தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆரோக்கிய முத்திரைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 10:48 am

முத்திரைகள் நாட்டியத்தின் பாவனைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தினர். பின் சங்கேத மொழியாகப் பயன்படுத்தினர். அதன் பின்னர்தான் முத்திரைகள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்றறிந்தனர். எங்கு யாரால் எதற்காகப் பயன்படுத்தினாலும் அந்த முத்திரை அவர்களின் நரம்பு மண்டலத்தில் சில செயல்களைச் செய்து அவர்களை அறியாமல் அவர் நல்வாழ்விற்கு உற்ற துணையாகின்றது. எந்த முத்திரையானலும் பயின்று பயன் படுத்துவதால் உடலுக்கு எந்த கேடும் விளையாது. முத்திரைகளினால் நன்மையைத் தவிர வேறொன்றுமில்லை. உடலில் வியாதிகள் தோன்றாமலிருக்க உதவும். இருக்கும் வியாதிகள் விரைவில் குணமடைய உதவிகரமாக இருக்கும்.





முத்திரைகள்- எல்லோரும் செய்து பழகலாம். வேறு சிகிச்சை மேற்கொண்டு இருப்பவர்களும் செய்யலாம். எந்த சிகிச்சை முறைக்கும் எதிரானது அல்ல. உடலில் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து சக்திகள் சேரவேண்டிய இடத்திற்கு முறையாக சேர உதவுகிறது. யோகப் பயிற்சியில் சொல்லியது போல உள்ளே இழுக்கும் பூரகம் மூச்சை விட, வெளியே விடும் ரேசகம் மூச்சு இரு மடங்கு இருந்தால் அது ஆரோக்யம் ஆகும். எந்த அமர்ந்த நிலையிலிருந்தும் உங்கள் வசதியைப் பொருத்து செய்யலாம். கழுத்து, தலை, முதுகுத்தண்டு ஆகியவை நேராக இருக்கவும். முத்திரை செய்யும் கை எந்த உதவியையும் உறுதுணையையும் பெற்றிருக்கக்கூடாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 10:49 am

அபானவாயு முத்திரை

பலன்-இதயம் நன்றாக சீராக இயங்க வைக்கும்.
செய்முறை-சுண்டு விரலை நேராக நீட்டி, நடு விரல், 
மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் கட்டைவிரல் 
நுனியைத் தொடுமாறு செய்யவும். ஆட்காட்டி விரலை மடித்து 
கட்டை விரலின் அடிப்பாகத்தை தொடுமாறு செய்யவும். 
கை மாற்றி செய்யவும்.
தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்

ஆரோக்கிய முத்திரைகள் 1abanavayumudra




முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 10:55 am

அனுசாசன் முத்திரை
[size=16]ஆரோக்கிய முத்திரைகள் 2anusasanmudra
[/size]

பலன்-கழுத்துவலி குறையும். தண்டுவடம் வலுவடையும்.


செய்முறை- ஆட்காட்டி விரலை நேராக நீட்டி, சுண்டு விரல், நடு விரல், மோதிர விரல்களை வளைத்து அதன் நுனிகள் உள்ளங்கையை தொடுமாறு செய்யவும். கட்டை விரலை நடு விரலின் மீது வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும். கை மாற்றி செய்யவும்.
தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 10:58 am

உஸஸ் முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 4usasmudra
பலன்-உரிய நேரத்தில் எழ, விழிப்புணர்வு அதிகரிக்கும்.

செய்முறை-இரு கை விரல்களையும் கோர்த்தவாறு வைக்கவும். ஆண்கள் வலதுகை கட்டை விரலை இடதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும். பெண்கள் இடதுகை கட்டை விரலை வலதுகை கட்டை விரலின் மீது இருக்குமாறு செய்யவும்.

தினமும்- காலை- எழும்போது, இரவு உறங்கும் போது 3/5 நிமிடம் செய்யவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 10:59 am

கணேச முத்திரை

ஆரோக்கிய முத்திரைகள் 5ganesamudra
பலன்-இருதயம் பலம் பெறும். மன இருக்கம் தளர்ந்து தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

செய்முறை-இடது கைவிரல்களை மடக்கி கைபாதம் நெஞ்சைப் பார்த்தபடி வைக்கவும். வலதுகை விரல்களை மடக்கி இடதுகை விரல்களில் கொக்கி போல் மாட்டிக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும்போது கை புஜங்களில் அழுத்தம் கொடுத்து கைகள் ஒன்றை ஒன்று இழுத்த வண்ணம் இருக்கட்டும். கை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:02 am

கருட முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 6garudamudra
பலன்-உடல் சோர்வு மறைந்து, கண்பார்வை தீர்க்க மாகும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
செய்முறை-கிராஸ் வடிவில் இடதுகைமேல் வலதுகை இருக்குமாறும் இரு கைகளையும் பாதங்கள் தெரியுமாறும் அவை நம் முகம் பார்த்த வண்ணம் இருக்குமாறும் வைக்கவும். இருகை கட்டை விரல்களை கொக்கிபோல் வளைத்து மாட்டிக் கொள்ளவும். மற்ற விரல்கள் நேராக ஒன்றை ஒன்று தொடாமல் நீட்டி இருக்க வேண்டும்

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:03 am

குபேர முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 7kuberamudra

பலன்-சைனஸ் கோளாறுகள் நீங்கும். நினைவாற்றல் கூடும்.
செய்முறை-மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடித்து அதன் நுனி உள்ளங்கையைத் தொடுமாறு வைக்கவும். கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடுவிரல் ஆகியமூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு செய்யவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:04 am

சக்தி முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 8sakthimudra

பலன்-உறக்கம் விரைவில் வரும். பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
செய்முறை-தலையணை இன்றி நேராக மல்லார்ந்து படுத்த நிலையில் செய்ய வேண்டும். இரண்டு கை கட்டை விரல்களையும் உள்ளங்கையில் மடித்து வைத்து ஆள்காட்டி விரல், நடு விரல்களால் மூடியபடி கட்டை விரலில் லேசன அழுத்தம் கொடுக்கவும். இடது கைவிரல்கள் வலது கை விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இடது கை சுண்டு விரல், மோதிர விரல் இரண்டையும் நேராக நீட்டி விரல்களின் நுனிகள் வலது கையின் விரல் நுனிகளைத் தொடுமாறு செய்யவும். இந்நிலையில் கைகளை அப்படியே அடிவயிற்றின் அருகே வைத்து மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக விடவும்.

இரவு படுக்கையில்3/5நிமிடம் செய்யவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:06 am

சங்கு முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 8sakthimudra

பலன்-திக்குவாய் குணமாகும். சரளமான தங்குதடையற்ற பேச்சுவளம் கூடும்.
செய்முறை-இடது கை கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்துவலது கைவிரல்களால் இறுக பிடிக்கவும். மற்ற விரல்களை வலதுகை விரல்மேல் வைக்கவும். அந்த விரல்களின் நுனி வலதுகை கட்டைவிரலைத் தொட்டவாறு இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:12 am

சுவாசகோச முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 3asthmamudra
பலன்-ஆஸ்துமா குணமாகும்.
முதல் நிலை-செய்முறை-இருகை பாதங்களும் ஒன்றை ஒன்று பார்த்தபடி நெஞ்சுக்குமுன் வைத்து இருகை நடு விரல்களை உட்பக்கமாக மடித்து அதன் நகக்கண்கள் ஒன்றை ஒன்று தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக ஒன்றை ஒன்று தொடாத வண்ணம் இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்

ஆரோக்கிய முத்திரைகள் 11suvasakosamudra
இரண்டாம் நிலை-செய்முறை- இடதுகை ஆட்காட்டி விரலை நேராக நீட்டவும். இடதுகை சுண்டு விரலை மடக்கி இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்திலும், மோதிரவிரலை கட்டை விரலின் நடுப்பாகத்திலும், நடுவிரலை கட்டை விரலின் நுனியைத் தொட்டமாறும் வைக்கவும். கையை மாற்றி செய்யவும்.
தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:13 am

சூர்ய முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 12suryamudra

பலன்-தைராய்டு சுரப்பி தூண்டப்படும். உடல் சூட்டினால் கொழுப்பு கரையும். உடல் எடை குறையும்.
செய்முறை-இடது கை மோதிர விரலை மடித்து இடதுகை கட்டைவிரலின் அடிப்பாகத்தை தொட்டவாறு வைக்கவும். எல்லா விரல்களும் நேராக இருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:15 am

சூன்ய-ஆகாய முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 13soonya_aagayamudra

பலன்-காது நோய்கள் குணமடையும். எழும்புகள் வலுவடையும்.
செய்முறை-இடது கை கட்டைவிரல் இடதுகை நடுவிரல் இரண்டின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டவாறு வைத்து மற்ற விரல்கள் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:16 am

சோபன முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 14shobnamudra
பலன்-எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.
செய்முறை-இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை கட்டை விரல் மேல் வலதுகை கட்டை விரல் இருக்குமாறு செய்யவும். ஆள்காட்டி விரல்கள் இரண்டையும் நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:18 am

நாக முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 17naagamudra
பலன்-சிந்தனை தெளிவு அடையும். பிரச்சனைகள், சிக்கல்கள் தீர்வு காணும்.
செய்முறை-இடது உள்ளங்கை கீழ் வலது உள்ளங்கை பாதம் பார்த்தவண்ணம் வைத்து வலது கட்டை விரலால் இடது உள்ளங்கையை லேசாக அழுத்தவும். இடது கட்டை விரல் வலது கட்டை விரல் மீது இருக்க வேண்டும். இடதுகையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:19 am

பங்கஜ முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 18pangajamudra
பலன்-காய்ச்சல் குணமாகும். உடல் சூடு தணியும்..

செய்முறை-இரு கைகளின் பாதங்களை ஒன்று சேர்த்து குவித்து கட்டை மற்றும் சுண்டு விரல்கள் ஒன்றை ஒன்று தொடுமாறும் மற்ற விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் குவிந்த நிலையில் இருக்க வேண்டும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:21 am

பிரம்மார முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 19brammarahmudra
பலன்-அலர்ஜி உடல் தடிப்பு குணமாகும்.
செய்முறை-இடதுகை ஆட்காட்டி விரலை மடித்து இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு வைக்கவும். இடதுகை கட்டைவிரலால் நடுவிரலின் நகத்திற்குப் பக்கவாட்டில் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைகளை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:22 am

பிராண முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 20piraanamudra
பலன்-கண் பார்வை கூர்மையாகும். மூளை செயல் திறன் அதிகரிக்கும்.
செய்முறை-இடதுகை மோதிர விரல், சுண்டு விரல் நுனிகளால் கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற இரண்டு விரல்களும் நேராக இணைந்தபடி நீட்டி இருக்கட்டும். கைமாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:23 am

பிருத்வி முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 21piruthvimudra
பலன்-வயதானவர்களுக்கு மிகுந்த பயன். நகம் எழும்பு, முடி வளரும். உடல் நடுக்கம் குறையும்.
செய்முறை-இடதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைமாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:24 am

மகாசிரசு முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 22mahasirasumudra
பலன்-தலைவலி, தலை பாரம் குறையும். கண்களில் அயர்ச்சி குறையும்.

செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடு விரல் ஆகிய மூன்றின் நுனிகளும் ஒன்றை ஒன்று தொடுமாறு வைத்து இடதுகை மோதிர விரலை மடித்து அதன் நுனி உள்ளங்கையை நடுவில் தொடுமாறு இருக்கவும் சுண்டு விரல் நேராக நீட்டி இருக்கவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:25 am

மாதங்கி முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 23madangimudra
பலன்-சர்க்கரையின் அளவை இரத்தில் குறைக்கும்.

செய்முறை-இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல்மீது வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைக்கவும். இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:26 am

மிருகி-மான் முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 24mirukimudra

பலன்-பற்கள் உறுதியாகி பல்வலி குறையும்.
செய்முறை-இடதுகை நடுவிரல், மோதிரவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு இடதுகை கட்டை விரலால் இரண்டு விரல்களின் நுனியிலிருந்து முதல் ரேகை- கோட்டை லேசான அழுத்தம் கொடுத்துத் தொடவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:28 am

முதுகுவலி முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 25muduguvalimudra
பலன்-முதுகு வலி நரம்புக் கோளாறுகள் குறையும்.
செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு- சின் முத்திரை. மற்ற விரல்கள் நேராக சேர்ந்து இருக்கட்டும். வலதுகை சுண்டுவிரல் மற்றும் நடுவிரல் நுனிகளைக் கட்டை விரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:29 am

முஷ்டி முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 26mustimudra
பலன்-பயம் குறையும். தன்னம்பிக்கை அதிகமாகும்.
செய்முறை-இடதுகை விரல்களை மடக்கி உள்ளங் கையைத் தொடுமாறு வைக்கவும். கட்டை விரலை மோதிர விரலின் மேல் வைத்து லேசான அழுத்தம் கொடுக்கவும், கையை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:30 am

மூட்டுவலி முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 27mootuvalimudra
பலன்-மூட்டு வலிகள் குணமாகும்..
செய்முறை-இடதுகை நடுவிரல் நுனியை இடதுகை கட்டை விரலைத் தொடுமாறு வைக்கவும். இடது கையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்கட்டும். வலதுகை மோதிர விரல் நுனியை கட்டைவிரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by முழுமுதலோன் Fri May 22, 2015 11:31 am

ருத்ர முத்திரை
ஆரோக்கிய முத்திரைகள் 28rudramudra
பலன்-வயிற்றின் கோளாறுகள் குணமாகும். குடலிறக்கம், கருப்பை கீழிறங்குதல், மூலநோய் ஆகியவைகள் கட்டுப்பாட்டினுள் வரும்.

செய்முறை-இடதுகை கட்டைவிரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியை ஒன்று சேர்த்து தொடுமாறு வைக்கவும். இடது கையின் மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்கட்டும். கையை மாற்றி செய்யவும்..

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆரோக்கிய முத்திரைகள் Empty Re: ஆரோக்கிய முத்திரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum