ஏற்கனவே கொடுத்துவந்த மாத்திரைகளால் இந்தக் கிருமிகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியாது. 

இதன்விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB) அது உருமாறிவிடும். இதற்கு 2  வருடங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும், இவர்களால் பரவுகின்ற காசநோயும் மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாகவே பரவுகிறது.  தமிழகத்தில் மட்டும் வருடத்துக்கு 10 ஆயிரத்துக்கும் அதிக நோயாளிகள் இந்த நிலைமையில் கண்டறியப்படுகிறார்கள். இவர்கள் இந்த  நிலைமையிலும் சிகிச்சையை சரியாகப் பெறாவிட்டால், இன்னும் தீவிர நிலைக் காசநோயாக (Extreme Drug Resistance TB) மாறிவிடும். இது  உயிருக்கு ஆபத்தைத் தருகின்ற மிக மோசமான நிலை. 

உணவும் மருந்துதான்!


காசநோயைப் பொறுத்த வரை சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டியதும் அவசியம். குறிப்பாக, புரத உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். பால்,  முட்டை, பருப்பு, பயறு, ஆட்டுக்கறி, எலும்பு சூப் போன்றவற்றைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடாதவர்கள் பருப்பு மற்றும்  ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதற்கு அவர்களுடைய பொருளாதாரம் ஒத்துழைக்க வேண்டும். வேதனை என்னவென்றால்,  நம் சமுதாயத்தில் ஏழை, எளியவர்களுக்குத்தான் இந்த நோய் கணிசமாக வருகிறது. முன்பு காசநோயாளிகளுக்கென்று தாம்பரம், மதுரை,  ஆசாரிப்பள்ளம் போன்ற ஊர்களில் டி.பி. சானட்டோரியங்கள் இருந்தன. அங்கு உள் நோயாளிகளுக்கு சத்தான உணவுடன் தரமான சிகிச்சையும்  தரப்பட்டன. இப்போது அவை முன்பு போல இயங்கவில்லை என்பது ஒரு சோகம். இதனால் காசநோயாளிகளிடம் இருந்து மற்றவர்களுக்கும் நோய்  பரவும் அபாயம் ஏற்படுகிறது. மீண்டும் தமிழகத்தில் சானட்டோரியங்கள் முழுமூச்சுடன் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி Empty Re: காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி

Post by mohaideen Thu Apr 23, 2015 11:50 am

மேம்பட வேண்டும் சுகாதாரப் பழக்கம்!

சுகாதாரத்தில் மேம்பட்டுவிட்ட உலக நாடுகள் பலவற்றில் காசநோய் கட்டுப்பட்டுவிட்டது. சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள இந்தியா, பாகிஸ்தான்  போன்ற நாடுகளிலோ காசநோயை ஒழிப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. காரணம், நம்மவர்கள் சுற்றுப்புறத்தை நோய்த் தொற்றுப்புறமாக மாற்றுவதில் வல்லவர்கள். அதிலும் காசநோயாளிகள் எச்சில், சளி போன்றவற்றைத் துப்பும் உணர்வுக்கு அதிகமாக ஆளாவார்கள். இதனால்  இவர்களுக்குப்   பொது இடம் என்றுகூட பார்க்காமல் எச்சில் துப்புவதும் மூக்கைச் சிந்துவதும் தவிர்க்க முடியாத பழக்கமாக மாறிவிடும்.  இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையால் வாயையும் மூக்கையும் மறைத்துக்கொள்ள வேண்டும் என்கிற சாதாரண சுகாதாரப்  பழக்கத்தைக்கூட அநேகம் பேர் பின்பற்றுவதில்லை. இந்தக் காரணத்தாலும் இந்த நோய் நம் நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  அடுத்து, பீடி, சிகரெட், சுருட்டு உள்ளிட்ட புகைப்பழக்கம் காசநோய் பரவுவதற்குத் துணைபோகிறது. இந்தியாவில் மட்டும் 70 லட்சம் இளைஞர்கள்  புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அப்படியென்றால், இவர்களுக்கெல்லாம் காசநோய் வருவதற்கு  வாய்ப்பு ஏற்படுகிறது.

தேவை சமூக ஒத்துழைப்பு


தமிழகத்தில் காசநோயை ஆரம்பநிலையிலேயே குணப்படுத்துவதற்குச் சிறந்த ஏற்பாடுகள் உள்ளன. உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மத்திய,  மாநில அரசுகளும் இதற்குக் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ‘டாட்’ பொறுப்பாளர்களை நியமித்து, அந்தப் பகுதியில்  உள்ளவர்களுக்கு காசநோயின் அறிகுறிகள் தெரிந்தால், உடனே அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சரியானமுறையில்  மருந்துகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றனர். என்றாலும், அவ்வப்போது காசநோய் மையங்களில் மாத்திரை, மருந்துகள் வழங்கப்படுவதில்லை  என்ற குற்றச்சாட்டும் வந்துகொண்டிருக்கின்றன.

ஆகவே அரசின் இந்த ஏற்பாடு மட்டும் போதாது. மனித குலத்தின் எதிரியாக அசுர உருவம் எடுத்துள்ள காசநோயை ஒழிக்க ஒட்டுமொத்த சமூகமும்  கைகோர்க்க வேண்டும். காசநோயாளிகள் அனைவரும் சரியான காலத்துக்கு முறையான சிகிச்சை பெற்றுக்கொள்வதை ஊக்கமளிப்பதற்கு சமூக  அக்கறை உள்ள பொதுநிறுவனங்கள் இப்பணியில் ஈடுபட வேண்டும். மருத்துவர்கள், பொதுமக்கள், ரோட்டரி, லயன் போன்ற சமூகநல அமைப்புகள்  அரசு இயந்திரத்துடன் இணைந்து செயல்பட்டால் காசநோயை 100 சதவிகிதம் ஒழித்துவிட முடியும். இதற்குத்தேவை சமூக விழிப்புணர்வு,  ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு!

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3479
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி Empty Re: காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி

Post by ஸ்ரீராம் Thu Apr 23, 2015 5:09 pm

நல்லதொரு பயனுள்ள தகவலுக்கு நன்றி மொகைதீன்.

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm6
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி Empty Re: காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி

Post by kanmani singh Fri Apr 24, 2015 1:09 pm

அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அருமையான கட்டுரை!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி Empty Re: காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி

Post by thamiliniyan Sat Apr 25, 2015 9:05 am

உண்மை !
அவசியமான பகிர்வு.நன்றிகள்
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி Empty Re: காசநோயைக் கட்டுப்படுத்தும் வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum