தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"பஞ்சாபை பந்தாடினார் ஃபிஞ்ச்: அறிமுகப் போட்டியில் குஜராத் அசத்தல்

View previous topic View next topic Go down

"பஞ்சாபை பந்தாடினார் ஃபிஞ்ச்: அறிமுகப் போட்டியில் குஜராத் அசத்தல் Empty "பஞ்சாபை பந்தாடினார் ஃபிஞ்ச்: அறிமுகப் போட்டியில் குஜராத் அசத்தல்

Post by rammalar Tue Apr 12, 2016 10:11 am

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது லீக்
ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில்
கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது
குஜராத் லயன்ஸ்.

இந்த சீசனில் புதிய அணியாக களமிறங்கியிருக்கும்
குஜராத் அறிமுக ஆட்டத்தில் அசத்தல் வெற்றியைப்
பெற்றுள்ளது.

மொஹாலியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த
ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன்
சுரேஷ் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணியின்
இன்னிங்ûஸ முரளி விஜய்-மனன் வோரா ஜோடி
தொடங்கியது.

சங்வான் வீசிய 2-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர்,
ஒரு பவுண்டரியை விரட்டி அதிரடியில் இறங்கினார்
விஜய். 8 ரன்களில் இருந்தபோது பிராவோ கோட்டை
விட்ட கேட்ச்சால் (ஃபாக்னர் பந்துவீச்சில்) வாழ்வு
பெற்ற மனன் வோரா, பின்னர் அதிரடியில் இறங்கினார்.

லேடா ஓவரில் வோரா ஒரு சிக்ஸரையும், ஒரு ப
வுண்டரியையும் விரட்ட 8 ஓவர்களில் 71 ரன்களை
எட்டியது பஞ்சாப்.

அந்த அணி 8.2 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்திருந்த
போது ஜடேஜா பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம்
கேட்ச் ஆனார் வோரா.
அவர் 23 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38
ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து முரளி விஜயுடன் இணைந்தார் கேப்டன்
டேவிட் மில்லர். பஞ்சாப் 91 ரன்களை எட்டியபோது
ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார் விஜய்.
அவர் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன்
42 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 2 ரன்களிலும்,
டேவிட் மில்லர் 15 ரன்களிலும் பிராவோ பந்துவீச்சில்
போல்டாகினர்.

இதையடுத்து விருத்திமான் சாஹாவும், மார்கஸ்
ஸ்டாய்னிஸூம் ஜோடி சேர்ந்தனர். ஒருபுறம் சாஹா
நிதானமாக ஆட, மறுமுனையில் ஸ்டாய்னிஸ் ப
வுண்டரிகளை விரட்டி ரன் சேர்த்தார்.

5-ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி
கடைசி ஓவரில் பிரிந்தது. சாஹா 25 பந்துகளில் 20,
ஸ்டாய்னிஸ் 22 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து
ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்
இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது.

அக்ஷர் படேல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல்
இருந்தார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

"பஞ்சாபை பந்தாடினார் ஃபிஞ்ச்: அறிமுகப் போட்டியில் குஜராத் அசத்தல் Empty Re: "பஞ்சாபை பந்தாடினார் ஃபிஞ்ச்: அறிமுகப் போட்டியில் குஜராத் அசத்தல்

Post by rammalar Tue Apr 12, 2016 10:12 am

"பஞ்சாபை பந்தாடினார் ஃபிஞ்ச்: அறிமுகப் போட்டியில் குஜராத் அசத்தல் 11110.png(1)
-
குஜராத் தரப்பில் டுவைன் பிராவோ 4 ஓவர்களில்
22 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட் எடுத்தார்.
ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட் எடுத்தார்.

ஆரோன் ஃபிஞ்ச் விளாசல்: 162 ரன்கள் என்ற வெற்றி
இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க
வீரர் பிரென்டன் மெக்கல்லம் டக் அவுட்டாக, ஆரோன்
ஃபிஞ்சுடன் இணைந்தார் கேப்டன் ரெய்னா.

அவர் வந்த வேகத்தில் சிக்ஸரை விளாசி ரன்
கணக்கைத் தொடங்க, மறுமுனையில் பவுண்டரிகளை
பறக்கவிட்டார் ஃபிஞ்ச். ஸ்டாய்னிஸ் வீசிய 6-ஆவது
ஓவரின் 2-ஆவது பந்தில் சிக்ஸரை விளாசிய ரெய்னா,
அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்துகளில்
20 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்க, மறு
முனையில் ஃபிஞ்ச் 32 பந்துகளில் அரை சதம் கண்டார்.
குஜராத் அணி 11.5 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்திருந்த
போது ஃபிஞ்ச் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில்
12 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் குவித்தார்.

பின்னர் வந்த ஜடேஜா 8 ரன்கள் எடுத்த நிலையில்
ஜான்சனால் அற்புதமாக ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதையடுத்து வந்த இஷான் கிஷன் 8 பந்துகளில்
11 ரன்கள் சேர்த்து வெளியேற, டுவைன் பிராவோ
களம்புகுந்தார். இறுதியில் 17.4 ஓவர்களில் 5 விக்கெட்
இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது குஜராத்.

தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 41,
பிராவோ 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் தரப்பில் சந்தீப் சர்மா, ஜான்சன், ஸ்டாய்னிஸ்,
சாஹு ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பிராவோ 300
-
பஞ்சாபுக்கு எதிராக குஜராத் லயன்ஸின்
டுவைன் பிராவோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில் முதல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது டி20
கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட் வீழ்த்திய முதல்
வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

முன்னதாக இலங்கையின் லசித் மலிங்கா 299
விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
அதை இப்போது பிராவோ முறியடித்துள்ளார்.
-
-------------------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum