தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன்

View previous topic View next topic Go down

அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன் Empty அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன்

Post by rammalar Sat Apr 30, 2016 9:30 am

நடிகர் சங்க விவகாரத்தில் அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் ஹாசன் தெரிவித்தார்.
ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல், ஸ்ருதி ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

இப்படத்திற்கு தலைப்பு ‘சபாஷ் நாயுடு’ என்று படப்பூஜையில் அறிவித்தார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுதியிருக்கிறார்.

படப்பூஜையைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் ஹாசன் பேசியது, “தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் தலைப்பாக ‘சபாஷ் நாயுடு’ இருக்கும். இந்தியில் ‘சபாஷ் குந்து’ என்று இருக்கும். காமெடி த்ரில்லராக உருவாக்க இருக்கிறோம். தமிழில் நான் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறேன்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன் Empty Re: அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன்

Post by rammalar Sat Apr 30, 2016 9:30 am

ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தத்திற்கான காரணம்

சினிமாவில் இரண்டு மகள்களோடும் பணியாற்றுவேன் என்று நினைத்துப் பார்த்திருக்கிறேன். இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. யார் எப்படி வருவார் என்பது எனக்கு தெரியாது. ஸ்ருதி ஹாசன் இசையுலகிற்கு சென்றிருக்க வேண்டியது. ராஜீவ் குமார் இயக்கத்தில் 25 வருடங்களுக்கு பிறகு நடிப்பதில் சந்தோஷம். நடுவில் நிறைய விஷயங்கள் பேசினோம். அப்படியே தள்ளிப் போய் இந்தப் படத்தில் இணைந்தது சந்தோஷம்.

ஸ்ருதி ஹாசனைப் பொறுத்தவரை கமல் பெண் தானே, அதான் நடிக்கிறார் என்று யாரும் சொல்லிவிடக் கூடாதே என்று நினைப்பு இருந்தது. அதனால் தான் அவருடன் நடிக்காமலே இருந்தேன். ராஜ்கமல் நிறுவனம் ஒரு ஸ்டாரை ஒப்பந்தம் செய்வது போலத் தான் இப்படத்தில் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எனக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ரஹ்மானின் ‘பாம்பே ட்ரீம்ஸ்’ இசை நாடகத்தில் நாயகனாக நடித்த மனுப் நாராயணன் இப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தெருவில் இருந்து ஜாதிப் பெயரை எடுங்கள்


ஒரு குடிகாரனைப் பற்றி படமெடுத்தால் தான் மதுவிலக்கு பற்றி எடுக்க முடியும். என்ன சொல்ல வருகிறோம் என்று தெரியாமல் ஜாதிப் பெயர் இருக்கிறதே என்றால், முதலில் ஜாதிப் பெயரை தெருவில் இருந்து எடுங்கள். பெயருக்கு முன்னாள் இருந்து ஜாதிப் பெயரை எடுங்கள். நான் எடுத்துவிட்டேன்.

இப்படத்திற்கும் ‘துப்பறியும் சாம்புவிற்கும் சம்பந்தமில்லை. அப்படத்தைப் போல இருந்தாலும் இது வேறு மாதிரியான ஒரு சுவை. பல்ராம் நாயுடு பாத்திரத்திற்கும் இதற்கும் தொடர்புண்டு. பல்ராம் நாயுடுவின் தனிவாழ்க்கை தான் இந்தப் படம்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன் Empty Re: அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன்

Post by rammalar Sat Apr 30, 2016 9:31 am

பாடல்களின் பின்னணி

4 பாட்டு முடிவு பண்ணியிருக்கிறோம். அமெரிக்காவில் ‘DISTRICT 72’ என்ற குழு இருக்கிறார்கள். அவர்கள் இளையராஜாவோடு இப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள். வித்தியாசமான் ஒலி சேர்க்கை இருக்கும் என நம்புகிறோம். வேலைப் பளு, நாயுடு வேஷம் போடும் போது அதற்கான நேரம் ஒதுக்க வேண்டும். அதனால் பொறுப்பாக இயக்குவதற்கு ஆள் வேண்டும். அதற்காக ராஜீவ் குமாரைத் தேர்வு செய்தேன்.

நகைச்சுவைப் படங்கள் மட்டுமல்ல என்னுடைய சீரியஸ் படங்களின் கதைகளைக் கூட அவரிடம் சொல்வேன். மெளலி, கிரேசி மோகன், சுதா, ஜெயமோகன் இப்படி என்னுடைய நண்பர்கள் அனைவருக்குமே என் கதைகளை படித்துக் காட்டுவதுண்டு. தேவைப்பட்டால் அவர்களுடைய பங்களிப்பையும் ஏற்றுக் கொள்வேன்.

படப்பிடிப்பு திட்டங்கள்

மே 16-ம் தேதி அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தான் இந்தியாவில் படமாக்க இருக்கிறோம். நாங்கள் அமெரிக்க படப்பிடிப்பை ஜூன் இறுதியில் முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். இங்கு ஜூலையில் பாக்கி வரும் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறோம்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன் Empty Re: அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன்

Post by rammalar Sat Apr 30, 2016 9:31 am

எனக்கு ஓட்டு இல்லை

மே 16-ல் நான் இங்கு இல்லை. என்னுடைய வாக்கை யாராவது போட்டு விடுவார்கள். இதற்கு முன்பு எனக்கு ஓட்டு இல்லை என்றார்கள். அப்போது நான் கெஞ்சிக் கேட்டு, “இல்லீங்க… நான் இன்னும் இந்திய பிரஜை தான் என்று சொன்னேன்”. பாவம்…தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் எனக்கு நண்பர்கள் தான். நானும் முடிந்தால் இங்கு வந்து வாக்களித்துவிட்டு செல்வேன்.

என்னுடைய படங்களில் ப்ரெஞ்ச் படங்கள், சிவாஜி படங்கள் உள்ளிட்ட நான் பார்த்த படங்களின் தாக்கம் இருக்கும். எந்தப் படமாக இருந்தாலும் அதன் உரிமையை வாங்கிப் பண்ணும் பழக்கம் உண்டு. இந்தப் படத்திற்கு நான் உரிமை வாங்கும் பழக்கம் கிடையாது. இது என்னுடைய ஒரிஜினல் ஐடியா.

ஆலோசனை வழங்க மாட்டேன்


விஜய், அஜித்திற்கு நான் ஆலோசனை வழங்க மாட்டேன். அவர்கள் ஒதுங்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதைப் பற்றி நான் பேசக் கூடாது. அவர்கள் என்னுடைய சகோதரர்கள், இது ஒரு குடும்பம். கதவு எப்போது வேண்டுமானாலும் திறந்திருக்கும், அவர்கள் வரலாம்.

லைக்கா நிறுவனத்தினர் ‘மருதநாயகம்’ எங்களுக்கு தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்பு ஒரு படம் பண்ணலாம் என்று இதைப் பண்ணியிருக்கிறோம். நம்பகமானவர் மட்டுமல்ல நம் மீது நம்பிக்கை வைப்பவரும் கூட.

எனக்கு ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். நற்பணி இயக்கத்தில் சேரும் போது கூட அரசியலைக் கொண்டு வராதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன்.” என்று பேசினார் கமல்ஹாசன்.

இவ்விழாவில் பேசிய ஸ்ருதிஹாசன் “எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. பயம் கூச்சம் எல்லாம் இல்லை. எனக்கு இந்தப் படத்தின் கதை பிடித்திருக்கிறது. அதனால் தான் இப்படத்தை ஒப்புக் கொண்டேன்” என்று தெரிவித்தார்.

தமிழ் தி இந்து காம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன் Empty Re: அஜித், விஜய்க்கு ஆலோசனை வழங்க மாட்டேன்: கமல் ஹாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum