தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

படித்து பிடித்த நிமிட " கதைகள் " - Page 2 Empty படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 09, 2015 3:43 pm

First topic message reminder :

ஜனனம்!

“பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார்.

‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன்.

வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது.

மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார்.

- பம்மல் நாகராஜன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


படித்து பிடித்த நிமிட " கதைகள் " - Page 2 Empty Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:36 am

கும்பிடு!


உறவினர் வீட்டிற்கு வந்த இளைஞன், மாலை நேரத்தில் தெருவின் ஓரத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

தெருவில் போவோர் வருவோர் எல்லோரும்

இவனைப்பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். இவனுக்கோ... வியப்போ வியப்பு!

"நாம் இந்த ஊருக்குப் புதிது. எப்படி எல்லோரும் நம்மை வணங்குகிறார்கள்?' என்று ஆச்சரியப்பட்டான்.

வீட்டுக்குள் நுழைந்து, உறவினரிடம் நடந்ததைக் கூறினான்.

அவர் சற்று யோசித்தார். அவன் நின்ற இடத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவருக்கு எல்லாம் விளங்கியது.

அவனிடம், ""நீ நின்ற இடத்திற்குப் பின்னே திரும்பிப் பார்த்தாயா?''

என்று கேட்டார்.

இளைஞன், ""இல்லை'' என்றான்.

""அதனால்தான் உனக்குப் புரியவில்லை. நீ நின்று கொண்டிருந்த இடத்திற்குப் பின்னால்

இவ்வூர் பெருமாள் கோயில் கோபுரம் உள்ளது. அதைத்தான் எல்லோரும் கும்பிட்டுக்கொண்டும் கன்னத்தில் போட்டுக்கொண்டும் சென்றார்கள். உன்னைப்பார்த்து அல்ல.''என்று விளக்கினார்.

இளைஞனுக்கு வெட்கமாகப் போய்விட்டது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்து பிடித்த நிமிட " கதைகள் " - Page 2 Empty Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:37 am

சொத்து

ஒரேயொரு சிறிய வீட்டை வைத்துக் கொண்டு எட்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்ட தன் அப்பா மீது இனம்புரியாத கோபம் கோபாலுக்கு.

பொதுச் சொத்தாய் இருந்த பூர்வீக வீட்டை விற்று கிடைத்த பணத்தை தன் சகோதர, சகோதரிகள் ஏழு பேருடன் பங்கு பிரித்ததில் கோபாலுக்கு இரண்டு லட்சம் ரூபாய்தான் கிடைத்தது.

தன் நண்பன் சுரேஷை நினைத்துப் பார்த்தான்…

‘சுரேஷ் ஒரே பிள்ளை என்பதால் வெகு சுலபமாக எந்த முயற்சியும் இன்றி தன் அப்பாவின் எழுபது லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாகிவிட்டான். நான்? ஒரு சிறிய ஃபிளாட் வாங்குவதற்கு லோன் வாங்கி இன்னும் வட்டிதான் கட்டிக் கொண்டிருக்கிறேன்…’ யோசிக்க யோசிக்க மனம் களைத்துப் போனது கோபாலுக்கு.

மறுநாள் தற்செயலாய் ரோட்டில் சுரேஷைச் சந்தித்தான்.

“சுரேஷ்! பிறந்தா உன்னை மாதிரி ஒரே பிள்ளையா பிறக்கணும்டா. அப்பாவோட சொத்து முழுவதும் கிடைக்கும். என்னைப் பாரு. கூடப் பிறந்த ஏழு பேருக்கும் சொத்தைப் பிரிச்சதுல என் பங்கு வெறும் 2 லட்சம் ரூபாய். நிஜமா சொன்னா உன் மேலே எனக்குப் பொறாமையாக் கூட இருக்கு” என்று பெருமூச்சு விட்டபடி சொன்னான்.

“அடப்போடா... உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கூடப் பிறந்தவங்க ஏழு பேர் வந்து நிற்பாங்க. ஆனா எனக்கு? என் குழந்தைகளுக்கு சித்தி, அத்தை, சித்தப்பா, பெரியப்பான்னு எந்த உறவுமே கிடையாது. ஒரு பிறந்த நாள்னாகூட நாங்களே கேக் வெட்டி நாங்களே சாப்பிட்டுக்கறோம்.

ஆனா ஒரு சின்ன நிகழ்ச்சியைக்கூட உன்னோட அண்ணன் தங்கைன்னு ரொம்ப சந்தோஷமா கொண்டாடுறீங்க. எல்லாத்துக்கும் மேலே எனக்காக வந்து பேச ஆளில்லைன்னு யார் யாரோ சண்டை சச்சரவுக்கு வர்றாங்க.

பணம் காசு இல்லேன்னா என்னடா, உங்க அப்பா உனக்கு சொந்த பந்தம்ங்கிற பெரிய சொத்தை சேர்த்து வெச்சிருக்கிறார். நிஜமாலுமே உன்னைப் பார்த்தாதான் எனக்குப் பொறாமையா இருக்கு” என்று சுரேஷ் கூறினான்.

தன் அப்பா மீதிருந்த கோபம் மெல்ல மெல்ல கரையத் தொடங்கியிருந்தது கோபாலிடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்து பிடித்த நிமிட " கதைகள் " - Page 2 Empty Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:38 am

இழப்பு

அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கணவன் சுதாகரிடம் காபியையும் பிஸ்கட் தட்டையும் நீட்டியபடியே மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் வாணி.

“ஹரிணிக்கும் வினோத்துக்கும் நேத்தோட பரீட்சை முடிஞ்சாச்சு. ஊருக்குப் போறதுக்கு எப்ப டிக்கெட் எடுக்கப் போறீங்க?!”

“ஊருக்கா? எதுக்கு? பசங்களுக்குத்தான் லீவு. எனக்குமா லீவு விடுறாங்க?” சிடுசிடுப்பாய்க் கேட்டான் சுதாகர்.

“எங்களை ஊர்ல விட்டுட்டு வந்திடுங்க. நாங்க பத்து நாள் உங்க அம்மா வீட்ல இருப்போம். பத்து நாள் எங்க அம்மா வீட்ல இருப்போம். பசங்களுக்கு லீவுல போரடிக்குமே” என்றாள் வாணி.

“நோ சான்ஸ்! நான் வேற திட்டம் வெச்சிருக்கேன். நம்ம ஹரிணியையும் வினோத்தையும் கம்ப்யூட்டர் கிளாஸ்ல சேர்க்கலாம்னு நினைச்சிருக்கேன். மாலை நேரத்துல மியூசிக் கிளாஸ் போகட்டும். பக்கத்துலயே கராத்தே வகுப்பு இருக்கு. அதுக்கும் சேர்த்துவிடுவோம்.

இப்படி உபயோகமா ஏதாவது கத்துக்கிட்டா படிப்போட வேற திறமையும் வளரும். அதைவிட்டுட்டு கிடைக்குற நேரத்தை வீணாக்கினா எதிர்காலத்துல நமக்குத்தான் இழப்பு. அதைப் புரிஞ்சுக்கோ வாணி.” குரலை உயர்த்திப் பேசினான் சுதாகர்.

“அதையேதான் நானும் சொல்றேன். ஸ்கூல் போய்ட்டேகூட கம்ப்யூட்டர், மியூசிக் கத்துக்கிடலாம். ஊருக்குப் போய் பத்துநாள் இருந்துட்டு வர முடியுமா? சின்ன வயசுலயே தாத்தா, பாட்டி, மாமா, சித்தின்னு உறவுக்காரங்களோட நல்ல உறவை ஏற்படுத்திக்கணும்.

சொந்தக் காரங்களோட எந்தவித ஒட்டுதலும் இல்லாம இருந்துட்டு, படிப்பு வேலைன்னு ஓடி கடைசியில ஒரு உதவிக்குக்கூட ஆளில்லாம வாழ்றதாங்க வாழ்க்கை? சின்ன வயசுலயே குழந்தைகளை உறவுக்காரங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போய் உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம். அதுதாங்க பெரிய இழப்பு!” -வாணி சொன்னதில் சுதாகருக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது.

“ஓ.கே. நாளைக்கு எனக்கும் ஆபீஸ்ல லீவு சொல்லிட்டு டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செய்யறேன்” என்றான்.

கீர்த்தி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்து பிடித்த நிமிட " கதைகள் " - Page 2 Empty Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:40 am

ஒரு நிமிடக் கதை: தொலைவு
-

“என்னங்க, உங்க அம்மாவோட எழுபதாவது பிறந்தநாளைக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுக்கலாம்க” என்றாள் வசந்தின் மனைவி அகிலா. வசந்த் ஒரு நிறுவனத்தின் மேலாளர்.

வீட்டுக்கு மூத்தவன். தந்தையின் மறைவுக்கு பின் அவன் இரு இளைய சகோதரிகளுக்கும் உள்ளூரிலே திருமணம் முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டான்.

சகோதரிகளும் அவர்கள் வீட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள்தான் இருந்தனர். வசந்தும், அகிலாவும் வேலைக்குச் சென்றபின் அம்மா மட்டும் தனியே வீட்டில் டிவி பார்த்துகொண்டோ, கோவிலுக்கு சென்றோ பொழுதை போக்குவாள். அவ்வப்போது மகள்களும், பேரக் குழந்தைகளும் அவளை பார்க்க வந்து போவார்கள்.

வசந்துக்கும் அகிலா சொல்வது சரியெனப் பட்டது. அம்மாவுக்கு ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்தால் அவளது தனிமை குறையும். மகள்கள், பேரனுடன் பேசிக் கொள்வாள்.

அம்மாவின் பிறந்த நாள் அன்று, “அம்மா, இதோ உனக்கு ஏத்தமாதிரி ஒரு போன்” என்று பரிசுப் பொட்டலத்தை நீட்டினான்.

அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி. அவளுக்கு போனை எப்படி இயக்குவது என்று ஒருவாரம் எல்லோருமாக சேர்ந்து சொல்லித் தந்தனர்.

அவளும் மகள்களுடன் உற்சாகமாக பேசிவந்தாள். அதைப் பார்த்து வசந்த் சந்தோஷப்பட்டான். மகள்களும், “அம்மா, வத்தல் குழம்புக்கு என்ன மசாலா போடுவீங்க?” என்று எல்லாவற்றிக்கும் போனில் கூப்பிடு வார்கள்.

ஒரு மாதம் கழிந்தது. அம்மா வாட்டமாக இருப்பதாக உணர்ந்தான் வசந்த். கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டாள்.

ஒரு காலை அம்மாவே வசந்திடம், “இனிமேல் எனக்கு இந்த போன் வேண்டாம்டா ” என்று கூறினாள்.

புரியாமல் விழித்த வசந்த்திடம், “நான் எல்லார்கிட்டயும் பேசணும்னுதான் போன் வாங்கி கொடுத்தே. ஆனா, போன் வந்தப்புறம், யாருமே என்னைப் பாக்க வீட்டுக்கு வரமாட்டேங்கிறாங்கடா. எல்லாத்தையும் போன்லயே பேசிடறாங்க. என் பேரன் கூட முன்ன வாரத்துக்கு ஒரு தடவை வருவான்.

இப்ப வர்றதில்லை. கேட்டா, அதான் போன்ல பேசறேனே பாட்டின்னு சொல்றான். இந்த போனால, என் சொந்தமெல்லாம் இன்னும் தூரமா போயிடுமோனு இருக்கு. இத நீயே வச்சுக்கோ. அவங்க எப்பவும் போல என்னை நேரா வந்து பாக்கட்டும்” என்றாள்.

அம்மா சொல்வது வசந்துக்கும் சரியெனப்பட்டது!

=

தமிழ் தி இந்து காம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்து பிடித்த நிமிட " கதைகள் " - Page 2 Empty Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:41 am

வசதி

எனக்கு மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர் பாபுவின் குழந்தைக்கு காதணி விழா. நான் என் மனைவி சித்ராவையும், ஃப்ரான்ஸில் இருந்து வந்திருக்கும் என் தங்கை பத்மாவையும் அந்த விழாவுக்கு அனுப்பி வைத்தேன். வேலை பளு காரணமாக நான் செல்ல முடியவில்லை.

விழா முடிந்து திரும்பி வந்த என் மனைவி தன் முகத்தை தூக்கி மூன்றாவது மாடியில் வைத்திருந்தாள். “என்னாச்சு, ஏன் இப்படி ‘உம்’முன்னு இருக்கே?” என்று என் தங்கைக்கு தெரியாமல் அவளிடம் கேட்டேன்.

“எல்லாத்துக்கும் காரணம் என்கூட நீங்க உங்க தங்கச்சியை அனுப்பி வைச்சதுதான்!” என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஏய்... அவ வெளிநாட்ல இருந்து ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கா. அவளுக்கு ஒரு ரிலாக்ஸா இருக்கட் டுமேன்னு உங்கூட அனுப்பி வைச்சேன். அது ஒரு குத்தமா?” என்றேன்.

அவள் சொன்னாள்... “நான் உங்க மேலயோ, உங்க தங்கச்சி மேலயோ குத்தம் சொல்லலைங்க. ஆனா, உங்க ஃபிரெண்டோட மனைவி இருக்காங்களே... நாங்க போனதும், உங்க தங்கச்சியைப் பார்த்து ‘இது யாரு?’ன்னு கேட்டாங்க. நான் ‘இவங்க என் நாத்தனார், ஃபிரான்ஸ்ல இருந்து வந்திருக்காங்க’ன்னு சொன்னதும், அதுக்கு மேல அவங்க என்னைக் கண்டுக்கவே இல்லை. ஃபங்ஷன் முடிஞ்சு வர வரைக்கும் உங்க தங்கச்சியை மட்டும் அப்படி விழுந்து, விழுந்து கவனிச்சவங்க என்னை சாப்பிட்டியான்னு கூட ஒரு வார்த்தை கேட்கவே இல்லைங்க” என்றாள்.

அதைக்கேட்டு நான் மிகவும் வருந்தினேன். என் நண்பரின் குடும்பம் பணம் உள்ளவர்களைப் பார்த்துதான் பல் இளிப்பார்களா?... இவ்வளவு காலமாக இது அறியாமல் நான் இருந்திருக்கிறேனே!

என் மனைவி உறங்கியதும் அவளுக்கு தெரியாமல் நான் என் நண்பன் பாபுவுக்கு போன் செய்தேன். அவன் போனை ஆன் செய்ததும் என் ஆவேசத்தைக் கொட்டித் தீர்த்தேன்.

அனைத்தையும் நிதானமாக கேட்டுக்கொண்டிருந்த பாபு பின் பேச ஆரம்பித்தான்...

“நண்பா, நீ என்னை புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா... சித்ரா யார்?... நாங்க யார்?... நாமெல்லாம் ஒரே குடும்பம். உன் தங்கை பத்மா யார்?... வெளிநாட்டுல இருந்து வந்திருக்கிற என் உயிர் நண்பனின் தங்கை. அவளுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்?... நம்ம உறவு பத்தி அவளுக்கு என்ன தெரியும்?... அதனாலதான் உனக்கும், உன் குடும்பத்துக்கும் தர வேண்டிய ஒட்டுமொத்த மரியாதையை நாங்க உன் தங்கச்சிக்கு கொடுத்தோம். சித்ரா என் கூட பிறந்த தங்கச்சி மாதிரி. ஆனா, பத்மா அப்படி இல்லையே…”

பாபுவின் உண்மையான மனநிலை புரிய… சித்ரா பேச்சைக்கேட்டு அவசரப்பட்டு விட்டோமோ என மனது உறுத்தியது.

எஸ். எஸ். பூங்கதிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்து பிடித்த நிமிட " கதைகள் " - Page 2 Empty Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:42 am

காரணம்

“என்ன சார், இன்னிக்கு இட்லி கல் மாதிரி இருந்துச்சு?” என்ற வாடிக்கையாளரின் குரல் ஹோட்டல் கல்லாவில் உட்காந்திருந்த மூர்த்தியின் சிந்தனையைக் கலைத்தது.

மூர்த்தி அந்த வட்டாரத்தில் பிரபலமான ஹோட் டல் நடத்தி வருபவர். மூன்று வேளையும் அவர் ஹோட்டலில் கூட்டம் இருக்கும். அவரது சமீபத்திய கவலை, அவர் ஹோட்டலில் கூட்டம் குறைந்ததுதான். காரணம், அவருக்கு போட்டியாக மூன்றாவது தெருவில் முளைத்துள்ள புதிய ஹோட்டல்தான்.

“யோவ், எல்லாம் நல்ல மாவுதான்யா !”- ஏற்கெனவே எரிச்சலில் இருந்த மூர்த்தி எரிந்து விழுந்தார்.

அடுத்து வந்த நபர் “சாம்பார்...” என்று வாயை திறக்கும் முன், “என்னய்யா.. சாம்பார் கெட்டுப் போச்சா? “என்று எரிந்து விழுந்தார். அதற்கு வாடிக்கையாளர், “இல்லீங்க. சாம்பார் வடை பார்சல் இருக்கானு கேக்க வந்தேன்” என்றவாறு நழுவினார்.

எப்படியாவது அந்த புதிய ஹோட்டலுக்கு சென்று, அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிட மூர்த்தி முடிவெடுத்தார். அன்றிரவு அந்த ஹோட்ட லுக்கு சென்றார். இரவு 10 மணியிலும் நல்ல கூட்டம். அரை இருட்டான ஒரு இடத்தில் அமர்ந்து கொண் டார். அவரை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் சர்வர், “சார், என்ன சாப்பிடு றீங்க” என்று கேட்டுக் கொண்டு, மூர்த்தி கேட்ட உணவை கொண்டு வைத்தார்.

‘உணவின் சுவையும் அவ்வளவு பிரமாதம் இல்லை, இடமும் தனது ஹோட் டல் போலத்தான் இருக்கிறது. பிறகு ஏன் இங்கு மட் டும் இவ்வளவு கூட்டம்?’ என்று நினைத்துக் கொண்டார்.

“சார், சாப்பாடு எப்படி , வேறு எதுவும் வேணுமா” என்றபடி ஒரு இளைஞர் வந்து மூர்த்தியிடம் கேட்டுவிட்டு, “தம்பி, சாருக்கு சட்னி ஊத்து” என்றபடி பக்கத்து மேஜைக்கு சென்றார்.

சாம்பார் கொண்டு வந்த சர்வரிடம் மூர்த்தி, “யாருப்பா அவர்?” என்றார்.

“அவர்தான் சார், எங்க முதலாளி. பேருக்குத் தான் முதலாளி. கொஞ்சம் கூட பந்தாவே இல்லா மல், இறங்கி வந்து வேலை பார்ப்பார். வர்ற வாடிக்கையாளர்கிட்ட போய் குறை நிறை கேட்டு தெரிஞ்சுப்பார். குறை எது சொன்னாலும் ஏத்துப்பார்” என்றார் அந்த சர்வர்.

என்னதான் முதலாளியாக இருந்தாலும், வாடிக்கையாளரிடம் சென்று அவர்களின் நிறை, குறைகளை அறிந்து, அவர்களிடம் இன்முகத்துடன் பேசுவதுதான், வாடிக்கையாளர்களின் முதல் எதிர்பார்ப்பு என்று புரிந்து கொண்டார் மூர்த்தி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்து பிடித்த நிமிட " கதைகள் " - Page 2 Empty Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 10, 2015 7:42 am

போதனை

கோயில் வாசலில் முத்து கடையில்தான் எப்போதும் பூ, மாலை எல்லாம் வாங்குவேன். ஆனால் நேற்று அந்தக் காட்சியைப் பார்த்ததிலிருந்து முத்து கடைக்கு பூ வாங்கப் போகவே எரிச்சலாக இருந்தது எனக்கு. இன்று வேறு கடையில் பூ வாங்க முடிவு செய்து வெளியே கிளம்பினேன். எதிரே முத்து.

“என்ன… முத்து….?”

“பூ வாங்க ஒரு ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்தால் நாளை சாயங்காலம் திரும்பத் தந்துடுவேன் சார்.”

“அதெல்லாம் சரிதான். கடனா பணம் தர்றேன், வாங்கிக்க. ஒரு விஷயம் சொல்றேன். அதை திருத்திக்க முடியுமான்னு பார்… நேற்று நீ கடையில் எட்டாவது படிக்கிற உன் மகனை மாலை கட்ட வைச்சு துன்புறுத்தறதைப் பார்த்தேன். படிக்கிற பையனை இப்படி வேலை வாங்கலாமா? நல்லா யோசிச்சு பார்” என்றேன்.

“சார்… பையனை நல்லாத்தான் படிக்க வைக்கறேன். படிச்ச படிப்பு கை கொடுக்கலைன்னாலும், கத்துக்கிட்ட தொழில் எதிர்காலத்தில் கை கொடுக்கட்டுமேன்னுதான் என்னுடைய தொழிலை பழக வைச்சிருக்கேன். அப்புறம் நான் எப்படி இடுப்பு ஒடிய உட்கார்ந்து பூ கட்டி பொழைச்சு, அவனை படிக்க வைக்கிறேங்கிற கஷ்டத்தை உணர்ந்து அவன் நல்லா படிக்கணுங்கிறதையும் போதிக்கத்தான் அவனை கடையில உட்கார வைச்சிருக்கேன் சார். அதைப் போய் சார் தப்பா நினைச்சிட்டிங்களே?” என்றான் முத்து பணிவாக.

ஆயிரம் ரூபாயை எண்ணி முத்துவிடம் கொடுத்தேன். பிறகு அவன் பின்னாலேயே சென்றேன்.. பூ வாங்குவதற்காக.

குன்றக்குடி சிங்காரவடிவேல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்து பிடித்த நிமிட " கதைகள் " - Page 2 Empty Re: படித்து பிடித்த நிமிட " கதைகள் "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum