தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

View previous topic View next topic Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by Admin Mon May 04, 2015 12:08 pm

உறவுகளுக்கு வணக்கம்,
 
சிறப்பு கவிஞர் விருதுக்கு சென்ற வாரத்தை விட இந்த வாரம் அதிகம் பேர் கலந்துகொண்டு கவிதைகளை எழுதி தள்ளிவிட்டார்கள். அனைத்தையும் ரசித்து படித்த நடுவர் குழுவினர் (எங்களுக்கு ரசிக்கதானே தெரியும் புன்முறுவல்) இந்த வாரம் எளிதாக சிறப்பு கவிஞர் விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுத்தார்கள்.
 
ஆம் இந்த வாரம் நட்சத்திர கவிஞர் திரு. ரௌத்திரன் அவர்கள் அழகு தமிழில் தான் எடுத்து கொண்ட தலைப்பில் அவர் தன்னுடய கருத்துகளை, உள்உணர்வுகளை பதிவு செய்த விதம் மிகவும் அழகாக இருந்தது ஒவ்வொரு கவிதையும் சற்று நீண்டு உள்ளது இன்னும் வரிகளை சுருக்கி குறைந்த வரிகளில் பதிவு செய்தால் இன்னும் அழகாக இருக்குமே!! இவ்வாரம் அவர் பதிவு செய்த கவிதைகளில்  சிறப்பு கவிதைகளாக தெரிவு செய்ய காரணங்கள் பின்வ்ரும் அழகு வரிகள் என்றால் அது மிகையாகாது   
 
என் சாவிலும் எரியும் தமிழ்ச் சோதீ! என்னும் தலைப்பில் அவர் எழுதிய
கவிதையில் சுற்றிநான்கு சுவர்களன்றி 
சுற்றமில்லை என்றபோதும் 

கற்றுவந்த தமிழிருந்தால் பக்கம் - அதுவே 

முற்றுமொரு இணையில்லா சொர்க்கம்! 
 என்று 
தமிழ்ப்பற்று பற்றி அவர் விவரித்த பாங்கு அழகுற இருந்தது.  

நான் கவிஞன்! என்னும் தலைப்பில் எழுதிய கவிதையில்

"அம்மா! பசிக்கிறதே!" 
என்று 

எவன் வயிறு கலங்கினாலும் 

அவனுக்காய் என் இருதயம் 

பிச்சைப் பாத்திரமாய் நீளும்..... 

என்று குறிப்பிட்ட விதம் அருமையாக இருந்தது 

தெருவில் எரிந்த கற்பூரம்! என்னும் தலைப்பில் அவர் வடித்த இந்த வரிகள் தமிழினத்தி
ற்காக படும் போராட்ட உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டுவதாக இருந்தது.  
சிங்கள இனத்தை நாங்கள் 
சிதைத்திட நினைத்தோ மில்லை! 

"எங்களுக் கென்றோர் தேசம்" 

அதையுமே ஏற்றா ரில்லை! 

பங்கிடா உரிமை யாலே 

புரட்சிகள் வெடிக்கும் என்ற 

மங்கிடா உண்மை தன்னை 

மடையர்க்குப் புரிய வைப்போம்! 

சமீபத்தில் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கொடுத்ததை அவர்களையும் வாழ  விடுங்கள் என்னும் தலைப்பில்  பதிவு செய்த வரிகள் ஒவ்வொன்றும்  பாராட்டும்படி இருந்தது 

எழுத்தாளன் ஜெயகாந்தனின் மரணத்திற்காக எழுதிய 
ஜே.கே என்னும் அழகிய கவிதை அருமையிலும் அருமை 
 
என்று விடியும் எமக்கு?  என்னும் கவிதையில் அவர் குறிப்பிட்டுள்ள வரிகள் உண்மையில் வரிகள் அல்ல விவரிக்க முடியாத கொடுமைகள் 
இனம்பார்க்கும் கண்களிலே 
இரக்கம் சிறிதிருந்தால் 

பிணம்பார்க்கும் பேராசை 

பிறந்திருக்க வாய்ப்பிலையே! 

ஒருநாளில் சாவென்று
 
எல்லோர்க்கும் எழுதியவன் 

அன்றாடம் எமக்கென்று 

எழுதியதை என்சொல்ல? 

வங்கக் கடல்
 இந்த கவிதையில் இன்றைய மீனவர்களின் அவல நிலமையை 
நாயைக் கொன்று போட்டாலும்-ஒரு 
    நாதி யுண்டே கேட்பதற்கு 

நாட்டு மக்கள் அழுகின்றோம்-ஒரு 

    நாயும் இல்லை கேட்பதற்கு! என்று 

எடுத்து சொன்ன விதம் மிகவும் வேதனையாகவும் அதே நேரத்தில் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது
.
 
திரு. கவிஞர் திரு ரௌத்திரன் கவிதைகள் ஒன்றுகூட சுமார் ரகம் என்று சொல்ல முடியாது. அனைத்துமே சூப்பர்தான். இது போன்ற  எண்ணற்ற கருத்துகளை தன்னுடைய கவிதையில் பதிவு செய்து இன்றைய மக்களுக்கு தேவையான மனித நேயம் மற்றும் சமூக விழிப்புணர்களை பதிவு செய்ததால் அவருக்கு சிறப்பு கவிஞர் விருது வழங்கப்படுகிறது.

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] OQV5N8sHQgmJLMFdzVCH+sk

மற்ற கவிஞர்களின் சிறப்பான கவிதைகள்.

தமிழினியன்:

காமம் மேவியிங்கு காதல் 
மரணத்தின் பின்னென் !
அனுதினமும் இங்கே எங்கள் தினமே!
வேலை இல்லாப் பட்டதாரி !
ஓங்காரம் பண்ணி விடு !
வெற்றியை நான் தொட்டிடுவேன்!
தாய் செய்ததை மறந்து விட்டீரா?
 
முஹம்மத் ஸர்பான்
 விவசாயி
 காதல்
 மலர் மீது கவிஞன் பார்வை
 மே 1 சிறப்புக்கவிதை
 
கவிப்புயல் இனியவன்
தொழிலாளர் தினம்
நன்றாக நடிக்கிறோம்..!!! நல்லவனாக நடிக்கிறோம்...!!!
 
இன்போ.அம்பிகா
வெயிலோன்

இந்த வாரத்தின் சிறப்பு கவிஞராக தேர்வு பெற்ற கவிஞர் திரு. ரௌத்திரன் அவர்களை அனைவரும் வாழ்த்துவோமாக. 

குறிப்பு: இந்த வாரத்தில் சிறப்பு கவிஞர் விருது பிரிவுக்கு விதிமுறைகளை மாற்றி இருக்கிறோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். அதன் பிறகு உங்கள் கவிதைகளை பதிவிடுவது குறித்து அந்த பதிவில் விவரம் தரப்பட்டு இருக்கும். வாழ்த்துக்கள். 

நடத்துனர் குழு. 
தகவல்.நெட்

http://www.thagaval.net/
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by ஸ்ரீராம் Mon May 04, 2015 12:18 pm

கவிஞர் திரு. ரௌத்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by ந.கணேசன் Mon May 04, 2015 12:49 pm

வாழ்த்துகள் தோழமையே
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by kanmani singh Mon May 04, 2015 12:59 pm

மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிஞரே!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by ரௌத்திரன் Mon May 04, 2015 1:02 pm

"எல்லோராலும் நேசிக்க முடிந்தது கவிதை
எவராலும் நேசிக்க முடியாதவன் கவிஞன்!"

இது என் வாழ்நாள் அனுபவம். எனக்கு முன்பு வாழ்ந்த எனக்கு வழிகாட்டியாய் இருக்கும் பெருங்கவிகளின் வாழ்க்கை நிரூபித்துவிட்டுப் போன நிஜம்! உறுத்துகின்ற உண்மைகளைக் கவிஞனாலேயே நேசிக்க முடியும். எனவேதான் அவன் எவராலும் நேசிக்க முடியாதவனாக நிற்கிறான்.

சுற்றிநான்கு சுவர்களன்றி 
சுற்றமில்லை என்றபோதும் 
கற்றுவந்த தமிழிருந்தால் பக்கம் - அதுவே 
முற்றுமொரு இணையில்லா சொர்க்கம்

இந்த வரிகள் நினைக்கும் போதெல்லாம் என் நெஞ்சத்தை நெருப்பாக்கி என் கண்களைக் கலங்க வைப்பவை. காரணம்,  

நல்ல சம்பளம் கிடைத்துக்கொண்டிருந்த வேலை விட்டு, கர்நாடகத்திலே இருந்து தமிழ்நாடு வந்து, சான்றிதழ்களை பறிகொடுத்து, தமிழே எனக்கு பெரிது என்றுரைத்து சுற்றத்தால் வெறுக்கப்பட்டு, போக இடமில்லாமலும், பேச ஆள் இல்லாமலும், கையில் பணம் இல்லாமலும் முதல்முதல் சென்னை சென்று "அனாதையாகிவிட்டோமே" என்று நான் பிளட்பாரத்தில் படுத்து அழுத அந்த ராத்திரியில் எழுதியது. (அப்போது எனது காதலிக்கு இன்னொருவரோடு திருமணம்). ஒவ்வொரு எழுத்துக்குப் பின்னாலும் உண்டு ஒரு கதை.

என்னை சிறப்புக் கவிஞனாய்த் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! உரித்தாகுக!  

------------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by ஸ்ரீராம் Mon May 04, 2015 1:09 pm

மனதை நெகிழ செய்து விட்டீர்கள். 

ஒவ்வொரு எழுத்துக்குப் பின்னாலும் உண்டு ஒரு கதை

முற்றிலும் உண்மைதான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by ரௌத்திரன் Mon May 04, 2015 1:11 pm

தோழர் திரு.ஸ்ரீராம், தோழர் திரு.ந.கணேசன் மற்றும் தோழர் திரு.கண்மணி மூவருக்கும் எனது நன்றிகள்! ---------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by thamiliniyan Mon May 04, 2015 3:00 pm

தோழரே நான் மிகவும் மகிழ்ந்த தருணம் இது தான்.கடந்த வாரமே உங்களுக்கு சிறப்புக் கவிஞர் விருது கொடுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாக இருந்தது .காரணம் உங்கள் கவிதைக்கு முன் நானெல்லாம் தூசாக என்னை உணர்ந்தவன்.
இம்முறை நிச்சயம் அது உங்களை வந்து சேரும் என்று உறுதியாக நம்பினேன்.நிறைவேறிற்று .
மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது ரௌத்திரன் !பாராட்டுக்கள்.உங்களைப் பாராட்ட நான் தகுதியானவன் இல்லை என்றாலும் பாராட்டுகிறேன் மனமுவந்து.
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by ரௌத்திரன் Mon May 04, 2015 3:51 pm

சக படைப்பாளி விருது பெற வேண்டும் என்று நினைப்பதும், விருது பெற்றதெண்ணி நிஜமாய் மகிழ்வதும் மிக உயர்ந்த குணம். அதைவிடத் தகுதி தேவையில்லை. தமிழனிடம் இல்லாத குணம் இதுதான். எவ்வளவோ திறமையும் தகுதியும் இருந்தும் தமிழனும் தமிழும் தாழ்ந்து கிடப்பதும் இதனால்தான்.

மற்ற மொழிக்காரன் ஒருவன், சக படைப்பாளி விருது பெற்றால் "நம்மொழிக்கு விருது கிடைத்திருக்கிறது" என்று அதை எடுத்துக்கொள்கிறான். பாராட்டுகிறான். தமிழன் மட்டுமே நம் மொழிக்கு உயர்வு சேர்ந்திருக்கிறதே என்று எண்ணாமல் அவன் எப்படி வெல்லலாம் என்று நினைக்கிறான். தமிழனுக்கும் தமிழுக்கும் அழிவு நேர்ந்தால் அது தமிழனால் மட்டுமே நேர முடியும்!

பொதுவாக நான் இப்போதெல்லாம் எவருடைய எழுத்தையும் படிப்பது கிடையாது. நேரமின்மை ஒன்றே காரணமல்ல. படிப்பது வம்பு என்பதும் மிக மிக்கியமான காரணம். கவிதைக்கான குறைந்தபட்ச லட்சணங்கள் கூட இல்லாதவற்றை மற்றவர்கள் பாராட்டி இருக்கிறார்கள் என்பதற்காகவே அபாண்டமாக நானும் எப்படிப் புகழ்வது? உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டால் "இவ்வளவு பேருக்கு கவிதையாய்த் தெரிந்தது உனக்குத் தெரியவில்லைய?" என்பார்கள். அல்லது "நீ மட்டும்தான் கவிஞனா?" என்பார்கள். எனது நேரத்தை எவரோ ஒருவருக்குச் செலவிட்டு நான் ஆகாதவனாக வேண்டுமென்று எனக்கென்ன தலையெழுத்து? எனது வாசகர்களை "அதோ அவன் அற்புதக் கவிஞன். அவனைப் பாராட்டுங்கள்" என்று அதுவரை எவரும் கண்டுகொள்ளாத தோழர்களின் பக்கம் திசைதிருப்பி இருக்கிறேன். நான் எதாவது குறை சொல்லிவிடுவேன் என்பதனாலேயே நான் படிக்காமல் போவதையே பலர் பெரிய சந்தோஷமாக நினைப்பதுண்டு. நானும் அவர்களுடைய சந்தோஷத்தைக் கெடுக்க விரும்புவதில்லை!

உண்மையிலேயே வளரத் துடிக்கும் கவிஞனுக்கு அவன் இருதயத்தில் செருகப்படும் கடப்பாரை கூட  உளிதான்!
.
அடுத்தமுறை நீங்களோ அல்லது மற்ற நம் தோழர்களோ வெற்றி பெற எனது மனமார்ந்து வாழ்த்துகள் தோழர்! நன்றி!
-----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by thamiliniyan Mon May 04, 2015 4:00 pm

ஆனால் என் ஆசை என்ன தெரியுமா ரெளத்திரன் நீஙகள் தயைகூர்ந்து என் உளரல்களைப் படியுஙகள்.உங்கள் மனது சொல்வதை பட்டவர்த்தனமாக பகிருங்கள்.என்னையும் நீங்கள் சொன்ன மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள.
நான் உங்களை விட வயதில் பெருயவனாகத் தான் இருப்பேன்.ஆனால் கவித்துவ அறிவில் உஙகளை விட சின்னவனே.நான் வளர விரும்புகிறேன்.உங்கள் விமர்சனம் அதற்கு தேவை
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by முரளிராஜா Mon May 04, 2015 4:50 pm

ரௌத்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 
உண்மையை சொல்ல வேண்டுமானால் தங்கள்  கவிதை வரிகள் ஒவ்வொன்றையும் படித்து அசந்துதான் போனேன் .
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by செந்தில் Mon May 04, 2015 5:06 pm

என் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் கவிஞரே.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by ரௌத்திரன் Mon May 04, 2015 6:23 pm

ஆனால் என் ஆசை என்ன தெரியுமா ரெளத்திரன் நீஙகள் தயைகூர்ந்து என் உளரல்களைப் படியுஙகள்.உங்கள் மனது சொல்வதை பட்டவர்த்தனமாக பகிருங்கள்.என்னையும் நீங்கள் சொன்ன மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள.
நான் உங்களை விட வயதில் பெருயவனாகத் தான் இருப்பேன்.ஆனால் கவித்துவ அறிவில் உஙகளை விட சின்னவனே.நான் வளர விரும்புகிறேன்.உங்கள் விமர்சனம் அதற்கு தேவை

நன்றி தோழர்! நிச்சயம் உங்கள் எழுத்துகளை வாசிக்கிறேன்--------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by ரௌத்திரன் Mon May 04, 2015 6:25 pm

ரௌத்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 
உண்மையை சொல்ல வேண்டுமானால் தங்கள்  கவிதை வரிகள் ஒவ்வொன்றையும் படித்து அசந்துதான் போனேன் .

மிக்க நன்றி தோழர்! ----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by ரௌத்திரன் Mon May 04, 2015 6:26 pm

தோழர் திரு செந்தில் அவர்களுக்கு நன்றி! -------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by மகா பிரபு Mon May 04, 2015 6:34 pm

வாழ்த்துக்கள் கவியே
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by செந்தில் Mon May 04, 2015 6:38 pm

மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் கவியே

மகாபிரபுவுக்கு வணக்கம்.
புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by ரௌத்திரன் Mon May 04, 2015 8:02 pm

நன்றி தோழர் திரு.மஹாபிரபு அவர்களுக்கு! ---------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 05, 2015 6:55 am

நட்சத்திர கவிஞர் திரு. ரௌத்திரன் அவர்கள் அழகு தமிழில் தான் எடுத்து கொண்ட தலைப்பில் அவர் தன்னுடய கருத்துகளை, உள்உணர்வுகளை பதிவு செய்த விதம் மிகவும் அழகாக இருந்தது ஒவ்வொரு கவிதையும் சற்று நீண்டு உள்ளது இன்னும் வரிகளை சுருக்கி குறைந்த வரிகளில் பதிவு செய்தால் இன்னும் அழகாக இருக்குமே!!

ரௌத்திரன் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் விருதுக்கு தேர்ந்தெடுத்தாலும் தகும்...

அவரின் உணர்ச்சியை அந்த குறிப்பிட்ட வரிகளுக்கள் அடக்க முடியாது என்பதை நான் அறிவேன்... உணர்ச்சி பொங்கும் போது அது எத்தனை வரிகளை எடுத்துக்கொண்டு அடங்குகிறதோ அங்கே தான் அடங்க வேண்டும். இல்லையென்றால் கவிதை குறைபிரசவமாக ஆகிவிடும்...

இருந்தாலும் சுருக்கம் தேவையான ஒன்றே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by முழுமுதலோன் Tue May 05, 2015 12:12 pm

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] DpP1ShMvQ66LYkBYM7fv+flower

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by smanivasakam Tue May 05, 2015 12:30 pm

கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Gerbera
smanivasakam
smanivasakam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 34

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by ரௌத்திரன் Tue May 05, 2015 3:28 pm

வாழ்த்திய அனைத்து இதயங்களுக்கும் எனது தாழ்மையான வணக்கங்களும் நன்றிகளும்!

அவரின் உணர்ச்சியை அந்த குறிப்பிட்ட வரிகளுக்கள் அடக்க முடியாது என்பதை நான் அறிவேன்... உணர்ச்சி பொங்கும் போது அது எத்தனை வரிகளை எடுத்துக்கொண்டு அடங்குகிறதோ அங்கே தான் அடங்க வேண்டும். இல்லையென்றால் கவிதை குறைபிரசவமாக ஆகிவிடும்..

இந்தப் புரிதலுக்கு மிக்க நன்றி தோழர்! உண்மையும் அதுதான் கவிதையின் அளவு, சொற்கள், யாப்பு எதையும் நான் தீர்மானிப்பதில்லை. உணர்வே தீர்மானிக்கிறது. கவிதை தோன்றும்போது அதுவே தனக்குப் பொருத்தமான யாப்பில் அல்லது வடிவத்தில் தோன்றுகிறது. நான் அதை அப்படியே காகிதத்தில் இறக்கி வைக்கிறேன். எங்கே தன்னை முழுவதும் வெளிப்படுத்தி விட்டதாய் உணர்ச்சிகள் திருப்தியடைகின்றனவோ அங்கே கவிதை முடிகிறது. நான் பேனாவை மூடிவைக்கிறேன் அவ்வளவே!

"நதி, தானே இட்டுக்கொண்டால் அது கரை
அடுத்தவர் இட்டால் அது அணை" நன்றி!
------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by முழுமுதலோன் Tue May 05, 2015 4:25 pm

"நதி, தானே இட்டுக்கொண்டால் அது கரை
அடுத்தவர் இட்டால் அது அணை"

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] 6DmDfoPThmii5okn4Swx+arumaiaa
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015] Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum