Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தீபாவளி காலை விருந்து
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
தீபாவளி காலை விருந்து
First topic message reminder :
வெஜிடபிள் இட்லி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்குங்கள். பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள். இந்தக் கலவையை அப்படியே சூடாக இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
மைசூர் போண்டா
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
மசால் வடை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: கடலைப்பருப்பு - 1 கப், சின்ன வெங்காயம் - அரை கப், புதினா - சிறிது, மல்லித்தழை - சிறிது, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையானது. அரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 1, சோம்பு - அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலம் - தலா 2.
செய்முறை: பருப்பை 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, 1 டேபிள்ஸ்பூன் பருப்பை தனியே வைத்துவிட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கரகரப்பாக அரைத்தெடுத்து மாவுடன் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, தனியே எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு, நடுத்தர தீயில் மொறு மொறுப்பாக வேக விட்டு எடுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
மெது போண்டா
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: கடலை மாவு - 1 கப், டால்டா - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிது, முந்திரிப்பருப்பு - 6, ஆப்ப சோடா - கால் டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: டால்டா, உப்பு, ஆப்ப சோடா மூன்றையும் ஒன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு சேர்த்து பிசறுங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து சற்று தளர பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக கிள்ளி போட்டு வெந்ததும் அரித்தெடுங்கள். திருமணங்களில் இடம் பெறும் ஸ்பெஷல் அயிட்டம் இது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
கீரை வடை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், கடலைப்பருப்பு - கால் கப், அரைக்கீரை (அ) சிறுகீரை (அ) முளைக்கீரை - 1 கட்டு, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். கீரை நன்கு அலசிய பின் மிகவும் பொடியாக நறுக்குங்கள். பருப்பு ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடியுங்கள். பின்னர் மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, நடுத்தரத் தீயில் நன்கு வேக விட்டெடுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
கல்கண்டு வடை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், பச்சரிசி - கால் கப், கல்கண்டு - ஒன்றேகால் கப், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊற வையுங்கள். தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, ஒட்ட அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்க வேண்டும். நன்கு நைஸாக ஆட்டுப்பட்டதும் கல்கண்டையும் சேர்த்து அரையுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேக விட்டெடுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
புதினா- - மல்லி வடை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: உளுத்தம்பருப்பு - முக்கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், புதினா - அரை கட்டு, மல்லித்தழை - அரை கட்டு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பருப்புகளை ஒன்றாக ஊற வையுங்கள். மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாக நறுக்குங்கள். ஊறிய பருப்பை, தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு நடுத்தர தீயில் நன்கு வேக விட்டு எடுங்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
மெதுவடை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், வடித்த சாதம் - 1 கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, மல்லித்தழை - சிறிது, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சாதத்துடன் சேர்த்து நன்கு அரையுங்கள். பெருங்காயத்தை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது மாவில் தெளித்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் வழித்து எடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, மாவில் சேருங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேருங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசைந்து சிறு சிறு வடைகளாக காயும் எண்ணெயில் சுட்டெடுங்கள். பஞ்சு போன்ற மெதுவடை தயார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
வெங்காய வடை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் (அல்லது பெரிய வெங்காயம்) - அரை கப், கறிவேப்பிலை - சிறிது, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் ஆட்டுக்கல்லில் போட்டு நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். காயும் எண்ணெயில் (நடுத்தர தீ) சிறு சிறு வடைகளாக போட்டு, பொன்னிற மானதும் எடுத்துப் பரிமாறுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
அவல் கேசரி
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: அவல் - 2 கப், சர்க்கரை - ஒரு கப், கேசரி பவுடர் - 2 சிட்டிகை, முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் அவலை சேர்த்து வேக விடவும். வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் 'கமகம' அவல் கேசரி ரெடி!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
அவல் போண்டா
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 2, கடலை மாவு - ஒரு கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 6, இஞ்சி - சிறிய துண்டு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன். எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். அவலை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும். ஒரு நிமிடம் கழித்து அவலை உதிர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை உருளை - அவல் கலவையுடன் சேர்த்து, உப்பு போட்டு மசித்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
கடலைமாவுடன் அரை டீஸ்பூன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உருண்டைகளை கடலைமாவில் தோய்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
அவல் மிக்சர்
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: அவல் - 3 கப், வேர்க்கடலை, பொட்டுக் கடலை - தலா அரை கப், முந்திரி, திராட்சை - தலா ஒரு கப், கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அவலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கவும். கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு பொட்டுக்கடலை, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலையை வறுக்கவும். வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். மாலையில் கொறிக்க உகந்த வித்தியாசமான மிக்சர் இது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
அவல் வடை
[You must be registered and logged in to see this image.]
தேவையானவை: அவல் - 2 கப், உருளைக்கிழங்கு - 2, பச்சைமிளகாய் - 6, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, இஞ்சி - ஒரு விரல் அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். அவலை கழுவி தண்ணீரை வடித்து, ஒரு நிமிடம் ஊற விடவும்.
ஊறிய அவலை உதிர்த்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். இதனுடன் கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பிசைந்து, சிறு உருண்டை களாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டை களை வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
[You must be registered and logged in to see this link.] விருந்து இன்னும் வளரும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தீபாவளி காலை விருந்து
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கண்ணுக்கு விருந்து -தீபாவளி சிறப்பு கோலங்கள்
» தீபாவளி தகவல்கள்.
» தீபாவளி கோலங்கள்
» தீபாவளி என்றால்…
» தீபாவளி வாழ்த்துக்கள்
» தீபாவளி தகவல்கள்.
» தீபாவளி கோலங்கள்
» தீபாவளி என்றால்…
» தீபாவளி வாழ்த்துக்கள்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum