தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தீபாவளி காலை விருந்து

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தீபாவளி காலை விருந்து  Empty தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:18 am

வெஜிடபிள் இட்லி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்குங்கள். பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள். இந்தக் கலவையை அப்படியே சூடாக இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:19 am

தயிர் இட்லி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன், ஓமப்பொடி - 3 டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.
அரைக்க: தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, முந்திரிப்பருப்பு - 6.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள். பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம். அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம். இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:20 am

பொடி இட்லி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்து, அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:20 am

கொத்துமல்லி இட்லி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: இட்லி மாவு - 2 கப்.
அரைக்க: மல்லித்தழை - ஒரு கட்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: இட்லி மாவைக் கொண்டு இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். மல்லித்தழை, கறிவேப்பிலையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயைக் காயவைத்து தேங்காய், மிளகாய், புளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நன்கு அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைப் போட்டு, அதை வறுத்து அரைத்த விழுதுடன் சேர்த்து சற்று தளதளவென்று கரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் இட்லிகளை சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள். பிரமாதமான சுவையும் மணமும், இட்லிகளை நிமிடத்தில் காலி செய்ய வைக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:21 am

பெப்பர் இட்லி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். மிளகை வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, இட்லி, மிளகுதூள் சேர்த்துக் கிளறுங்கள். மிளகு மணமும் காரமும் சேர்ந்து, சுவை தரும் இட்லி இது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:22 am

காஞ்சிபுரம் இட்லி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம் பருப்பு - ஒரு கப், நல்லெண் ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு.
செய்முறை: அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பின்னர், நன்கு கழுவி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்து அதோடு சேருங்கள். இஞ்சியையும் துருவிச் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, வேகவைத்தெடுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:23 am

அவல் இட்லி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், கெட்டி அவல் - அரை கப், உப்பு - தேவையான அளவு, ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை: அரிசியையும் உளுந்தையும் சேர்த்தும் அவலைத் தனியாகவும் ஊறவையுங்கள். அரைக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, புளிக்கவையுங்கள் (6 முதல் 8 மணி நேரம்). புளித்த மாவில் ஆப்பசோடா சேர்த்துக் கலந்து, இட்லிகளாக ஊற்றுங்கள். வித்தியாசமான டிபன் அயிட்டம் இது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:23 am

சாம்பார் இட்லி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், மசூர் பருப்பு - அரை கப், பரங்கிக்காய் - சிறிய துண்டு. சின்ன வெங்காயம் - 12, தக்காளி - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், புளி - சிறிய உருண்டை, கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித் தழை - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன். வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய் - 6, தனியா - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், கொப்பரை - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: மாவைக் கொண்டு சிறு, சிறு, இட்லிகளாக ஊற்றி யெடுங்கள். பரங்கிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, பருப்பை குழைய வேக வையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். கொடுத்துள்ள பொருட்களை, வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் சிவக்க வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து கரையும் வரை வதக்கி புளித் தண்ணீர் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பு, அரைத்த பொடி, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். பரிமாறும் கிண்ணங்களில் இட்லிகளைப் போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றி, மல்லித்தழை தூவி, துளி நெய் விட்டுப் பரிமாறுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:24 am

பனீர் தோசை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், துருவிய பனீர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, பொடியாக அரிந்த கொத்துமல்லி - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பனீரை துருவி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயையும் கொத்துமல்லியையும் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். ஊறிய அரிசியை உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். பின்னர் அதனுடன் துருவிய பனீர், பச்சைமிளகாய், கொத்துமல்லி இவற்றைச் சேர்த்து, மாவை சிறிது தளர கலந்து, சிறிது கனமான தோசைகளாக வார்த்து எடுக்கவும். சோயாபனீர் சேர்த்தும் செய்யலாம். உடம்புக்கு மிகவும் நல்லது. புளிப்பு வேண்டியவர்கள் மாவை 5 மணி நேரம் புளிக்கவைத்து, பிறகு பனீர் சேர்த்துச் செய்யலாம். சூடாக சாப்பிட்டால் சுவை அதிகம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:25 am

பாலக் தோசை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பாலக் (பசலைக்கீரை) - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: பச்சரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து 2 மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி, பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பாலக் எல்லாம் சேர்த்து நைஸாக அரைத்து வைக்கவும். 5 மணி நேரமாவது புளிக்கவேண்டும். புளித்து பொங்கியதும் தோசைகளாக வார்க்கவும். கீரையில் வழவழப்பு இருப்பதால் உளுந்தை குறைத்துப் போடவேண்டும். வித்தியாசமான மாலை டிபன், இந்த தோசை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:26 am

கல்தோசை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: புழுங்கலரிசி - 3 கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைத்து பின்னர் உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் அரைத்த மாவை தோசைகளாக சற்று தடிமனாக வார்க்கவும். இதுதான் கல்தோசை! இதில் புளிப்பிருக்காது. இதற்கு தொட்டுக்கொள்ள பச்சைமல்லி துவையல் மிகவும் சுவையாக இருக்கும்.
பச்சைமல்லி துவையல்: நன்கு கழுவி, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 2 கப், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, புளி - கொட்டைப்பாக்களவு, உப்பு - தேவையான அளவு.. எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். இந்த பச்சை மல்லி துவையலுக்கும் கல்தோசைக்கும் செம காம்பினேஷன்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:27 am

மிக்ஸ்டு ஃப்ரூட் தோசை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், நறுக்கிய பழத்துண்டுகள் (ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, திராட்சை, மாதுளை, பப்பாளி) - ஒரு கப், உப்பு - கால் டீஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து பழத்துண்டுகளையும் உப்பையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். (உப்பு சேர்ப்பதால் சுவை கூடும்). அரைத்த மாவை மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும். இதில் காரம் வேண்டும் என விரும்புபவர்கள், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கலாம். இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு என எல்லா சுவைகளும் இணைந்து, அமர்க்களமாக இருக்கும் இந்த தோசை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:28 am

கலர்ஃபுல் தோசை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: பச்சரிசி - 2 கப், புழுங்கலரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மிகவும் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - ஒரு கப், பொடியாக துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக துருவிய முள்ளங்கி (அல்லது) பெரிய வெங்காயம் - ஒரு கப், பொடியாக துருவிய பீட்ரூட் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை இரண்டு மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு மாவை நான்கு பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு காயை சேர்க்கவும். சற்று தடிமனான சிறு தோசைகளாக தனித்தனியாக சுட்டெடுத்து, நான்கு கலர் தோசைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி பரிமாறவும். இதற்கு தொட்டுக்கொள்ள எள்ளு மிளகாய்ப் பொடி நன்றாக இருக்கும். எள்ளு மிளகாய்ப் பொடி: ஒரு கப் எள்ளை வெறும் வாணலியில் பொரியும் வரை வறுத்து எடுக்கவும். கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கால் கப் உளுத்தம்பருப்பு, கால் கப் கடலைப்பருப்பு, 6 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான உப்பு, வறுத்த எள்ளு சேர்த்துப் பொடிக்கவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:29 am

தேங்காய் தோசை
[You must be registered and logged in to see this image.]

தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், துருவிய தேங்காய் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை 4 மணிநேரம் புளிக்க வைக்கவும். பிறகு தோசைகளாக வார்க்கவும். இந்த தோசையை சுடச்சுட சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுமையான சுவையே. விருப்பப்பட்டவர்கள் சிறிது சர்க்கரையை மாவில் சேர்த்து வார்க்கலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:29 am

கம்பு தோசை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: கம்பு - 2 கப், புழுங்கலரிசி - அரை கப், பச்சரிசி - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கம்பை தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி இரண்டையும் சேர்த்து ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த கம்பு, அரிசி, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், தேங்காய் துருவல் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். பின்னர் கொத்துமல்லியை கலந்து தோசைகளாக வார்க்கவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:30 am

மசால் தோசை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: புழுங்கலரிசி - 2 கப், பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், ஜவ்வரிசி - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய், நெய், உருளைக்கிழங்கு மசாலா - தேவையான அளவு.
செய்முறை: அரிசி வகை, பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நைஸாக அரைத்து, உப்பு போட்டுக் கரைத்து, 10 மணி நேரம் புளிக்கவைக்கவும். மாவு பொங்கிவரும் பட்சத்தில் தோசை வார்க்கலாம். தோசைக்கல்லில் நடுவில் மாவை ஊற்றி, அடி தட்டையாக இருக்கும் கரண்டியில் நிதானமாக வட்டமாக தேய்த்துக் கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும். பிறகு உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து மடித்து கொடுக்கலாம். இந்த தோசைக்கு திருப்பிப் போடவேண்டிய அவசியமில்லை. நெய்யும் எண்ணெயும் கலந்து வைத்துக்கொண்டு தோசை வார்க்க வேண்டும். ஹோட்டல் தோசை போன்று அருமையாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:31 am

 ரவா தோசை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: வறுத்த ரவை - 2 கப், அரிசிமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை - எல்லாம் சிறிதளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, புளித்த மோர் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: புளித்த மோருடன் சிறிது தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து அதில் வறுத்த ரவை, அரிசிமாவு, மைதாமாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை இவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து கடுகு, மிளகு, சீரகம் இவற்றைத் தாளித்து மாவில் கொட்டி, பெருங்காயத்தூள் சேர்த்து மிகவும் மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.
குறிப்பு: மாவை ரொம்ப ஊற விடாமல் தோசை வார்க்க வேண்டும். மாவு ஊறினால் தோசை மொறுமொறுப்பாக வராது. விருப்பப்பட்டவர்கள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மாவில் சேர்த்து ‘ஆனியன் ரவா தோசை’ வார்க்கலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:32 am

சேமியா தோசை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: சேமியா - ஒரு கப், புழுங்கலரிசி - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளித்த தயிர் - கால் கப், பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நைஸாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். சேமியாவை தயிரில் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் ஊறவைத்த சேமியா, அரைத்த அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங் காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் திட்டமான பக்குவத்தில் கரைத்து தோசைகளாக வார்க்கவும். அளவாக எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த தோசைக்கு அதிக எண்ணெய் விடக் கூடாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:33 am

புதினா, மல்லி பக்கோடா
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: புதினா - 1 கட்டு, மல்லித்தழை - 1 சிறிய கட்டு, கடலை மாவு - 1 கப், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 3, சோம்பு - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்துகொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றை உப்பு சேர்த்து, கடலை மாவுடன் பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவுக் கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு அல்லது உருட்டிப் போட்டு வேகவிட்டெடுங்கள். (குறிப்பு: தேவையானால் தண்ணீர் சிறிது தெளித்தும் பிசறலாம்).
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:34 am

வெங்காய பக்கோடா
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: கடலை மாவு - 1 கப், பெரிய வெங்காயம் - 4, சீரகம் - அரை டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், ஆப்ப சோடா - அரை சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை தோல்நீக்கி, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். மாவுடன் சீரகம், மிளகாய்தூள், உப்பு, ஆப்ப சோடா, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட கெட்டியாக கரையுங்கள். வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பிசறி வையுங்கள். ஐந்து நிமிடம் கழித்து, வெங்காயத்தை பிழிந்து எடுத்து மாவுடன் சேர்த்துப் பிசறி, எண்ணெயை நன்கு காயவைத்து, சிறிது சிறிதாக உதிர்த்துவிட்டு, பொன்னிறத்தில் வேகவிட்டெடுத்து பரிமாறுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:35 am

வெங்காய பஜ்ஜி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: வெங்காயம் - 3, கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், ஆப்ப சோடா - அரை சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேருங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, வெங்காய வில்லைகளை மாவில் நன்கு அமிழ்த்தி எடுத்து காயும் எண்ணெயில் போடுங்கள். இருபுறமும் திருப்பி வேகவிட்டெடுங்கள்.
குறிப்புகள்: உங்கள் வீட்டிலேயே பஜ்ஜி மாவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். கடலைப்பருப்பு - 2 கப், பச்சரிசி - கால் கப், காய்ந்த மிளகாய் - 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம். எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும். ஆனால், புகைவரும் அளவு காய்ந்துவிடக் கூடாது. எண்ணெய் காயாமல் போட்டால், பஜ்ஜி, பக்கோடா ‘சதசத’வென்று ஆகிவிடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:35 am

வெண்டைக்காய் பக்கோடா
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, கடலை மாவு - ஒன்றேகால் கப், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயைக் கழுவி துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பிசறிய மாவில் சிறிது தண்ணீர் தெளித்து, சேர்ந்தாற்போல் மீண்டும் பிசறி, காயும் எண்ணெயில் கிள்ளிப் போடுங்கள். விருப்பம் உள்ளவர்கள், கொஞ்சம் பூண்டை நசுக்கியும் சில சின்ன வெங்காயத்தை தட்டியும் சேர்க்கலாம். சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:36 am

உருளைக்கிழங்கு பஜ்ஜி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: உருளைக்கிழங்கு (சற்று பெரியதாக) - 2 , கடலை மாவு - 1 கப், மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன், இட்லி மாவு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, ஆப்ப சோடா - அரை சிட்டிகை.
செய்முறை: கிழங்கை தோல் சீவி சற்று மெல்லிய வில்லைகளாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மாவுடன் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். உருளை வில்லைகளை ஒவ்வொன்றாக மாவில் போட்டெடுத்து காயும் எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:37 am

வாழைக்காய் பஜ்ஜி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: வாழைக்காய் - 1, கடலை மாவு - 1 கப், கார்ன்ஃப்ளவர் - 1 டேபிள்ஸ்பூன், சோம்பு தூள் - அரை டீஸ்பூன், பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, ஆப்ப சோடா - சிட்டிகை
செய்முறை: வாழைக்காயின் இரு பக்கங்களிலும் சிறிது தோலை விட்டு விட்டு மீதமுள்ளதை சீவி எடுத்து விடுங்கள். பின் நீளவாக்கில் இரண்டாக வெட்டி, இரு ஓரங்களிலும் சிறிது தோல் இருக்குமாறு விட்டுவிட்டு, மெல்லியதாக நறுக்குங்கள்.
எண்ணெய் நீங்கலாக மாவுடன் மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயை காய வைத்து ஒவ்வொரு துண்டையும் மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள். தேங்காய் சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by முழுமுதலோன் Sun Nov 08, 2015 11:38 am

வெஜிடபிள் போண்டா
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: (மேல் மாவுக்கு) கடலை மாவு - 1 கப், ஆப்ப சோடா - சிட்டிகை, உப்பு - ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு - 1, கேரட் - 1, பீன்ஸ் - 4, பட்டாணி - ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள். காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தீபாவளி காலை விருந்து  Empty Re: தீபாவளி காலை விருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum