தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

ஹைக்கூகள்-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  Empty ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Wed May 20, 2015 11:02 pm

வலி
-------
பார்வையில்லாதவன் 
பேனா விற்று வாழ்கிறான்.
உள்ளம் ஊனமானவன் யாசிக்கின்றான்.

வயல்
---------
பச்சை சேலையுடுத்த 
கன்னி ஒருத்தி நாட்டியமாடி 
சிரிக்கின்றாள்.

கணணி
-----------
ஆண் பெண் ஆகிய 
இருவர் மார்பிலும் 
தூங்கும் புதுக்குழந்தை.

முகவரி
------------
உண்மைக்கும் 
பொய்க்கும் முகவரி
மனச்சாட்சி.

விபச்சாரம்
----------------
கரு சுமந்து பால் 
தந்தவளை மறந்தவன் 
தேடும் உடல் மோப்பம்.

சீதனம்
----------
1.நான்கு எழுத்து 
தெரிந்தவன் கை நீட்டி 
வாங்கும் பிச்சை.

2.பெண்ணை கண்ணால் 
கற்பழித்து வாழ்நாள் முழுவதும் 
கண் கண்கலங்ச்செய்யும் ஆயுதம்.

பெண்ணின் நிலை
--------------------------
சமையலறையில் அடுப்புக்கறியாகி
படுக்கையறையில் விபச்சாரியாய் மாற்றி 
காமசந்தையில் விற்கப்படுகிறது பெண்ணுடல்.

அனாதை
-------------
கருவில் பாரமாகி 
தந்தையால் வெறுக்கப்பட்டு 
நாயிடம் பாசம் அறிந்தவன்.

குப்பைதொட்டி
-----------------------
முறையற்ற உடல் மோப்பம் 
சாட்சியான என்பில்லாத சிசு 
தூங்கும் தொட்டில்.

தபால்
-----------
பார்வையில்லாத மனதுக்கும் 
வார்த்தை பேசாத இதழுக்கும் 
கண்களின் பார்வை மடல்.

முகில்
----------
வானிலுள்ள இளைய மகள் 
கூட்டமாய் சேர்ந்தால் 
அழகான பஞ்சு மிட்டாய்.

ஆசை
---------
மனிதனை கொலைகாரனாய் 
மாற்றும் உள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ள
கூர்மையான ஆயுதம்.

நிலா
-------
ஒற்றைச் சதத்திற்கு பெறுமதி 
கொடுத்து, ரசிக்கச் செய்த 
வானிலுள்ள வெள்ளை முகம்.

காதல்
---------
பூவையும் ரசிப்பான் 
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,

வேதம்
----------
உள்ளத்தின் ஊனத்தை குணப்படுத்தி 
பாவமான உடலை சலவை செய்து 
மனிதனை புனிதனாய் மாற்றும் அருள் வாக்கு 

தாகம்
----------
உன் பாதத்தை கழுவிய 
நீரையாவது அள்ளி தந்து விடு 
ஆபிரிக்க சிறுவனின் தாகத்திற்கு கொடுக்க....

கவிதை
------------
1.உள்ளத்தில் தோன்றி 
உணர்வுகளில் கலந்து நினைவில் 
அழியாத அனுபவ எழுத்து.

2.என்னுடலிலுள்ள ஒவ்வொரு 
செல்களுக்குமிடையில் ஒழிந்துள்ள
கலைக்களஞ்சியம்.

அக்கினி
-------------
நல்லவன் கேட்டவன் தெரியாது 
எவன் வந்தாலும் அணைத்துக்கொள்ளும் 
ஜாதிமதமற்ற கொடியவன்.

பாசம்
--------
கரைகடந்து சென்றவனுக்கு 
மனைவியின் சேலைதான் 
தாலாட்டும் அம்மா.

நாகரிகம்
-------------
கைகுட்டையும் ஆடையானது 
பாவாடை தாவணி வீடு துடைக்க 
பயன்படுத்தப்படுகிறது.

கருமை
-------------
கடவுள் சிலை கூட கறுப்பு
என்பதால் மனிதனின் உள்ளமும் 
கறுப்பாய் மாறி விட்டது.

அரசியல்
--------------
திகதி நாள் 
கிழிக்கப்படாத 
ஏப்ரல் 01

கல்வி
----------
கற்பாறை 
தகர்க்கும் 
பசுமரத்தின் வேர்.

உண்மை
-------------
மேற்கு வானின் தூவலை 
மறைக்கும் கிழ் வானின்
வெள்ளொளி.

சிற்பம்
----------
காயப்பட்டவன் 
உள்ளத்தில் பளுத்தப்பட்ட 
கைரேகை.

கீறல்கள்
------------
உலகம் புரட்டப்படாத 
நாவல் நாம் எழுதப்படாத 
எழுத்துக்கள்.

பூக்கள்
-----------
காதலியின் 
புன்னகையில் 
குழிவிழும் கன்னங்கள்.

பொறாமை
-----------------
உனக்கே நீயே 
குழி தோண்டிக்கொள்ளும் 
பண்பின் வெளிப்பாடு.

நட்பு
-------
மின்னும் விண்மீன் உதிர்ந்தாலும் தேயும் 
வெண்ணிலா சிரித்தாலும் மஞ்சக் கதிரவன் 
எரித்தாலும் கோப்படாத வானத்தைப் போன்று.....

கல்லானது
----------------
தாயை கூட தெருவில் 
கைவிட்ட மனிதன் மரத்தை 
அறுத்தறியவா? பாவப்படப்போகிறான்.

புத்தகம்
------------
நல்ல நண்பன் 
அறிவின் கடல் 
நல்லதை தூண்டுபவன் 

தமிழ்
--------
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தொப்புள்கொடியை அறுத்தெடுக்க
அம்மா என்று கூக்குரலிட்ட பந்தம்.

செந்நிறம்
---------------
அவள் பருத்திப் 
பூவில் பூத்த 
மருதாணிப் பூக்கள்.

கருவறை
---------------
யுத்தத்தில் கூட ஜெய்த்திடலாம்,எரிமலையை 
சரித்திடலாம் ஆனால் பெண்ணின் பிரசவத்தை 
கண்ட எந்த ஆணும் மயக்கம் போடாமலில்லை.

அத்தாட்சி
---------------
தூணில்லாத வானத்தில் பறக்கும் 
சிட்டுக்களை கிழே விழாமல் 
ஏந்தி பிடிக்கிறான் கடவுள்.

அன்பின் உச்சம்
------------------------
மனதுக்கு விருப்பமானவர்களின் 
மெளனம் கூட ஒருவனை 
மனநோயாளியாக மாற்றும்.

புன்னகை
--------------
கண்ணழகியின் 
வட்டக்குழி நாணத்தினால் 
தெளியாத போதை.

இரவு
--------
நாமம் 
தெரியாத ரீங்கிசைக்காரனின்
இசைக்கச்சரி.

தூக்கம்
-----------
வாழ்க்கைக்கும் 
மரணத்திற்குமிடையில்
ஒரு சிறு நேரச் சந்திப்பு 

மது
------
செல்வன் அருந்தும் 
ஆடம்பரப்பானம் 
ஏழைக்கு விஷம்.

ஆற்றல்
------------
பயனற்ற கற்களும் தகுதியுடையவன் 
கையில் கிடைத்தால் அணைவரும்
வணங்கும் கடவுள் சிலையாய் மாறிடலாம்.
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

ஹைக்கூகள்-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  Empty Re: ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 21, 2015 8:49 pm

அருமை அருமை
சிறப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum