Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுவை மிகுந்த பூண்டு உணவுகள்..!
Page 1 of 1 • Share
சுவை மிகுந்த பூண்டு உணவுகள்..!
பூண்டுவின் சிறப்பை எடுத்துக்காட்ட உலகில் பல நாடுகளிலும் பல கதைகள் உலாவருகின்றன. இந்திய புராணங்களிலும் பூண்டு கதை உண்டு.
எகிப்து பிரமிடுகளிலும் பூண்டுவை வைக்கும் வழக்கம் இருந்திருந்திருக்கிறது. பூண்டின் மணமே நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்பதால் அதனை வீட்டின் முன்னால் கட்டி தொங்கவிடும் பழக்கம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது. பூண்டு பற்களை மாலையாக கட்டி அணியும் பழக்கம் பல பழங்குடி இனத்தவரிடம் காணப்பட்டதை வரலாற்றில் அறிய முடிகிறது.
பூண்டுவை பிழிந்து கிடைக்கும் எண்ணெய் பசையுடன் காரத்தன்மை கொண்டது. அது வெப்பத்தை ஊடுருவி கடத்தும் இயல்புடையது. கபம் (குளிர்ச்சி), வாதம் (காற்று) ஆகிய தன்மைகள் மனித உடலில் அதிகரிக்கும்போது, அவர்களுக்கு பூண்டு சிறந்த மருந்தாகின்றது.
பூண்டில் ஒருவித மணம் வீசும். அலிசின் என்ற கந்தக வேதிப்பொருள் பூண்டில் இருப்பதால் அத்தகைய மணம் வீசுகிறது. அதுதான் நோய் தொற்றுக்களை தீர்க்க உதவுகிறது.
பூண்டில் இருக்கும் கந்தக சத்துக்களே அதன் சிறப்புக்கு காரணம். பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலீனியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் சத்துக்களும் அதில் நிறைந்திருக்கிறது. நல்ல உடற்கட்டு, குரல் வளம், தீர்க்கமான பார்வை, ஆண்மை சத்து, எலும்புகளுக்கு உறுதி போன்றவைகளை பூண்டு தருகிறது. நோய்த் தடுப்பாற்றலையும் அதிகரிக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், இதயத்தில் உள்ள ரத்தக்குழாய் அடைப்புகளை சீர்படுத்துதல், கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துதல் போன்றவைகளை பூண்டு செய்கிறது. மூட்டுவலி, பெண்களுக்கு இடுப்பு பகுதியில் ஏற்படும் எலும்பு தேய் மானம், எலும்பு சிதைவு, சுவாசநோய்கள் மற்றும் சிலவித நரம்பு பலகீன நோய்களுக்கும் பூண்டு மருந்தாகிறது.
பூண்டு ஒன்றை அரைத்து, மெல்லிய துணியில் கட்டி, அதை தீயில் காட்டி பிழிந்தால் சாறு வரும். அத்துடன் தேன் கலந்து தொண்டை பகுதியில் தடவி வந்தால் தொண்டை வீக்கம் குறையும். தொண்டை புண்கள் ஆறும். சித்த மருத்துவத்தில் காது வலி, வயிற்று வலி, சுவாச நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பூண்டு சேர்க்கப்படுகிறது.
பிரசவித்த பெண்கள் பாலில் பூண்டுவை போட்டு கொதிக்கவைத்து சாப்பிட்டால், அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது. தாய்ப்பாலும் பெருகும்.
பூண்டு ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் தன்மை கொண்டது. அதனால் இதய நோய்களுக்கான மருந்து சாப்பிடுபவர்கள் பூண்டுவை அதிகம் சாப்பிடக்கூடாது. மாதவிடாய் உதிரப்போக்கு அதிகரிக்கும் காலங்களிலும் பெண்கள் பூண்டுவை அதிகம் பயன்படுத்தக்கூடாது.
பூண்டுவில் இருந்து வெளியேறும் கந்தக மணம் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. கீரையுடனோ, பாலுடனோ பூண்டை கலந்து சாப்பிட்டால் அந்த மணம் கட்டுப்பட்டுவிடும். அந்த மணம் கட்டுப்பட கீரையில் உள்ள பச்சையமும், பாலில் உள்ள புரதங்களும் காரணமாக இருக்கின்றன.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சுவை மிகுந்த பூண்டு உணவுகள்..!
பூண்டு பற்றிய பயனுள்ள பகிர்வு! நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: சுவை மிகுந்த பூண்டு உணவுகள்..!
பூண்டில் தயாராகும் எளிய உணவுகள்:
பால்
பூண்டு – 10 பற்கள்
பால் –150 மி.லி.
தண்ணீர் –150 மி.லி.
மஞ்சள்தூள்–அரை தேக்கரண்டி
மிளகு தூள்–அரை தேக்கரண்டி
பனங்கற்கண்டு–தேவைக்கு
செய்முறை: பூண்டுவை நசுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் பூண்டு, பால், தண்ணீர் கலந்து பூண்டு நன்கு வேகும்வரை சிறு தீயில் கொதிக்கவிடவும்.
கொதிக்கும்போது நீரில் கரையும் சத்துக்களும், கொழுப்பில் கரையும் சத்துக் களும் பாலில் கலந்து சிறந்த ஆரோக்கியத்தை தரும்.
அந்த பாலுடன், மஞ்சள்தூள், மிளகுதூள், பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும். இது பல நோய்களுக்கு மருந்தாகிறது. பாலுடன் சேர்த்து பூண்டுவை சாப்பிடுவதால் அதன் காரத்தன்மை குறையும்.
காசநோய், விட்டு விட்டு உண்டாகும் ஜூரம், ஆஸ்துமா, மலச்சிக்கல், வயிற்றில் உள்ள கட்டிகள் போன்றவைகளை இந்த பால் கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்கள் இதை அடிக்கடி பருகிவரலாம்.
தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு இதை பருகினால் தூக்கம் நன்றாக வரும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சுவை மிகுந்த பூண்டு உணவுகள்..!
தேன்
பூண்டு – 100 கிராம்
தேன்– 300 கிராம்
செய்முறை: பூண்டுவை நசுக்கிக் கொள்ளவும். நசுக்கும்போது ஹைட்ரஜன் சல்பைட் என்ற கந்தக ரசாயனம் வெளியாகும். அது ரத்த குழாய்களை விரிவடையச் செய்யும் தன்மையுடையது.
நசுக்கிய பூண்டுவை தேனுடன் கலந்து ஒரு நாள் வைத்திருக்கவும். தேனில் சர்க்கரை சத்தும், நீர் சத்தும் இருக்கிறது. அது பூண்டுவில் உள்ள நீர்ச்சத்துடன் சேருவதால் புளித்துப் போகும். இதை பிரிட்ஜில்வைத்து பாதுகாக்கவேண்டும்.
தினம் ஒரு தேக்கரண்டி வீதம் காலையும், மாலையும் சாப்பிடவேண்டும். குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடிக்கடி தொண்டை அழற்சி ஏற்படுகிறவர்களுக்கும், சளி இருமலால் அவ்வப்போது தொந்தரவை அனுபவிப்பவர்களுக்கும் இது சிறந்த மருந்து. பண்டைய கிரேக்க தேசத்தில் ஒலிம்பிக் வீரர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததாக சரித்திர குறிப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்பு: தினம் 2 பூண்டுவை நசுக்கி ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சுவை மிகுந்த பூண்டு உணவுகள்..!
பொடி
பூண்டு – 200 கிராம்
காய்ந்த மிளகாய்–10
கொப்பரை தேங்காய்–அரை மூடி (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
நல்லெண்ணெய்–3 தேக்கரண்டி
உப்பு –தேவைக்கு
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பூண்டுவை தோல் உரித்து வாணலியில் போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி, இறக்கி, ஆறவைக்கவும்.
நறுக்கிய கொப்பரை தேங்காய், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவைகளை கலந்து மிக்சியில் இட்டு அரைக்கவும்.
இந்த பூண்டு பொடியை இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டாலும் சுவை கிடைக்கும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சுவை மிகுந்த பூண்டு உணவுகள்..!
சாதம்
பூண்டு – 100 கிராம் (தோலுரித்து சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்)
பச்சரிசி– 250 கிராம் (வேக வைத்து கொள்ளவும்)
சீரகம் – 2 தேக்கரண்டி
மிளகு தூள்–1 தேக்கரண்டி
நெய்–3 தேக்கரண்டி
உப்பு– தேவைக்கு
செய்முறை: வாணலியில் நெய் ஊற்றி, சீரகத்தை தாளித்து அத்துடன் சிறிதாக நறுக்கி வைத்துள்ள பூண்டுவை இட்டு வதக்கி, மிளகு தூள் கலந்து கிளறவும். வேகவைத்த சாதத்தை அதில் கொட்டி கிளறி, உப்பு கலந்து சுவைக்கவும்.
இதற்கு தயிர் பச்சடி சுவைதரும். புதினா, கொத்தமல்லி, இஞ்சி கலந்த துவையலுடன் சாப்பிடவும் ருசியாக இருக்கும். இது மழைக் காலத்திற்கு ஏற்ற உணவு. சளி தொந்தரவு இருக் கும்போது இதை தயார் செய்து சாப்பிடலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நீரிழிவை கட்டுபடுத்தும் உணவுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
» ரசனை மிகுந்த கேக்குகள்.
» மதிப்பு மிகுந்த ராமாவதாரம்
» மிகுந்த கோபம் கல்லீரலை பாதிக்கும்
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம்
» ரசனை மிகுந்த கேக்குகள்.
» மதிப்பு மிகுந்த ராமாவதாரம்
» மிகுந்த கோபம் கல்லீரலை பாதிக்கும்
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum