Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சமையல் - .டிப்ஸ் !-மணக்குதே!! ருசிக்குதே !!
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
சமையல் - .டிப்ஸ் !-மணக்குதே!! ருசிக்குதே !!
சுண்டல் செய்வதில் பல விதம்
* சுண்டல் செய்வதற்கு கொண்டைக் கடலையை ஊற வைக்க மறந்து விட்டால் ஒன்றும் பதறத் தேவையில்லை.
கொண்டைக் கடலையை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்த பிறகு குக்கரில் வேகவைத்தால் நன்றாக வெந்து விடும்.
* கடலைப் பருப்பு சுண்டல், பாசிப்பருப்பு சுண்டல் செய்யும்பொழுது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்து செய்தால் சுலபமாக வெந்துவிடும்.
* சுண்டல் செய்யும் தானியங்களை முளை கட்ட வைக்க நனைத்து ஊறிய தானியங்களை ஒரு துணியில் போட்டு முடிச்சு போட்டு ஒரு கிண்ணத்தில் வைத்து வலைத்தட்டு ஒன்றினால் மூடி வைத்தால் சீக்கிரமாக முளை வரும்.
* பயத்தம் பருப்பு சுண்டல் குழையாமல் இருக்க, அதை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பின், அடுப்பில் வெந்நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்துவிட்டு ஊற வைத்த பருப்பைப் போட்டு மூடி பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்து தாளித்தால் பருப்பு உதிரி உதிரியாக வரும்.
* எந்த வகைச் சுண்டல் செய்தாலும் கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் இஞ்சியையும் சேர்த்து விழுதாக்கி கலந்து கிளறி இறக்கினால் சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சமையல் - .டிப்ஸ் !-மணக்குதே!! ருசிக்குதே !!
கொழுக்கட்டை டிப்ஸ்
கொழுக்கட்டை செய்வதற்கு பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு நைசாக அரைத்துக் கொஞ்சம் பால் விட்டு நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும்.
சட்டியில் இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கரைத்த மாவை விட்டு அடுப்பில் வைத்து பத்து நிமிடம் நன்றாக மூடி வைத்துவிட்டுச் சிறிது நேரம் கழித்து நன்றாகப் பிசைந்து உருட்டித் தேவையான பூர்ணம் வைத்துக் கொழுக்கட்டை செய்ய வேண்டும்.
கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது, தண்ணீருடன் ஒரு கரண்டி பால் விட்டுக் கிளறினால் கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.
கடலைப் பூரணம் அரைக்கும்போது அதை மசிய அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைப்பதுடன் அதைச் சுருள கிளறிய பிறகே, ஏலப்பொடி, துண்டுகளாக்கிய தேங்காய், கீற்று போட்டு கொழுக்கட்டை செய்தால் சுவையாக இருக்கும்.

சமைக்கும் போது ருசி பார்த்தால்….
எந்தப் பொருளையும் சமைக்கும் போது ருசி பார்ப்பது மிகவும் அவசியம். குழம்பு கொதிக்கும் போதே அதில் உப்பு, காரம் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும் போது, குடும்பத்தினர் சாப்பிட்டுப் பார்த்து அதில் இது இல்லை, அது இல்லை என்று கூறுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல், சமையலறையிலேயே அனைத்தையும் சரிபார்த்துவிட்டு உணவு மேஜைக்கு உணவை கொண்டு செல்லுங்கள்.
பொதுவாக ருசி பார்த்துக் கொண்டே சமைத்தால் நிச்சயமாக, உணவு உண்ணும் போது நமது உணவுக்கு பாராட்டுக்கள்தான் கிடைக்கும்.
புதிதாக எதையும் சமைக்கும் போது அதில் ஏற்படும் தவறுகளை குறிப்பெடுத்துக் கொண்டு, அடுத்த முறை சமைக்கும் போது அதை சரி செய்யுங்கள். அதற்காக மறு முறை அதை செய்யவேக் கூடாது என்று பயந்து விடாதீர்கள்.
எந்த விதமான உணவையும் முயற்சியுங்கள். மீண்டும் மீண்டும் முயற்சியுங்கள். ஒவ்வொரு முறையும் செய்யும் தவறுகளை அடுத்த முறை சரி செய்து கொள்ளுங்கள்.
சமையல் கலைக்கு அடிப்படையே ஆர்வம்தான். ஆர்வத்தோடு சமைத்தால் நிச்சயம் நல்ல சமையல் நிபுணர் ஆகலாம்.

நீங்களும் ஆகலாம் சீஃப் குக்
புளியோதரை, புலாவு, தக்காளி சாதம் போன்றவற்றைச் செய்யும் போது சாதம் கட்டியாக ஆங்காங்கு தங்கிவிடும். இதைத் தவிர்க்க சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வெண்ணெயைச் சேர்த்துக் கலக்கினால் சாதம் கட்டியாகாமல் மிகவும் சுவையுடன் இருக்கும்.
வெங்காய ராய்த்தா தயாரிக்கும் போது, இரண்டு ஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு பச்சை மிளகாய் இவற்றை அரை ஸ்பூன் மைதா மாவு அல்லது சோளமாவு சேர்த்து அரைத்து கலந்துவிட்டால் ராய்த்தா கெட்டியாக தனிச்சுவையுடன் இருக்கும்.
சாம்பார் நன்றாகக் கொதித்து இறக்கியவுடன், அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயையும், கருவேப்பிலையையும் போட்டு மூடி வைத்தால் சாம்பார் மிகவும் வாசனையாக இருக்கும்.
பக்கோடா மாவுடன் சிறிதளவு நெய், உப்பு போட்ட தயிரும் கலந்து நன்றாக பிசைந்து கொண்டு பக்கோடா செய்தால் பக்கோடா மொற மொறப்பாக இருப்பதுடன் ருசியாகவும் இருக்கும்.
தோசைக்கு உளுந்து ஊறவைக்கும் போது கொஞ்சம் வெந்தயத்துடன் ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்து தோசை சுட்டால் தோசை சிவப்பாகவும்,சுவையாகவும் இருக்கும்.

மணக்க, சுவைக்க, சமைக்க
சாம்பார் மணக்க: அரைத்துவிட்ட சாம்பார், அதிகநேரம் கொதிக்கக் கூடாது. தேங்காயிலிருந்து எண்ணெய் பிரிந்து ருசிகெட்டுவிடும். இறக்கிய பிறகு தான் தாளிக்க வேண்டும்.
ரசம் மணக்க: சிம் ஃப்ளேமில் ரசத்தை மஞ்சள் நுரை வரும் வரை நிதானமாகப் பொங்க வைத்து (கொதிக்கக் கூடாது) இறக்கிய பின், பச்சை கொத்துமல்லி தாராளமாகச் சேர்க்கவும். கடுகு, சீரகம், பச்சை கறிவேப்பிலை நெய்யில் தாளிக்க வேண்டும். புளியைக் குறைத்து தக்காளியைக் கூட்டினால் ருசி கூடும். பெரிய அளவில் ரசம் செய்யும் போது அரை ஸ்பூன் வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துச் சேர்த்தால் ரசம் கடைசி வரை தெளிவாக இருக்கும்.
புளி சேர்க்காத கூட்டு வகைகள் செய்யும் போது காய்களுக்கு ஏற்ற அளவில் மிளகாய் வற்றல், மிளகு, உளுத்தம்பருப்பு, கட்டிப்பெருங்காயம் இவற்றை தேங்காய் எண்ணெயில் வறுத்து தேங்காயும் அரைத்துச் சேர்த்துச் செய்தால் “கும்’மென்ற வாசனையுடன் ருசியும் பிரமாதமாக இருக்கும்.
கறிவகைகள் மணக்க: கிழங்கு வகைகளை ரோஸ்ட் செய்யும் போது மேரினேட் செய்து பத்து நிமிடம் ஊறவிடவும். உப்பு, காரம் நன்கு இறங்கும். கடாயில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் முதலில் அரை ஸ்பூன் பொடி உப்பைச் சேர்த்து, பிறகு வழக்கம் போல் தாளித்துக் கிழங்கு வகைகளைச் சேர்த்து இரண்டு தடவை கலந்து கொடுத்து சிம் ஃப்ளேமில் ஐந்து நிமிடம் கிளறாமல் அப்படியே விடவும். பிறகு திருப்பினால் வெளிப்புறம் மொறு மொறுப்பாகவும் உட்பாகம் மிருதுவாகவும் நன்றாக கடாயில் ஒட்டாமல் ரோஸ்ட் ஆகும். எண்ணெயும் குறைவாகவே செலவாகும்.

புத்தகம் வைத்து சமைக்கும் போது
பொதுவாக பலரும் சமையல் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து சமைக்க முயற்சிப்பார்கள். இது நல்ல முயற்சி எனினும், புத்தகங்களை அடிப்படையாக வைத்து சமைக்கும் போது சில சிக்கல்கள் ஏற்படுவது சகஜம்.
அதாவது, ஒரு சமையலை புத்தகத்தில் பார்த்து படித்து, அதனை செய்யும் போது பலருக்கும் எழும் சந்தேகங்களை இங்கு பட்டியலிடுகிறோம்.
தண்ணீர் ஊற்றும் அளவு.. தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் என்று இருந்தால், எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று குழப்பம் ஏற்படும். பொதுவாகவே சமையலில் தண்ணீரின் அளவு தான் பெரும் பங்கு வகிக்கும். முதல் முறை சமைக்கும் போது குறைந்த பொருட்களை வைத்து குறைந்த அளவு தண்ணீர் ஊற்றி சமைத்துப் பாருங்கள். வேகும் போது தண்ணீர் குறைவதாகத் தெரிந்தால், உடனடியாக தண்ணீரை ஊற்றி விடாதீர்கள், ஒரு பாத்திரத்தில் தனியாக தண்ணீரை சுட வைத்து அதில் ஊற்றுங்கள். செய்யும் சமையல் கெட்டுப் போகாது.
வேக வைக்கும் நேரம்… காய்கறிகளையோ, கறி வகைகளையோ வேக வைக்கும் நேரத்தை அரை மணி நேரம் என்று புத்தகத்தில் போட்டிருக்கலாம். ஆனால், அரை மணி நேரத்தில் குழைந்து போகும் காய்கறிகளும் உண்டு. அரை மணி நேரத்தில் அரைவேக்காடாகும் காய்கறிகளும் உண்டு. எனவே, முதல் முறை குக்கரில் வேக வைக்காமல், பாத்திரத்தில் வைத்து அவ்வப்போது வெந்து விட்டதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
எண்ணெயில் பொரிக்கும் போது.. பொதுவாக ஒரு உணவு பொருளை எண்ணெயில் பொரிக்கவும் என்று போட்டிருந்தால், எண்ணெயை காயவைத்து அதிக சூட்டில் பொரித்து எடுத்து விடக் கூடாது. இதனால், உணவு பொருள் மேல் பகுதியில் நன்கு சிவந்தும், உள்ளே வேகாமலும் போக வாய்ப்பிருக்கிறது. எனவே, எண்ணெயில் பொரிக்கும் போது இளஞ்சூட்டில் வைத்து உணவு பொருள் நன்கு வேக நேரம் கொடுத்து எடுக்க வேண்டும்.

பலகாரம் செய்யும் போது…
* முறுக்கு மாவு பிசையும்போது, அத்துடன் ஒரு மேஜைக் கரண்டி நெய் ஊற்றி மாவை நன்கு பிசைந்து முறுக்கு சுட்டு எடுத்தால், நெய் மணத்துடன் கூடுதலான சுவையுடன் முறுக்கு இருக்கும்.
* இரண்டு பங்கு பாசிப் பயறு, ஒரு பங்கு கடலைப் பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவில் மைசூர் பாகு செய்தால் மைசூர் பாகு மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
* சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப் பால் விட்டுச் செய்தால், மிகவும் சுவையாக இருக்கும்.
* சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போkdrsweetகாமலிருக்கும்.
* போளி செய்யும்போது மேல் மாவுக்கு மைதா மாவு பிசையும் போது சிறிது பால் பவுடரும் சேர்த்துப் பிசைந்தால், போளி மிருதுவாக இருக்கும்.
* லட்டுப் பிடிக்கும்போது ஏதாவது பழ எசென்ஸை சிறிது விட்டு லட்டு பிடித்தால், லட்டு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
* தேன் குழல், நாடா முறுக்கு, தட்டை போன்றவை நமத்துப் போகாமல் மொறுமொறுவென இருப்பதற்கு மாவைப் பிசையும்போது வெந்நீர் ஊற்றிப் பிசைய வேண்டும்.
* போளிக்கு கடலைப் பருப்பு பூரணம் செய்யும்போது, வெல்லத்துக்குப் பதில் பொடித்த சர்க்கரையைப் பயன்படுத்தினால் போளி, மெல்லியதாக, வெண்மையாக, சுவையாக இருக்கும்.
* கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போலச் செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாக இருக்கும்.

"டிப்ஸ் விருந்து'
பொடியாக நறுக்கிய புதினா சேர்த்துப் பிசைந்து தட்டை தட்ட ருசி கூடும். நல்ல மணமாகவும் இருக்கும்.
* தேன் குழல் செய்யும்போது நீருக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்துச் செய்ய சுவை கூடுதலாக இருக்கும்.
* எந்த பட்சணம் செய்வதாக இருந்தாலும் அதன் மொறுமொறுப்புக்கு வெண்ணெய் சேர்த்தால் உத்திரவாதம் தரும். சீக்கிரம் பட்சணங்கள் நமத்தும் போகாது.
* மைக்ரோ அவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க பளிச்சென்று இருக்கும்.
* காரம் சேர்த்து செய்யும் பட்சணத்துக்கு காரப்பொடி போடாமல், பச்சைமிளகாயுடன், ஓரிரு காய்ந்த மிளகாயைச் சேர்த்து அரைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திச் செய்தால் பட்சணம் நல்ல நிறமாக இருக்கும்.
* வெண்ணெய் சேர்த்து செய்யும் பலகாரங்களுக்கு மாவுடன் வெண்ணெய்யை நன்கு கலந்தபின் தண்ணீர்விட்டுப் பிசைய வேண்டும்.
* பட்சணங்கள் செய்ய பயன்படுத்தும் பெருங்காய நீர் மீந்துவிட்டால் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
லட்டு, ரவா லட்டு, பொட்டுக் கடலை மாவு உருண்டை போன்றவற்றை பிடிக்கும் போது கையில் சிறிது நெய்தடவிக் கொண்டு பிடித்தால் நன்கு பிடிக்க வருவதுடன் மணமாகவும் இருக்கும்.
* குலோப்ஜாமூன் பாகு மீந்து விட்டால் அதில் மைதா மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல திரட்டி சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான, மணமான பிஸ்கெட் தயார்.
* ரசத்தில் மண்டி மீந்துவிட்டதா? பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்துத் தாளித்து, நறுக்கி வைத்ததைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் மிஞ்சிய ரசத்தை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அரிசி அல்லது கடலைமாவு, வெல்லம் ஆகியவற்றையும் போட்டு அடிப்பிடிக்காமல் கிளறி இறக்கினால் அருமையான தொக்கு ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற பலகாரங்களுக்கு இந்த தொக்கு நல்ல "காம்பினேஷன்'.

சின்ன சின்ன எனக்குத் தெரிந்த சமையல் டிப்ஸ்
******கொழுக்கட்டை செய்ய வரவில்லையா?
கவலையை விடுங்கள். அரிசி ஊறவைத்து அரைக்கும் பொழுது ஈரமாக(தோசைமாவு பதத்துக்கு) அரைத்து, கிளறிப்பாருங்கள். பந்து போல் உருண்டு வரும். அப்புறம் சொப்பு செய்வது நம் கைவண்ணம் தான். குயவனின் ஆர்வத்தோடு மாவை எடுத்து மெல்லியதாய் செய்யுங்கள். வாயில் போட்டால் கரையும் கொழுக்கட்டை தயார்.
******பாகற்க்காய் செய்தால் குழந்தைகள் ஓடுகிறார்களா?
பாகலை பாதியாய் வெட்டி, கொட்டை எடுத்து அதில் வெங்காயம் தக்காளி ஸ்ட·பிங் வைத்து நூல் போட்டு கட்டி, பின் வதக்குங்கள். சுவையான பாகல் தயார். 'அம்மா எனக்கு தினமும் பாகல் தான் வேணும்ன்னு அடம் பிடிப்பாங்க குழந்தைகள்'
******குடைமிளகாய் ஸ்ட·பிங்க்கு,
முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்ட·ப் செய்து சமையுங்கள். குண்டு குண்டாய் குடைமிளகாய் சமைத்த பின்பும் கண்கவரும்(நாக்கையும் கவரும்)
******வட இந்திய சமையல் செய்யும் பொழுது(ஒரு பஞ்சாபி தோழி கூறியது)சிறிதே சிட்டிகை(அரை ஸ்பூன்) சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும்.
******முருங்கைக்காயில் ரசமும் வைக்கலாம்.
தக்காளியுடன் ஐந்து பீஸ் பிஞ்சு முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும் ருசியும் ஊரைக்கூட்டும்.
******பரோட்டா செய்யும் பொழுது ( உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிஃபளவர் எதுவாக இருந்தாலும்)
ஸ்ட·பிங் dry ஆக இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மூள்ளங்கி பரோட்டாவுக்கு, அதன் தண்ணீரைப் பிழிந்து அதிலேயே மாவு பிசையலாம். தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்ட·பிங் செய்து பரோட்டா செய்தால், எல்லோரும் பாராட்டுவர். நிமிடத்தில் காலியாகிவிடும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவர்.
******வெங்காயம் நறுக்கினால் அழுகை வருகிறதா?
இனி வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். oxidize ஆவதால் நிகழும் அழுகை குறையும்.
********ஆரோக்கியத்தை வரவேற்கலாமே!**********
!!!!வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டாதீர்கள். அதில் சத்து அடங்கியிருக்கிறது. முடிந்தால் வேறெதிலாவது சேருங்கள். இல்லையெனில் குடித்துவிடுங்கள்.
!!!!கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பே உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.
!!!!முடிந்தவரை, artificial drinks(coke etc), preservatives இருக்கும் packed foods போன்றவற்றை வாங்காதீர்கள். வாங்கும் முன், கலரோ, ப்ரிசர்வேடிவோ இருக்கா எனப் பார்த்து வாங்குங்கள்.
!!!! தினம் இரு பல் பூண்டு, முழுங்கி வாருங்கள், fatal முதல் சாதாரண வியாதி வரை எதுவுமே அண்டாது(பி.பி கூட )

சமையல் .டிப்ஸ் .டிப்ஸ்
பலரும் சப்பாத்திக்கும், பூரிக்கும் ஒரே மாதிரிதான் மாவு தயார் செய்கின்றனர்.
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அது அதிகபட்சம் எவ்வளவு தண்ணீர் பிடிக்குமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்றாக அடித்து பிசைய வேண்டும். குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். இப்படி தயார் செய்த மாவில் செய்யும் சப்பாத்தி, எண்ணெய், நெய் சேர்த்துச் செய்தாலும், சுக்கா ரொட்டியாக செய்தாலும், மிகவும் மிருதுவாக இருக்கும்.
பூரிக்குக் குறைந்தபட்சம் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைய வேண்டும். மாவில் எண்ணெய் சேர்க்க வேண்டாம். சிறிது ஓமம் சேர்த்துப் பிசைந்தால் வாசனையாகவும் இருக்கும். ஜீரணத்திற்கும் நல்லது.
எண்ணெயை அடுப்பில் வைத்த பிறகு மாவைப் பிசைந்தால் போதும்.
இப்படிச் செய்தால் பூரி சிறிது கூட எண்ணெய் குடிக்காது. பூரி இடும் போது மாவை தொட்டுக் கொள்ளாமல் சிறிது எண்ணெயைத் தொட்டுக் கொண்டு செய்தால், பூரி பொரித்த பிறகு எண்ணெய் சுத்தமாக இருக்கும். அடியில் வண்டல் தங்காது. மறுபடியும் புது எண்ணையாக பயன்படுத்தலாம்.
தோசை வார்க்கும் போது சுண்டிப்போனால் கவலைப்பட வேண்டாம். தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை ஸ்பூன் உப்புப் போட்டு கல்முமுவதும் தேய்த்து விட்டு பிறகு வார்த்தால் சுண்டாது.
* பாகற்காய்ப் பொரியல் செய்யும் போதும் சிறிது கடலைப் பருப்பை ஊறவைத்து மையாக அரைத்து பின் இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும் பாகற்காயை வதக்குகையில் இந்த மாவையும் உதிர்த்துப்போட்டு கிளறினால் பொரியல் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன் கசப்பும் குறைவாகத் தெரியும்.
* நெய் அப்பம் செய்யும் போது ஆழாக்கு பச்சிரியுடன் ஒரு டீஸ்பூன் உளுத்தும் பருப்பையும் ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைக்கவும். அப்பம் ரொம்பவும் மிருதுவாக வரும், அப்பக்காரலை உப்புப் போட்டுத் தேய்த்து அடுப்பில் ஏற்றிக் குழிகளைச் சிறிது நல்லெண்ணெய் விட்டுத் துடைத்துப்பின் நெய் விடவும் இப்போது சுலபமாக எடுக்க வரும்.
* பறங்கிக் கொட்டைகளை தூர ஏறியாமல் வெயிலில் உலர்த்தி பருப்பை உரித்து நெய்யில் வதக்கி சர்க்கரை அல்லது வெல்லமா போட்டுச் சாப்பிடலாம்.

சமையலில் கலக்க...
* ரவா தோசைக்கு மாவை அதிக நேரம் ஊறவைக்கக் கூடாது. ஊறினால் தோசை மொறு மொறுப்பாக வராது. வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து தோசை சுட்டால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
* பூரி மாவு பிசைந்து அதிக நேரம் வைத்திருந்து பொரித்தால் அதிக எண்ணெய் உறிஞ்சும். அதனால் மாவு பிசைந்த சிறிது நேரத்தில் பூரி சுட்டு விட வேண்டும்.
* பூரி மாவு பிசையும்போது ரவைக்குப் பதிலாக 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் பூரி மொறுமொறுப்பாக வரும்.
* கோதுமை மாவு பிசைந்ததும் புரோட்டா மாவு அடிப்பதுபோல் கொஞ்சம் அடித்து வைத்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
* மாவை இரவில் பிசைந்து குளிர்சாதனப் பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்து காலையில் சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

சமையலை எளிதாக்க சில சின்னச் சின்ன டிப்ஸ் !
** ரசம் மணமாக, சுவையாக இருக்க வேண்டுமா? ரசத்தில் பருப்பு ஜாலம் விட்டு நுரைத்து வரும்போதே இறக்கிவிட வேண்டும். கொதிக்க விடக் கூடாது. நெய்யில் கடுகு தாளிக்கும்போது ஒரு ஸ்பூன் மிளகு பொடியைப் பொறித்து சேர்த்தால் எந்த ரசமும் சூப்பர்தான்!
**வற்றல் குழம்பு செய்யும்போது நல்லெண்ணையில் தாளித்து அதிலேயே தேவையான சாம்பார் போடி போட்டு வதக்கி பின் புளிஜலம் சேர்த்து குழம்பு செய்தால் தனி வாசனையுடன் ருசியும் கூடுதலாக இருக்கும்.
**வாழைக்காய் பொடிமாஸ் செய்யும்போது, வேகவைத்த வாழைக்காயை உதிர்த்து செய்யாமல் கேரட் துருவியில் துருவி சேர்த்தால் கண்ணுக்கும் விருந்து; நாவுக்கும் சுவை! இத்துடன் கேரட்டையும் சீவிப் போட்டு, பச்சை பட்டாணியை வேக வைத்து சேர்க்க மல்டி கலர் பொடிமாஸ் உங்களுக்கு பாராட்டை வாங்கித்தரும்.
**வெல்லக் கொழுக்கட்டைக்கு மாவு கிளறுவது பலருக்கும் ஒரு கடினமான விஷயம். தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் மாவை அப்படியே தூவி செய்யும்போது அது கட்டி தட்டிவிட்டால் கொழுக்கட்டை சொப்பு செய்ய வராது. அரிசிமாவை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்துக்கொண்டு , வாணலியில் ஒரு கரண்டி நீரில் சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கொதித்ததும், அதில் கரைத்த அரிசிமாவை சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். கையில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி ஒரு பாத்திரத்தை மேலே கவிழ்த்து மூடி வைக்கவும். அரை மணி கழித்து எண்ணையைக் கையில் தொட்டுக் கொண்டு நன்கு பிசைந்து கொழுக்கட்டை சொப்பு செய்தால் விள்ளாமல், விரியாமல் அருமையாக செய்ய வரும். மிக சுலபமான முறை இது.
**மைசூர்பாகு செய்யும்போது கடலை மாவை பாகில் அப்படியே சேர்த்தால் கட்டி தட்ட வாய்ப்புண்டு. அதற்கு பதிலாக சிறிதளவு நெய்யை நன்கு உருக்கி அதில் கடலை மாவை கலந்து சேர்த்தால் சுலபமாக சேர்ந்து கொள்ளும். நெய்யும், டால்டாவும் சரியளவு கலந்து மைசூர்பாகு செய்தால் சுவையாக இருக்கும்.
**கேசரிக்கு...வறுத்த ரவையுடன் வெந்நீரும், சிறிதளவு சூடான பாலும் கலந்து செய்தால் சீக்கிரம் வெந்து, சுவையும் கூடுதலாக இருக்கும்.
**பருப்பு உசிலிக்கு... ஒரு கப் துவரம்பருப்புடன், கால் கப் கடலைப் பருப்பு சேர்த்து ஊறவைத்து, மிளகாய் வற்றல், உப்பு, சேர்த்து கெட்டியாக அரைத்து அதைக் குக்கரில் மூன்று சத்தம் வரும்வரை வேகவிட்டு, ஆறியதும் மிக்சியில் விப்பரில் இருமுறை சுற்றினால் பூவாக உதிர்ந்துவிடும். அதன்பின் வாணலியில் என்னை விட்டு உசிலி செய்ய சூப்பர் டேஸ்டாக இருக்கும்.
**வெல்லச் சீடை.....இது பலருக்கும் சரியாக வராத காலை வாரும் ஒரு பட்சணம்! ஒன்று உள்ளே வேகாது: அல்லது உதிர்ந்துவிடும். ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் வெள்ளம் என்ற அளவில் எடுத்துக் கொள்ளவும். அரிசியை நைசான மாவாக அரைத்து வெறும் வாணலியில் சற்று சிவக்க வறுக்கவும். அதில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீர் சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். வெள்ளத்தை இலம்பாகாக்கி, அதை உதிர்த்த மாவில் சேர்த்துக் கிளறவும். தேவையான உளுத்தமாவு, ஏலப்பொடி, நெய் சேர்த்து பிசைந்து வெல்லச் சீடை தயாரிக்கவும். சீடையின் கலரும் ருசியும் சாப்பிடுபவரை 'ஆஹா' போடவைக்கும்!

சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.
சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.
* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.
* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.
* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.
* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.
* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.
* காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.
* தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.
* பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.
* வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.
* அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.
• காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ருசியோ ருசி!
• உருளைக்கிழங்கை அரைவேக்காடாக வேகவைத்து நன்கு வடித்தெடுத்து பிறகு ரோஸ்ட் செய்தால் பாதி அளவு எண்ணெய் கூட செலவாகாது. மிகவும் ருசியாகவும் இருக்கும்.
• கட்லெட் செய்யும் போது உருளைக்கிழங்குக்குப் பதிலாக சேனைக் கிழங்கு அல்லது பிடிக்கருணைக் கிழங்கு வேகவைத்துப் பிசைந்து செய்யலாம். கட்லெட் மிகவும் சுவையாக இருக்கும்.
• அடுப்பு மேடையில் எண்ணெய்ப் பிசுக்கு இருக்கும் இடங்களில் கடலைமாவு அல்லது கோதுமை மாவைத்தூவி வைத்திருக்கவும். 15 நிமிடங்கள் கழித்து, ஒரு பழைய துணியால் அழுத்தித் துடைத்துவிட்டு, சோப்புத் தண்ணீர் கொண்டு அலம்பினால் அடுப்பு மேடை எண்ணெய்ப் பிசுக்கு நீங்கி பளிச்சென ஆகிவிடும்.
• ஃப்ளாஸ்க்கில் பால், காபி, டீ என எதை ஊற்றி வைத்தாலும், சர்க்கரை கலக்காமல் ஊற்றி வைப்பதுதான் நல்லது. சர்க்கரை சேர்க்காததால் பலமணி நேரங்கள் ஆனாலும் பானங்கள் கெடாமல் இருக்கும்.
• பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
• பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும். லேசாகத் தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.
• இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உளுந்து வடை சுவையாக இருக்கும்.
• வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு பிறகு எண்ணெய்யில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.
• சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது ஒரு கப் புழங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப்
பொடியைக் கொண்டு சமைக்கும்போது சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.
• வறுவல், கூட்டு ஆகியவற்றில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் ஒரு ஸ்லைஸ் அல்லது இரண்டு ரஸ்க் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து சிறிது தூவினால் சரியாகிவிடும்.

• ஒரு கரண்டி கோதுமைமாவை நெய்யில் வாசனை வரும் வரை நன்கு வறுத்து, பின் தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு காய்ச்சின பால், சர்க்கரை, ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்க்க சுவையான, மணமான கோதுமை பாயசம் ரெடி.
• திரட்டுப்பால் செய்யும்போது மெல்லிய எவர்சில்வர் தட்டை அதனுள் போட்டல் பால் பொங்காமலும் அடிப்பிடிக்காமலும் கிளற வரும்.
• ஒவ்வொரு முறையும் தோசை ஊற்றுவதற்கு முன்பாக, தோசைக் கல்லில் தண்ணீர் தெளித்து, துடைத்துவிட்டு ஊற்றினால் தோசை கருகாது.
• எந்த வகை சூப் செய்தாலும் கொதிக்கும்போது சிறிது பொட்டுக் கடலை மாவை நீரில் கலந்து சேர்த்தால் சூப் திக்காக இருக்கும்.
• வெண்டைக்காயை வதக்கும் போது புளித்த மோரைச் சேர்த்தால் மொறு மொறுவென இருக்கும்.
• வத்தக் குழம்பு செய்யும்போது கடைசியாக மஞ்சள், மிளகுத் தூளைச் சேர்த்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
• கீரையைப் பருப்புடன் சேர்த்து செய்யும்போது தக்காளி, புளி சேர்க்காமல் நெல்லிக்காயைத் துருவிச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
• துவரம் பருப்பு வேக வைக்கும்போது பருப்புடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப் போகாமல் இருக்கும். உடம்புக்கும் நல்லது.

உப்பு அதிகமாகிவிட்டதா?
குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்ற திரவ வடிவ பதார்த்தங்களில் உப்பு அதிகமாக இருந்தால்... வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம்பருப்பு, முந்திரிப் பருப்பு முதயவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணெயில் வறுத்து (அல்லது) வதக்கி, மிக்ஸியில் அரைத்து சேருங்கள். மீண்டும் ஒருமுறை கொதிக்க விடுங்கள். உப்பு தேவையான அளவுக்கு மாறிவிடும். மேலே சொன்ன பொருட்களில் எது, நீங்கள் தயாரித்திருக்கும் உணவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று பார்த்துச் சேர்ப்பது முக்கியம்.
பொட்டுக்கடலை மாவு, அல்லது சோள மாவு இருந்தாலும் அவற்றைப் பால் கரைத்து குழம்பில் சேர்த்தும் உப்பின் ருசியை சரி செய்யலாம்.
ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால்... ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ரசத்தைக் கொதிக்க விட்டு, மிளகு, சீரகத்தூள் போட்டு, அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விடுங்கள்.
எலுமிச்சம்பழ அளவு சாதத்தை உருட்டி... சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி உப்பு கூடின குழம்பில் போட்டு விடுங்கள். உப்பின் அளவுக்கு ஏற்ப இரண்டு மூன்று உருண்டைகள் கூடப் போடலாம். அரை மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து விட்டால் உப்பு சரியாக இருக்கும் (வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளையும் போடலாம்).
அரைத்து வைத்துள்ள இட்-தோசை மாவில் உப்பு அதிகமானால், ஒரு கரண்டி ரவையை வெறும் வாணயில் வறுத்து, ஐந்து நிமிடங்கள் பால் ஊற வைத்து, மாவுடன் சேர்த்து விடுங்கள்.
இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகிவிடும்.
பொரியல் வகைகளில் உப்பு அதிகமானால், தேங்காயைத் துருவிச் சேர்க்கலாம்.
ஒரு கரண்டி பயத்தம் பருப்பை வெந்நீரில் கால் மணி நேரம் ஊற வைத்து, அதைப் பொரியல் கலந்து விடலாம்.
நான்கில் ஒரு பாகம் பொரியலை (பீன்ஸ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், அவரை, உருளைக்கிழங்கு போன்றவை) எடுத்து வடிகட்டியில் போட்டு, சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கழுவி விட்டால் உப்பு சுவை போய் விடும். இதை மீதமுள்ள முக்கால் பாகப் பொரியல் கலந்து ஒரு புரட்டு புரட்டி விட்டால் போதும்... உப்பு சுவை சரியான அளவுக்கு வந்துவிடும்.
கத்தரிக்காய், கோவைக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றுடன் வெங்காயம் நன்கு சேரும். எனவே, இந்த வகைப் பொரியல்களில் உப்பு அதிகமானால், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கிச் சேர்த்து விடலாம்.
பொடி வகைகளில் உப்பு அதிகமாகிவிட்டால், அதிலுள்ள பருப்பு எதுவோ அதைக் கொஞ்சம் வாணயில் வறுத்து, தனியாகப் பொடி செய்து நன்கு கலந்து விடவும்.
பருப்பு சேர்க்காத பொடி என்றால் (தனியாப்பொடி, கறிமசலாபொடி போன்றவை), கறிவேப்பிலையைக் கொஞ்சம் எடுத்து, எண்ணெயில் வறுத்துப் பொடித்து, உப்பு கூடிப்போன பொடியில் கலந்து விடலாம்.

காரம் கூடிவிட்டதா?
குருமா என்றால் புளிப்பில்லாத கெட்டித் தயிர் அல்லது கெட்டித் தேங்காய்ப் பால் சேர்த்துக் கலக்கி விடுங்கள்.
மட்டர் பனீர், சோலே மசாலா, பாவ் பாஜி போன்றவற்றில் காரம் அதிகமா? ஃப்ரெஷ் கிரீம் அல்லது சூடான பால் வெண்ணெய் சேர்த்து உருக்கி அதைச் சேர்த்து விட்டால், 'காரமா... எங்கே..?' என்பார்கள்.
வெண்பொங்கல், கலப்பு சாதங்கள், புலாவ், பிரியாணி போன்றவை ‘உஸ் உஸ்’ என்று நாக்கை பதம் பார்க்கின்றனவா? பொங்கல் சூடான பால், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்தால் காரம் குறைந்து விடும்.
கலப்பு சாதமாக இருந்தால் (தேங்காய், எலுமிச்சை சாதம் முதயன) அவற்றிலுள்ள மிளகாய்த் துண்டுகளை பொறுக்கி எடுத்து விடுங்கள். பின்னர்... வடாம், அப்பளம் இவற்றைப் பொரித்து தூளாக்கி பரிமாறும் நேரத்தில் மேலே தாராளமாகத் தூவி மொறுமொறுவென்று பரிமாறுங்கள்.
புலாவ் பிரியாணி காரமாக இருந்தால் பிரெட் கிரம்ப்ஸ் ஒரு கரண்டி எடுத்து, வெறும் வாணயில் ஒரு நிமிடம் சூடாக்கிச் சேர்த்து விடுங்கள். பரிமாறும்போது சாதாரண கார்ன்ஃபிளேக்ஸ் கூட சேர்க்கலாம். வெறும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கிக் கலந்தும் சேர்க்கலாம்.
புளிப்பு கூடி விட்டதா?
வெல்லம் ஒரு கட்டி கரைத்து விடுங்கள். பொட்டுக்கடலை மாவையும் நீர்க்கக் கரைத்து அதில் சேர்த்து விடுங்கள்.
வெங்காயத்தை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்தாலும் குழம்பு சாம்பார் வகைகளில் புளிப்பு மட்டுப்படும்.
ரசம் புளிப்பாக இருந்தால், புளிப்பில்லாத தக்காளி, கொஞ்சம் கொத்தமல், ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மிளகு-சீரகம் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ரசத்தில் சேர்த்து ஒரு தடவை கொதிக்க விடுங்கள். பிறகு, கால் ஸ்பூன் சர்க்கரை போட்டு இறக்கினால்... அபாரமாக இருக்கும்.

சாம்பார் நீர்த்துவிட்டதா?
சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால் மேலே தெளிவாக தண்ணீர் தேங்கும். அதைக் கவனமாக இறுத்துவிட்டால்... சாம்பார் கெட்டிதான். இறுத்து எடுத்த தண்ணீரை வீணாக்காமல்... சப்பாத்தி மாவு பிசைய உபயோகிக்காலாம்.
தண்ணீர் அதிகமாகப் போன கூட்டு, குருமா, கிரேவி வகைகளுக்கு பால் கரைத்த சோள மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும் (கூட்டு அல்லது குருமாவிருந்தே கொஞ்சம் எடுத்து அதில் மாவைக் கரைத்துச் சேர்ப்பதும் நல்ல உத்தி!)
தோசை மாவு நீர்த்து விட்டால், அந்த மாவிருந்தே கொஞ்சம் எடுத்து... சோள மாவு, வெறும் வாணயில் வறுத்த மைதா மாவு இவற்றைக் கரைத்து மொத்த மாவில் சேர்த்து விட்டால்... மாவு கெட்டியாகும். சுவையும் மாறாமல் இருக்கும்.
சப்பாத்தி, வடை, போண்டா, அதிரசம், அப்பம் போன்றவற்றுக்கான மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால்... ஃப்ரீஸரில் 20 அல்லது 30 நிமிடங்கள் திறந்தபடி வைத்தால் கெட்டியாகி விடும். அதை ஃப்ரீஸரிருந்து எடுத்த உடனே திட்டமிட்ட உணவுப் பொருளைத் தயாரித்து விடலாம்.

சாதம் குழைந்துவிட்டதா?
கரண்டியால் கிளறாதீர்கள். அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு ஆற விடுங்கள். பின், அதில் எண்ணெய் அல்லது வெண்ணெயைப் பரவலாக ஊற்றி, பாத்திரத்தை மேலும் கீழும் லேசாகக் குலுக்குங்கள். அல்லது ஒரு முள் கரண்டியால் குறுக்கும் நெடுக்கும் கோடு போடுவது போலக் கீறுங்கள். குழைந்த சாதம் கெட்டியாகிவிடும்.
சாதம் குழைந்துவிட்டால்... சாம்பார் அல்லது தயிர் சாதமாகவும் கலந்து பரிமாறி விடலாம். கொஞ்சம் சாதத்தை மேலும் மசித்து, கெட்டிப்பால், சர்க்கரை (அல்லது கண்டென்ஸ்டு மில்க்) சேர்த்து, பால் பாயசமும் தயாரித்து விடலாம். த்ரீ - இன் - ஒன் ஐடியா எப்படி!

டிப்ஸ்.. டிப்ஸ்..!
பஜ்ஜி, தோசைக்கு மாவு கரைக்கும்போது கட்டி தட்டுகிறதா? கவலை வேண்டாம். மிக்ஸி ஜாரில், வெண்ணெய் எடுக்கும் 'விப்பர்' பொருத்தி, அதில் மாவுக் கலவையை ஊற்றி இரண்டு சுற்று சுற்றினால், மாவு கட்டியே இல்லாமல் நன்கு கரைந்து விடும். பஜ்ஜியும் மிருதுவாக உப்பி வரும்.
------------------------------------------------------------------
வெந்தயக் கீரை, புதினா, துருவிய முள்ளங்கி சேர்த்துச் செய்யும் சப்பாத்திகளில் பச்சை வாசனை வரும். இவற்றை முதலில் சில நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்து பிறகு மாவில் சேர்க்கலாம்.
---------------------------------------------------
மிளகாய் பஜ்ஜி செய்யும்போது, மிளகாயில் மாவு ஒட்டிக் கொள்ளும். ஒரு முள் கரண்டியால் மிளகாயின் தோலை லேசாக சுரண்டுங்கள். பிறகு பஜ்ஜி செய்தால் நன்றாக வரும்.
--------------------------------------------------------------------------
மசால் வடை செய்ய ஒரு சுலப வழி.. ஒரு கப் ஊற வைத்த கொண்டைக்கடலையுடன், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் வடை தட்டினால், சுவை அபாரமாக இருக்கும்.
-------------------------------------------------------------------
பிசைந்த சப்பாத்தி மாவு கல்லு போல இருக்கிறதா? இப்போது அதில் நேரடியாக தண்ணீர் சேர்க்காமல், கையை தண்ணீரில் விட்டு எடுத்து, மாவை உருட்டிப் பிசையுங்கள்.. இப்படி இரண்டு, மூன்று முறை கையை ஈரப்படுத்தி விட்டுப் பிசைந்தால் மாவு மிருதுவாகி விடும்.
--------------------------------------------------------------------

ஒரு டேபிள்ஸ்பூன் ஜாமில் இரண்டு கரண்டி பால் சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். வீட்டில் கைவசம் இருக்கும் பழத்தைத் துண்டுகளாக்கி அதில் அரைத்த ஜாம் கூழை சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்' என்று பரிமாறுங்கள். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஃப்ரூட் சாலட் போல் அசத்தலாக இருக்கும்.
-------------------------------------------------------------------
இரண்டு மூன்று தேங்காயை உடைத்துத் துருவி, அதில் நான்கு முந்திரிப் பருப்புகளை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரையுங்கள். முந்திரிப் பருப்பை சேர்ப்பதால் தேங்காய் கெட்டியாகி விடும். இதை சிறு கிண்ணங்களில் அல்லது இட்லி தட்டில் நிரப்பி ஃபிரீஸரில் வைத்து விட்டால் பல நாட்கள் கெடாமல் இருக்கும். தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
வாழைப்பழத்தை சீப்பாக வைத்திருக்கும்போது நன்கு பழுத்துவிட்டால், காம்பில்இருந்து தனித்தனியாக உதிர்ந்துவிடும். அதோடு, ஈ, சிறு கொசு போன்றவை மொய்க்க ஆரம்பித்துவிடும். இதைத் தவிர்க்க, செம்பழமாக இருக்கும்போதே சீப்பிலிருந்து காம்புடன் தனித்தனியாக பிரித்துவிடுங்கள். பழங்கள் பழுத்துவிட்டாலும், காம்புடன் இருப்பதால் ஈ மொய்க்காமல் சுகாதாரமாக இருக்கும். சீக்கிரத்தில் அழுகவும் செய்யாது. பிறருக்கு எடுத்துக் கொடுப் பதும் சுலபம்.
------------------------------------------------------------------------------
பக்குவமாகச் செய்தாலும், ஊறுகாயில் பூஞ்சை காளான் வந்துவிடுகிறதா? கவலையை விடுங்கள். ஊறுகாயின் அளவுக்கேற்ப, சுத்தமாக உலர்ந்த பாட்டில் ஒன்றை எடுத்து, வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை விட்டு, எல்லா இடங்களிலும் பரவும்படி செய்யுங்கள். பிறகு ஊறுகாயை நிரப்புங்கள். பூஞ்சை காளான் கிட்டே நெருங்காது.

வெரைட்டி ரைஸ் தயாரிக்கும்போது, சாதத்தை உதிரியாகக் களறீயதும், ஒரு கரண்டியால் மேற்புறம் சிராக அழுத்தி விட்டு, மூடி வைத்து விடுங்கள். இதனால், நெடுநேரம் சூடாக இருப்பதுடன், சுவையும் குறையாமல் ஃபிரெஷ்ஷாகவும் இருக்கும்.
----------------------------------------------------------------------------
பர்ஃபி, மைசூர்பாக் போன்ற ஸ்வீட்ஸ் செய்யும்போது, கடாயின் அடியில் ஒட்டிக் கொண்டு எடுக்கவே வராது. அதைக் கரண்டியால் சுரண்டாமல், கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமாக சூடு பண்ணி, லேசாகத் தேய்த்தால் ஒட்டிக் கொண்டிருப்பது சுலபமாகப் பெயர்ந்துவிடும்.
---------------------------------------------------------------------
காலையில் செய்த சாதம், பொரியல் மீந்து விட்டதா? இரண்டையும் நன்றாக மசித்து, வதக்கிய வெங்காயத்துண்டுகளை சேர்த்து கட்லெட்டாக செய்துவிடலாம். மாலை சிற்றுண்டி ரெடி!
--------------------------------------------------------------------
மாங்காய் தொக்கு வருடம் முழுவதும் சாப்பிட ஆசையா? இரண்டு மூன்று மாங்காய்களை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துவிடுங்கள். தேவைப்படும்போது, இதில்இருந்து சிறிது எடுத்து வெந்நீரில் ஊற வைத்து, வழக்கம்போல நல்லெண்ணெய் தாளித்து, தொக¢கு செய்து கொள்ளலாம்.
---------------------------------------------------------------------------
தேங்காய் பர்ஃப¤ செய்யும்போது முதலிலேயே சர்க்கரை, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்காதீர்கள். சர்க்கரையை கம்பிப் பாகு பதம் வரும்வரை காய்ச்சி, பிறகு, தேங்காய் துருவலை சேர்த்தால், அதிகம் கிளற வேண்டிய அவசியமிருக்காது. பர்ஃபியும் சீக்கிரத்தில் கெட்டியாகிவிடும்.
--------------------------------------------------------------------------------

நாடா பக்கோடா செய்யும்போது அரிசி மாவு, கடலை மாவுடன் 2 டீஸ்பூன் உளுந்து மாவையும் சேர்த்துச் செய்தால், எண்ணெய் அதிகம் குடிக்காது. கூடுதல் 'கரகர மொறுமொறு'வுடன் இருக்கும்.
-----------------------------------------------------------------------------------
வெள்ளைப் பூசணிக்காய் தோலைத் தூக்கி எரியாதீர்கள். சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து, எண்ணெயில் பொரித்து இட்லிப் பொடியுடன் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது.
-------------------------------------------------------------------------
அவசரமாக சாம்பார் செய்யணுமா? பாசிப்பருப்பை அரை பதத்தில் வேக வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் பச்சை மிளகாய், தக்காளித் துண்டுகள் தாளித்தால் சாம்பார் ரெடி! இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும்.
------------------------------------------------------------------------
அடை வார்க்க போகிறீர்களா? சிறிது நேரம் ஊற வைத்த ஜவ்வரி சியை, அடைமாவுடன் சேர்த்துச் செய்தால் வித்தியாசமான சுவையில் அடை கரகரப்பாக இருக்கும்.
---------------------------------------------------------------------------
மொறுமொறு தோசை சாப்பிட ஆசையா? ஒரு டம்ளர் ரவையுடன், ஒரு டம்ளர் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கலந்து தோசை வார்த்து பாருங்கள். பேப்பர் ரோஸ்ட் போல் வருவதுடன், டேஸ்ட்டாகவும் இருக்கும்.
-----------------------------------------------------------------------------
ஒரு கிலோ வெல்லத்தை உடைத்து கல், மண் நீக்கி பாகு காய்ச்சி, ஏலக்காய்த்தூள் தூவி டப்பா வில் வைத்துக் கொண்டால்... அதை பலவிதங்களில் பயன்படுத்த முடியும். தேவைப்படும்போது வெல்லத் தூளில் கொஞ்சம் எடுத்து, அதில் அரை மூடி எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டால் பாகு இளகி இருக்கும். இந்தப் பாகில்...தேங்காய்ப் பால் சேர்த்து கலக்கினால் தேங்காய்ப் பால் பாயசம் ரெடி! மாங்காய் வெல்ல பச்சடிக்கு உடனே பயன்படுத்தலாம். 2 கரண்டி பாகில் 4 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி கமர்கட் போலவும் சாப்பிடக் கொடுக்கலாம்.
---------------------------------------------------------------
காய்ந்த மிளகாய், சீரகம், தனியா, பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து அதனுடன் பெருங்காயத்தூள் சேருங்கள். கொத்தவரங்காய், பீன்ஸ், காராமணி, கேரட் போன்றவற்றில் பொரியல் செய்யும்போது, இந்தப் பொடியைக் கொஞ்சம் தூவி வதக்கினால் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

சிலர், அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, உபயோகப்படுத்த மறந்து விடுவார்கள். அதைப் பயன்படுத்த எண்ணும்போது, தேதி காலாவதி யாகி இருக்கும். எனவே, ஃப்ரிட்ஜை சுத்தப்படுத்தும் போதெல்லாம், அதில் வைத்த, அட்டைப்பெட்டி மீது கண் வைப்பது அவசியம். உணவுப் பொருட்கள் வீணாகாமல் தடுக்கலாம். பணமும் விரயமாகாது.
-----------------------------------------------------------------------
குக்கரில் இட்லி சுடும்போது, தட்டின் குழிவான பகுதிகளில் ஒட்டிக் கொண்டு இட்லிகள் அடம் பிடிக்கும். அந்தப் பகுதிகளில் எண்ணெய் தடவினால் போதும்... இட்லி முழுமையாக கையில் வந்துவிடும். அதேபோல, இட்லி தட்டின் அடிப்பகுதியிலும் எண்ணெய் தடவினால், கீழ் தட்டில் உள்ள இட்லி அதில் ஒட்டாமல் பூப்போல பெயர்ந்து வரும்.

சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? ஒரு கிண்ணத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை, சிறிது நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். சப்பாத்தி மாவை வட்டமாக உருட்டியதும், எண்ணெய் சேர்த்துக் குழைத்த கலவையை அதன் நடுவில் சிறிது தடவுங்கள். பின்பு வழக்கம் போல, சப்பாத்திகளாக உருட்டி சுட்டெடுத்தால்... மிருதுவாகவும், பரோட்டா போல இதழ் இதழாகவும் சப்பாத்தி பிரிந்து வரும். சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
தேங்காய்ச் சட்னி வழக்கத்தைவிட சற்று கூடுதல் டேஸ்ட்டோடு வேண்டுமா..? வழக்கமாக சேர்க்கும் பொருட்களுடன் கொஞ்சம் போல கடுகு (வறுக்காமல்) சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு, வழக்கம்போல கடுகு தாளித்து, சட்னியை அதில் சேர்த்தால் சுவை கூடும். ஃப்ரிட்ஜில் வைத்தால் அடுத்த நாள் வரை கெடாமல் இருக்கும்.

தினமும் இரவு சமையலறை யைச் சுத்தம் செய்ததும், கொதிக்க வைத்த தண்ணீரை சிங் உள்ளே வேகமாக ஊற்றுங்கள். இதனால் அங்கு தங்கியிருக்கும் பூச்சிகள் அழிவதோடு, அடைப்புகளும் அகன்று விடும்.

தோசை வார்த்தால் கல்லில் ஒட்டிக் கொண்டு அலும்பு செய்கிறதா...? ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு சில நிமிடம் வதக்கி எடுக்கவும். பின்னர் தோசை வார்த்தால், ஒட்டவே ஒட்டாது. அந்த வெங்காயத்தை, மாவில் சேர்த்தால்... வெங்காய தோசை!

இரண்டே மணி நேரத்தில் கெட்டித் தயிர் செய்ய ஒரு சுலபமான வழி. ஒரு பாத்திரத்தில் மிதமான சூடுள்ள பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு டீஸ்பூன் தயிரை கலக்குங்கள். இதை அப்படியே 'ஹாட் பேக்'கில் வைத்து மூடிவிடுங்கள். இரண்டே மணி நேரத்தில் அருமையான கெட்டித் தயிர் தயார்.
----------------------------------------------------------------------
வெளியூருக்குப் பயணிக்கும்போது பாத்திரம் இல்லாமலேயே நாலு கப் டீ தயாரிக்க ஒரு ஐடியா. இரண்டு கப் கொதிக்க வைத்த பால், இரண்டு கப் வெந்நீர், 8 டீஸ்பூன் சர்க்கரை, நாலு டீ பேக் (டிப் செய்யும் டீ பேக்கின் நூலை கட் பண்ணிவிட்டு உள்ளே போடவும்).. இவை எல்லாவற்றையும் ஃபிளாஸ்கினுள் போட்டு இறுக மூடி விடுங்கள். ஐந்தே நிமிடத்தில் அசத்தலான டீ ரெடி!
-------------------------------------------------------------------------
சமையலுக்கு எவர்சில்வர் கரண்டிகளை விடவும் மரக்கரண்டிகளையே பயன்படுத்துவது நல்லது. கிளறுவது சுலபம். பாத்திரத்தில் கோடு விழாது. கையிலும் சூடு தாக்காது.

சமையல் செய்யும்போது துருவிய தேங்காய் மீந்துவிட்டால், அதனுடன் அரை டீஸ்பூன் (ஒரு கப் தேங்காய்த் துருவலுக்கு) உப்புத்தூளை சேர்த்துப் பிசிறி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, மூடி வைத்து விடுங்கள். ஃபிரிட்ஜில் வைக்காமலேயே, மூன்று நாட்கள் வரை தேங்காய் கெடாமல் இருக்கும்.
----------------------------------------------------------------------
ஃபிரெட்டில் ஜாம், தேன், வெண்ணெய் தடவி சாப்பிடுபவரா நீங்கள்? முதலில் பிரெட்டில் ஜாம் தடவிய பிறகு தேன், அதன் பிறகு வெண்ணெய் தடவினால் பிரெட்டில் எல்லாம் சீராக பரவும். சாப்பிடும்போது சிந்தாமல் இருப்பதோடு, ஃபிரெட் வாயிலும் ஒட்டிக் கொள்ளாது.
சப்பாத்தி, பூரிக்கு மாவை உருட்டி தேய்க்கும்போது மைதா மாவுக்கு பதிலாக கார்ன்ஃப்ளார் மாவை பயன்படுத்துங்கள். நன்றாகத் தேய்க்க வரும். பொரிக்கும்போதும் தனியாக உதிராது.
-------------------------------------------------------------------
உருளைக்கிழங்கு, கோஸ், கேரட் இவற்றை வேக வைக்க ஒரு ஈஸி வழி. பிரஷர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்களை போட்டு உப்பு, காரம் சேர்த்து லேசாக ஒரு முறை வதக்கி, வெயிட் போடாமல் மூடுங்கள். அடுப்பை 'சிம்'மில் வைத்து, ஆவி வந்ததும் 'வெயிட்' போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். சட்டென்று காய்கள் வெந்துவிடும்.
-------------------------------------------------------------------------
ஒரு டெய்ரி மில்க் சாக்லேட்டை தயிரில் போட்டு, 5 முதல் 10 நிமிடம் ஊற வையுங்கள்.இதில் சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் சுற்றி, ஃப்ரீஸரில் வைத்து எடுத்தால் அசத்தலான சாக்லேட் லஸ்ஸி தயார்!

பயறு வகைகளை ஊற வைக்கும்போது, தனித் தனி பாலீதின் பைகளில் பயறுகளைப் போட்டு தண்ணீர் விட்டு, இறுக்கமாகக் கட்டி வைத்து விடுங்கள். விரைவாகவும், ஒரே மாதிரியாகவும் ஊறிவிடும்.
-----------------------------------------------------------------------------
கடலைப்பருப்புடன், வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து போளி செய்து பாருங்கள். புது சுவையில் நாவை சுண்டியிழுக்கும்.
பஜ்ஜி செய்ய, விருந்துகளில் அலங்கரிக்க வெங்காயத்தை வட்டமாக நறுக்குவது வழக்கம். வெங்காயத்தின் தோலை உரிக்காமலேயே வட்டங்களாக வெட்டி விட்டுப் பிறகு உரித்தால் வெங்காயம் பிரியாமல் அப்படியே இருக்கும்.
----------------------------------------------------------------------------
பஞ்சு போன்ற இட்லி வேண்டுமா? கிரைண்டரில் உளுத்தம்பருப்பை அரைக்கும்போது, அது பாதி மசிந்ததும், ஏழெட்டு ஐஸ் கியூப்களைப் போட்டு¢ அரையுங்கள். மாவும் அதிகம் வரும். இட்லியும் மெத்தென்று மென்மையாக இருக்கும்.

நான்-ஸ்டிக் கல்லில் தோசை வார்க்கும்போது எண்ணெய் சீராக பரவ ஒரு வழி.. மாவைக் கல்லில் வட்டமாக ஊற்றி பரப்பி, ஏதேனும் ஒரு ஓரத்தில் மட்டும் எண்ணெயை விடவும். தோசைக் கல்லின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு லேசாகச் சரித்தால், எண்ணெய் தோசையின் எல்லா இடங்களிலும் பரவி விடும்.

சுண்டல் செய்வதற்குமுன் கடலையை ஊற வைக்க மறந்து விட்டாலும் கவலை இல்லை. வெறும் கடாயை சூடாக்கி, அதில் கடலையைப் போட்டு ஐந்தாறு நிமிடங்கள் நன்றாக வறுங்கள். இருமடங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் சூடான கடலையைப் போட்டு குக்கரில் வைத்தால் கடலை நன்றாக வெந்து விடும்.

குக்கரை திறந்து சாதத்தை எடுக்கும்போது சில நேரங்களில் தட்டின் மீது நீர் தேங்கியிருக்கும். உடனே மீண்டும் குக்கரை மூடி, வெயிட் போடாமல் ஐந்து நிமிடங்கள் எரிய விடுங்கள். அதிகப்படி தண்ணீர் ஆவியாகி சாதம் சரியாக வெந்துவிடும்.
------------------------------------------------------------------
பூரி மொறுமொறுப்புடன் இருக்க.. மாவைப் பிசைந்து தேய்த்த பிறகு அதை ஒரு டப்பாவில் போட்டு, அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். பிறகு எடுத்துப் பொரித்தால் பூரி க்ரிஸ்பியாக இருப்பதுடன் எண்ணெயும் அதிகம் குடிக்காது.
-----------------------------------------------------------------

காபி மேக்கரில் (அ) ஃபில்ட்டரில் சீரகத்தைப் போட்டு, வெந்நீரை விடுங்கள். சில நிமிடங்களில் அருமையான சீரகத் தண்ணீர் ரெடி! சீரகத்தை வடிகட்ட வேண்டியதும் இல்லை. வயிற்றுப் பிரச்னைக்கும் விடிவு பிறக்கும்.
-------------------------------------------------------------------
ஹெல்த்தியான சப்பாத்தி செய்ய.. கோதுமை மாவுடன், நான்கில் ஒரு பங்கு சத்து மாவு, ஒரு டீஸ்பூன் வெந்தயப்பொடி கலந்து கொள்ளுங்கள். இதில் சிறிது வெந்தயக்கீரையை வதக்கியும் சேர்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது இந்த சப்பாத்தி
---------------------------------------------------------------------
மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், சாதம் ஊறி மாவு போல் கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் மோர் கலந்து விட்டுப் பாருங்கள். மறுநாளும் சாதம் மல்லிகைப் பூப்போல உதிர் உதிராக இருக்கும்.
------------------------------------------------------------------------
ருசியாக ரிப்பன் பக்கோடா செய்ய ஒரு ஈஸி வழி. நறுக்கிய வெங்காயத்துடன் 3 காய்ந்த மிளகாய், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டுங்கள். இதை ரிப்பன் பக்கோடாவுக்கான மாவுடன் சேர்த்துப் பிசைந்து, அச்சில் இட்டு, குறைந்த தீயில் பொரித்தெடுங்கள். சுவையான ரிப்பன் பக்கோடா ரெடி!
வடிகட்டப்பட்ட பொருளையும் வீணாக்காமல் அதில் சிறிது கடலை மாவு கலந்து பக்கோடாவாகப் பொரிக்கலாம்.

பிரெட்டை ஸ்வீட் அயிட்டமாக மாற்ற ஒரு சூப்பர் ஐடியா. ஒரு டம்ளர் பாலில் மூன்று (அ) நாலு டீஸ்பூன் மைதா, சர்க்கரை, சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். அதில் பிரெட்டை நனைத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு, தீயைக் குறைத்து இரு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். பிரெட் மொறுமொறுப்புடன் அட்டகாசமாக இருக்கும்.

கறிவேப்பிலை காய்ந்து போகாமல் பசுமையாக இருக்க.. கறிவேப்பிலையை உருவி சுத்தம் செய்து, ஈரப்பசை இல்லாமல் உலர்த்தி எடுக்கவும். பிறகு மிக்ஸியில் நன்றாகப் பொடித்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து விடவும். வாரக் கணக்கில் நிறம் மாறாமல் இருக்கும்.

வெயில் காலத்தில் இட்லி மாவு சீக்கிரத்தில் புளித்துவிடும். இட்லி, தோசைக்கு அரிசி, பருப்பைக் கழுவி ஊற வைக்கும்போது, ஒரு மணிநேரத்தில் அந்தத் தண்ணீரை வடித்து விட்டு, வேறு புதிய தண்ணீரை ஊற்றவும். இப்படி இரண்டு (அ) மூன்று முறை தண்ணீரை மாற்றி ஊற வைத்தால் மாவு சீக்கிரம் புளிக்காது.

மைதா, கோதுமை, அரிசி மாவுகளை தண்ணீர் விட்டுக் கரைக்கும் போது கட்டி கட்டியாகி விடும். இதற்கு, மாவை பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் தண்ணீரைப் பரவலாக விட்டு உடனே கலக்காமல் அப்படியே விட்டு வையுங்கள். 5 நிமிடங்கள் கழித்துக் கலக்கினால் மாவு கட்டியில்லாமல் கரைந்துவிடும்.
----------------------------------------------------------------
முழு முந்திரிப் பருப்புகளை அப்படியே பாட்டில்களில் வைத்தால் அதில் பூச்சிகள் வந்து விடும். பருப்புகளை இரண்டாக உடைத்து வைத்துவிடுங்கள். நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். இரண்டு கிராம்புகளை போட்டு வைத்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
---------------------------------------------------------------
மைதா மாவு, பிரெட்தூள் இல்லாமல் சுலபமாக கட்லெட் செய்ய ஒரு வழி இருக்கிறது. காய்கறி கலவையில் சிறிது கடலை மாவைச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, இந்தக் கலவையைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி, கெட்டியானதும், எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்துங்கள். பிறகு விரும்பிய வடிவில் வெட்டி, தோசைக்கல்லில் சுட்டு எடுங்கள். கட்லெட் ரெடி.

Similar topics
» சமையல் செய்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய டிப்ஸ்
» சமையல் டிப்ஸ்!
» நோன்புகால சமையல் டிப்ஸ்!
» சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்
» அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக!

Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum