Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆரோக்கியப் பெட்டகம்: புடலங்காய்
Page 1 of 1 • Share
ஆரோக்கியப் பெட்டகம்: புடலங்காய்
பத்தியச் சாப்பாடு முதல் பந்தி விருந்து வரை எல்லாவற்றிலும் இடம்பெறக்கூடிய முக்கியமான காய் புடலை. வெள்ளரிக்காய் வம்சத்தைச் சேர்ந்த இது, வருடந்தோறும் விளையக்கூடியது. பாம்பு போல நீண்டு வளர்கிற வகை, வெள்ளைக் கோடுகள் கொண்ட ஹைப்ரிட் வகை, குட்டை வகை, வெள்ளைப் புடலை, ஹைப்ரிட் தாய் புடலை எனப் பல வகையான புடலை நமக்குக் கிடைக்கின்றன.
பொரியலாக, கூட்டாக, சாலட்டாக இன்னும் எப்படி வேண்டுமானாலும், எதனுடன் வேண்டுமானாலும் சமைக்கக்கூடிய காய் இது. சீக்கிரம் வெந்துவிடக் கூடியது. ஒரு பிடி அதிகம் சாப்பிட்டாலும் தன் வேலையைக் காட்டாதது...’’ - புடலங்காயின் புகழுரைகளுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ். புடலங்காயின் மருத்துவக் குணங்களுடன், அவற்றை வைத்துச் செய்யக்கூடிய மூன்று சுவையான ரெசிபிகளையும் பகிர்கிறார் அவர்.
என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)
ஆற்றல் 86.2 கிலோ கலோரி
கொழுப்பு 3.9 கிராம்
சோடியம் 33 மி.கி.
பொட்டாசியம் 359.1 மி.கி.
நார்ச்சத்து 0.6 கிராம்
புரதம் 2 கிராம்
வைட்டமின் ஏ 9.8 %
வைட்டமின் பி6 11.3 %
வைட்டமின் சி 30.6%
கால்சியம் 5.1 %
இரும்புச்சத்து 5.7%
மருத்துவ குணங்கள்
இயற்கையான ஆன்ட்டிபயாடிக் தன்மை கொண்டது புடலங்காய். இருமலைப் போக்கக்கூடியது. இது மிகச்சிறந்த மல மிளக்கியும் கூட. உடலிலுள்ள கபத்தையும் சீழையும் வெளியேற்றி, நச்சுகளையும் வெளித்தள்ளக்கூடியது.
நீரிழிவுக்காரர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிற வெகுசில காய்களில் புடலங்காய்க்கு முக்கிய இடமுண்டு. நவீன சீன மருத்துவத்தில் புடலங்காய் செடியின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு முக்கியமான மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. நீரிழிவுக்காரர்களுக்கு மற்ற காய்களுக்கெல்லாம் இவ்வளவுதான் அளவு என வரையறுக்கப்படுவது போல, புடலங்காய்க்கு கட்டுப்பாடு ஏதுமில்லை. டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. எடை அதிகரிக்காமலும் தேவையான ஊட்டச் சத்துகள் கிடைக்கும் படியும் பார்த்துக் கொள்வது கூடுதல் சிறப்பு.
எப்படி வாங்குவது?
காய்கள் உறுதியாகவும், முனைகள் வட்டமாகவும் இருக்க வேண்டும். இதன் நிறமானது மிதமான பச்சை முதல் அடர் பச்சை வரை இருக்கலாம். மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருந்தாலோ, ஊதிய மாதிரி உப்பியிருந்தாலோ, நுனிகள் சுருங்கியிருந்தாலோ வாங்க வேண்டாம். மெல்லிய புடலங்காய்களில், கனத்த காய்களைவிட விதைகள் குறைவாக இருக்கும்.
எப்படிப் பத்திரப்படுத்துவது?
நீர்ச்சத்துள்ள காய்களை கூடியவரையில் உடனுக்குடன் உபயோகிப்பதே சிறந்தது. என்னதான் ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தினாலும், அதன் நீர்ச்சத்து வற்றி, காய் வதங்கி, பிற சத்துகளையும் இழக்கும். ஒன்றிரண்டு நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
கவனம்!
புடலங்காயின் விதைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்றாலும் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வாந்தி மற்றும் வயிற்று வலி உண்டாகலாம். புடலங்காயின் வேர்ப்பகுதிகளும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அளவோடு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கருவைப் பாதிக்கக் கூடும் என்பதால் கர்ப்பிணிப் பெண்கள், புடலை வேரைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

- புடலைச் செடியின் இலைகளில் இருந்து பெறப்படும் சாறு இதயக் கோளாறுகளுக்கு நல்லது என்கிறது மருத்துவம். மூச்சிரைப்பு மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படுகிற நெஞ்சு வலிகளுக்கு புடலை சாற்றை தினம் 3 வேளைகளுக்கு 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் கொடுத்தால் நிவாரணம் தெரியும்.
- புடலை இலைச் சாற்றுடன் தனியா சேர்த்து கொதிக்க வைத்த டிகாக்ஷன் கலந்து தினம் 3 வேளைகள் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை கட்டுக்குள் வருமாம்.
- காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதிலும் புடலைச் சாற்றுக்கு பெரும் பங்கு உண்டு. காய்ச்சல் கண்டவர்களுக்கு புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகாக்ஷனை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத் தொடங்கும்.
- மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறு களால் அவதிப்படுவோருக்கும் புடலை மருந்தாகப் பயன்படுகிறது. புடலையின் வேர்ப்பகுதியானது மலமிளக்கியாகவும் புடலை இலையானது குடல் தொடர்பான பிரச்னைகளை சரி செய்யவும் பயன்படுகிறது. மிகவும் தீவிரமான மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கு புடலங்காயின் விதைகள் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
- புடலங்காய் தண்ணீர் சத்து மிகுந்த ஒரு காய். கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்த உணர்வைத் தரும். எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்போர், புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- அதிக நீர்ச்சத்துள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இது. வெயில் நாட்களில் புடலங்காயை உண்பதன் மூலம் வெம்மையின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
- கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை அதிகமாகக் கொண்டது புடலை. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் உடலின் நிலையை சரிவிகிதத்தில் வைத்திருக்கவும் உதவும்.
- கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் புடலங்காய்க்கு முக்கிய இடமுள்ளது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆலோபேஷியா எனப்படுகிற புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும். இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.
- வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால் புடலங்காய் நோய் எதிர்ப்பு சக்திக்கும் காரணமாகிறது.
எப்படி வாங்குவது?
காய்கள் உறுதியாகவும், முனைகள் வட்டமாகவும் இருக்க வேண்டும். இதன் நிறமானது மிதமான பச்சை முதல் அடர் பச்சை வரை இருக்கலாம். மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருந்தாலோ, ஊதிய மாதிரி உப்பியிருந்தாலோ, நுனிகள் சுருங்கியிருந்தாலோ வாங்க வேண்டாம். மெல்லிய புடலங்காய்களில், கனத்த காய்களைவிட விதைகள் குறைவாக இருக்கும்.
எப்படிப் பத்திரப்படுத்துவது?
நீர்ச்சத்துள்ள காய்களை கூடியவரையில் உடனுக்குடன் உபயோகிப்பதே சிறந்தது. என்னதான் ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தினாலும், அதன் நீர்ச்சத்து வற்றி, காய் வதங்கி, பிற சத்துகளையும் இழக்கும். ஒன்றிரண்டு நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
கவனம்!
புடலங்காயின் விதைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்றாலும் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வாந்தி மற்றும் வயிற்று வலி உண்டாகலாம். புடலங்காயின் வேர்ப்பகுதிகளும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அளவோடு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கருவைப் பாதிக்கக் கூடும் என்பதால் கர்ப்பிணிப் பெண்கள், புடலை வேரைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஆரோக்கியப் பெட்டகம்: புடலங்காய்
புடலங்காய் கூட்டு
என்னென்ன தேவை?
சின்னதாக நறுக்கிய புடலங்காய் - 1 கப், துவரம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு - அரை கப், இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை, சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 2, கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, தேங்காய்த் துருவல் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
தேங்காய், மஞ்சள் தூள், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். பருப்பை தனியே பிரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, பெருங்காயத் தூள் சேர்க்கவும். புடலங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். காய் முக்கால் பாகம் வெந்ததும் பருப்பையும் உப்பையும் சேர்த்து இன்னும் சிறிது வேக விடவும். அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

புடலங்காய் விதை துவையல்
என்னென்ன தேவை?
புடலங்காய் - 1, எண்ணெய் - 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - அரை கப், கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உப்பு- தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
புடலங்காயை சுத்தம் செய்து, விதைகள் நீக்கித் தனியே எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வறுத்து ஆறவிடவும். மறுபடி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, புடலங்காய் விதைகளைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். வறுத்து ஆற வைத்துள்ள மற்ற பொருட்களுடன் சேர்த்து தேங்காய் துருவலும் உப்பும் வைத்துக் கரகரப்பாக அரைக்கவும். டிபன் மற்றும் சாதம் என எல்லாவற்றுக்கும் பொருத்தமான சைட் டிஷ் இது.

புடலங்காய் பொரியல்
என்னென்ன தேவை?
புடலங்காய் - கால் கிலோ, எண்ணெய் - இரண்டரை டீஸ்பூன், மஞ்சள் தூள்- 1 சிட்டிகை, உப்பு- தேவைக்கேற்ப.
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயம் - 1 சிட்டிகை, கறிவேப்பிலை- சிறிது.
எப்படிச் செய்வது?
புடலங்காயைக் கழுவி, நீளவாக்கில் வெட்டவும். விதைகளையும், உள்ளே உள்ள வெள்ளைநிறப் பகுதியையும் நீக்கி, மெலிதான துண்டுகளாக வெட்டவும்.கடாயை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கடுகை வெடிக்கச் செய்யவும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். பருப்பு சிவந்ததும், புடலங்காய் சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி மூடி வைக்கவும். லேசாக வெந்ததும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் அதிகமானால் காய் குழைந்து சுவையே மாறிப் போகும். அவ்வப்போது திறந்து கிளறி விடவும். தேவைப்பட்டால் இன்னும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம். வெந்ததும் இறக்கி, சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் பரிமாறவும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3725

பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஆரோக்கியப் பெட்டகம் : கத்தரிக்காய்
» ஆரோக்கியப் பெட்டகம்: வெங்காயம்
» சுண்டைக்காய் ஆரோக்கியப் பெட்டகம் :-
» ஆரோக்கியப் பெட்டகம்: முள்ளங்கி
» ஆரோக்கியப் பெட்டகம்: பாகற்காய்
» ஆரோக்கியப் பெட்டகம்: வெங்காயம்
» சுண்டைக்காய் ஆரோக்கியப் பெட்டகம் :-
» ஆரோக்கியப் பெட்டகம்: முள்ளங்கி
» ஆரோக்கியப் பெட்டகம்: பாகற்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum