Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கிராமிய சமையல்
Page 1 of 1 • Share
கிராமிய சமையல்
- இந்த ஏக்கப் பெருமூச்சு பல வீடுகளில் கேட்பதுண்டு. ''இதுக்காக எதுக்கு பெட்டி படுக்கை எல்லாம் கட்டணும்? உங்க வீட்டுலயே கிராமிய உணவுகளை செய்ய நான் சொல்லித்தர்றேன் வாங்க!'' என்று அழைக்கும் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், கிராமிய உணவு களை அலசி, ஆராய்ந்து இங்கே வழங்குகிறார்.
''மாப்பிள்ளை சொதி, சிம்ளி, சீராளம், புட்டு, புளியந்தளிர் கூட்டு... இது போன்ற நம் மண்ணின் பெருமைக்கு சிறப்பு சேர்க்கும் உணவுகளைக் கொடுத்திருக்கிறேன். மண் சட்டி, அம்மி போன்றவற்றை பயன்படுத்தி தயாரித்தால், மேலும் அற்புதமான ருசியில் இருக்கும்'' என்று பாசம்மிக்க தோழியாய் பரிந்துரை செய்கிறார் ஆதிரை.
ராகி குலுக்கு ரொட்டி
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை கப், வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: கேழ்வரகு மாவை லேசாக வறுத்து... பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் சின்ன துண்டுகளாக செய்து கொள்ளவும்.
வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, தேன் பதம் வந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதில் கேழ்வரகு ரொட்டித் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.
இரும்புச்சத்து கொண்ட இந்த ரொட்டி, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
குழாப்புட்டு
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு, முந்திரி - 8, உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை: பச்சரிசி மாவை வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும். நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
வறுத்த பச்சரிசி மாவில் உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும். புட்டுக்குழாயில் கொஞ்சம் புட்டு மாவை அடைத்து, அதன் மேல் ஒரு அடுக்காக தேவையான அளவு தேங்காய் துருவல் கலவையை அடைத்து... மற்றொரு அடுக்காக மாவு வைத்து, பிறகு மீண்டும் தேங்காய் துருவல் கல வையை வைத்து அடைக்கவும். இதை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பிறகு, குழாயிலிருந்து புட்டு எடுத்து... நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
மாப்பிள்ளை சொதி
தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, நறுக் கிய முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப், சின்ன வெங்காயம் - 12, தேங்காய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 8 பல், பச்சை மிளகாய் - 6, சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,செய்முறை: சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக விடவும். தேங்காயை துருவி அரைத்து முதல், இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியே வைத்துக் கொள்ளவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி. இரண்டாம் தேங்காய்ப் பாலை சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பிறகு, முதல் தேங் காய்ப் பாலை சேர்த்து, நன்றாகக் கொதித்து நுரைத்து வந்ததும் இறக்கி... உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: திருமணத்து அடுத்த நாள் பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை விருந்துக்கு வரும்போது இதை செய்து பரிமாறுவார்கள். இதனை இடி யாப்பத்தின் மீது ஊற்றி சாப்பிட்டால்... அமர்க்களமான சுவையில் இருக்கும். சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
சிம்ளி
தேவையானவை: கேழ் வரகு மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், வேர்க்கடலை - கால் கப், எள் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: வேர்க்கடலை, எள் இரண்டையும் வாணலியில் லேசாக வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கேழ்வரகு மாவில் சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசைந்து கனமான ரொட்டியாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடித்த வேர்க்கடலை - எள், வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதை கிண்ணத்தில் போட்டு, ஸ்பூன் வைத்து பரிமாறலாம் அல்லது உருண்டை பிடித்து சாப்பிடக் கொடுக்கலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
கீழாநெல்லி கீரை மசியல்
தேவையானவை: கீழாநெல்லி கீரை- ஒரு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கீழாநெல்லி கீரையை நீரில் நன்கு அலசி, இலைகளை உருவிக் கொள்ளவும். இதனை பாசிப்பருப்புடன் சேர்த்து வேக வைக்கவும். மண்சட்டி அல்லது அடி கனமான வாணலியில் சிறிது நெய் விட்டு உருக்கியதும், வேக வைத்த கீரை, உப்பு, சீரகம் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
கீழாநெல்லி கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரும். மஞ்சள்காமாலை நோயி னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நிவாரணம் அளிக்கும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
சீராளம்
தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 8, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேங்காய் துருவல் - ஒரு கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவுதாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 8 பல் (நறுக்கிக் கொள்ளவும்), கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து... உப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும். மாவை இட்லித் தட்டில் வேக வைத்து ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து... வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையை சேர்க்கவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி, கிண்ணங்களில் வைத்துப் பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
பூண்டு பொடி
தேவையானவை: நாட்டுப் பூண்டு - சுமார் 50 பல் (தோல் நீக்கவும்), உளுத்தம்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 15, பெருங்காயம் - சிறு துண்டு, புளி - சின்ன நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை - 4 ஆர்க்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும். பிறகு, காய்ந்த மிளகாயை வறுத்தெடுக்கவும். பின்னர் பருப்பு வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும். வாணலியில் பூண்டு சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும். மீதமுள்ள எண்ணெயில் புளியை சற்று மொறுமொறுப்பாக பொரித்தெடுத்துவிட்டு, கறிவேப்பிலையை வறுத்தெடுக் கவும்.
வறுக்கப்பட்ட அனைத் துப் பொருட்களும் ஆறிய தும் ஒன்றாகச் சேர்த்து, உப்பு கலந்து நைஸாக அரைக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
மரவள்ளிக்கிழங்கு பணியாரம்
தேவையானவை: மரவள்ளிக் கிழங்கு துருவல் - 3 கப், தோசை மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 8, பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், எண் ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: தேங்காய் துருவலுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக் கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவி, காய்ந்ததும் மாவை ஊற்றவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து, பணியாரங்களைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
கம்பு மாவு தோசை
தேவையானவை: கம்பு மாவு - 2 கப், உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: உளுந்தையும், வெந்தயத்தையும் 3 மணி நேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கம்பு மாவு, உப்பு சேர்த்துக் கரைத்து, மறுநாள் சற்று கனமான தோசைகளாக வார்க்கவும் (தோசை வார்ப்பதற்கு முன் கரைத்த மாவில் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிள காயை சேர்த்துக் கொள்ளலாம்).
இதற்கு தொட்டுக் கொள்ள காரச்சட்னி ஏற்றது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
கொள்ளு இனிப்பு உருண்டை
தேவையானவை: கொள்ளு - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - சிறிதளவு.செய்முறை: வாணலியில் நெய் விட்டு கொள்ளை லேசாக வறுத்து எடுத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு, நீரை நன்கு வடித்து... பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி, சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
வாழைத்தண்டு பச்சை வேர்க்கடலை கூட்டு
தேவையானவை: வாழைத்தண்டு - ஒரு துண்டு, பாசிப்பருப்பு - அரை கப், சின்ன வெங்காயம் - 8, பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை - கால் கப், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, நெய், பால் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.செய்முறை: வாழைத்தண்டை நாரெடுத்து மிகவும் மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை மலர வேகவிடவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
மண் சட்டியில் அல்லது அடி கனமான வாணலியில் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து... நறுக்கிய வாழைத்தண்டு, வேக வைத்த பச்சை வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் நெய்யில் வறுத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பால் கலந்து பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
வாழைக்காய் சின்ன வெங்காயம் கறி
தேவையானவை: முற்றிய வாழைக் காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 12, பூண்டு - 8 பல், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தக்காளி - ஒன்று, தேங் காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 4, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப் பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவுசெய்முறை: வாழைக்காயை தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், முந்திரி, பெருஞ்சீரகத்தை சேர்த்து மையாக அரைக்கவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பிறகு, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி... வாழைக்காயைச் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் போட்டு கொஞ்சமாக நீர் விட்டு மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து... அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கிராமிய சமையல்
கலவை தானிய உருண்டை
தேவையானவை: கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் - தலா கால் கப், சர்க்கரை - இரண்டரை கப் (பொடித் துக் கொள்ளவும்), தேங்காய் துருவல் - அரை கப், நெய் - அரை கப்.செய்முறை: தானிய வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, சற்று ஆறியதும் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
தானிய மாவுடன் பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை, தேங்காய் துரு வல் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய் ஊற்றி பிசிறி, உருண்டை பிடிக்கவும் (சரியாக பிடிக்க வரவில்லை என்றால், சிறிது பால் தெளித்து உருண்டை பிடிக்கலாம்).
புரோட்டீன் சத்து நிறைந்த பலகாரம் இது.
http://www.vikatan.com/ இன்னும் வளரும் ...
..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» வயல் காற்று கிராமிய காதல்
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
» வயல் காற்று கிராமிய காதல்
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum