Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது
Page 1 of 1 • Share
2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது
தேசிய அளவில் 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட
விருதுகளில், தமிழ்த் திரையுலகுக்கு 5 விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றில், சிறந்த பின்னணி இசைக்கான விருது
"தாரை தப்பட்டை' படத்துக்கு இசையமைத்த
இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கிய "விசாரணை' படத்துக்கு
மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த தமிழ்த்
திரைப்படத்துக்கான விருது, அப்படத்தில் நடித்த
சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகர் விருது,
மறைந்த கிஷோருக்கு சிறந்த படத்
தொகுப்பாளருக்கான விருது என 3 விருதுகள்
கிடைத்துள்ளன.
"இறுதிச்சுற்று' தமிழ்ப் படத்தில் நடித்த அறிமுக
நடிகை ரித்திகா சிங்குக்கு சிறப்பு விருது அறிவிக்கப்
பட்டுள்ளது.
மேலும், இளம் வயதில் விதவையாகி, மறுமணம்
செய்து கொண்டு 97 வயது வரை வாழ்ந்த பெண்ணின்
வாழ்க்கைப் போராட்டத்தை உணர்த்தும் வகையில்
மூத்த பத்திரிகையாளர் நீலம் இயக்கிய "அம்மா', குறும்
படங்கள் வரிசையில் சிறப்பு விருதுக்கு தேர்வாகியுள்ளது.
விருதுகளில், தமிழ்த் திரையுலகுக்கு 5 விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றில், சிறந்த பின்னணி இசைக்கான விருது
"தாரை தப்பட்டை' படத்துக்கு இசையமைத்த
இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கிய "விசாரணை' படத்துக்கு
மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த தமிழ்த்
திரைப்படத்துக்கான விருது, அப்படத்தில் நடித்த
சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகர் விருது,
மறைந்த கிஷோருக்கு சிறந்த படத்
தொகுப்பாளருக்கான விருது என 3 விருதுகள்
கிடைத்துள்ளன.
"இறுதிச்சுற்று' தமிழ்ப் படத்தில் நடித்த அறிமுக
நடிகை ரித்திகா சிங்குக்கு சிறப்பு விருது அறிவிக்கப்
பட்டுள்ளது.
மேலும், இளம் வயதில் விதவையாகி, மறுமணம்
செய்து கொண்டு 97 வயது வரை வாழ்ந்த பெண்ணின்
வாழ்க்கைப் போராட்டத்தை உணர்த்தும் வகையில்
மூத்த பத்திரிகையாளர் நீலம் இயக்கிய "அம்மா', குறும்
படங்கள் வரிசையில் சிறப்பு விருதுக்கு தேர்வாகியுள்ளது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது
சிறந்த நடிகராக அமிதாப் பச்சன், சிறந்த நடிகையாக
கங்கனா ராணாவத் உள்ளிட்ட கலைஞர்கள் தேர்வாகி
உள்ளனர். சிறந்த நடிப்புக்காக அமிதாப் 4ஆவது
முறையாகவும், கங்கனா 3ஆவது முறையாகவும், சிறந்த
இசையமைப்புக்காக இளையராஜா 5ஆவது முறையாகவும்
தேசிய விருது பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திரைப்படத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும்
நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசை
அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட
கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய
திரைப்பட விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
இதையொட்டி, 2015-ஆம் ஆண்டில் வெளியான திரைப்
படங்களைப் பார்வையிட்டு 63-ஆவது தேசிய திரைப்பட
விருதுகளுக்குத் தேர்வான சிறந்த கலைஞர்கள், படங்கள்
தொடர்பான அறிக்கையை மத்திய தகவல் ஒலிபரப்புத்
துறை அமைச்சர் அருண் ஜேட்லியிடம் இயக்குநர் ரமேஷ்
சிப்பி தலைமையிலான தேர்வுக் குழுவினர் திங்கள்கிழமை
அளித்தனர்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது
-
அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் படத்தின்
பெயர்):
சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன் (பீக்கூ);
சிறந்த நடிகை: கங்கனா ராணாவத்
(தனு வெட்ஸ் மனு ரிடர்ன்ஸ்);
சிறந்த படம்: பாகுபலி;
சிறந்த இயக்குநர்: சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி);
-
சிறந்த இசையமைப்பாளர்: இளையராஜா, எம். ஜெயசந்திரன்;
இயக்குநரின் சிறந்த கதையம்சத்துக்கான இந்திரா காந்தி விருது:
மசான்;
சிறந்த பொழுதுபோக்குப் படம்: பஜ்ரங்கி பைஜான்;
தேசிய ஒருமைப்பாட்டுக்கான "நர்கீஸ் தத் விருது'க்குரிய
சிறந்த படம்: நானக் ஷா ஃபகீர்;
சமூகப் பிரச்னைகளுக்கான சிறந்த படம்: நிர்னயக்காம்;
சுற்றுச்சூழல் பராமரிப்புக்கான சிறந்த படம்: வல்லிய சிறகுள்ள
பக்ஷிகள்,
சிறந்த அனிமேஷன் படம்: டுக், டுக்:
சிறந்த குழந்தைகள் படம்: துரந்தோ;
சிறந்த துணை நடிகை: தன்வி அஸ்மி (பாஜிராவ் மஸ்தானி);
சிறந்த குழந்தை நட்சத்திரம்:கௌரவ் மேனன் (பென்);
சிறந்த பின்னணிப் பாடகர்: மகேஷ் காலே (கட்டியார் காலிஜாத்
குஸ்லி);
சிறந்த பின்னணிப் பாடகி: மோனாலி தாகூர் (தும் லகா கே
ஹைஸா);
சிறந்த ஒளிப்பதிவு: சுதீப் சாட்டர்ஜி (பாஜிராவ் மஸ்தானி);
சிறந்த திரைக்கதை: பீக்கு மற்றும் தனு வெட்ஸ் மனு
ரிடர்ன்ஸ்;
சிறந்த திரைக்கதை (பிற மொழி தழுவல்):
தல்வார்; சிறந்த வசனம்: பீக்கூ மற்றும் தனு வெட்ஸ் மனு
ரிடர்ன்ஸ்; சிறந்த ஒலிப்பதிவு: தல்வார் மற்றும் பாஜிராவ்;
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்ரீராம் ஐயங்கார்,
சலோனி தத்ரக், சுஜீத் சாவந்த் (பாஜிராவ் மஸ்தானி);
சிறந்த ஆடை அலங்கார வடிவமைப்பாளர்: பாயல் சலூஜா
(நானக் ஷா ஃபகீர்);
சிறந்த ஒப்பனைக் கலைஞர்: பிரீத்திஷீல் ஜி. சிங், குளோவர்
வூட்டன் (நானக் ஷா ஃபகீர்);
சிறந்த பாடலாசிரியர்: வருண் குரோவர் (தும் லகா கே ஹைசா);
தேர்வுக் குழுவின் விருதுக்குரிய படம்: மார்கரிடா வித் ஸ்ட்ரா;
சிறந்த நடன இயக்குநர்: ரெமோ டிசௌஸா (பாஜிராவ் மஸ்தானி);
சிறந்த சிறப்பு சப்தங்கள்: பாகுபலி;
சிறந்த படப்பிடிப்புக்கான வசதி, வாய்ப்புகள் கொண்ட மாநிலம்:
குஜராத்,
மாநிலங்களுக்கான சிறப்பு விருது: உத்தரப் பிரதேசம், கேரளம்.
மேற்கண்ட விருதுகள், வரும் மே மாதம் 3-ஆம் தேதி தில்லியில்
நடைபெற உள்ள நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்று மத்திய அரசு
அறிவித்துள்ளது.
-
-----------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: 2015ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது
தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
» கி & கா – திரைப்பட விமரிசனம்
» திரைப்பட தந்திர காட்சிகள்..
» திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
» கி & கா – திரைப்பட விமரிசனம்
» திரைப்பட தந்திர காட்சிகள்..
» திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|