Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்
Page 1 of 1 • Share
வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்
வர்க்கலை சுற்றுலா தலத்திற்கு வந்தவர்களுக்குத்தான்
கேரளாவை ஏன் ‘கடவுளின் தேசம்’ என்று சொல்கிறார்கள்
என்பது புரியும்.
தூரத்தில் நாம் வரும்போதே அரபிக்கடல் ஆராரிரோ
பாடும் சத்தம் கேட்கும். இயற்கையின் வரப்பிரசாதமாக
நீண்ட பெரிய கடற்கரை அமைதியான கடலிலிருந்து
மெல்ல எழுந்து வந்து வெண்நுரைகளுடன் கரையைத்
தழுவிச் செல்லும் அலைகள்.. அழகே அழகு.
கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில்
செம்மண் நிறத்தில் சாய்ந்த குன்றுகள்… தங்கத்
தொட்டில்களை யாரோ ஆட்டிவிடுவது போன்ற பிரமை
எங்கும் காணாதது.
கடலுக்குப் போட்டியாக நீலநிற வானம். அவ்வப்போது
சூரியனை மறைந்து கண்ணாமூச்சி விளையாடும்
வெண்மேகக் கூட்டங்கள். இதமான தென்றல் காற்றை
‘ஜிலு ஜிலு’வென வீசித் தரும் நெடிய தென்னை
மரங்கள்.. என இயற்கை அழகுடன் வர்க்கலை பீச்
காணக்காண ரம்மியம்.
50 முதல் 100 அடி வரை உயரம் உள்ள மலைக்
குன்றுகளை ஹில் டாப் என்றே கூறுகிறார்கள். சுமார்
ஐநூறு ரிசார்ட்டுகள் இங்கே உள்ளன. ஆகஸ்ட் முதல்
ஏப்ரல் வரை சீசன் காலம். வெளிநாட்டவர்கள் இங்கே
வந்து மாதக் கணக்கில் தங்கிச் செல்கிறார்கள்.
இங்குள்ளவர்கள் பலரும் தங்களுடைய வீட்டை இந்த
சீசன் காலங்களில் ஹோம் ஸ்டேக்காக ஒதுக்கி விட்டு
வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய அறையில் வசித்துக்
கொள்கிறார்கள். ஹோம் ஸ்டேக்காக பெரும்பாலும்
வெளிநாட்டவர்களுக்குத்தான் வீடு கொடுக்கிறார்கள்.
உள்ளூர் சமையலை ருசி பார்த்துவிட்டு கடற்கரையில்
சுற்றுவது, பொழுது போக்கிவிட்டு மீண்டும் வீட்டிலே
வந்து தங்கிக் கொள்வது அவர்களுக்குப் பிடித்தமான
விஷயமாம்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957
Re: வர்க்கலை பூமியில் ஒரு சொர்க்கம்
[You must be registered and logged in to see this image.]
-
வெளிநாட்டவர் யாரைக் கேட்டாலும், ‘வெரி நைஸ்
பிளேஸ். ஐ. லவ் வர்க்கலா… காட்ஸ் ஓன் கண்ட்ரி’
என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்கள். இதற்காகவே
அரசிடம் அனுமதி பெற்று இங்கேயே தங்கி கடை
நடத்தும் வெளிநாட்டவர்களும் இருக்கிறார்கள்.
ஹெர்பல் பியூட்டி பார்லர் பிசினஸும் ஏராளம்.
கடற்கரை முழுவதுமே அவர்களுக்கு சொந்தம்
என்பத போல் ஹாயாக பவுச்சுகளிலும், கடல் மணல்
பரப்பிலும் டூ பீஸ் டிரெஸ் அணிந்து கவிழ்ந்தும்
மல்லாக்கப் படுத்துக் கொண்டும் நாவல் எதையாவது
படித்துக் கொண்டும் இருக்கிறார்கள் அல்லது கடற்
கரையை ரசித்துக் கொண்டு, உடன் இருப்பவருடன்
கதைத்துக் கொண்டு பொழுதைக் கழித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
கடலில் அதிகம் ஆழம் இல்லாததால் குடும்பத்துடன்,
ஜோடியுடன் கடலில் குளித்து மகிழ்கிறார்கள் யோகா
செய்கிறார்கள்.
மாலையானால் மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன்
குன்றின் மேலிருக்கும் ரெஸ்டாரண்டுகள் பிசினஸுக்கு
தாயாராகின்றன. பெரிய பாக்ஸ்களில் நீந்திக்
கொண்டிருக்கும் நண்டுகளை வெளிநாட்டவர் கைகாட்ட,
செஃப் உடனே அதைப் பிடித்து கழுவி மசால் தடவி
பொரித்து சுடச்சுட பரிமாற, ‘வாவ்.. வாட் எ டேஸ்ட்’
என வாய் பிளக்க சாப்பிடுகிறார்கள்.
ரெஸ்டாரண்ட் ஓரத்தில் மெழுகுத்திரி வெளிச்சத்தில்
அழகுச் சிலைபோல் காட்சியளித்த அந்த இளம்
பதுமையிடம் வர்க்கலையைப் பற்றி கேட்டோம்.
‘ஆறாவது தடவை நான் இங்கே வருகிறேன். எவ்வளவு
அமைதியான பீச்! மலையில் இருந்து கடலைப் பார்ப்பதும்,
மலையிலிருந்து இறங்கி பீச்சில் உலாவருவதும் அப்பப்பா..
வெறி நைஸ்.. வெரி நைஸ்.. ஐ அம் கமிங் ஃபிரம்
இத்தாலி!’ என சிலாகித்தார்.
‘சரி பேர் என்ன, எந்த ஊர்?’ என்று கேட்டோம்.
‘அதெல்லாம் எதுக்கு? என் போட்டோ எதுக்கு? நான்
யாருன்னு தெரிஞ்சுட்டு என்ன செய்யப் போறீங்க…
எந்த தொந்தரவும் இல்லாம அமைதியா மகிழ்ச்சியா
இருக்கணும்னு இங்கே வந்திருக்கேன். நான் யாருன்னு
சொல்லி அடுத்தவங்களுக்கு முகம் காட்டி என்னோட
தனிமையை கெடுத்துக்க விரும்பலை! பை!’ என்றபடி
நழுவினார்.
ஜனார்த்தன சுவாமி ஆலயம், ‘ஒன்றே குலம் ஒருவனே
தேவன்’ என உலகுக்கு உணர்த்திய நாராயண குருவின்
சமாதி அமைந்திருக்கும் சிவகிரி ஆகியன இங்கே பார்க்க
வேண்டிய மற்ற இடங்கள்.
வர்க்கலைக்கு வந்தா கவலைகள் பறந்துடும்..
என்பதை ஒருமுறை வந்து பார்த்தால்தான் புரியும்.
கொல்லத்தில் இருந்து 37 கி.மீ. தொலைவிலும்,
திருவனந்தபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவிலும்
வர்க்கலை உள்ளது. பஸ்டாண்டும் ரயில்வே
ஸ்டேஷனும் எதிர் எதிரே இருப்பது பயணிகளுக்கு
சௌகர்யம்!
–
———————————
– திருவட்டாறு சிந்துகுமார்
குமுதம்

» பூமியில் ......
» நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்
» பூமியில் இடத்தைக் காட்டும் கருவி GPS
» சொர்க்கம் சொற்களாலேயே ...
» எங்கே சொர்க்கம் ……
» நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்
» பூமியில் இடத்தைக் காட்டும் கருவி GPS
» சொர்க்கம் சொற்களாலேயே ...
» எங்கே சொர்க்கம் ……
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|