Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1 • Share
இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
உறவுகளுக்கு வணக்கம்,
சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு கொடுத்த மாத்திரத்தில் வழக்கம் போலவே கவிஞர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு அனைவருமே சிறப்பாக நிலவு கவிதைகளை பதிவு செய்தனர் சிறப்பு கவிதைகளை தேர்வு செய்வதில் நடுவர்கள் சற்று திண்டாடிவிட்டனர் என்றே சொல்லாலாம் அந்தளவுக்கு ஒவ்வொருவரின் கவிதைகளும் மிகவும் அழகாகவும் நல்லதொரு எடுத்துக்காட்டாகவும் அமைந்து இருந்தது.
நமது நடத்துனர்களில் ஒருவரான மகா பிரபு முதன்முறையாக யாருமே எதிர்பாராத வகையில் போட்டியில் பங்கு கொண்டு எளிய நடையில் ரத்தின சுருக்கமாக மகளின் பசி போக்கிய தாய் என்று பதிவு செய்தது அருமை.
மாதம் ஒருமுறை
கவிஞர் தமிழினியன் தான் பதிவு செய்த கவிதைகளில்...
என்ற வரிகள் மிகவும் சிறப்பாக இருந்தது நிலவினை காதலுக்கு தூது போன தோழி என்றும் சிறு வயதில் நிலைவினை பார்த்து தான் சோறு உண்டதையும் அழகாக பதிவு செய்து இருந்தார்.
கவிஞர் செந்தில்மோகன் - நம் தளத்தின் புதிய வரவு
தன்னுடைய கவிதையில் நிலவே அமாவாசை அன்று உன் அம்மா வீட்டுக்கு சென்று விட்டாயோ என்றும் நிலவினை நெற்றியின் அழகு பொட்டே என்று வர்ணித்தது அழகாக உள்ளது.
கவிஞர் முஹம்மத் ஸர்பான் வழக்கம் போலவே சிறப்பான முறையில் நிலவு கவிதைகளை பதிவு செய்து இருந்தார்
என்று சொன்ன விதம் மிகவும் அருமை.
கவிஞர் ரௌத்திரன் வழக்கம் போலவே தன்னுடைய எழுத்து வேகத்தை நிலவு கவிதையில் அழகாக பதிவு செய்து உள்ளார்.
என்ற வரிகள் எல்லாம் நம்மை சற்று சிந்தக்கவே வைக்கின்றன.
நட்சத்திர கூட்டத்தில் உள்ளேயே இருந்து கொண்டு ஆண்டவனிடன் என்ன வேண்டுகோள் விடுக்கிறாய் என்றும் இருள் இல்லை என்றாள் உன் அழகு இல்லை என்றும் இனி எப்போதும் நஞ்சு தோய்ந்த நின் கிரணங்களை முதிர்கன்னி யாரிடமும் நீட்ட வேண்டாம் என்றும் பதிவு செய்தது சற்று விழிப்புனர்வாக உள்ளது.
கவிப்புயல் இனியவன் தான் பதிவு செய்த நிலவு கவிதையில்
என்ற வரிகளில் நிலவில் பாட்டியும் இல்லை பாட்டனும் இல்லை அவை எல்லாம் தூசிகள்தான் என்று மூட நம்பிக்கையை உடைத்து எறிய நீ பூமிக்கு வர வேண்டும் என்றும் நிலவினை தன் காதலியோடு ஒப்பிட்டு வர்ணித்தது மிகவும் அழகாக உள்ளது.
இந்த முறை சிறப்பு கவிஞர் விருது யாருக்கு தருவது? போட்டியில் பங்கு கொண்ட அனைவருமே சிறப்பான முறையில் பதிவு செய்து இருந்தாலும் மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் ஒப்பிட்டு திரு. கவிப்புயல் இனியவன் அவர்களின் ஒரு கவிதையை படிக்கும் போதே ரசிக்கும் வண்ணம் உள்ளது. அவர் கவிதைகளில் பல விழுப்புணர்வு தரும் வகையில் அமைந்து இருக்கும். மேலும் நீண்ட காலமாக நம் தளத்தில் எண்ணிலடங்கா கவிதைகளை பதிவு செய்து நம் தளத்தை பெருமை படுத்தி கொண்டு இருப்பவர் என்ற வகையிலும் கவிப்புயல் திரு. இனியவன் அவர்களை இவ்வார சிறப்பு கவிஞராக தேர்வு செய்கிறோம்.
இந்த வாரத்தின் சிறப்பு கவிஞராக தேர்வு பெற்ற கவிப்புயல் திரு. இனியவன் அவர்களை அனைவரும் வாழ்த்துவோமாக.
நடத்துனர் குழு.
தகவல்.நெட்
http://www.thagaval.net/

என செல்கிறது அவரது கவிதை வரிகள்… கைதட்டி பாராட்டலாம்.மறையும் மங்கையவள்
என்னன்பு மகளின்
பசிபோக்கும் தாயவள்
கவிஞர் தமிழினியன் தான் பதிவு செய்த கவிதைகளில்...
கடன் வாங்கிப் பூசிய வெளிச்சத்தில்
உடனிருக்கும் வழு மறைத்தவள் நீ!
உனைப்பார்த்துண்ட அன்னத்தில்
எனை வளர்த்த நன்றிக்காய் நீதி
மனையுன்னை இழுக்கேன் நான் !
உன்னிலா என்னிலா ஊடல் நான் கொள்வது
தன்னிலா நிகரிலா உவமை நீ சொல்வது
என்னதான் சொல் நிலா நீ பிழையென்பது
பண்ணிலும் பொருளிலும் விதிவிலக்காவது
ஆதிமுதல் காதலுக்கு தூது போன தோழியடி! நீ
ஜாதி மத பேதமின்றி நம்சோகங்களின் தூளியடி!
தனிமை கொண்டு தவிப்போரின் தாசியடி -அவர்
தனிமை கொன்று தாலாட்டும் தாய்மடி நீ!
என்ற வரிகள் மிகவும் சிறப்பாக இருந்தது நிலவினை காதலுக்கு தூது போன தோழி என்றும் சிறு வயதில் நிலைவினை பார்த்து தான் சோறு உண்டதையும் அழகாக பதிவு செய்து இருந்தார்.
கவிஞர் செந்தில்மோகன் - நம் தளத்தின் புதிய வரவு
திரண்ட மேகக்கூந்தலை
லாவகமாய் விலக்கி வெளியேறும்..
அகன்ற நெற்றியின்
அழகுப்பொட்டே..
உன் அம்மா வீட்டிற்கு
ஆசையுடன் சென்றாயோ
என்றே அந்நாளை
அமாவாசை என்றோமோ.
தன்னுடைய கவிதையில் நிலவே அமாவாசை அன்று உன் அம்மா வீட்டுக்கு சென்று விட்டாயோ என்றும் நிலவினை நெற்றியின் அழகு பொட்டே என்று வர்ணித்தது அழகாக உள்ளது.
கவிஞர் முஹம்மத் ஸர்பான் வழக்கம் போலவே சிறப்பான முறையில் நிலவு கவிதைகளை பதிவு செய்து இருந்தார்
உன் முகம் வெள்ளையாக
இருந்தாலும் உடலுக்கு
கறுப்புச் சேலைதான் பிடிக்குமா?
நிலா நீ உலா செல்லாதே!
மானுக்கு வலை விரிக்கும் வேடன்
வானுக்கு வலை போட்டு விடுவான்
நிலவே! இவ்வுலகில் உனக்கென துணையை
தேடிக்கொள்! இளைஞர்கள் எல்லாம் உன்னை
கனவில் விபச்சாரியாக்குகிறார்கள்.செல்வர்கள்
உன் கழுத்தில் தாலி கட்டுவதற்காய் செவ்வாய்க்கு
கடவுச்சீட்டு வாங்கி விட்டார்கள்.
உன் அழகினை வரிகளிலும் இனி எழுதமாட்டேன்.
கலைஞன் என்ற ரீதியில் அன்பாய் இக்கடிதத்தை
தருகிறேன்.கிடைப்பதற்கு பல வருடங்கள் ஆகலாம்
அவர்கள் உன்னை அழிப்பதற்கு நெருங்கிவிட்டார்கள்.
நிலவே!! ஜாக்கிரதை.
என்று சொன்ன விதம் மிகவும் அருமை.
கவிஞர் ரௌத்திரன் வழக்கம் போலவே தன்னுடைய எழுத்து வேகத்தை நிலவு கவிதையில் அழகாக பதிவு செய்து உள்ளார்.
ஆண்டவனிடம்
அப்படியென்னதான் வேண்டுகிறாய்
ஒவ்வொருநாளும்
ஒருகோடி விளக்கேற்றி?
ஏ நிலவே!
உன்னைப் போல்
நட்சத்திரங்கள் தேய்வதில்லை
ஆனால்
நட்சத்திரங்களைப் போல்
நீ உதிர்வதில்லை!
இருட்டில் நிற்கிறோமே என்று
இதயம் கலங்காதே
இருள்வந்து சூழாவிட்டால்
உலகுக்குத் தெரிந்திருக்குமா
உன் அழகு?
வரதட்சணைக்கு வழியின்றி
வயது தொலைத்து
உணர்ச்சிகளின் கல்லறையாய்
உலாவிக்கொண்டிருக்கும்
முதிர்கன்னி எவளையும் இனி
முற்றுகையிட
நீள வேண்டாம்
நஞ்சு தோய்ந்த நின் கிரணங்கள்...!
என்ற வரிகள் எல்லாம் நம்மை சற்று சிந்தக்கவே வைக்கின்றன.
நட்சத்திர கூட்டத்தில் உள்ளேயே இருந்து கொண்டு ஆண்டவனிடன் என்ன வேண்டுகோள் விடுக்கிறாய் என்றும் இருள் இல்லை என்றாள் உன் அழகு இல்லை என்றும் இனி எப்போதும் நஞ்சு தோய்ந்த நின் கிரணங்களை முதிர்கன்னி யாரிடமும் நீட்ட வேண்டாம் என்றும் பதிவு செய்தது சற்று விழிப்புனர்வாக உள்ளது.
கவிப்புயல் இனியவன் தான் பதிவு செய்த நிலவு கவிதையில்
நிலாவில்
பாட்டி இருக்கிறார் ....
இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!!
பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ...
வான் வெளி தூசிகளே அவை ....
நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...?
மூடநம்பிக்கையை உடைத்தெறிய ...
ஒருமுறை இறங்கி வருவாயோ ...?
காரிருள்
வானத்தில் பளிச்சிடும் நிலாவே ....
காரிருள் கூந்தலோடு பளிச்சிடும் ....
என்னவளின் வதனமும் .....
மண்ணுலக நிலாதானடி ....
விண் நிலவே - நீ தான் ....
என்னவளை படைத்தாயோ ...
என்ற வரிகளில் நிலவில் பாட்டியும் இல்லை பாட்டனும் இல்லை அவை எல்லாம் தூசிகள்தான் என்று மூட நம்பிக்கையை உடைத்து எறிய நீ பூமிக்கு வர வேண்டும் என்றும் நிலவினை தன் காதலியோடு ஒப்பிட்டு வர்ணித்தது மிகவும் அழகாக உள்ளது.
இந்த முறை சிறப்பு கவிஞர் விருது யாருக்கு தருவது? போட்டியில் பங்கு கொண்ட அனைவருமே சிறப்பான முறையில் பதிவு செய்து இருந்தாலும் மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் ஒப்பிட்டு திரு. கவிப்புயல் இனியவன் அவர்களின் ஒரு கவிதையை படிக்கும் போதே ரசிக்கும் வண்ணம் உள்ளது. அவர் கவிதைகளில் பல விழுப்புணர்வு தரும் வகையில் அமைந்து இருக்கும். மேலும் நீண்ட காலமாக நம் தளத்தில் எண்ணிலடங்கா கவிதைகளை பதிவு செய்து நம் தளத்தை பெருமை படுத்தி கொண்டு இருப்பவர் என்ற வகையிலும் கவிப்புயல் திரு. இனியவன் அவர்களை இவ்வார சிறப்பு கவிஞராக தேர்வு செய்கிறோம்.
இந்த வாரத்தின் சிறப்பு கவிஞராக தேர்வு பெற்ற கவிப்புயல் திரு. இனியவன் அவர்களை அனைவரும் வாழ்த்துவோமாக.
நடத்துனர் குழு.
தகவல்.நெட்
http://www.thagaval.net/
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
மனமார்ந்த வாழ்த்துக்கள் இனியவன் அவர்களே
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
வாழ்த்துக்கள் இனியவன் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
அன்புத்தோழர்.திரு.இனியவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக! --------------ரௌத்திரன்
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
தோழர் இனியவனுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் !
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
நிலவொளியாய் எனது வாழ்த்தொலிகளை வழங்குகிறேன்..
sendhilmohan- புதியவர்
- பதிவுகள் : 6
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
வாழ்த்துக்கள் இனியவன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
வாழ்த்துக்கள் இனியவன் அவர்களே!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருது [04/05/2015 முதல் 10/05/2015]
இந்த வார சிறப்பு கவிஞராக தெரிவானத்தில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி
மேலும் நான் வேலை காரணமாக தூர இடத்தில இருக்கிறேன் வாரம் ஒருமுறைதான் வீடு வருகிறேன்
(வியாழன் ) அதனால் தான் உடனே நன்றி தேர்வுக்க முடியவில்லை .
வரும் ஆகஸ்ட் முதல் வழமைபோல் வரமுடியும் என்று கருதுகிறேன் .
வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் உளமாந்த நன்றி ...
வாழ்க வளமுடன்

Similar topics
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [20/04/2015 முதல் 26/04/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது
» இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [11/05/2015 முதல் 17/05/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது [27/04/2015 முதல் 03/05/2015]
» இந்த வார சிறப்பு கவிஞர் விருது
» இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|