Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்று என் சமையல் அறையில் - வறுவல் வகைகள்
Page 1 of 1 • Share
இன்று என் சமையல் அறையில் - வறுவல் வகைகள்
சேனைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 1/2 கப் (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
வரமிளகாய் - 2 மல்லி - 1 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் பூண்டு - 4
செய்முறை:
முதலில் நறுக்கி வைத்துள்ள சேனைக்கிழங்கை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை, பொன்னிறமாக வறுத்து குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடி செய்துள்ளதை சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ஊற வைத்துள்ள சேனைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை நன்கு கிளறி இறக்கினால், சேனைக்கிழங்கு வறுவல் ரெடி!!!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்று என் சமையல் அறையில் - வறுவல் வகைகள்
உருளைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. உருளைக்கிழங்கை சிறு சிறு (சதுர) துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும்.
3. பின்னர் அதனுடன் சோளமாவு, மிளகாய்தூள், உப்பு, அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
4. எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த உருளைக்கிழங்கைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
குறிப்பு
1. பிசறும் போது சிறிது சோம்பு சேர்த்துக் கொண்டால் வாசனையாக இருக்கும்.

வாழைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 2
பூண்டு - 5 பல்
வரமிளகாய் - 10
சோள மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. வாழைக்காய் நீள நீளத் துண்டுகளாக விரல் மொத்தத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
2. நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும்.
3. வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. வெந்நீரில் போட்டு எடுத்த வாழைக்காயுடன் அரைத்த மசாலா விழுது, சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
4. எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த வாழைக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

வெண்டைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 200 கிராம் (குருனிவட்டமாக நறுக்கியது)
வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
மிளகாய்தூள் - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய வெங்காயம் தாளித்து
பின்பு குருனிவட்டமாக நறுக்கிய வெண்டைக்காய் போட்டு வதக்கவும்.
பின்பு மிளகாய்தூள் போட்டு வதக்கிய பின் முட்டை, உப்பு சேர்த்து வதக்கவும்
தேசிக்காய் சாறு (லெமன் ஜுஸ்) சேர்க்கவும். 2 நிமிடங்களின் பின்பு சுவையான வெண்டைக்காய் வறுவல் தயார்.

பாகற்காய் வறுவல்
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 150கிராம்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 மேசைகரண்டி
கடுகு - 1 டீஸ்பூன்
செய்முறை :
பாகற்காயை வட்ட வட்டமாக மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு கடுகு தாளித்து பாகற்காய், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து மொறு மொறு என்று ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.

பனீர் வறுவல்
தேவையானவை:
பனீர் - 200 கிராம், குழம்பு மசாலா தூள் (கடைகளில் கிடைக்கும்) - ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டீஸ்பூன், அரிசிமாவு - அரை டீஸ்பூன், உப்பு (குழம்பு மசாலா தூளில் உப்பு இருக்கும் என்பதால்) - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பனீரை விரல் நீளத்துக்கு நறுக்கி தனியே வையுங்கள். மசாலாதூள், இஞ்சி-பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், அரிசிமாவு, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பஜ்ஜி மாவை விடக் கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும். பனீரை இந்தக் கலவையில் போட்டு, உடைந்துவிடாமல் பிரட்டி, எண்ணெயைக் காயவைத்து, நான்கு நான்காகப் போட்டு நன்கு சிவக்கப் பொரித்தெடுங்கள். கவனிக்கவும்: எண்ணெய் நன்கு காயவேண்டும். இல்லையென்றால் மசாலா தனியாக, பனீர் தனியாகப் பிரிந்துவந்துவிடும். (குறிப்பு: அசைவச் சுவை பிடித்தவர்கள், குழம்பு மசாலாவுக்குப் பதிலாக ‘சிக்கன் 65’ மசாலா தூளைப் போடலாம்).

அவரைக்காய்-வரமிளகாய் வறுவல்
தேவையானவை:
பிஞ்சு அவரைக்காய் - கால் கிலோ, வரமிளகாய் - 7, சின்ன வெங்காயம் - 7, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அவரைக்-காயை மிகவும் பெரிதாகவோ, சிறிதாகவோ இல்லாமல் மீடியமாக நறுக்குங்கள். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்குங்கள். வரமிளகாயைக் கிள்ளிவையுங்கள். கடாயில் எல்லா எண்ணெயையும் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வரமிளகாய் போட்டு கருகாமல் வறுத்துக்கொள்ளுங்கள். அதோடு வெங்காயம் போட்டு வதக்கி, அவரைக்காயையும் போட்டு வதக்குங்கள். பிறகு உப்பு போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து மூடி, ‘ஸிம்’மில் வைத்து, கடாயை மூடுங்கள். அந்த எண்ணெயிலேயே அவரைக்காய் வேகவேண்டும். அவ்வப்போது திறந்து, கிளறிவிட்டு, திரும்ப மூடிவைத்து வேகவிடுங்கள். வேர்த்து வேர்த்து காய் வெந்துவிடும். அப்படியே, அந்த எண்ணெயோடு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட, சுவையாக இருக்கும்

கோவைக்காய் வறுவல்
தேவையானவை:
கோவைக்காய் - கால் கிலோ, வரமிளகாய் - 10, சின்ன வெங்காயம் - 7, தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 5 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை:
கோவைக்-காயை வட்டவட்டமாக நறுக்குங்கள். தேங்காய், வரமிளகாய், சின்ன வெங்காயம் மூன்றையும் கரகரவென அரைத்துக்கொள்ளுங்கள். நறுக்கி வைத்திருக்கும் கோவைக்காயில், அரைத்த மசாலாவைப் பிசறுங்கள். கடாயைக் காயவைத்து, எண்ணெயை ஊற்றி, பிசறிய காயைப் போட்டு, உப்பு போட்டுக் கிளறி, ‘ஸிம்’மில் வைத்து மூடி போட்டு விடுங்கள். சில நிமிடம் கழித்துத் திறந்து, மீண்டும் கிளறிவிட்டு, மூடிவைக்கவேண்டும். இப்படியே செய்து, சுருள சுருள வதக்கி இறக்குங்கள். கலக்கலாக இருக்கும்.

குடைமிளகாய் வறுவல்
குடைமிளகாய் - 2
கடலைப்பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கல் உப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - சிறிது
எண்ணெய்
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். குடை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் போட்டு தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடங்கள் வறுக்கவும்.
வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு, தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய குடைமிளகாயைப் போட்டுக் கிளறிவிட்டு, மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
மிளகாய் நன்கு வதங்கியதும் பொடித்த பொடியைச் சேர்த்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு ஒன்றாகச் சேரும்படி கிளறவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கிவிடவும்.
சுவையான குடைமிளகாய் வறுவல் தயார். மோர் குழம்பு மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
இந்த குடைமிளகாய் வறுவல் செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது.
வறுத்து பொடி செய்து சேர்ப்பதால மிகவும் வாசனையாக இருக்கும்.
இதே முறையில் குடைமிளகாய்க்கு பதிலாக கத்திரிக்காயைச் சேர்த்தும் செய்யலாம்.

கத்தரிக்காய் வறுவல்
கத்தரிக்காய் - 5
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தக்காளி - ஒன்று
கொத்தமல்லித் தழை - சிறிது
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
மல்லி - ஒரு மேசைக்கரண்டி
வரமிளகாய் - 2 (காரத்திற்கேற்ப)
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தாளிக்க:
கடுகு
கடலைப் பருப்பு
எண்ணெய்
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை நன்றாக சுத்தம் செய்து நீளவாக்கில் ஆறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டு கத்தரிக்காயை அதில் போடவும்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களில் முதலில் வறுத்த மல்லியை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். பிறகு அதனுடன் மற்ற பொருட்களைப் போட்டு பொடியாக்கவும். (தண்ணீர் ஊற்றி அரைக்க தேவையில்லை).
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு தாளித்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி போட்டு குழைய வதக்கவும்.
வதங்கியதும் கத்தரிக்காய், மஞ்சள் பொடி, அரை தேக்கரண்டி சாம்பார் பொடி (விருப்பப்பட்டால்) போட்டு நன்றாக கிளறிவிடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து பொடி செய்தவற்றை போட்டு கிளறவும். சிறிது நீர் விட்டு மூடி வைக்கவும்.
அடிக்கடி கிளறிவிடவும். நீர் போதவில்லையெனில் சிறிது ஊற்றவும்.
உடையாமல் கிளறிவிடவும் விரைவில் வெந்துவிடும். வெந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
சுவையான கத்தரிக்காய் வறுவல் ரெடி. தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிக சுவையாக இருக்கும்.

வெந்தயக்கீரை வறுவல்
வெந்தயக்கீரை - 150 கிராம்
கோதுமை மாவு - 1 கப்
கடலை மாவு - அரை கப்
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
சர்க்கரை - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரைத் தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
வெந்தயக்கீரையை காம்புகள் நீக்கி கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவு, கோதுமை மாவுடன், பெருங்காயம், கடுகு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கலவையில் வெந்தயக்கீரையைக் கலந்து ஒரு அகலமான தட்டில் ஒன்றரை அங்குல கனத்திற்கு பரப்பி ஆவியில் 50 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
நன்றாக ஆறியவுடன் ஒன்றரை அங்குல அகலத்திற்கு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்துப் பெருங்காயத்தைச் சேர்க்கவும்.
அதில் வெந்தய கீரைத் துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
http://www.no1tamilchat.com/

ம்ம்ம்... முரளி மட்டும்தான் இந்த வேலையெல்லாம் தினமும் பாத்திட்டிருந்தார் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
முரளியின் கூட்டணியின் எண்ணிக்கை வரவர கூடுதலாகிக்கொண்டே போகிறதே...

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இன்று என் சமையல் அறையில் - வறுவல் வகைகள்
வறுவல் எனக்கும் பிடித்தது.
சிறப்பான மகளிர் பகிர்வுக்கு நன்றி அண்ணா.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இன்று என் சமையல் அறையில் - வறுவல் வகைகள்
ஆம் நான் இது போன்ற விசயங்களை வேடிக்கை பார்ப்பவன் ஆனால் தாங்கள் ..............................................................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ஜேக் wrote:ம்ம்ம்... முரளி மட்டும்தான் இந்த வேலையெல்லாம் தினமும் பாத்திட்டிருந்தார் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
முரளியின் கூட்டணியின் எண்ணிக்கை வரவர கூடுதலாகிக்கொண்டே போகிறதே...
Similar topics
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
» உன் சமையல் அறையில் - துவையல் வகைகள்
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum