Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பூதம் காட்டிய புண்ணியவழி
Page 1 of 1 • Share
பூதம் காட்டிய புண்ணியவழி
இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து,
‘பச்… சாமியாவது ஒண்ணாவது…’ என்று சலித்துக்
கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து,
‘ஜோசியமே பொய்…’ என்று புலம்புவது, பொழுதை
எல்லாம் வீணாகப் போக்கி, ‘நமக்கெல்லாம்
எங்கே நல்ல காலம் வரப் போகுது…’ என்று,
விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின்
இயல்பு.
–
சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக
இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக
வாழ ஆசைப்படுகிறோம்.
–
கார் ஓட்டத் தெரியாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை
தெரிந்து கொள்வது போல், மகான்களின் வாழ்க்கையை
தெரிந்து கொள்வதன் மூலம் மனதில் அமைதி ஏற்படும்.
–
எந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ.
தினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின்,
மீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர்
வழக்கம்.
–
இது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள்,
ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி, ‘ராம பக்தா…
குளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும்,
என் தாகம் தீரவில்லை; இவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால்,
என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது.
என் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்…’ என்றது.
–
‘ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்…’
என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ.
–
பூதமோ, ‘அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடை
பெறுகிறது; அதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார்,
மாருதி. அவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்…’ என்று
சொல்லி மறைந்தது.
–
ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல்
ஆளாக வந்து, அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக
வெளியேறுவார் ஆஞ்சநேயர்.
–
பூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ, முதியவர் வடிவில்
அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து, அவர் அருகில்
அமர்ந்தார். ஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.
–
தன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ.
வழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன்,
முதியவரும் வெளியேறத் துவங்கினார். கூடவே, ராம்போலோவும்
புறப்பட்டார்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பூதம் காட்டிய புண்ணியவழி
-
விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார்.
சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார். அவருடைய
வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார்,
ராம்போலோ.
–
உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது.
அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை.
–
கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய
வடிவத்தை காண்பித்து, ‘ராம்போலோ… உன் விடாமுயற்சியும், தீவிர
பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன;
வேண்டியதைக் கேள்…’ என்றார்.
–
‘அஞ்சனை மைந்தா… அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்
படுகிறேன்…’ என்றார். ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு
தரிசனம் தந்து, ‘பக்தா… என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த
மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்…’
என்று ஆசி கூறி, மறைந்தார்.
–
ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார். பக்தி மயமான
அந்நூல், ‘ராம் சரிதமானஸ்’ எனப்பட்டது.
இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை
எழுதிய துளசிதாசர்!
–
விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக
வந்து தரிசனம் அளிக்கும்.
–
————————————–
பி.என்.பரசுராமன்
வாரமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பூதம் சொன்ன கதை
» ஆறாம் பூதம்…
» காலம் என்பது ஆறாவது பூதம்
» நீண்ட ஆயுளுக்கு வள்ளலார் காட்டிய வழிகள்
» 64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!
» ஆறாம் பூதம்…
» காலம் என்பது ஆறாவது பூதம்
» நீண்ட ஆயுளுக்கு வள்ளலார் காட்டிய வழிகள்
» 64 திருவிளையாடல்-வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum